ஆதிச்சநல்லூர் நாகரிகம்
- தமிழ் நாட்டின் மிகப் பழைய நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்களில் ஒன்று ஆதிச்சநல்லூர் ஆகும். தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது.
- 114 ஏக்கர் பரப்பளவில் இறந்தவர்களை தாழியில் புதைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- ஆதிச்சநல்லூர் நாகரிகத்தை முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மன் நாட்டை சேர்ந்த டாக்டர் ஜாகர் என்பவர் ஆவார்.
- 1876-ம் ஆண்டு ஆதிச்சநல்லூர் பகுதியில் அவர் ஆய்வு நடத்தி பல பொருட்களை கண்டுபிடித்து அவர்கள் நாட்டுக்கே எடுத்துச்சென்றார். அந்த பொருட்கள் ஜெர்மன் நாட்டில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இன்றும் இருக்கிறது.
- 1903-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் தாழிகளை தோண்டியெடுத்து மண்வெட்டி, கொழு போன்ற பொருட்களை கண்டுபிடித்து பிரான்சுக்கு எடுத்துச்சென்றார்.
- 1905-ம் ஆண்டு சென்னை அருங்காட்சியக கண்காணிப்பாளராக இருந்த அலெக்சாண்டர் ரீயா ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்த பல பொருட்களை சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெற செய்தார்.
- 2004-ம் ஆண்டு தொல்பொருள் ஆய்வாளர் சத்தியமூர்த்தி ஆய்வு செய்து 2005-ம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
- ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் பணிகள் தொடர்பாக மதுரை உச்சநீதிமன்ற கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த வழக்கில், மத்தியஅரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் (உதவி சொலிசிட்டர் ஜெனரல்) ஆஜராகி, ஆதிச்சநல்லூர் அகழிகளிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் கார்பன் சோதனைக்காக அமெரிக்காவில் உள்ள மியாமி சோதனைகூடத்துக்கு அனுப்பப்பட்டன.
- அதில் 2 பொருட்களின் பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டன. அதன்படி, ஒருபொருள் கி.மு. 905-ம் ஆண்டையும், மற்றொரு பொருள் கி.மு. 791-ம் ஆண்டையும் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல, சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள் கி.மு. 395 ஆண்டுகள் பழமையானவை என்று தெரியவந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூரில் தமிழர்களின் நாகரிகம் கி.மு. 905-ம் ஆண்டிற்கு முந்தையது என்பது உறுதியாகியுள்ளது.