GK Tamil/TNPSC Link Current Affairs 4th Arpil 2020 (Tamil) PDF
GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge April 4, 2020, which have updates of Latest Current Affairs 2020 events.
Our Current Affairs March 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.
சர்வதேச நிகழ்வுகள்
TNPSC Current Affairs April 4, 2020 (GK Tamil) - Download as PDF
இந்தியா-சீனா இடையே “சரக்கு விமானப் பாலம்” அமைப்பு
- இந்திய அரசு, முக்கியமான மருத்துவப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக சீனா நாட்டோடு “சரக்கு விமானப் பாலம்” (cargo air-bridge) ஒன்றை அமைத்துள்ளது.
- இது மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ‘லைஃப்லைன் உதான்’ (Lifeline Udan) திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 3 முதல் செயல்படுத்துகிறது.
- இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் அரசாங்க உறவுகள் நிறுவப்பட்ட (Diplomatic relations) 70 வது ஆண்டு விழா 2020 ஏப்ரல் 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
- 1950 ஏப்ரல் 1 அன்று, மக்கள் சீனக் குடியரசுடன் (PRC) இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய ஆசியாவின் முதல் கம்யூனிஸ்ட் அல்லாத நாடு இந்தியா ஆகும்.
- PRC: People's Republic of China.
- 2020 ஏப்ரல் மாதத்தில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை டொமினிக்கன் குடியரசு (Dominican Republic) நாடு ஏற்றுக்கொண்டுள்ளது. சீனாவிலிருந்து சபையின் பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ஏற்றது.
- 2020 ஏப்ரல் 3-அன்று வரை உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது. பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியது.
- இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,300 ஆகவும், உயிர் பலி 56 ஆகவும் உள்ளது.
- தமிழகத்தில் 411: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது.
- கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக, இந்தியாவுக்கு ரூ.7 ஆயிரத்து 600 கோடி (1 பில்லியன் டாலர்கள்) அவசர நிதியாக வழங்க உலக வங்கியின் செயல் இயக்குனர்கள் வாரிய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- உலக வங்கி முதற்கட்டமாக உதவியாக 25 நாடுகளுக்கு 1.9 பில்லியன் டாலர்கள் அறிவித்துள்ளது.
- 2020 ஏப்ரல் 7-முதல் சிங்கப்பூர் நாட்டில் ஒரு மாத ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிஸெய்ன் லூங் அறிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகள், முக்கிய பொருளாதார காரணிகளைத் தவிர்த்து அனைத்தும் மூடப்படுகிறது.
- அமெரிக்காவிலுள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் புதிதாக கரோனா வைரஸ் தடுப்பு மருந்தொன்று கண்டுபிடித்துள்ளது. பிட்கோவேக் (Pitkovac Vaccine) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- இந்த மருந்தை எலிகளுக்குச் செலுத்திப் பரிசோதித்துப் பார்த்ததில் நல்ல எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தியிருப்பது அறியப்பட்டுள்ளது.
இந்திய நிகழ்வுகள்மருத்துவ பொருட்களை கொண்டு செல்ல ‘லைஃப்லைன் உதான்’ திட்டம்
- மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ‘லைஃப்லைன் உதான்’ (Lifeline Udan’) என்ற புதிய முன்முயற்சி திட்டத்தை தொடங்கியுள்ளது, இந்த திட்டத்தின் கீழ், கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு மத்தியில் நாடு முழுவதும் அத்தியாவசிய மருத்துவ பொருட்களை கொண்டு செல்ல விமானங்கள் இயக்கப்படுகின்றன.
- நீதிபதி ரஜ்னேஷ் ஆஸ்வால்: ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற நீதிபதியாக ரஜ்னேஷ் ஆஸ்வால் (Justice Rajnesh Oswal) ஏப்ரல் 3-அன்று பதவியேற்றுக் கொண்டாா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் (Indian Constitution) மீது உறுதியேற்று பதவியேற்றுக் கொண்ட முதல் நீதிபதி என்ற சிறப்பை அவா் பெற்றுள்ளாா்.
- முந்தைய நீதிபதிகள் அனைவரும் ஜம்மு-காஷ்மீருக்கென தனியே இருந்த மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதியேற்று பதவியேற்றிருந்தனா்.
- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான முதல் உள்நாட்டு சோதனைக் கருவி 'பாத்தோ டிடெக்ட் (Patho Detect)' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வைரஸ் நிபுணர் மினல் தகாவே போசலே (Minal Dakhave Bhosale) தலைமையிலான புனேவைச் சேர்ந்த மைலாப் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழு (Mylab Discovery), பாத்தோ டிடெக்ட் (Patho Detect)' கொரோனா வைரஸ் தொற்றுக்கான முதல் உள்நாட்டு சோதனைக் கருவியை (India testing kit for the Covid-19) வடிவமைத்துள்ளது.
- தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தனது முதல் வெளிநாட்டு வழக்கை (overseas case) பதிவு செய்து, ஆப்கானிஸ்தானின் காபூலில் ஒரு குருத்வாரா மீதான பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
- மார்ச் 25 அன்று, காபூலில் ஒரு சீக்கிய குருத்வாராவுக்குள் நுழைந்து நடத்தியா துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் உயிரிழந்தனர் பலர் காயமடைந்தனர். NIA சட்டத்தின் சமீபத்திய திருத்தங்கள் இந்திய குடிமக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க அல்லது இந்தியாவின் நலனைப் பாதிக்கும் வழக்குகளை அவை இந்தியாவுக்கு வெளியே உள்ள இடங்களில் இருந்தாலும் விசாரிக்க NIA-வை அனுமதித்துள்ளன.
- NIA: National Investigation Agency.
- கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் நாம் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஏப்ரல் 5-அன்று இரவு 9 மணிக்கு வீட்டில் மின் விளக்குகளை அணைத்து தீபம், டார்ச், மெழுவர்த்தி ஏற்றி ஒளிர விட வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- கரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாட்டு மக்களுக்கு ஏப்ரல் 3-அன்று விடியோ பதிவு மூலம் உரையாற்றினார்.
- கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜன்தன் வங்கி கணக்கு வைத்துள்ள ஏழைப்பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு (ஏப்ரல் முதல் ஜூன் மாதம் முடிய) மாதம்தோறும் ரூ.500 சிறப்பு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தது.
- அந்த வகையில் ஏப்ரல் 3-அன்று ஒரே நாளில் 4 கோடியே 7 லட்சம் ஏழைப்பெண்களின் ஜன்தன் வங்கி கணக்குகளில் தலா ரூ.500-ஐ மத்திய அரசு செலுத்தியது.
- ஏப்ரல் மாதம் முதல் வார இறுதியில் 20 கோடியே 39 லட்சம் பெண்களின் ஜன்தன் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்ட உள்ளது.
- சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் நுழைவுஇசைவு (விசா) மூலம் இந்தியாவுக்கு வந்து, மத போதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தப்லீக் ஜமாத் அமைப்பின் வெளிநாட்டு உறுப்பினா்கள் 960 பேரை கருப்புப் பட்டியலில் மத்திய உள்துறை அமைச்சகம் சோ்த்துள்ளது. தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் அண்மையில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் அமைப்பின் மாநாட்டில், வெளிநாடுகளில் இருந்தும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இஸ்லாமிய மத போதகா்கள் பங்கேற்றனா்.
- ஜம்மு-காஷ்மீர் சிவில் சர்வீசஸ் (பரவலாக்கம் மற்றும் ஆட்சேர்ப்பு) சட்டத்தின் கீழ் புதிய குடியுரிமை தகுதிகளை அறிவித்துள்ளது. இதன்படி, ஜம்மு-காஷ்மீரில் குறைந்தது15 ஆண்டுகளாக வசித்து இருக்க வேண்டும், மேலும் ஏழு வருட காலத்திற்கு படித்து, யூனியன் பிரதேசத்தை தளமாகக் கொண்ட ஒரு கல்வி நிறுவனத்தில் 10 அல்லது 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவரும் குடியுரிமை பெற தகுதி தகுதியுடையவர் ஆவார். J&K Civil Services (Decentralization and Recruitment) Act 2020.
