GK Tamil Current Affairs March 21-24, 2020 (Tamil) - Download as PDF

GK Tamil/TNPSC Link Current Affairs March 21-24, 2020 (Tamil) PDF

GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge 21st and 24th March 2020, which have updates of Latest Current Affairs 2020 events.

Our Current Affairs March 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.
சர்வதேச நிகழ்வுகள்
உலகின் பழமையான நவீன பறவை ‘வொண்டர்சிக்கன்’
  • உலகின் பழமையான நவீன பறவை மண்டை ஓட்டின் புதைபடிவத்தை இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு ‘வொண்டர்சிக்கன்’ (Wonderchicken) என்று பெயரிட்டுள்ளனர்.
  • சுமார் 66.8 - 66.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களுடன் இந்த பறவையினம் சேர்ந்து வாழ்ந்தது என்று கருதப்படுகிறது.
சீனாவில் புதிதாகத் தோன்றியுள்ள 'ஹன்ட்டா' வைரஸ் 
  • சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. தற்போது அதே சீனாவில் புதிதாக ஒரு வைரஸ் தோன்றியுள்ளது. இதற்கு 'ஹன்ட்டா' (Hanta Virus) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஹன்ட்டா வைரஸ், எலிகளிடமிருந்து, எலிகளின் சிறுநீர் மூலம், பரவக் கூடியது. இதுவரையிலும் சீனாவிலும் ஆர்ஜென்டினாவிலும்தான் இந்த வைரஸ் அறியப்பட்டிருக்கிறது.
இந்திய நிகழ்வுகள்
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா 2020
  • குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை தரம் உயா்த்தி தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தும் ‘தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா 2020’ மக்களவையில் மார்ச் 23-அன்று அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்த மசோதா மூலம், தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் குற்றவியல் மற்றும் தடய அறிவியல் கல்வி நிறுவனத்துக்கு தேசிய அந்தஸ்து அளிப்பதற்கும் முன்மொழியப்படுகிறது. 
  • காவல்துறை அறிவியல் மற்றும் உள் பாதுகாப்பு தொடா்பான சான்றிதழ் படிப்பை வழங்கும் குஜராத்தைச் சோ்ந்த ரக்ஷா சக்தி பல்கலைக்கழகத்துக்கு தேசிய அந்தஸ்து அளிப்பதற்கும், அதன் பெயரை மாற்றுவதற்குமான ‘ராஷ்ட்ரீய ரக்ஷா பல்கலைக்கழக மசோதா 2020’ மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஐந்து IIIT-களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனத் தகுதி மசோதா 
  • ஐந்து இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு (IIIT) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் (INI) என்ற அந்தஸ்தை வழங்கக் கோரும் மசோதா மக்களவையில் மார்ச்-21 அன்று அறிமுகம் செய்யப்பட்டது.
  • சூரத் (குஜராத்), போபால் (மத்தியப் பிரதேசம்), பாகல்பூா் (பிகாா்), அகா்தலா (திரிபுரா), ராய்ச்சூா் (கா்நாடகம்) ஆகிய இடங்களில் இந்தியத் தகவல்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.
  • இந்த ஐந்து IIIT உள்பட 15 IIIT-க்கள் அரசு-தனியாா் பங்களிப்புடன் செயல்பட்டு வருகின்றன.
  • IIIT: Indian Institutes of Information Technology, INI: Institutes of National Importance.
MyLab-அமைப்பின் 'கோரானா வைரஸ் சோதனை கிட்' 
  • புனேவைச் சேர்ந்த சோதனை சேவைகள் அமைப்பு 'MyLab', கோரானா வைரஸ் சோதனை கிட் (COVID-19 Test Kit) விற்பனைக்கு, மத்திய மத்திய மருந்துகள் நிலை கட்டுப்பாட்டு (CDSCO) அமைப்பிடம் வணிக ரீதியான ஒப்புதல் பெற்ற முதல் இந்திய நிறுவனமாக மாறியுள்ளது.
  • CDSCO: Central Drugs Standard Control Organization
மும்பையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'கொவைட்-19’ மருத்துவமனை
  • கரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்கும் வகையில் நாட்டின் முதல் ‘கொவைட்-19’ மருத்துவமனையை மும்பையில் ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளது.
