GK Tamil/TNPSC Link Current Affairs March 29-31, 2020 (Tamil) PDF
GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge 29th to 31st March 2020, which have updates of Latest Current Affairs 2020 events.
Our Current Affairs March 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.
சர்வதேச நிகழ்வுகள்இந்தியா-ஜப்பான் 'ரூ.15,295 கோடி' ஒப்பந்தம்
- ஜப்பானிய அரசாங்க நிதி நிறுவனம் (JICA) மார்ச் 27, 2020 அன்று, 3 இந்திய இரயில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவி (ODA) வழங்க இந்தியாவுடன் ரூ .15,295 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- 3 திட்டங்கள் விவரம்:
- அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு நடைபாதை (Dedicated Freight Corridor)
- டெல்லி-மும்பை தொழில்துறை நடைபாதை (DMIC) வளர்ச்சித் திட்டம்
- ரேவாரி-வதோதரா வரை 950 கி.மீ புதிய சரக்கு பாதை (Rewari to Vadodara freight line)
- மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு திட்டம்
- மும்பை மெட்ரோ லைன்-3 திட்டம் (Mumbai Metro Line 3 Project)
- JICA: Japanese government funding agency,
- ODA: Official Development Assistance,
- DMIC: Delhi-Mumbai Industrial Corridor.
நேட்டோ புதிய உறுப்புநாடாக 'வடக்கு மாசிடோனியா' சேர்ப்பு
- வடக்கு மாசிடோனியா குடியரசு (North Macedonia), வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (NATO) 30-வது மற்றும் புதிய உறுப்பினராக மார்ச் 27, 2020 அன்று அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது.
- NATO அமைப்பு (1949): இராணுவ வழிமுறைகள் மூலம் நேட்டோ அமைப்பு உறுப்பினர்களின் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிப்பதற்காக 1949-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைமையகம் பெல்ஜியம் நாட்டின் புருஷெல்ஸ் நகரில் அமைந்துள்ளது.
- NATO: North Atlantic Treaty Organization.
கொரோனா பாதிப்பு: அமெரிக்கா ரூ.150 லட்சம் கோடி ஒதுக்கேடு
- அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா ரூ.150 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது. இதற்கான சட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார்.
கரோனா நோய்த்தொற்று: ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா மரணம்
- கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா அண்மையில் உயிரிழந்தார். 86 வயதான மரியா தெரசா, கரோனா நோய்க்கு பலியான முதல் அரச குடும்பத்தவா் ஆவார்.
- பிரிட்டன் இளவரசா் சார்லஸுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது இந்த வாரத் தொடக்கத்தில் உறுதி செய்யப்பட்டது.
உலகம் முழுவதும் 150 கோடி மாணவர்களின் படிப்பு பாதிப்பு
- கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துகிற வகையில், உலகமெங்கும் 160 நாடுகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் மூடப்பட்டுள்ளன. உலகமெங்கும் 150 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பள்ளி, கல்லூரிக்கு மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- மொத்த மாணவர் சமுதாயத்தில் 87 சதவீதம்பேரின் படிப்பு பாதித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான UNESCO அறிவித்துள்ளது.
‘அம்பிகா’ யானை - கருணைக்கொலை
- 1961-ம் ஆண்டு இந்திய குழந்தைகள் சார்பில் அன்பளிப்பாக ‘அம்பிகா’ என்ற யானை, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள சுமித்சோனியன் தேசிய உயிரியல் பூங்காவிற்கு வழங்கப்பட்டது.
- 72 வயதை எட்டியதால் முதுமையின் காரணமாக மார்ச் 27-அன்று அதை கருணைக்கொலை செய்யப்பட்டது.
இந்திய நிகழ்வுகள்
புது தில்லியில் 'தேசிய தொலைமருத்துவ மையம் 'CoNTeC' - தொடக்கம்
- மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், கொரோனா பெரும்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களை, அகில இந்திய
- மருத்துவ அறிவியல் நிறுவனத்துடன் (AIIMS) இணைக்கும் வகையில், புது தில்லியில் 'CoNTeC' என்று தேசிய தொலைமருத்துவ மையத்தை தொடங்கிவைத்துள்ளார்.
- CoNTeC: COVID-19 National Teleconsultation Centre.
- AIIMS: All India Institute of Medical Sciences.
