GK Tamil/TNPSC Link Current Affairs 1st Arpil 2020 (Tamil) PDF
GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge Arpil 1, 2020, which have updates of Latest Current Affairs 2020 events.
ஓவியர் வின்சென்ட் வான்கோ - வசந்தகால தோட்டம் ஓவியம்
- நெதர்லாந்தை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் வின்சென்ட் வான்கோ (Vincent Van Gogh). இவர் 1984-ம் ஆண்டு வசந்தகால தோட்டம் (The Parsonage Garden at Nuenen in Spring 1884) என்ற பெயரில் வரைந்த ஓவியம் உலக அளவில் புகழ் பெற்றதாகும். நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள சிங்கர் லாரன் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த ஓவியம் தற்போது திருடப்பட்டுள்ளது.
ஹாரி-மேகன்: பிரிட்டன் அரசக் குடும்பத்திலிருந்து அதிகாரப்பூா்வ விலகல்
- பிரிட்டன் அரசக் குடும்பத்திலிருந்து இளவரசா் ஹாரியும் அவரது மனைவி மேகன் மாா்க்கலும் 2020 மார்ச் 31-அன்றுடன் அதிகாரப்பூா்வமாக விலகினா்.
- பிரிட்டன் அரியணைக்கான வாரிசுகள் பட்டியலில் 6-ஆவது இடத்தில் உள்ள இளவரசா் ஹாரியும் அவரது மனைவி இளவரசி மேகன் மாா்க்கலும் தங்களது பட்டங்களைத் துறக்கவிருப்பதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தனா். அரச பட்டங்களைத் துறந்து, அவா்கள் இருவரும் அமெரிக்காவில் தங்களது வாழ்க்கையைத் தொடர உள்ளனர்.
இந்திய நிகழ்வுகள்
ஓட்டுநா் உரிமங்கள்: ஜூன் 30 வரை செல்லும்
- காலாவதியான ஓட்டுநா் உரிமங்கள், வாகன அனுமதிச் சீட்டுகள், வாகனப் பதிவு ஆவணங்கள் உள்ளிட்டவை ஜூன் 30-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்தது. நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றின் (கொவைட்-19) பரவல் தீவிரமடைந்து வரும் சூழலில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரதமா் மோடி 130 இந்தியத் தூதா்களுடன் ஆலோசனை
- கரோனா நோய்த்தொற்றால் உலக அளவில் நிலவும் அரசியல், பொருளாதார சூழல் தொடா்பாக, 130 நாடுகளுக்கான இந்தியத் தூதா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி மார்ச் 31-அன்று ஆலோசனை மேற்கொண்டாா்.
பொருளாதார நிகழ்வுகள்
10 பொதுத்துறை வங்கிகள் '4 வங்கிகளாக இணைப்பு' - தகவல் தொகுப்பு
- 2020 ஏப்ரல் 1-முதல் அமல்:10 பொதுத்துறை வங்கிகள், 4 வங்கிகளாக இணைக்கப்படுவது 2020 ஏப்ரல் 1-முதல் அமலுக்கு வருகிறது (PSU Bank Merger Arpil 2020).
- இணைக்கப்பட்ட வங்கிகள் (4 வங்கிகள்):
- இந்தியன் வங்கி: இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைகிறது. இனிமேல், அலகாபாத் வங்கிக்கிளைகள், 'இந்தியன் வங்கி'க்கிளைகளாக செயல்படும்.
- யூனியன் பேங்க் ஆப் இந்தியா: கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைகின்றன. இனிமேல், கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கிக்கிளைகள், 'யூனியன் பேங்க் ஆப் இந்தியா' கிளைகளாக செயல்படும்.
- கனரா வங்கி: சிண்டிகேட் வங்கி, இன்று கனரா வங்கியுடன் இணைகிறது. இனிமேல், சிண்டி கேட் வங்கிக்கிளைகள், 'கனரா வங்கி'க்கிளைகளாக செயல்படும்.
- பஞ்சாப் நேஷனல் வங்கி: யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைகின்றன. மேற்கண்ட 2 வங்கிக்கிளைகளும் இனிமேல் 'பஞ்சாப் நேஷனல் வங்கி'க்கிளைகளாக செயல்படும்.
- பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை-12: 10 பொதுத்துறை வங்கிகள், 4 வங்கிகளாக இணைகிறது. இணைப்பைத் தொடர்ந்து, நாட்டில் பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை 12 ஆக குறைகிறது.
- இணைப்பப்பட்ட வங்கிகள் (06): பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா வங்கி, கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி, இந்தியன் வங்கி
- சுயாதீன வங்கிகள் (06): இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
- நாட்டின் மிகப்பெரிய வங்கிகள் வரிசை (1/4/2020)
- பாரத ஸ்டேட் வங்கி
- பஞ்சாப் நேஷனல் வங்கி
- பேங்க் ஆப் பரோடா வங்கி
- கனரா வங்கி
- யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி.
புத்தக வெளியீடு
The Enlightenment of the Greengage Tree - ஷோகூஃப் அசார்
- ஷோகூஃப் அசார் (Shokoofeh Azar) அவர்கள் எழுதியுள்ள 'தி என்லைட்மேன்ட் ஆப் தி க்ரீனாஜ் ட்ரீ' (The Enlightenment of the Greengage Tree) என்ற ஆங்கில புத்தகத்தின் ஐரோப்பா பதிப்பு ஜனவரி 2020-இல் வெளியிடப்பட்டது.
