TNPSC Current Affairs April 2020 - Daily Download PDF
Current Affairs and GK Today 17-18th April 2020 (Tamil) PDF
Current Affairs and GK Today 17-18th April 2020 (Tamil) PDF
GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge April 17 to April 18th, 2020, which have updates of Latest Current Affairs 2020 events.
GKTAMIL Current Affairs: Our Current Affairs April 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.TNPSC Current Affairs April 17-18, 2020 - PDF |
இந்திய நிகழ்வுகள்
2020-2021 உணவு தானிய உற்பத்தி இலக்கு - 30 கோடி டன்
- 2020-2021 சம்பா பருவத்தில் 15 கோடி டன் உணவு தானியமும், குறுவை பருவத்தில் 14 கோடியே 84 லட்சம் உணவு தானியமும் என மொத்தம் சுமார் 30 கோடி டன் உணவு தானிய உற்பத்திக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
- சாகுபடி ஆண்டு: இந்தியாவில் ஜூலை மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலம், சாகுபடி ஆண்டாக கருதப்படுகிறது.
- 2019-2020 சாகுபடி ஆண்டில், 29 கோடியே 20 லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- இந்நிலையில், 2020-2021 சாகுபடி ஆண்டில் சம்பா பயிர்கள் விதைப்பு பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
- இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரை தென்மேற்கு பருவமழை வழக்கம்போல் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- இந்த தகவல்கள் மத்திய வேளாண் அமைச்சகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கலாச்சார பாரம்பரிய தேசிய பட்டியல் - தொடக்கம்
- இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் தேசிய பட்டியல் (National List of Intangible Cultural Heritage of India) ஏப்ரல் 18, 2020 அன்று, தொடங்கப்பட்டது. மத்திய கலாச்சார அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் வெளியிட்டார்.
- சங்கீத நாடக் அகாடமி: இந்தியாவின் பரிந்துரைகளை ஒருங்கிணைப்பதற்கான நோடல் மையமாக இந்தியாவின் கலாச்சாரத்தின் உச்ச அமைப்பான சங்கீத நாடக் அகாடமி உள்ளது
- 13 இந்திய பாரம்பரிய கூறுகள்: 2003-இல் நடைபெற்ற அருவமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் மாநாட்டின் படி, யுனெஸ்கோ பிரதிநிதித்துவ பட்டியல் 5 பிரிவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.
- இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 13 இந்திய பாரம்பரிய கூறுகள் (ஆண்டு) விவரம்:
- வேத மந்திர பாரம்பரியம் - 2008
- ராம்லீலா, ராமாயணத்தின் பாரம்பரிய செயல்திறன் - 2008
- குடியாட்டம், சமஸ்கிருத நாடகம் - 2008
- ரம்மான், மத விழா மற்றும் இந்தியாவின் கர்வால் இமயமலையின் சடங்கு - 2009
- முடியாட்டு, கேரளாவின் சடங்கு நாடகம் மற்றும் நடன நாடகம் - 2010
- கல்பெலியா நாட்டுப்புற பாடல்கள் மற்றும் ராஜஸ்தானின் நடனங்கள் -2010
- சாவ் நடனம் - 2010
- லடாக் பெளத்த கோஷம்: டிரான்ஸ்-இமயமலை லடாக் பிராந்தியத்தில், ஜம்மு-காஷ்மீர், இந்தியாவில் புனித புத்த நூல்களை பாராயணம் செய்தல் - 2012
- சங்கீர்த்தனா, மணிப்பூரின் சடங்கு பாடல், டிரம்ஸ் மற்றும் நடனம் - 2013
- இந்தியாவின் பஞ்சாப், ஜான்டியாலா குருவின் தாதேராக்களிடையே பாத்திரங்கள் தயாரிக்கும் பாரம்பரிய பித்தளை மற்றும் செப்பு கைவினை - 2014
- யோகா - 2016
- நவ்ரூஸ் - 2016
- கும்பமேளா - 2017.
மின்சாரம் (திருத்தம்) மசோதா 2020 - அறிமுகம்
- மின்சாரம் (திருத்தம்) மசோதா-2020, திருத்தப்பட்ட வரைவை (Electricity (Amendment) bill-2020) மின்சார அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
- புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து மின்சார உற்பத்தியை மேம்படுத்துவதற்காக இது மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
- அனைத்து மாநில எரிசக்தி ஆராய்ச்சி மையங்களும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ஒரு பாதையை குறிப்பிட வேண்டும் என்று மசோதா முன்மொழிகிறது.
- நீர் மின்சக்தியை புதுப்பிக்கத்தக்க சக்தியாக மத்திய அரசு சமீபத்தில் அங்கீகரித்துள்ளது.
- இந்தியாவில் அமைபும் 'புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காக்கள்'
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காக்கள் இந்தியாவில் அமைக்கப்பட உள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க உற்பத்தி பூங்காக்களை அமைக்க (Renewable Energy Parks) நடவடிக்கைகளைத் ஏப்ரல் 18, 2020 அன்று தொடங்கியுள்ளது.
