Current Affairs and GK Today 22-23 April, 2020
TNPSC Current Affairs April 2020 - Daily Download PDF
GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge April 22nd and 23rd, 2020, which have updates of Latest Current Affairs 2020 events.
GKTAMIL Current Affairs: Our Current Affairs April 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.
இந்திய நிகழ்வுகள்
உலக பத்திரிகை சுதந்திர அட்டவணை 2020: இந்தியா 142-வது இடம்
- பாரிஸ் நகரைச் சார்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான, எல்லைகள் இல்லா நிருபர்கள் அமைப்பு (Reporters without borders), 2020 ஏப்ரல் 2-அன்று, 2020-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பத்திரிகை சுதந்திரக் குறியீட்டு அட்டவணையை (World Press Freedom Index 2020) வெளியிட்டது.
- மொத்தம் 180 நாடுகள் இடம்பெற்ற இந்த அட்டவணையில் இந்தியா 142-வது இடத்தைப் பெற்றுள்ளது.
- நார்வே நாடு முதல் இடத்திலும், வட கொரியா கடைசி இடத்திலும் உள்ளன.
- அண்டை நாடுகள், பாகிஸ்தான் 145, பங்களாதேஷ் 151, சீனா 177-வது ஆகிய இடங்களைப் பெற்றுள்ளன.
கொரோனாவால் பொருளாதார பாதிப்பு: 26 கோடி பேர் பட்டினி - ஐ.நா. கணிப்பு
- கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம், உணவு பிரச்சினை ஆகியவை குறித்து ஐ.நா. உலக உணவு திட்டம், தனது கணிப்புகளை அறிக்கையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் ஏப்ரல் 21-அன்று சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:
- கொரோனா பரவலுக்கு முன்பே, 2019-ம் ஆண்டு, உணவு பாதுகாப்பின்மையால் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 13 கோடியே 50 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை, கொரோனா பாதிப்பால், நடப்பாண்டில் இரட்டிப்பாக உயரும். அதாவது, 26 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறோம்.
- 50 நாடுகளில், உணவு பிரச்சினையில் சிக்கி தவிப்போர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட தலா 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
- பொருளாதார பாதிப்பு அதிகரித்தால், இன்னும் 18 கோடி பேர், பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள். இத்தகைய நிலைமையை தவிர்க்க எல்லோரும் கூட்டாக பாடுபட வேண்டும்.
அருணாச்சல பிரதேசத்தில் 'ஹங்க்பான் தாதா பாலம்' - திறந்து வைப்பு
- அருணாச்சல பிரதேச மாநிலத்தின் வடக்கு சுபன்சிரி மாவட்டத்தில், சுபன்சிரி ஆற்றின் மீது புதுப்பிக்கப்பட்ட ஹங்க்பான் தாதா பாலத்தை (Hangpan Dada Bridge) காணொலிகாட்சி மூலம் மூலம் முதலமைச்சர் பெமா காண்டு (Pema Khandu) திறந்து வைத்தார்.
- ஹங்க்பான் தாதா பாலம், 430 அடி பல்லடுக்கு பாலத்தின் (Multi Span Bridge) புனரமைப்பு பணிகள் எல்லை சாலை அமைப்பு (BRO) மூலம் அருணங் திட்டத்தின் கீழ் Project ARUNANK ஒரு மாத காலத்திற்குள் சீரமைக்கப்பட்டது.
- BRO: Border Road Organization.
அரிசியை எத்தனாலாக (Ethanol) மாற்ற அனுமதி
- நாட்டில் உபரியாக கிடைக்கக்கூடிய அரிசியை எத்தனாலாக (Ethanol) மாற்ற இந்திய உணவுக் கழகத்திற்கு (FCI), 2020 ஏப்ரல் 20 அன்று, பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடந்த தேசிய உயிர் எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழு (NBCC) கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இதன் மூலம் ஆல்கஹால் அடிப்படையிலான கை-சுத்திகரிப்பான்களை உருவாக்குவும், எத்தனால் கலப்பு பெட்ரோல் (EBP) உருவாக்கவும் வகை செய்கிறது.
- NBCC: National Biofuel Coordination Committee.
கொரோனா சிகிச்சைக்கு 'பாரம்பரிய மருத்துவ மருந்து' தயாரிக்க அனுமதி
- ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை சார்ந்த வல்லுனர்கள், 'கொரோனா' சிகிச்சைக்கான மருந்து தயாரிக்கும் பணியில் முறைப்படி ஈடுபட, மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏப்ரல் 21-அன்று முறையான அனுமதி அளித்துள்ளது.
