Current Affairs and GK Today 7th April 2020 (Tamil) PDF
GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge April 7, 2020, which have updates of Latest Current Affairs 2020 events.
GKTAMIL Current Affairs: Our Current Affairs March 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.
TNPSC Current Affairs April 7, 2020 (GK Tamil) - Download as PDF |
இந்திய நிகழ்வுகள்PMKSY-திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம்: தமிழ்நாடு முதலிடம்
- 2019-20 நிதியாண்டில் PMKSY-திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
- தமிழ்நாட்டில் 2,06,853.25 ஹெக்டேர் பரப்பளவில், பிரதான் மந்திரி கிருஷி சின்சாய் யோஜனா திட்டத்தின் கீழ், நுண்ணீர் பாசனத்தை செயல்படுத்தி அகில இந்திய அளவில் தமிழக மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது.
- கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்கள் முறையே 1,41,103.56 ஹெக்டேர் மற்றும் 1,08,322.00 ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் மேற்கொண்டு அடுத்த இரண்டு இடங்களை பிடித்துள்ளன.
- PMKSY: Pradhan Mantri Krishi Sinchayee Yojana.
2,500 இரயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றம்
- கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்காக, முதல்கட்டமாக 5,000 ரயில் பெட்டிகளை தனிமை வாா்டுகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 2,500 ரயில் பெட்டிகள் தனிமை வாா்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமாா் 40,000 போ் தங்கும் வகையில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- இந்தியாவில் ஏப்ரல் 6-வரை கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4067 ஆக உயர்ந்துள்ளது. இதில், 76 சதவீதம் ஆண்களுக்கும், 24 சதவீதம் பெண்களுக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏப்ரல் 6-வரை 621 பேராக உயர்ந்துள்ளது.
COVID-19 சோதனை: காசநோய் சோதனை இயந்திரங்களுக்கு அனுமதி
- கொரோனா வைரஸ் (COVID-19) சோதனைகளை நடத்துவதற்காக காசநோயை (TB) சோதிக்கப் பயன்படுத்தப்படும் நோயறிதல் இயந்திரங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஒப்புதல் அளித்துள்ளது.
- இது தொடர்பாக, ட்ரூலாப் பணிநிலையத்தில் (Truelab workstation) உள்ள ட்ரூனாட் பீட்டா கோவி சோதனை (Truenat beta CoV test) இயந்திரங்களை கொரோனா வைரஸ் (COVID-19) முதற்கட்ட சோதனைக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இந்தியாவில் மொத்தம் 800 ட்ரூனட் இயந்திரங்கள் (Truenat Machines) உள்ளன.
இந்திய ரயில்வேயின் குறைந்த விலை வென்டிலேட்டர் - ‘ஜீவன்’
- கொரோனா வைரஸை (COVID-19) எதிர்த்து போராட, இந்திய ரயில்வே பஞ்சாப் கபூர்தலாவில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (RCF) குறைந்த விலையில் ‘ஜீவன்’ (Jeevan) என்ற வென்டிலேட்டரை (Ventilator) உருவாக்கியுள்ளது.
- ரூ. 30,000-க்கு குறைவான விலையில் கிடைக்கும் இந்த ‘ஜீவன்’ வென்டிலேட்டர் இப்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) இறுதி அனுமதியில் உள்ளது.
- IIT-ஐதராபாத்தின் ஸ்டார்ட்-அப் பிரிவான ஏரோபயோசிஸ் இன்னோவேஷன்ஸ், ‘ஜீவன் லைட்’ (Jeevan Lite) என்ற பெயரில் குறைந்த விலை வென்டிலேட்டரை உருவாக்கியுள்ளது.
பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் 30% குறைப்பு
- பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம், ஏப்ரல் 6-அன்று காணொலி காட்சி வாயிலாக நடந்தது.
- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிக நிதி தேவைப்படுவதை அடுத்து, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை சம்பளத்தில், 30 சதவீதம் குறைக்க, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியையும் இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
- சம்பளத்தைக் குறைப்பதற்கான அவசர சட்டத்துக்கு, ஏப்ரல் 6-அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- மக்களவை மற்றும் மாநிலங்களவையில், மொத்தம், 788 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதிக்காக, ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மாதத்துக்கு, 1 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
24 மருந்து பொருட்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்
- 24 மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியிருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஏப்ரல் 7-அன்று தெரிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
- டினிடாசோல், மெட்ரோனிடசோல், அசைக்ளோவிர், வைட்டமின் பிஐ, வைட்டமின் பி 6 மற்றும் வைட்டமின் பி 12 உள்ளிட்ட மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாராசிட்டமால் மருந்து ஏற்றுமதிக்கான தடை நீக்கப்படவில்லை.
பாதுகாப்பு/விண்வெளி
நிலவின் தென் துருவத்தில் முதலாவது மனித அடிப்படை முகாம் 'ஆர்ட்டெமிஸ்'
- அமெரிக்க விண்வெளி அமைப்பு NASA, 2024-ஆம் ஆண்டில் நிலவின் தென் துருவத்தில் முதலாவது மனித அடிப்படை முகாமை (First Human Base Camp on Moon’s South Pole) அமைப்பதற்கான 'ஆர்ட்டெமிஸ்' (Artemis) என்ற தனது திட்டத்தை ஏப்ரல் 2 அன்று வெளியிட்டுள்ளது.
- NASA: National Aeronautics and Space Administration.
விருதுகள்
நைஸ்மித் நினைவு கூடைப்பந்து புகழரங்க விருது 2020: கோபெ பிரையன்ட்
- அமெரிக்க கூடைப்பந்து வீரர் மற்றும் 5 முறை தேசிய கூடைப்பந்து சாம்பியனான கோபி பிரையன் (Kobe Bryan) தனது மரணத்திற்குப் பின், நைஸ்மித் நினைவு கூடைப்பந்து புகழரங்க விருது (Naismith Hall of Fame) அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதி அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரில் உள்ள நைஸ்மித் நினைவு கூடைப்பந்து புகழரங்கில் விருது வழங்கி மரியாதை செய்யப்படவுள்ளார்.
- நைஸ்மித் நினைவு கூடைப்பந்து புகழரங்கம்: இது ஒரு அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் புகழ்பெற்ற மண்டபம் ஆகும், இது கூடைப்பந்தாட்ட வரலாற்றை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் முழுமையான நூலகமாக செயல்படுகிறது. இதற்கு கனேடிய-அமெரிக்க மருத்துவரும் கூடைப்பந்தாட்ட கண்டுபிடிப்பாளருமான ஜேம்ஸ் நைஸ்மித் (Naismith) பெயரிடப்பட்டது.
நியமனங்கள்
கொரோனா எதிர்ப்பு பணிகள்: அமிதாப் காந்த் தலைமையில் '10 பேர் குழு'
- கொரோனாவை எதிர்ப்பு பணிகளை கையாள்வதற்காக, நிதி ஆயோக் (NITI Aayog) தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் (Amitabh Kant) தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளர் 'அனுராக் ஸ்ரீவாஸ்தவா'
- இந்திய வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளராக இந்திய வெளியுறவு பணி அதிகாரி அனுராக் ஸ்ரீவாஸ்தவா ஏப்ரல் 6-அன்று பொறுப்பேற்றார்.
புத்தக வெளியீடுகள்
- How Contagion Works: Science, Awareness and Community in Times of Global Crisis” - Paolo Giordano.
- Deadliest Enemy: Our War Against Killer Germs” - Michael Osterholm and Mark Olshaker
முக்கிய தினங்கள்
ஏப்ரல் 7 - உலக சுகாதார தினம்
- ஆண்டுதோறும் உலக சுகாதார தினம் (World Health Day) ஏப்ரல் 7 அன்று கொண்டாடப்படுகிறது.
- 71-வது உலக சுகாதார தினம், 7.4.2019 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- 2020 ஆம் ஆண்டின் உலக சுகாதார தின மையக்கருத்து: ‘Support nurses and midwives’ என்பதாகும்.
- ஆண்டுதோறும் சர்வதேச ருவாண்டா இனப்படுகொலை பிரதிபலிப்பு தினம் (International Day of Reflection on the Genocide in Rwanda), ஏப்ரல் 7 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
Download this article as PDF Format