பாரசிட்டமால் மருந்துகள் ஏற்றுமதி - தடை நீக்கம்
- இந்தியாவிலிருத்து ‘பாரசிட்டமால் வேதிப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கான தடை நீக்கப்படுகிறது.
- இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. எனினும், பாரசிட்டமால் வேதிப்பொருளைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான தடை தொடரும்’ என்று வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் ஏப்ரல் 17-அன்று குறிப்பிட்டுள்ளது.
கிருஷி ரதம் செயலி - அறிமுகம்
- நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விவசாயிகள் தங்களது விளைபொருள்களை சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல லாரிகளை ஏற்பாடு செய்வதற்கு வசதியாக ‘கிருஷி ரதம்’ என்ற செயலியை (app) மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஏப்ரல் 20 முதல் சுங்கச்சாவடிகள் இயங்கும்
- நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏப்ரல் 20-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகள் இயங்கும் என்றும் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி: 6 இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு
- இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு 6 நிறுவனங்கள், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அவற்றின் விவரம்:
- ஜைடஸ் கடிலா மருந்து தயாரிப்பு நிறுவனம் 2 தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது.
- சீரம் இன்ஸ்டிடியூட், பயலாஜிகல் இ, பாரத் பயோடெக், இந்தியன் இம்மியூனலாஜிகல்ஸ், மின்வாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தலா ஒரு தடுப்பு கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
நியமனங்கள்
WWF இந்திய சுற்றுச்சூழல் கல்வித் திட்ட தூதர் - விஸ்வநாதன் ஆனந்த்
- ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் (Viswanathan Anand) ஏப்ரல் 16-அன்று, உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF) இந்தியாவின் சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- WWF: World Wildlife Fund
அமெரிக்க பொருளாதார மீட்புக்குழு - 6 இந்திய வம்சாவளியினா் இடம்பிடிப்பு
- கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், அமெரிக்காவில் நாட்டுப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான (Revive US economy) குழுக்களில் 6 இந்திய வம்சாவளியினா் இடம்பெற்றுள்ளனா். அவரகள் விவரம்:
- சுந்தா் பிச்சை - கூகுள் தலைமை நிா்வாக அதிகாரி
- சத்ய நாதெள்ளா - மைக்ரோசாஃப்ட் தலைமை நிா்வாக அதிகாரி
- அரவிந்த் கிருஷ்ணா - ஐபிஎம் தலைமை நிா்வாக அதிகாரி
- சஞ்சய் மரோத்ரா - மைக்ரான் தலைமை நிா்வாக அதிகாரி
- ஆன் முகர்ஜி - பெர்னார்ட் ரிச்சர்ட் குழு
- அஜய் பங்கா - மாஸ்டர்கார்டு குழுமம்.
மாநாடுகள்
IMF-உலக வங்கி மேம்பாட்டுக் குழு கூட்டம்-2020
- 2020 ஏப்ரல் 17-அன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம்-உலக வங்கி இணைந்த 101-வது மேம்பாட்டுக் குழு கூட்டத்தில் (International Monetary Fund-World Bank 101st meeting 2020) இந்தியா கலந்து கொண்டது. இந்தியா சார்பில் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
பொருளாதார நிகழ்வுகள்
இந்திய ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்புகள் 17/4/2020
- கொரோனாவால் உலகில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ், தொலைக்காட்சி பேட்டி வழியாக ஏப்ரல் 17-அன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டாா். அவற்றின் விவரம்:
- வங்கிகள் ரிசர்வ் வங்கியில் செலுத்தும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் (Reverse Repo Rate) தற்போது 3.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) 4.40 சதவீதமாக நீடிக்கிறது.
- ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவும் விதமாக, NABARAD (தேசிய வேளாண்மை மற்றும் ஊரக அபிவிருத்தி வங்கி), SIDBI (இந்திய சிறு தொழில்கள் அபிவிருத்தி வங்கி), தேசிய வீட்டு வசதி வங்கி போன்ற மத்திய அரசு நிதி நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வழங்குகிறது.
- 2019-20-ம் ஆண்டுக்கு லாப ஈவுத் தொகை (Dividend) வழங்குவதில் இருந்து வங்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
- மாநிலங்கள் 60 சதவீதம் அதிகமாக கடன்களை வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. செப்டம்பர் 30-ந் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படுகிறது.
- நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) 3.2 சதவீத அளவுக்கான நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ரூ.1.2 லட்சம் கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை சப்ளை செய்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது.
- ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்கம்தான் நிர்ணயிக்கிறது. இரண்டாவது அரையாண்டில் பணவீக்கம் 4 சதவீதத்துக்கும் கீழ் வர வாய்ப்பு உள்ளது.