கொரானா வைரஸ் நோயாளிகளுக்கு "செப்சிவாக்" - மருந்து பரிசொதனை
- அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) கொரானா வைரஸ் நோயாளிகளுக்கு "செப்சிவாக்" (Sepsisvac)
- என்ற மருந்தை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதாக ஏப்ரல் 22-அன்று அறிவித்தது.
- செப்சிவாக் மருந்து தற்போது எதிர்மறை செப்சிஸ் நோயாளிகளுக்கு (Gram Negative Sepsis) சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.
- இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் சமீபத்தில் "செப்சிவாக்" சோதனைக்கு ஒப்புதல் அளித்தார்.
கொரானா வைரஸ் எதிர்ப்புப் பணி: ரூ.15,000 கோடி - அமைச்சரவை ஒப்புதல்
- கொரானா வைரஸ் தொற்று எதிர்ப்புப் பணிகளுக்காக ,"இந்தியா கோவிட்-19 அவசரகால பதில் மற்றும் சுகாதார முறைமை தயாரிப்பு சவால்" (India COVID-19 Emergency Response and Health System Preparedness Challenge) என்ற பெயரில் ரூ.15,000 கோடியை அளிக்க 2020 ஏப்ரல் 22-அன்று, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நிதி 3 கட்டங்களாக பயன்படுத்தப்பட உள்ளது.
மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான வன்முறை - சட்டத் திருத்தம் அறிமுகம்
- மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், 2020 ஏப்ரல் 22-அன்று இந்திய அரசு அவசர சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
- இதற்காக 1897-ஆம் ஆண்டு தொற்று நோய் சட்டத்தில் (Epidemic Disease Act, 1897) திருத்தம் செய்யப்படுகிறது. இதன்மூலம் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள், 7 ஆண்டுகள் வரை தண்டனை பெறவும், ரூ .2 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலுத்த வேண்டி இருக்கும்.
நியமனங்கள்
அமெரிக்க தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக இந்திய வம்சாவளி 'சுதர்சனம் பாபு'
- அமெரிக்காவின் தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுதர்சனம் பாபு என்பவரை ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
- சுதர்சனம் பாபு, அமெரிக்க தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்படும் 3-வது இந்தியர் ஆவார். இதற்கு முன் அரிசோனா பல்கலைக்கழகத்தின் சேதுராமன் பஞ்சநாதன் மற்றும் வெர்மோன்ட் பல்கலைக்கழகத்தின் சுரேஷ் வி. கரிமெல்லா ஆகிய 2 பேரும் உறுப்பினர்களாக பொறுப்பு வகித்துள்ளனர்.
மாநாடுகள்
புதிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழுவின் ஆண்டு கூட்டம் 2020
- 2020 ஏப்ரல் 20-அன்று, புதிய அபிவிருத்தி வங்கியின் (NDB) ஆளுநர் குழுவின் 5-வது ஆண்டு கூட்டத்தில் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுடில்லியில் இருந்து காணொலிகாட்சி மூலம் கலந்து கொண்டார்.
- இந்தியாவில் NDB வங்கி இதுவரை 4,183 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 14 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- பிரிக்ஸ் (BRICS) நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் உள்கட்டமைப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி திட்டங்களுக்கான வளங்களை திரட்டுவதற்காக, பிரிக்ஸ் அமைப்பு நாடுகளால் 2014-ஆம் ஆண்டுநிறுவப்பட்டது.
- இதன் தலைமையகம் சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ளது.
- NDB: New Development Bank.
- BRICS: Brazil, Russia, India, China and South Africa.
G-20 வேளாண் அமைச்சர்கள் கூட்டம்-2020
- G-20 நாடுகளின் வேளாண் அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் (G-20 Agriculture Ministers Meeting 2020), சவுதி அதிபரால் காணொளி காட்சி மூலம் ஏப்ரல் 21-அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பொருளாதார நிகழ்வுகள்
கச்சா எண்ணெய் விலை - பெறும் சரிவு
- 2020 ஏப்ரல் 21-அன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை வர்த்தகத்தின் இடையே ஒரு கட்டத்தில் 20 டாலருக்கும் கீழ் சரிந்து 18.10 டாலராக வீழ்ச்சி கண்டது. அது 18 ஆண்டுகளில் இல்லாத சரிவாக இருந்தது.