11 அதிகாரம் பெற்ற குழுக்கள் - அமைப்பு
- 2005 பேரழிவு மேலாண்மைச் சட்டத்தின் கீழ் (Disaster Management Act, 2005 (Disaster Management Act 2005), 11 வெவ்வேறு அதிகாரம் பெற்ற குழுக்களை (Empowered Groups) மத்திய அரசு மார்ச் 30 அன்று அமைத்துள்ளது.
- 21 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்குக்கு பின், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் நடவடிக்கைகளை இந்த குழுக்கள் பரிந்துரைக்கும்.
வங்கி ஒருங்கிணைப்புத் திட்டம்: ஏப்ரல் 1 முதல் அமல்
- பெரும் வங்கி ஒருங்கிணைப்புத் திட்டம் ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 10 அரசுக்கு சொந்தமான வங்கிகளை, 4 வங்கியாக இணைக்கப்படவுள்ளது. அவற்றின் விவரம்:
- இத்திட்டத்தின்படி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியில் இணைக்கப்படுகிறது.
- கனரா வங்கியில் சிண்டிகேட் வங்கியுடன் இணைக்கப்படுகிறது.
- அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்படுகிறது.
- ஆந்திர வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்படவுள்ளன.
கரோனா - சமூகப் பரவலாக மாறவில்லை
- நமது நாட்டில் கரோனா நோய்த்தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை 100-இல் இருந்து ஆயிரமாக அதிகரிக்க 12 நாள்கள் ஆகியுள்ளது. கரோனா நமது நாட்டில் சமூகப் பரவலாக மாறவில்லை. உள்ளூா் அளவிலேயே உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் மார்ச் 30-அன்று அறிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு: டாடா குழுமம் ரூ.1,500 கோடி நிதி
- கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவா்களுக்கான சிகிச்சை நடவடிக்கைகளுக்காகவும் ரூ.1,500 கோடியை வழங்க டாடா குழுமம் முடிவெடுத்துள்ளது. டாடா குழுமத்தின் தலைமை நிறுவனமான டாடா சன்ஸ், ரூ.1000 கோடியும் டாடா அறக்கட்டளை ரூ.500 கோடியும் வழங்கவுள்ளன.
- கரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கு மத்திய அரசு உருவாக்கியுள்ள நிதிக்கு பாலிவுட் நடிகா் அக்ஷய் குமார் ரூ.25 கோடி நிதியுதவி அளித்தார்.
- பிரதமர் 'கொரோனா' நிவாரண நிதிக்கு, 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' தலைவர் முகேஷ் அம்பானி, 500 கோடி ரூபாய், நிதி அளித்துள்ளார்.
செயற்கை சுவாச கருவிகள் - சிறு தகவல்
- நாட்டில் தற்போது இருப்பில் உள்ள 14 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள் (வென்டிலேட்டர்) நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
- செயற்கை சுவாச கருவிகளை தயாரிக்க வாகன உற்பத்தி நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
விவசாயப் பணிகளை மேற்கொள்ள அனுமதி
- கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
- ஊரடங்கு அமலில் இருப்பதால் ராபி பருவ அறுவடைப் பணிகள் உள்பட விவசாயம் சாா்ந்த பணிகளை மேற்கொள்ள, விளைபொருள்கள் கொள்முதல், அறுவடை, பண்ணை சாா்ந்த தொழில்கள் ஆகியவற்றுக்கு ஊரடங்கில் இருந்து மத்திய அரசு மார்ச் 27-அன்று விலக்கு அளித்தது. உரம், பூச்சிக் கொல்லிகள், விதைகள் உற்பத்தி மையங்கள், விற்பனை மையங்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
20 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றம்
- கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக 20 ஆயிரம் ரெயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதுகாப்பு/ விண்வெளி
இந்திய இராணுவத்தின் 'ஆபரேஷன் நமஸ்தே'
- இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே மார்ச் 27, 2020 அன்று, 1.3 மில்லியன் படைத்துறுப்புகளை கொண்டு கொரோனா (COVID-19) வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காகவும் ‘ஆபரேஷன் நமஸ்தே’ (Operation Namaste) என்ற முன்முயற்சி நடவடிக்கையை தொடங்கி வைத்தார்.