  • ரிலையன்ஸ் நிறுவனத்தின் சா் எச்.என்.ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை, பிருஹண் மும்பை மாநகராட்சி சாா்பில் இரண்டே வாரத்தில் மும்பை செவன்ஹில்ஸ் பகுதியில் 100 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளுடன் கொண்ட கரோனா வைரஸ் தொற்று (கொவைட்-19) மருத்துவ பரிசோதனை வசதியுடன் கூடிய மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 22, 2020 - மக்கள் ஊரடங்கு 
  • பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ள மக்கள் ஊரடங்கு (Janata Curfew) அறிவிப்புக்கு ஏற்ப மாா்ச் 22-அன்று அரசுப் பேருந்துகள் மற்றும் தனியாா் பேருந்துகள் இயங்காது என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
தூக்கு தண்டனை நிறைவேற்றம் 
  • நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சா்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோருக்கான தண்டனை தில்லி திகார் சிறையில் மார்ச் 20-அன்று நிறைவேற்றப்பட்டது. 
கரோனா தொற்றுநோய்: கேரள அரசின் ரூ.20,000 கோடி நிதி 
  • கரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள கேரள அரசு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. 
  • இதன்படி, குடும்பஸ்ரீ திட்டங்களின் கீழ் வரும் குடும்பங்களுக்கு ரூ.2000 கோடிக்கு கடன் வழங்கப்படும். கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கப்படுகிறது. 
  • முதியோர்களுக்கு இரண்டு மாதத்திற்கான ஓய்வூதியம் முன்கூட்டியே வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இதற்காக ரூ.1320 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 
  • ரூ.100 கோடி மதிப்பீட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். 
  • மாநிலம் முழுவதும் அரசு சார்பில் உணவகங்கள் திறக்கப்பட்டு ரூ.20-க்கு உணவு வழங்கப்படும்.
  • கேரளத்தில் மின்சாரம், தண்ணீர் கட்டணம் செலுத்த ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது. 
  • ஒரு மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். 
கரோனா பாதிப்பு எண்ணிக்கை - 206 
  • இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 206 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 47 பேரும், கேரளத்தில் 28 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் வைரஸ் பாதிப்பால் மார்ச் 20-அன்று வரை 4 பேர் பலியாகியுள்ளனர்.
மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் 'பதவி விலகல்' 
  • மத்திய பிரதேசம் முதல்வர் கமல்நாத் 2020 மார்ச் 20 அன்று தனது முதல்வர் பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் சமர்ப்பித்தார். 
ஸ்டார் ஹெல்த் கொரோனா வைரஸ் காப்பீட்டுக் கொள்கை - அறிமுகம் 
  • கொரோனா வைரஸ் (COVID-19) பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டார் ஹெல்த் நிறுவனம் 'ஸ்டார் நாவல் கொரோனா வைரஸ் காப்பீட்டுக் கொள்கையை' (Star novel coronavirus policy) மார்ச் 20 அன்று அறிமுகப்படுத்தியது. 
  • இது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பாதுகாப்பை அளிக்கிறது.
கார்ப்பரேட் ஆளுகை குறித்த 'பிரவீன் குட்டும்பே' குழு 
  • கார்ப்பரேட் ஆளுகை குறித்த வழிகாட்டுதல்களை வலுப்படுத்த, பிரவீன் குட்டும்பே (Pravin Kutumbe) தலைமையில் 16 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) மார்ச் 20 அன்று, அமைத்துள்ளது.
  • IRDAI: Insurance Regulation and Development Authority
ஹைப்பர்லூப் பாட் போட்டி-2020
  • இந்தியாவில் முதன்முறையாக, சென்னை இந்திய தொழில்நுட்ப கழகம் (IITM) இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் பாட் போட்டியை (India’s first Hyperloop Pod Competition) நடத்துகிறது.
  • சுற்றுச்சூழல் நட்பு ஹைப்பர்லூப் போக்குவரத்தை (Hyperloop pod transport) கொண்டு வருவதில் இந்தியா சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அங்கீகாரமற்ற காலனிகள் மேம்பாடு - ரூ. 3,723 கோடி
  • டெல்லியில் தலைநகர் பிராந்தியத்தில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகள் மற்றும் குடிசை பகுதிகள் மேம்பாட்டிற்கு ரூ. 3,723 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என நிதி நிலையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் முதல் முதலாக 'BS-6' எரிபொருள் விற்பனை
  • புது தில்லியில், நாட்டில் முதல் முதலாக பிஎஸ்-6 (BS-6) எரிபொருள் விற்பனையை இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (IOC) நிறுவனம் தொடங்கியுள்ளது. உலகின் மிக சுத்தமான எரிபொருளாக பிஎஸ்-6 கருதப்படுகிறது. BS-6: Bharat stage 6.