- ‘ஓபெக்’ எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பும், ரஷியா உள்ளிட்ட அதன் கூட்டணி நாடுகளும் நாள் ஒன்றுக்கு 97 லட்சம் பேரல்கள் அளவிற்கு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்குதாரரான 'பேஸ்புக்'
- இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் (Reliance) நிறுவனத்தின் ஜியோ (Jio) இயங்குதளத்தின் குறைந்த அளவிலான பங்குகளை (9.99 %) வாங்க 45,574 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒதுக்கியுள்ளதாக பேஸ்புக் (Facebook) நிறுவனம் அறிவித்துள்ளது
- இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் குறைந்த அளவு பங்குதாரராக பேஸ்புக் மாறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
கொரோனா நோய் தடுப்பு பணி: உயிரிழக்க நேரிட்டால் 'ரூ.50 லட்சம் நிதியுதவி'
- கொரோனா நோய் தடுப்பு பணியில் பணியாற்றி வரும் மருத்துவ துறை , போலீசார், உள்ளாட்சி துறை மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களும் வைரசால் பாதிக்கப்பட்ட உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும்.
- கொரோனா தடுப்பு பணியில் உள்ள தனியார் மற்றும் அரசு துறையில் இருந்து இறப்பை சந்திக்க நேரிட்டால், அவர்களின் பணிக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில், உயிரிழந்தவர்களின் உடலை பாதுகாப்புடனும் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும், என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி ஏப்ரல் 22-அன்று அறிவத்துள்ளார்.
விளையாட்டு நிகழ்வுகள்
T20 உலக கோப்பை கிரிக்கெட் 2020 (ஆஸ்திரேலியா)
- 16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
டீம் மாஸ்க் ஃபோர்ஸ் - சிறு குறிப்பு
- பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, "டீம் மாஸ்க் ஃபோர்ஸ்" (Team Mask Force) என்ற அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர்/வீராங்கனைகளைக் கொண்டக் குழுவை (கடந்த, தற்போது, ஆண்கள் மற்றும் பெண்கள்), இந்தியாவில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அமைத்துள்ளது. இது சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சௌரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களை கொண்டுள்ளது.
முக்கிய தினங்கள்
ஏப்ரல் 21 - தேசிய குடிமைப் பணிகள் தினம் (National Civil Service Day).
ஏப்ரல் 21 - நிர்வாக வல்லுநர்கள் (செயலாளர்) தினம் (Administrative Professionals (Secretary’s) Day)
ஏப்ரல் 21 - உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு தினம் (World Creativity and Innovation Day).
ஏப்ரல் 22 - உலக புவி நாள்
- உலக புவிநாள் (World Earth Day) ஏப்ரல் 22 அன்று, கொண்டாடப்படுகிறது. புவியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உலக புவி நாளின் நோக்கம் ஆகும்.
- 2020 புவிதின மையக்கருத்து: "நமது உயிரினங்களின் பாதுகாப்பு" (Protect Our Species) என்பதாகும்.
- கேலார்ட் நெல்சன்: ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார்.
- இந்த (ஏப்ரல் 22) நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.
- அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் புவி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
- உலக சுற்றுச் சூழல் நாள், சூன் 5: ஐக்கிய நாடுகள் அவை சூன் 5-ஆம் நாளன்று உலக சுற்றுச் சூழல் நாளை அனுசரித்து வருகிறது
ஏப்ரல் 22 - சர்வதேச தாய் பூமி தினம்
- பூமி மற்றும் அதன் சுற்றுச்சூழல் நமக்கு அளித்துவரும் வாழ்வாதாரங்களை நினைவுகூறும் தினமாக, ஐக்கிய நாடுகள் அவையால், ஏப்ரல் 22 அன்று சர்வதேச தாய் பூமி தினம் (International Mother Earth Day) கொண்டாடப்படுகிறது.
- 2020-ஆம் ஆண்டுக்கான சர்வதேச தாய் பூமி தின மையக்கருத்து:
ஏப்ரல் 23 - உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் 2020
- உலகப் புகழ்பெற்ற ஆங்கில கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு தினமான ஏப்ரல் 23-ந் தேதி உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாக (World Book and Copyright Day, 23 April) கொண்டாடப்படுகிறது.
- யுனெஸ்கோ அமைப்பால் 1995-ம் முதல் இந்நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- உலக புத்தக தலைநகரம் 2020: ஒவ்வொரு ஆண்டும் யுனெஸ்கோ மற்றும் சர்வதேச நிறுவனங்கள் புத்தகத் துறையின் மூன்று முக்கிய துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வெளியீட்டாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் நூலகங்கள், உலக புத்தக தலைநகரத்தை (World Book Capital 2020) ஒரு வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கின்றன.
- 2020 உலக புத்தக தலைநகரம், கோலாலம்பூர், மலேசியா)
- 2020 ஆம் ஆண்டிற்கான உலக புத்தக தலைநகரமாக, மலேசியாவின் "கோலாலம்பூர்" நகரம் (World Book Capital 2020, Kuala Lumpur, Malaysia) அறிவிக்கப்பட்டுள்ளது.