விருதுகள்
இந்து இலக்கிய பரிசு 2019
- இந்து பரிசு (Hindu Prize) எனப்படும் தி இந்து பத்திரிக்கை குழுமத்தால் 2010-முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2019-ஆம் ஆண்டிற்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்:
- புனைவு (Fiction): மிர்சா வாகீத் (Mirza Waheed) எழுதிய டெல் ஹெர் எவெர்த்திங் (Tell Her Everything) என்று ஆங்கில நாவலுக்கு வழங்கப்படுகிறது.
- புனைகதை அல்லாதவை (Non-Fiction): சாந்தனு தாஸ் (Santanu Das) எழுதிய இந்தியா, எம்பயர் அண்ட் பர்ஸ்ட் வேர்ல்ட் கல்ச்சர் (India, Empire, and First World War Culture) என்ற ஆங்கில புத்தகத்திற்கு நாவல் அல்லாத பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நியமனங்கள்
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பி.பி. கானுங்கோ - பதவிக்காலம் நீட்டிப்பு
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு, மார்ச் 27, 2020 அன்று, இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பிபு பிரசாத் கானுங்கோ (Bibhu Prasad Kanungo) அவர்களின் பதவிக்காலத்தை ஒரு ஆண்டு காலத்திற்கு நீட்டிக்க (ஏப்ரல் 3, 2021 வரை) ஒப்புதல் அளித்துள்ளது.
பொருளாதார நிகழ்வுகள்
பொருளாதார வளர்ச்சி 3.5%: CRISIL கணிப்பு
- 2020-21-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதமாக இருக்கும் என CRISIL மதிப்பீட்டு நிறுவனம் கணித்துள்ளது.
- CRISIL: Credit Rating Information Services of India Limited.
பொருளாதார வளா்ச்சி 2 சதவீதம்: ICRA கணிப்பு
- 2020-21-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் வெறும் 2 சதவீதம் அளவுக்கு மட்டுமே வளா்ச்சி பெறும் என தரக்குறியீட்டு நிறுவனமான இக்ரா (ICRA) தெரிவித்துள்ளது.
- ICRA: Investment Information and Credit Rating Agency.
ஸ்மார்ட்போன் விற்பனை 38 சதவீதம் குறைவு
- சர்வதேச அளவில், பிப்ரவரி மாதத்தில் ஸ்மார்ட்போன் விற்பனை 38 சதவீதம் குறைந்துள்ளது என கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- பிப்ரவரி மாதத்தில், உலகில் மொத்தம் 6.18 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் விற்பனை 9.92 கோடியாக இருந்தது.
காமராஜர் துறைமுகத்தின் 67% பங்குகளை சென்னை துறைமுகம் வாங்கியது
- சென்னை துறைமுக கழகம் (ChPT), எண்ணூர் காமராஜர் துறைமுக நிறுவனத்தில் (KPL) இல் மத்திய அரசு வைத்திருந்த 67 சதவீத பங்குகளை 2,383 கோடி ரூபாய்க்கு மார்ச் 27, 2020 அன்று
- வாங்கியது.
- ChPT: Chennai Port Trust, KPL: Kamarajar Port Ltd.
அறிவியல் தொழில்நுட்பம்
மொபைல் செயலி 'கொரோனா கவச்'
- கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தைக் கண்டறிய இந்திய அரசு 'கொரோனா கவச் (Corona Kavach) என்ற மொபைல் செயலியை தொடங்கியுள்ளது.
- இந்த பயன்பாட்டை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இணைந்து உருவாக்கியுள்ளன.
தமிழ்நாடு நிகழ்வுகள்
'ஸூம் செயலி' மூலம் வழக்கு விசாரணை
- சென்னை உயா்நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக நீதிபதிகள், ஆன்ட்ராய்ட் வசதிகள் கொண்ட செல்லிடப்பேசிகளில் ஸூம் (ZOOM Cloud Meetings) எனப்படும் காணொலி விடியோ இணைப்பு செயலியின் மூலம் மார்ச் 30-அன்று வழக்குகளை விசாரித்து உள்ளனா். இந்த செயலியின் உதவியோடு அரசு, மனுதாரா், வழக்குரைஞா்கள் தங்களது இல்லங்களில் இருந்து வாதிட்டுள்ளனா்.
- சென்னை உயா்நீதிமன்ற நீதித்துறை வரலாற்றில் இந்த தொழில்நுட்ப முறையிலான விசாரணை இதுவே முதல்முறை ஆகும்.