ஆந்திர ஏழைகளுக்கு ரூ.1000 உதவித்தொகை
  • கரோனா அச்சுறுத்தலைத் தொடா்ந்து ஆந்திர மாநிலத்தில் ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருள்களும், குடும்பத்துக்கு ரூ. 1000 உதவித்தொகை அளிக்கவும் ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடக்கம் 
  • உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் அறக்கட்டளை உறுப்பினர்கள் பிம்லேந்திர மிஸ்ரா, அனில் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் மார்ச் 23-அன்று தொடங்கியது.
பாதுகாப்பு/விண்வெளி
NASA-வின் CNEOS கண்டறிந்த '4 சிறுகோள்கள்' 
  • மார்ச் 20 அன்று, பூமிக்கு அருகிலுள்ள பொருள் ஆய்வுகளுக்கான தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் அமெரிக்கா விண்வெளி நிர்வாக மையத்தின் (NASA), CNEOS அமைப்பு, 2020 FK, 2020 FS, 2020 DP4 & 2020 FF1 என்று பெயரிடப்பட்டுள்ள 4 சிறுகோள்களை (Asteroids) அடையாளம் கண்டுள்ளது. பூமியின் சுற்றுப்பாதையை பின்பற்றி சுற்றி வருகின்றன.
  • NASA: National Aeronautics and Space Administration, CNEOS: Centre for Near-Earth Object Studies 
நியமனங்கள்
மத்தியப் பிரதேச முதல்வராக 'சிவராஜ் சிங் சௌஹான்' பதவியேற்பு 
  • மத்தியப் பிரதேச முதல்வராக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சிவராஜ் சிங் சௌஹான் 4-வது முறையாக மார்ச் 23-அன்று பதவியேற்றார். மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பொருளாதார நிகழ்வுகள்
நிதி மசோதா 2020 - நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் 
  • மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ‘நிதி மசோதா 2020' மக்களவை, மாநிலங்களவை யில் அறிமுகம் செய்தாா். நாடாளுமன்றத்தில் நிதி மசோதா மார்ச் 23-அன்று விவாதமின்றி நிறைவேறியது. 
  • அரசு இயங்குவதற்காகவும், திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் ரூ.110 கோடியை தொகுப்பு நிதியிலிருந்து மத்திய அரசு பெறுவதை அந்த மசோதா அங்கீகரிக்கிறது. 2020-21 மத்திய பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் நடைமுறை நிறைவுபெற்றது.
யெஸ் வங்கி கடன் வரம்பு - ரூ.60,000 கோடியாக நீட்டிப்பு
  • நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியின் அவசரகால கடன் பெறும் வரம்பை ரிசா்வ் வங்கி ரூ.60,000 கோடியாக உயா்த்தியுள்ளது. ரிசா்வ் வங்கி சட்டப் பிரிவு 17(4) பயன்படுத்தி ரிசா்வ் வங்கி இந்த கூடுதல் நிதி உதவியை அளித்துள்ளது.
பொருளாதார வளா்ச்சி 5.1% - ஃபிட்ச் கணிப்பு 
  • கரோனா வைரஸ் பாதிப்பால் 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 5.1 சதவீதமாக இருக்கும் என தரக்குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச் அமைப்பு மார்ச் 20-அன்று தெரிவித்தது.
பொருளாதார வளா்ச்சி 5.3% - மூடிஸ் கணிப்பு 
  • நடப்பு 2020-ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 5.3 சதவீதமாக இருக்கும் என மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் கணிப்பு வெளியிட்டுள்ளது. 
இந்தியன் வங்கி-அலாகாபாத் வங்கி இணைப்பு 
  • இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கியை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை மார்ச் 18-அன்று அனுமதியளித்தது. 
