GK Tamil/TNPSC Link Current Affairs March 27, 2020 (Tamil) PDF
GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge 27th March 2020, which have updates of Latest Current Affairs 2020 events.
Our Current Affairs March 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.
Current Affairs March 27, 2020 (Tamil) PDF |
இந்திய நிகழ்வுகள்உடல் உறுப்பு தானம்: மகாராஷ்டிரா முதலிடம்
- 2019-ஆம் ஆண்டிற்கான உறுப்பு தான மாற்று சிகிச்சையில் (Organ Donation, Transplants for 2019) மகாராஷ்டிரா மாநிலம் தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களை முந்தியுள்ளது. அவற்றின் விவரம்:
- மகாராஷ்டிரா - 449
- தெலுங்கானா - 117
- தமிழ்நாடு - 93
'MACS 4028' உயர் புரத கோதுமை வகை உருவாக்கம்
- மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Agharkar Research Institute) விஞ்ஞானிகள் குழு, 'MACS 4028' என்ற செறிவூட்டப்பட்ட உயர் புரத கோதுமை வகையை மார்ச் 25-அன்று உருவாக்கியுள்ளது.
- இது 14.7% நல்ல ஊட்டச்சத்து தரத்துடன் துத்தநாகம் 40.3 ppm, 40.3 ppm புரதம் உள்ளடக்கத்தைக் கொண்டது. ppm: parts per million.
இந்திய ரெயில்வே (1853) - சில தகவல்கள்
- இந்திய ரெயில்வே கடந்த 1853-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந்தேதி தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 63 ஆயிரத்து 140 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரெயில் பாதை உள்ளது.
- நாடு முழுதும் 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளை அளித்து வருகிறது.
- தினமும் 14 ஆயிரத்து 444 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக 16 லட்சம் ஊழியர்களுடன் இந்திய ரெயில்வே செயல்படுகிறது.
- உலகிலேயே மிகப்பெரிய ரெயில் துறை இந்திய ரெயில்வே ஆகும்.
- இதன் மூலம் ஆண்டுக்கு 500 கோடி பேர் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். 35 கோடி டன் சரக்குகள் இடம் பெயர்கின்றன.
- ரெயில் சேவை நிறுத்தம்: தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரெயில் சேவை மார்ச் 22-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 14-ந்தேதி வரை அதாவது 24 நாட்களுக்கு சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
- இந்திய ரெயில்வேயின் 167 ஆண்டு கால வரலாற்றில் 2 சந்தர்ப்பங்களைத் தவிர இந்திய ரெயில்வே தனது பயணிகள் சேவையை ஒரு போதும் நிறுத்தவில்லை.
- 1901-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி விக்டோரியா மகாராணியின் இறுதிச் சடங்கிற்காக இந்திய ரெயில்வே தன்னுடைய சேவையை முதன் முதலாக நிறுத்தியது.
- 1948-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி மகாத்மா காந்தியின் இறுதிச் சடங்கிற்காக 2-வது முறையாக நிறுத்தியது.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் - மார்ச்-25
- பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மார்ச்-25-அன்று நடைபெற்றது. முக்கிய முடிவுகள் விவரம்:
- அலிகார்-ஹார்டுவகஞ்ச் மேம்பாலம்: இரயில்வே அமைச்சகத்தால் 22 கி.மீ நீளமுள்ள அலிகார்-ஹார்டுவகஞ்ச் (Aligarh-Harduaganj) மேம்பாலத்தை ஐந்து ஆண்டு கால இடைவெளியில் (2024-25) உருவாக்கவும், 1285 கோடிக்கு மேல் செலவிடவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- பொது விநியோகத் திட்டம்: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நபா் ஒன்றுக்கு மாதம் 5 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. தற்போது கூடுதலாக 2 கிலோ சோ்த்து 7 கிலோ உணவு தானியம் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
- ஊரக வங்கிகள் வளா்ச்சித் திட்டம்: பிராந்திய ஊரக வங்கிகளை ரூ.1,340 கோடி மறுமுதலீட்டில் வலுப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில், மத்திய அரசு சாா் பில் ரூ.670 கோடி, வங்கிகள் சார்பில் ரூ.670 கோடி சோ்த்து ரூ.1,340 கோடியில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
- ஆயத்த ஆடைகள் மற்றும் ஏற்றுமதி ஆடைகளுக்கான வரி விதிப்பு திட்டம் அமல்படுத்தப்படும் வரை மத்திய, மாநில வரிச் சலுகைத் திட்டத்தை நீட்டிப்பதற்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
குழந்தை ராமர் சிலை புதிய இடத்துக்கு மற்றம்
- உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணியின் தொடக்கமாக அங்குள்ள குழந்தை ராமரின் சிலை புதிய இடத்துக்கு மார்ச் 25-அன்று மாற்றப்பட்டது.