- வாசகம்: "KL Baca – caring through reading"
- 2019 உலக புத்தக தலைநகரம், ஷார்ஜா, ஜக்கிய அமீரகம்
- 2018 உலக புத்தக தலைநகரம், ஏதன்ஸ், கிரீஸ்
- இந்திய மொழிகளில் முதல் அச்சு புத்தகம் " தம்பிரான் வணக்கம்":
- 1400-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டை சேர்ந்த கூட்டன்பர்க் நவீன அச்சு இயந்திரத்தை கண்டு பிடித்தப் பிறகு தாளில் அச்சடிக்கும் முறை தொடங்கியது.
- இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் ஒரு நூல் அச்சு வடிவம் பெற்ற பெருமையை தமிழ் மொழியே பெறுகின்றது.
- இப்பெருமைக்கு ஆதாரமாக விளங்கும் நூல் "தம்பிரான் வணக்கம் (Doctrina Christam)" 1578ம் ஆண்டில் தற்போதைய கேரள மாநிலம் கொல்லத்தில் வார்க்கப்பட்ட திருத்தமான தமிழ் அச்செழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
- 14 X 10 செ.மீ அளவு காகிதத்தில் பதினாறே பக்கங்கள் கொண்ட சிறிய நூல் இதுவாகும்.
- தமிழ் அச்சுக்கலையின் தந்தை
- "தமிழ் அச்சுக்கலையின் தந்தை" என அறியப்படுகிற போர்ச்சுகீசிய நாட்டவரான "அண்ட்ரிக் அடிகளார்" (Hendriq Henriquez) இந்நூலை வெளியிட்டார். மோ. நேவிஸ் விக்டோரியா எழுதியுள்ளார்.
- 1578 ஆம் ஆண்டு அச்செழுத்துக்களில் வெளியான இந்நூல் பதினாறு பக்கங்களுடையது. சீனக் காகிதங்களில் அச்சடிக்கப்பட்டது.
- 1951 முதல் இந்த நூலின் தற்போது கிடைக்கக்கூடிய ஒரே பிரதி அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக நூலகத்தின் தொன்மையான நூல் வகையைச் சார்ந்த கிளை நூலகமான ஹௌடன் நூலகத்தில் (Houghton Library) பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
முக்கிய வாரங்கள்
பிப்ரவரி 2020
உலக மதநல்லிணக்க வாரம் - 1-7 பிப்ரவரி 2020
- அனைத்து மக்களிடையேயும் மத நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான ஒரு வழியாக பிப்ரவரி 1-7 தேதிகளில் உலக மதநல்லிணக்க வாரத்தை (World Interfaith Harmony Week 1-7 February) ஐ.நா. சபை கடைபிடிக்கிறது.
ஏப்ரல் 2020
உலக நோய்த்தடுப்பு வாரம் - 24-30 ஏப்ரல் 2020
- தடுப்பூசி மூலம் நோய்களிலிருந்து ஒவ்வொரு நபரும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய ஏப்ரல் 24-30 தேதிகளில் உலக நோய்த்தடுப்பு வாரம் (World Immunization Week ) உலக சுகாதார அமைப்பினால் (WHO) கடைபிடிக்கப்படுகிறது.
- 2020 உலக நோய்த்தடுப்பு வார கருப்பொருள்: 'VaccinesWork for All'.
மே 2020
- தன்னாட்சியற்ற பிராந்திய மக்களின் ஒற்றுமைக்கான வாரம் - 25–31 மே 2020 (Week of Solidarity with the Peoples of Non-Self-Governing Territories 25–31 May)
ஆகஸ்ட் 2020
- உலக தாய்ப்பால் வாரம் - 1–7, ஆகஸ்ட் 2020 - (World Breastfeeding Week 1–7 August)
அக்டோபர் 2020
- உலக விண்வெளி வாரம் - அக்டோபர் 4-10, 2020 (World Space Week 4–10 October)
- ஆயுத ஒழிப்பு வாரம் - அக்டோபர் 24-30, 2020 (Disarmament Week 24–30 October)
நவம்பர் 2020
- அறிவியல் மற்றும் அமைதிக்கான சர்வதேச வாரம் - 6-12 நவம்பர், 2020 ( International Week of Science and Peace 6–12 November, the week in which 11 November falls)
- உலக நுண்ணுயிர்க்கொல்லி விழிப்புணர்வு வாரம், 13-19 நவம்பர் (World Antibiotic Awareness Week, 13-19 November).
Download this article as PDF Format