  • இந்த இணைப்பு நடவடிக்கை ஏப்ரல் 1-இல் நிறைவடைய உள்ளது. இதன் மூலம் பொதுத் துறை வங்கிகளில் இந்தியன் வங்கி ஏழாவது மிகப்பெரிய வங்கியாக உருவெடுக்கும்.
பொருளாதார வளா்ச்சி 5.2% - S&P கணிப்பு 
  • 2020 ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கவுள்ள 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 5.2 சதவீதமாக இருக்கும் என சா்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான எஸ்&பி (S&P) தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
38-வது மாவட்டமாக உருவாகும் 'மயிலாடுதுறை' மாவட்டம் 
  • நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மார்ச் 24-அன்று அறிவித்தார். 
  • இந்த அறிவிப்பின் மூலம் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகிறது. 
சேலத்தில் 'ஐந்தாவது கரோனா பரிசோதனை மையம்'
  • கரோனா தொற்றை உறுதி செய்யவும், கரோனா தொற்று தொடா்பாகப் பரிசோதிக்க ஆய்வகம் அமைத்துக் கொள்ளவும் 18 இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி மத்திய அரசு அளித்துள்ளது.
  • தமிழகத்தில் ஐந்தாவது கரோனா பரிசோதனை மையம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைகிறது.
  • தமிழகத்தில் ஏற்கெனவே சென்னை, திருநெல்வேலி, திருவாரூா், தேனி ஆகிய நான்கு இடங்களில் கரோனா அறிகுறி மாதிரிகள் சோதனை மையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேனியில் ஒரு 'புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி'
  • தேனி மாவட்டத்தில் ஒரு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.
தமிழ்நாடு மாநில எல்லைகள் மூடல் 
  • கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளம், கா்நாடகம், ஆந்திர மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் மாா்ச் 21 முதல் வரும் 31-ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அனைத்து அரசு மற்றும் தனியாா் நூலகங்கள் நாளை முதல் 31.3.2020 வரை மூடப்படும்.
மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு - சிறப்பு உள் ஒதுக்கீடு
  • நீட் தேர்வு முறை: தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு முறை 2016-2017-ம் கல்வி ஆண்டிலிருந்து மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதி திராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் ஆகிய பள்ளிகளில், 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு பிரத்யேகமாக ஒரு உள் ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற அரசு பரிசீலித்து வருகிறது.
  • இச்சட்டத்தை இயற்றுவதற்கு வகை செய்ய ஏதுவாக ஓய்வு பெற்ற ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஒரு ஆணையம் அமைக்கப்படவுள்ளது.
வழக்குரைஞா்களுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை
  • தமிழ்நாட்டில் வழக்குரைஞா் எழுத்தா்களின் சேமநலநிதியினை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயா்த்தி வழங்கப்பட உள்ளது. இளம் வழக்குரைஞா்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
ரூ.6,400 கோடிக்கு துணை பட்ஜெட் தாக்கல்
  • 2019-2020-ம் ஆண்டுக் கான கூடுதல் செலவுக்காக ரூ.6,409 கோடிக்கு துணை பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 23-அன்று தாக்கல் செய்தார்.
  • இதில் ரூ.5,732.06 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.676.76 கோடி மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.
விளையாட்டு நிகழ்வுகள் 
ICC நடுவா்கள் மேம்பாட்டுக் குழுவில் இரு இந்தியர்கள் 
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ICC), நடுவா்கள் மேம்பாட்டுக் குழுவில் இந்தியாவின் மும்பையைச் சோ்ந்த வி.ரதியும், தமிழகத்தைச் சோ்ந்த என்.ஜனனியும் சோ்க்கப்பட்டுள்ளனா்.
முக்கிய நபர்கள்
இயக்குநர், நடிகர் விசு - மரணம் 
  • தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான விசு (M.R. Viswanathan) சென்னையில் மார்ச் 22-அன்று மரணம் அடைந்தார். விசு இயக்குனர், நடிகர், வசன கர்த்தா, கதாசிரியர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர். 
  • இவர் இயக்கி நடித்த ‘சம்சாரம் அது மின்சாரம்’ சிறந்த படத்துக்கான தேசிய விருதை பெற்றது. விசு நடித்து இயக்கி 1992-ல் வெளியான ‘நீங்க நல்லா இருக்கணும்’ படத்துக்கும் தேசிய விருது கிடைத்தது.