- ராமா் கோயில் கட்டும் பணிக்காக ‘ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளையை மத்திய அரசு அண்மையில் அமைத்தது
கொரோனா பாதிப்பு: ரூ.1.70 லட்சம் கோடி நிவாரண உதவிகள் அறிவிப்பு
- கொரோனா வைரஸ் பரவுவதால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மார்ச் 27-அன்று ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி நிவாரண உதவிகளை அறிவித்து உள்ளார். முக்கிய அறிவிப்புகள் விவரம்:
- மத்திய அரசின் 'கிஷன் சம்மான் நிதி' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், 2000 ரூபாய் தற்போது உடனடியாக வழங்கப்படும். இதன் மூலம், 8.69 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
- ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும். இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர். ஏழை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.1000 இரண்டு தவணைகளாக வழங்கப்படும். 3 கோடி பேர் இதில் பயன்பெறுவர்.
- ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு தலா ரூ.500 வழங்கப்படும். இதன் மூலமாக 20 கோடி பெண்கள் பயன்பெறுவார்கள்.
- உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கேஸ் இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பெண்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும். இதில் 8.3 கோடி பெண்கள் பயன்பெறுவர்.
- மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கும் 7 கோடி குடும்பப் பெண்களுக்கு இதுவரை 10 லட்சம் உதவி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இது 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
- வருங்கால வைப்பு நிதி காப்பீட்டுத் தொகையை(24%) அடுத்த 3 மாதத்திற்கு அரசே செலுத்தும். அதாவது நிறுவனம் தரப்பில் வழங்கப்படும் 12% தொகை, தொழிலாளர்கள் தரப்பில் இருந்து செலுத்தப்படும் 12% என மொத்தம் 24% தொகையையும் அரசே செலுத்தும். 100 பணியாளர்களுக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் மற்றும் மாத வருமானம் ரூ. 15,000க்கு குறைவாக இருக்கும் பணியாளர்களுக்கு இது பொருந்தும்.
- PF கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள 75% தொகை அல்லது 3 மாத ஊதியம், இதில் எது குறைவாக உள்ளதோ அதை எடுத்துக்கொள்ள முடியும்.
- கட்டடத் தொழிலாளர்களுக்கான நல நிதியில் இருந்து (ரூ.31,000 கோடி உள்ளது) அவர்களுக்குத் தேவையான உதவித்தொகையை மாநில அரசு வழங்கலாம்.
- நாட்டில் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்
- மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
கரோனாவின் 4 கட்டங்கள்
- கரோனா நோய்த் தொற்றானது, 4 கட்டங்களாக பிரிக்கப்படுகிறது.
- முதல் கட்டம்: கரோனா பாதிப்பு இருக்கும் நாடுகளிலிருந்து திரும்பியவா்களுக்கு அந்த நோய்த் தொற்று இருப்பது.
- 2-ஆம் கட்டம்: கரோனா பாதிப்பு இருக்கும் நாட்டிருந்து திரும்பியவருக்கும் அவரோடு நெருங்கிய தொடா்பில் இருக்கும் அவரது குடும்பத்தினா் உள்ளிட்டோருக்கு பாதிப்பு இருப்பது.
- 3-ஆம் கட்டம்: உள்நாட்டில் நோய்த் தொற்று ஒருவருக்கு எவ்வாறு ஏற்பட்டது என்று அடையாளம் காண இயலாமல் போவது. ‘சமூகப் பரவல்’ என்று அறியப்படும் இந்தக் கட்டத்தைதான் இத்தாலி, ஸ்பெயின் நாடுகள் தற்போது எட்டியுள்ளன.
- 4-ஆம் கட்டம்: கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு நோய்த் தொற்று தீவிரமாக, அதிகமாகப் பரவுவது.
- இந்தியாவில் கரோனா சமூகப் பரவல் கட்டத்தை அடைந்துவிட்டதற்கு உறுதியான ஆதாரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. எனினும், அரசும் மக்களும் கூட்டாகச் செயல்படாவிட்டாலோ, தனிமைப்படுத்துதல், சமூக அயல் நிறுத்த விதிகளை முறையாக கடைப்பிடிக்கத் தவறினாலோ சமூகப் பரவல் கட்டம் தொடங்கிவிடும். இதனால் நாம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
- கரோனா நோய்த் தொற்றின் சங்கிலித் தொடரை முறிப்பதற்கு சமூக அயல் நிறுத்தம் மிக முக்கியமான நடவடிக்கையாகும்.