- ரிசர்வ் வங்கி, அடுத்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
- அருணாச்சல பிரதேசத்தில் புதிய வகை பாம்பு 'சலாசர் ஸ்லிதரின்' கண்டுபிடிப்பு
- அருணாச்சல பிரதேசத்தில் புதிய வகை பச்சைப்பாம்பு (Green Pit Viper) கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ஹாரி பாட்டர் திரைப்படத்தின் பாத்திரமான 'சலாசர் ஸ்லிதரின்' (Salazar Slytherin) என்று பெயரிடப்பட்டுள்ளது.
புத்தக வெளியீடு
- ஹார்பர்காலின்ஸ் பதிப்பகம் (HarperCollins) அமேசான் மெய்நிகர் மேடை (Amazon digital platform) மூலம் ஏப்ரல் 17-அன்று 3 ஆங்கிலப் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரம்:
- “Shuttling to the Top: The Story of P V Sindhu” - Krishnaswamy V
- வி. கிருஷ்ணசாமி அவர்கள் எழுதிய இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி வி சிந்து (P V Sindhu) பற்றிய 'Shuttling to the Top: The Story of P V Sindhu'
- “Shameless” - Taslima Nasreen.
- “Shameless” என்ற புத்தகத்தை தஸ்லிமா நஸ் ரீன் Taslima Nasreen எழுதியுள்ளார். பெங்காளி மொழியில் இருந்து அருணா சின்கா (Arunava Sinha) மொழி பெயர்த்துள்ளார்.
- “The Big Questions of Life” - Om Swami
தமிழ்நாடு நிகழ்வுகள்
தமிழ்நாட்டில் சிவப்பு பகுதி மாவட்டங்கள் - 25
- தமிழ்நாட்டில், கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட (ஹாட்ஸ்பாட்) சிவப்பு நிற பகுதி மாவட்டங்களின் எண்ணிக்கை ஏப்ரல்17-அன்று வரை, 25-ஆக உயர்ந்துள்ளது.
- மிதமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ள ஆரஞ்சு நிறப்பகுதி மாவட்டங்களாக 9 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களில் தற்போது வரை கொரோனா பாதிப்பு இல்லாததால் அவை பச்சை பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- இந்தியாவின் 320 மாவட்டங்களில் புதிதாக கொரோனா நோய்த்தொற்று ஏற்படவில்லை.
மதுரை சித்திரை திருவிழா ரத்து
- தமிழகத்தில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாக்களில் முக்கியமானது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா. கொரோனா பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டதாக ஏப்ரல் 17-அன்று அறிவிக்கப்பட்டது.
- இதேபோல், தஞ்சை பெரிய கோவிலிலும் சித்திரை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
டேபிள் டென்னிஸ் தரவரிசை 2020
- சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு ஏப்ரல் 16 அன்று வெளியிட்ட உலக டேபிள் டென்னிஸ் (ITTF) தரவரிசைப்படி, ஆண்கள் பிரிவில் இந்தியாவின் டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் ஷரத் கமல் Sharath Kamal 31-வது இடம் பிடித்துள்ளார். சத்தியன் ஞானசேகரன் 32-வது இடம் பிடித்துள்ளார்.
- இந்த பட்டியலில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சீனாவின் ஃபேன் ஜென்டோங் மற்றும் சென் மெங்முதலிடம் பெற்றுள்ளனர்.
- ITTF: International Table Tennis Federation.
முக்கிய தினங்கள்
மார்ச் 14 - சர்வதேச கணித தினம்
- முதலாவது சர்வதேச கணித தினம் (International Day of Mathematics), மார்ச் 14-அன்று கடைபிடிக்கப்பட்டது.
- 2020 சர்வதேச கணித தின மையக்கருத்து: Mathematics is Everywhere.
ஏப்ரல் 15 - உலக கலை தினம் (World Art Day)
ஏப்ரல் 16 - உலக குரல் தினம் (World Voice Day)
- 2020 உலக குரல் தின மையக்கருத்து: 'Focus on Your Voice'.
ஏப்ரல் 17 - தீரன் சின்னமலை பிறந்தநாள்
- விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாள் ஏப்ரல் 17 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
ஏப்ரல் 18 - உலக பாரம்பரிய தினம்
- ஆண்டுதோறும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினம் (World Heritage Day) கடைபிடிக்கப்படுகிறது.
- 2020 உலக பாரம்பரிய தின கருப்பொருள்: "Shared Culture’, ‘Shared heritage’ and ‘Shared responsibility".
ஏப்ரல் 17 - உலக ஹெமொஃபிலியா தினம்
- ஹீமோபிலியா மற்றும் பிற மரபுவழி இரத்தப்போக்கு கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆண்டுதோறும் ஏப்ரல் 17 அன்று உலக ஹெமொஃபிலியா தினம் (World Haemophilia Day) அனுசரிக்கப்படுகிறது.
- 2020 உலக ஹெமொஃபிலியா தின கருப்பொருள்: “Get+involved”.
Download this article as PDF Format