முக்கிய தினங்கள் 
மார்ச் 21 - உலக பொம்மலாட்ட நாள் (World Puppetry Day) 

மார்ச் 21 - சர்வதேச காடுகள் தினம் 
  • ஆண்டுதோறும் ஐக்கிய நாடுகள் அவையால் "சர்வதேச காடுகள் தினம்" (International Day of Forests 2020) மார்ச் 21, அன்று, மக்களுக்கு காடுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2020 சர்வதேச காடுகள் தின மையக்கருத்து: "காடுகள் மற்றும் பல்லுயிர்." (Forests and Biodiversity) என்பதாகும். 
இனப்பாகுபாடு நீக்கும் சர்வதேச தினம் - மார்ச் 21
  • ஆண்டுதோறும் ஐக்கிய நாடுகள் அவையால் "இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான சர்வதேச தினம்" (International Day for the Elimination of Racial Discrimination 21 March) மார்ச் 21, அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
உலக குறை நோய்க்குறி தினம் - மார்ச் 21
  • ஆண்டுதோறும் ஐக்கிய நாடுகள் அவையால் "உலக குறை நோய்க்குறி தினம்" (World Down Syndrome Day) மார்ச் 21, அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2020 உலக குறை நோய்க்குறி தின மையக்கருத்து: நாம் முடிவு செய்வோம்' (We Decide) என்பதாகும். 
உலக கவிதை தினம் - மார்ச் 21
  • ஆண்டுதோறும் ஐக்கிய நாடுகள் அவையால் "உலக கவிதை தினம்" (World Poetry Day) மார்ச் 21, அன்று உலகம் முழுவதிலும் கவிதைகளை வாசித்தல், எழுதுதல், வெளியீடு மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்க கடைபிடிக்கப்படுகிறது. 
உலக தண்ணீர் நாள் -மார்ச் 22
  • தண்ணீருக்கான பிரச்னைகளைத் தீர்க்கவும், சரி செய்யவும் மார்ச் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினம்' என்று கொண்டாடப்படுகிறது.
  • 2020 உலக தண்ணீர் நாள் மையக்கருத்து: காலநிலை மாற்றம் மற்றும் தண்ணீர்' (Water and Climate Change) என்பதாகும்.
மார்ச் 23 - தியாகிகள் தினம் 
  • ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 23 அன்று ஷாஹீத் திவாஸ் (Shaheed Diwas or Martyr’s Day) அல்லது தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 
  • பகத் சிங், சுக்தேவ் தாப்பர் மற்றும் சிவரம் ராஜ்குரு ஆகிய மூன்று சிறந்த இளம் தலைவர்களின் தைரியத்தையும் வீரத்தையும் நினைவுகூரும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த பகத்சிங். மராட்டியத்தில் பிறந்த ராஜகுரு, பஞ்சாப்பில் பிறந்த சுகதேவ் ஆகிய மூன்று பேரும் 1931-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதி தூக்கிலிடப்பட்ட நாள் ஆகும். 
  • 1919-ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட மாபெரும் தலைவர் லாலாலஜபதிராயை தாக்கி கொன்றது இவற்றால் உந்தப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய சுதந்திரப்போராட்ட வீரர்கள் ஸான்டர்ஸ் என்ற ஆங்கில போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்றனர். 
  • இளைஞர் அதிகாரமளித்தல் தினம் - மார்ச் 23: பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரின் நினைவு தினத்தை (மார்ச் 23) பஞ்சாப் அரசாங்கம் சார்பில் "இளைஞர் இளைஞர் அதிகாரமளித்தல் தினம் (Youth Empowerment Day) என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
மார்ச் 23 - உலக காசநோய் தினம் 
  • ஆண்டுதோறும் மார்ச் 24 அன்று, உலக காசநோய் தினம் (World Tuberculosis Day) கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2020-ஆம் ஆண்டிற்கான உலக காசநோய் தின மையக்கருத்து: 'இது நேரம்' (It's TIME) என்பதாகும்.
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் - மார்ச் 24 
  • ஆண்டுதோறும் மார்ச் 24 அன்று, மொத்த மனித உரிமை மீறல்களின் உண்மைக்கான உரிமை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்களின் கண்ணியத்திற்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. (International Day for the Right to the Truth concerning Gross Human Rights Violations and for the Dignity of Victims).
Download this article as PDF Format
    Previous Post Next Post