- 'கொரானோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 17 மாநிலங்களில் தனி மருத்துவமனைகள் கட்டும் பணி துவங்கியுள்ளது' என மத்திய சுகதாரத்துறை அமைச்கம் தெரிவித்துள்ளது.
மின்சாரத் தேவை '127.96 ஜிகா வாட்டாக' குறைவு
- நாட்டின் மின்சாரத் தேவை மார்ச் 21-அன்றுடன்161.74 ஜிகா வாட்டாக இருந்தது. கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மின்சாரத்தின் தேவை 127.96 ஜிகா வாட்டாக குறைந்தது.
வங்கிகள் இணைப்பு - ஏப்ரல் 1 முதல் அமல்
- இந்தியாவில் உள்ள 10 பொதுத் துறை வங்கிகளை இணைத்து சா்வதேச அளவில் மிகப்பெரிய 4 வங்கிகளை உருவாக்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.
- வங்கிகள் இணைப்பு திட்டமிட்டபடி ஏப்ரல் 1-ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மார்ச் 27-அன்று தெரிவித்தாா்.
இணையும் வங்கிகள் விவரம்:
- பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமா்ஸ் ஆகியவை இணைக்கப்படுகின்றன. கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கியும் இணைக்கப்படுகின்றன.
- யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், காா்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படுகின்றன.
- இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பஞ்சாப்-சிந்து வங்கி ஆகியவை பிராந்திய அளவில் வலுவாக இருப்பதால் அவை தனியாகவே இயங்கும்.
- பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவையும் தனித்தே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- நிகழாண்டின் தொடக்கத்தில், பாங்க் ஆஃப் பரோடாவுடன் தேனா வங்கியும் விஜயா வங்கியும் இணைக்கப்பட்டன. அதற்கு முன், பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகள், பாரதிய மஹிளா வங்கி ஆகியவை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன.
- வங்கிகளை ஒன்றிணைப்பதால், கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்த 27 வங்கிகள், இனி 12 வங்கிகளாகக் குறையும்.
நியமனங்கள்
மத்திய இந்திய நேரடி வரி வாரிய உறுப்பினர்களாக கே.எம்.பிரசாத், எஸ்.கே.குப்தா நியமனம்
- மத்திய இந்திய நேரடி வரி வாரியத்தின் (CBDT) உறுப்பினர்களாக, மார்ச் 25, 2020 அன்று இரண்டு இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம்:
- கிருஷன் மோகன் பிரசாத் (Krishan Mohan Prasad)
- சதீஷ்குமார் குப்தா (Satish Kumar Gupta)
- CBDT: Central Board of Direct Taxes
வால்மார்ட் இந்தியா-பெஸ்ட் ப்ரைஸ் நிறுவன CEO - சமீர் அகர்வால்
- ஏப்ரல் 25, 2020 முதல் அமலுக்கு வரும் வால்மார்ட் இந்தியா அமைப்பின் பெஸ்ட் ப்ரைஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) சமீர் அகர்வால் (Sameer Aggarwal) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய நபர்கள்
பிரபல பாலிவுட் நடிகை 'நிம்மி' காலமானார்
- பிரபல பாலிவுட் நடிகை நவாப் பானூ (Nawab Banoo) என்ற 'நிம்மி' (Nimmi) தனது 87 வயதில் மகாராஷ்டிராவின் மும்பையில் மார்ச் 26, 2020 அன்று காலமானார். 1950, 1960-களின் ஆரம்பத்தில் இந்தி படங்களில் பிரபலமாவராக நிம்மி என்றும் அறியப்பட்டார்.
மூத்த புகைப்படக் கலைஞர் 'நேமாய் கோஷ்'
- கொல்கத்தாவை சேர்ந்த மூத்த புகைப்படக் கலைஞர் மற்றும் பத்மஸ்ரீ (2010) விருது பெற்ற நெமாய் கோஷ் (Nemai Ghosh) வயது முதிர்வால் 86 வயதில் மார்ச் 25,2020 அன்று காலமானார்.
முக்கிய தினங்கள்
மார்ச் 26 - வங்காளதேச சுதந்திர தினம்
- 2020 மார்ச் 26-அன்று வங்காளதேசம் தனது 50-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.