14 மாவட்டங்களில் கொரோனா நோய் பாதிப்பு
- மார்ச் 30-அன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில், 14 மாவட்டங்களில் 67 பேரை கொரோனா நோய் தாக்கியுள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு நிகழ்வுகள்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2020 - புதிய தேதிகள் அறிவிப்பு
- 32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020 ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கரோனா நோய்த் தொற்று
- பரவலால் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், 2021 ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரையும், பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24 முதல்செப்டம்பர் 5 வரையும் நடைபெற உள்ளது.
- விளையாட்டு உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக் போட்டிகளாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டி 2016-இல் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.
- 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்காவில் நடக்க இருந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
- சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் - தாமஸ் பாச்
- டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தலைமை நிர்வாகி - யோஷிரோ மோரி
இந்திய குண்டு எறிதல் வீரர் 'நவின் சிக்கரா' - 4 ஆண்டுகள் இடைநீக்கம்
- சர்வதேச தடகள ஆளும் குழுவின் தடகள ஒருமைப்பாடு பிரிவு (AIU), 23வயதான இந்திய குண்டு எறிதல் வீரர் நவின் சிக்கரா (Navin Chikara) அவர்களை, ஊக்கமருந்து சோதனை காரணமாக மார்ச் 28, 2020 அன்று, 4 ஆண்டுகள் இடைநீக்கம் செய்தது.
முக்கிய நபர்கள்
ஓவியக்கலைஞர் 'சதீஷ் குஜ்ரால்'
- பிரபல ஓவியக்கலைஞரும் கட்டிடக் கலைஞருமான சதீஷ் குஜ்ரால் (Satish Gujral) சமீபத்தில் தனது 94 வயதில் காலமானார். 'Days of Glory’ மற்றும் ‘Mourning en masse’ என்பவை இவரின் பிரபலமான ஓவியங்கள் ஆகும்.
பேராசிரியா் எஸ்.வி. சிட்டிபாபு மறைவு
- அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பேராசிரியா் எஸ்.வி. சிட்டிபாபு (100) ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் காலமானார். பேராசிரியா் சிட்டிபாபு. 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை என்ற இயக்கத்தை அவா் உருவாக்கினார்.
நாட்டுப்புற பாடகி 'பரவை முனியம்மா' மறைவு
- பிரபல நாட்டுப்புற பாடகியும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா (வயது 76), மதுரை அருகே உள்ள பரவையில் மார்ச் 29-அன்று காலமானார்.
- நாட்டுப்புற பாடகியான அவர், தூள், காதல் சடுகுடு, சவாலே சமாளி, தமிழ்ப் பாடம், மான்கராத்தே, சண்டை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
முக்கிய தினங்கள்
மார்ச் 30 - 'நாட்குறிப்பு வேந்தர்' ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்த தினம்
- சென்னை, பெரம்பூரில் பிறந்தவர், ஆனந்தரங்கம் பிள்ளை. புதுச்சேரிக்கு சென்று, பிரெஞ்சு அரசுப் பணியில், உதவியாளராக பணியாற்றி, படிப்படியாக உயர்ந்தார். டியூப்ளெக்ஸ் என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். 'ஆனந்தப் புரவி' எனும் பெயரில், சொந்தமாக பாய்மரக் கப்பல் மூலம் வணிகமும் செய்தார்.
- முசபர்சஸ் மன்னர், இவருக்கு, 'மன்சுபேதார்' என்ற கவுரவ பட்டம் அளித்து, செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாக்கினார். அவருக்கென, 3,000 குதிரைகளையும் வழங்கினார். தன் 27 வயது முதல், 1761-ம் ஆண்டு வரை, 25 ஆண்டுகள், 'டைரி' எனும், நாட்குறிப்பு எழுதியுள்ளார்.
- முதன்முதலாக, 'டைரி' எழுத ஆரம்பித்தது இவர் தான். இவரது டைரி, அக்காலத்தில் நடந்த சமூக மாற்றம், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. அவருடைய டைரிகள், 85 ஆண்டுகள் கழித்தே, நாட்டுக்கு கிடைத்தன. கடந்த, 1761 ஜனவரி16-ம் தேதி காலமானார்.
- 'நாட்குறிப்பு வேந்தர்' ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்த தினம் மார்ச் 30 ஆகும்.
உலக இட்லி தினம் - மார்ச் 30
- உலக இட்லி தினம் மார்ச் 30 அன்று கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அறியப்பட்ட இந்திய உணவு வகைகளில் முதலிடம் பெறுவது இட்லி ஆகும்.