Backstage: The Story Behind India’s High Growth Years - மான்டெக் சிங் அலுவாலியா
- இந்திய திட்டக் கமிஷன் தலைவராக இருந்த பொருளாதார நிபுணர் மான்டெக் சிங் அலுவாலியா (Montek Singh Ahluwalia) 'பேக்ஸ்டேஜ்: இந்தியாவின் உயர் வளர்ச்சியின் பின்னணியில் உள்ள கதை' (Backstage: The Story Behind India’s High Growth Years) என்ற ஆங்கில புத்தகத்தை எழுதியுள்ளார். 1985 முதல் 2014 வரையிலான காலத்தில் இவர் மேற்கொண்ட கொள்கை வகுப்பின் சாரத்தை இந்த புத்தகம் வெளிப்படுத்துகிறது.
Sridevi: The Eternal Screen Goddess - சத்யார்த் நாயக்
- எழுத்தாளரும் திரைக்கதை எழுத்தாளருமான சத்யார்த் நாயக் (Satyarth Nayak) ‘ஸ்ரீதேவி: தி எடர்னல் ஸ்கிரீன் காடஸ்’ (Sridevi: The Eternal Screen Goddess) என்ற ஆங்கில புத்தகத்தை எழுதியுள்ளார், இது மறைந்த நடிகை ஸ்ரீதேவியைப் பற்றியது. இதை பெங்குயின் ஈபரி பிரஸ் (Penguin eBury) வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
கரோனா நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்-2020
- சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் சுமார் ரூ.200 கோடி மதிப்பில் 'கரோனா நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்' என்ற சிறப்பு கடனுதவி திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மார்ச் 31-அன்று தெரிவித்துள்ளார் .
மருத்துவ பணியாளர்களுக்கு 2 மாதம் பணிநீட்டிப்பு
- தமிழ்நாட்டில் 31.3.2020 அன்றுடன் ஓய்வு பெற இருந்த மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுக்குப் பின் ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர, பணிநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
உலக தடகளப் போட்டிகள் 2021 - ஒத்திவைப்பு
- உலக தடகளப் போட்டிகள் (2021 World Athletics Championships), 2021 ஆகஸ்ட் 6 முதல் 15 வரை அமெரிக்காவின் யூஜின், ஓரிகான் (Eugene, Oregon) நகரங்களில் நடைபெறுவதாக இருந்தது. கொ, United Statesரோனா பாதிப்பு காரணமாக இந்த போட்டிகள், 2022-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக உலக தடகள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (U-17)
- சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) சார்பில் 7-வது பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது.
- 2020 நவம்பர் 2-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நவிமும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், புவனேசுவரம், கவுகாத்தி ஆகிய நகரங்களில் நடைபெறும் இந்த கால்பந்து போட்டியில் இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.
முக்கிய தினங்கள்
முட்டாள்கள் தினம் - ஏப்ரல் 1
- பிரான்சில் முதன்முதலில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டது. 16 ஆம் நுாற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 தான், புத்தாண்டு தினமாக கடைபிடிக்கப்பட்டது. 13ம் கிரிகோரி என்ற போப் ஆண்டவர், 1582 பிப்ரவரி 29 இல், புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார்.இதில் ஜனவரி 1, புத்தாண்டாக மாற்றப்பட்டது.
- 1752ல் இங்கிலாந்து, அமெரிக்காவிலும் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவிலும் இக்காலண்டர் புழக்கத்திற்கு வந்தது. புதிய காலண்டரை ஏற்காத நாடுகளை, ஒவ்வொரு ஏப்ரல் 1-ந்தேதியும் அவர்களுக்கு வெற்று பரிசுப்பெட்டியை அனுப்பி வைத்து அவர்களை ஏமாற்றினர். இதை 'முட்டாள்கள் தினம்' என அழைத்தனர்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) துவங்கிய தினம் - ஏப்ரல் 1
- முதல் உலகப் போருக்குப் பின், இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தீர்க்க, 'ஹில்டன்- யங்' ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, 1935 ஏப்ரல் 1 ஆம் தேதி, மேற்கு வங்க தலைநகர், கோல்கட்டாவில் துவங்கப்பட்டது. 1937 இல், மும்பைக்கு மாற்றப்பட்டது.
- ரிசர்வ் வங்கிவங்கியின் முதல் கவர்னர், சர் ஆஸ்போர்ன் ஆர்கெல் ஸ்மித் ஆவார்.
- 1943-இல், கவர்னராக பதவி வகித்த, முதல் இந்தியர், சி.டி.தேஷ்முக்.
- தேசிய மயமாக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி (1949): இந்தியா சுதந்திரமடைந்த பின், 1949 ஜனவரி 1 ஆம் தேதி, இந்திய ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்டது.
- கவர்னர் தலைமையில், மத்திய நிர்வாக இயக்குனர்கள் அடங்கிய குழு, ரிசர்வ் வங்கியை நிர்வகிக்கிறது.
- பர்மா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு, சில ஆண்டுகள், அந்நாடுகளின் மத்திய வங்கியா, இவ்வங்கி செயல்பட்டது.
- இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள்: இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள், முத்திரைத் தாள்களை அச்சிடல்; தேசிய நிதிக்கொள்கையை செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்; இந்திய வங்கிகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், கட்டுப்படுத்துதல், வினியோகித்தல் ஆகியவை, இவ்வங்கியின் முக்கிய பணிகள் ஆகும்.
ஒடிசா மாநிலம் உருவாக்கப்பட்ட நாள் - ஏப்ரல் 1
- ஒடிசா மாநிலம் உருவாக்கப்பட்ட நாள், 1936 ஏப்ரல் 1 அன்று உருவாக்கப்பட்டது. இந்த நாள் "உட்கல் திவாஸ்" (Odisha Formation Day, Utkal Divas) என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
Read this in FLIP BOOK format
Download this article as PDF Format