பொருளாதார நிகழ்வுகள்
- கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலக பொருளாதாரத்தில் 308 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்றும், இது உலக அளவிலான உற்பத்தி மதிப்பில் 4 சதவீதம் என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி கூறி இருக்கிறது.
- இந்தியப் பொருளாதாரம் 2020-21 நடப்பு நிதியாண்டில் 4 சதவீதம் அளவுக்கே வளா்ச்சி காணும் என ஆசிய வளா்ச்சி வங்கி (ADB) தெரிவித்துள்ளது.
- மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2019-20-ஆம் நிதியாண்டில இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதம் 5 சதவீதமாக இருக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் மதிப்பீடு செய்துள்ளது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்ஊரடங்கு அமல்: நாடு முழுதும் காற்றின் தரம் மேம்பாடு
- நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன் (மார்ச் 21-ஆம் தேதியன்று) 54 நகரங்களில் காற்றின் தரம் திருப்தியான அளவுக்குள் இருந்ததாகவும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு (மார்ச் 29-ஆம் தேதியன்று) 91 நகரங்களில் காற்றில் மாசு மேலும் குறைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அவற்றில் 30 நகரங்களில் காற்றின் தரம் நன்றாக இருந்ததாகவும் 61 நகரங்களில் திருப்திகரமாக இருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தில்லி, சென்னை, மும்பை ஆகிய நகரங்களில்
- காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாகவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- காற்றின் தரக் குறியீடு 0-50 என்ற அளவில் இருந்தால் காற்றின் தரம் நன்றாக உள்ளதாகக் கருதப்படுகிறது.
அறிவியல் தொழில்நுட்பம்
கொரோனா வைரஸ் பரவல் கண்காணிப்பு செயலி 'ஆரோக்ய சேது'
- இந்திய அரசு தனது முதல் விரிவான கொரோனா வைரஸ் பரவல் கண்காணிப்பு (COVID-19 Tracking App) செல்போன் செயலி பயன்பாட்டை, ஏப்ரல் 02 அன்று, 'ஆரோக்ய சேது' (Aarogya Setu) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது.
- சமஸ்கிருத வார்த்தையான ஆரோக்ய சேது என்றால் 'A bridge of health' என்று பொருள்படும்.
தமிழ்நாடு நிகழ்வுகள்
ரோபோக்கள் அறிமுகம்
- சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவ 3 ரோபோக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏப்ரல் 3-அன்று அறிமுகம் செய்து வைத்தார்.
விளையாட்டு நிகழ்வுகள்
- 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி (2022 Asian Games) சீனாவின் ஹாங்சோவ் (Hangzhou) நகரில் 2022 செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த போட்டியின் சின்னமாக மூன்று குட்டி ரோபோக்கள் (smart triplets) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
- 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பலேம்பாங் நகரங்களில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்றது.
முக்கிய நபர்கள்
‘ஹசூரி ராகி’ 'பாய் நிர்மல் சிங் கல்சா'
- பத்மா ஸ்ரீ விருது பெற்றவரும், அமிர்தசரஸ் பொற்கோயிலில் முன்னாள் “ஹசூரி ராகி” (Hazoori Raagi) ஆக விளங்கிய 'பாய் நிர்மல் சிங் கல்சா' (Bhai Nirmal Singh Khalsa), தனது 62 வயதில் பஞ்சாபின் அமிர்தசரஸில் ஏப்ரல் 2 அன்று காலமானார்.
- ஒரு ராகி என்பவர் சீக்கிய குருத்வாராவில் சீக்கிய புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி வெவ்வேறு ராகங்களில் துதிப்பாடல்ங்களை பாடுபவர் ஆவார்.
- குரு கிரந்த் சாஹிப்பின் (சீக்கிய புனித நூல்) குர்பானியில் உள்ள 31 “ராகங்கள்” பற்றிய அறிவு பெற்றவர் பாய் நிர்மல் சிங்.
முக்கிய தினங்கள்
- உலகெங்கிலும் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டுதோறும் ஐ. நா. அவை, ஏப்ரல் 4-ம் தேதி அன்று சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு நாளாக (International Day for Mine Awareness and Assistance in Mine Action) கடைபிடிக்கிறது.
Download this article as PDF Format