GK Tamil/TNPSC Link Current Affairs March 15-16, 2020 (Tamil) PDF
GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge 15 and 16th March 2020, which have updates of Latest Current Affairs 2020 events.
Our Current Affairs March 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.
சர்வதேச நிகழ்வுகள்சார்க் நாடுகளின் 'COVID-19' அவசர நிதி' உருவாக்கம்
- கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 15-அன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
- இதில் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவு ஜனாதிபதி இப்ராகிம் முகமது சாலிஹ், நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, பூடான் பிரதமர் லோடாய் ஷெரிங், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி, பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் (சுகாதாரம்) ஜாபர் மிர்சா ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
- ‘கோவிட்-19 அவசர நிதி’ ஒன்றை நாம் உருவாக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். இதில் நாம் அனைவரும் விருப்பப்பட்ட பங்களிப்பை வழங்கலாம். இந்த நிதிக்கு இந்தியா முதல்கட்டமாக ரூ.74 கோடி வழங்கி இதனை தொடங்கி வைக்கிறது என பிரதமர் தெரிவித்தார்.
மைக்ரோசாப்ட் இயக்குனர் குழுவில் இருந்து பில் கேட்ஸ் விலகல்
- மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்து அதன் இணை நிறுவனர் பில் கேட்ஸ் விலகி உள்ளார். அவர் பொதுத்தொண்டாற்றுவதில் கூடுதல் நேரம் செலவிட முடிவு செய்துள்ளார்.
- அமெரிக்காவின் வாஷிங்டன் ரெட்மாண்ட் நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிற உலகின் முன்னணி, பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம், மைக்ரோசாப்ட் ஆகும். இந்த நிறுவனத்தை 1975-ம் ஆண்டு, பில்கேட்ஸ், பால் ஆலன் என்பவருடன் சேர்ந்து தொடங்கினார். பால் ஆலன், 2018-ம் ஆண்டு மரணம் அடைந்து விட்டார்.
- பில்கேட்ஸ் தொடர்ந்து 2000-ம் ஆண்டு வரையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். அதன்பின்னர் ஸ்டீவ் பால்மர் தலைமை செயல் அதிகாரி ஆனார். அவரைத் தொடர்ந்து இந்தியாவின் சத்ய நாதெள்ளா, 2014-ம் ஆண்டு தலைமை செயல் அதிகாரி பொறுப்புக்கு வந்தார்.பில்கேட்சுக்கும், அவரது மனைவி மெலிந்தா கேட்சுக்கும் 2018-ம் ஆண்டு, உலகின் மிகச்சிறந்த கொடையாளிகளாக ‘தி குரோனிகல் ஆப் பிலாந்திரபி’ அமைப்பினால் தேர்வு செய்யப்பட்டனர்.
- உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற பெயரைப்பெற்றுள்ள பில்கேட்சின் சொத்து மதிப்பு 103.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7 லட்சத்து 56 ஆயிரத்து 280 கோடி) ஆகும்.
ஈரான் நாட்டைத் தாக்குவதைத் தடுக்கும் தீர்மானதிற்கு ஒப்புதல்
- அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் நாட்டைத் தாக்குவதைத் தடுக்கும் தீர்மானத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் அவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.
மடகாஸ்கர் நாட்டிற்கு வெள்ள நிவாரண உதவிகள்
- இந்தியா சமீபத்தில் 600 டன் அரிசி மற்றும் நிவாரணப் பொருட்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மடகாஸ்கர் நாட்டுக்கு வழங்கியது. இந்த நிவாரணப் பொருட்களை இந்திய கடற்படைக் கப்பல் ஷார்துல் (INS Shardul), ஒப்படைக்க எடுத்துச் சென்றது.
- ஆபரேஷன் வெண்ணிலா: 2020 ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்திய கடற்படை கப்பல் ஐராவத் (Indian Navy Ship Airavat) மூலம், மடகாஸ்கரில் நடந்த தேசிய பேரழிவிற்கு உதவியாக மனிதாபிமான உதவிகளை இந்திய கடற்படை ‘ஆபரேஷன் வெண்ணிலா’ (Operation Vanilla) ஒன்றை அறிமுகப்படுத்தி வழங்கியது.
இந்திய நிகழ்வுகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு: பேரிடராக அறிவிப்பு
- கொரோனா வைரஸ் பாதிப்பை பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை விவரம்:
- பெருந்தொற்று நோயான கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும், கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசுகளின் சார்பில் தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச ஆரம்ப சுகாதார மையங்களில் ‘ஆரோக்கிய மித்ரா’
- அரசாங்கத்தின் உடல்நலம் தொடர்பான திட்டங்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‘ஆரோக்ய மித்ரா’ (Arogya Mitra) என்ற அலுவலரை நியமிக்க உத்தரபிரதேசம் மாநில அரசு முடிவுசெய்துள்ளது.
கனிம சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2020
- சுரங்க மற்றும் கனிம (அபிவிருத்தி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957 மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 2015 ஆகியவற்றில் திருத்தங்களை முன்மொழிகின்ற ‘கனிம சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2020’-ஐ (The Mineral Laws (Amendment) Bill, 2020) மாநிலங்களவை அண்மையில் நிறைவேற்றியது.
- இந்த மசோதா இந்தியாவில், முந்தைய நிலக்கரி சுரங்க அனுபவம் இல்லாத நிறுவனங்களை நிலக்கரி ஏலத்தில் பங்கேற்கவும், நிறுவனங்களின் ‘குறிப்பிட்ட இறுதி பயன்பாட்டு அளவுகோலை’ (Specified end-use criterion) அகற்றவும் முயல்கிறது.
புதிய குளுக்கோமீட்டர் 'சுசெக் (SuCheck)'
- இந்திய மருத்துவ கவுன்சிலின் (ICMR), உதவியுடன் உள்நாட்டு தயாரிப்பாக புதிய குளுக்கோமீட்டர் (Glucometer) சுசெக் (SuCheck) என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.
Cri-MAC என்ற கிரைம் மல்டி ஏஜென்சி மையம் - தொடக்கம்
- தேசிய குற்ற பதிவு பணியகம் (NCRB) தனது 35-வது தொடக்க தினத்தை, மார்ச் 12, 2020 அன்று கொண்டாடியது.
- புது டெல்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், கிரைமாக் (Cri-MAC) என்ற கிரைம் மல்டி ஏஜென்சி மையத்தை தொடங்கி வைத்தார்.
- NCRB: National Crime Records Bureau, Cri-MAC: Crime Multi Agency Centre
SpiceJet-GHASL நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும் கிடங்கு வசதி
- கிடங்கு வசதியை அமைப்பதற்காக ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்துடன் (SEZ) கூட்டுசேர்ந்த முதல் இந்திய விமான நிறுவனம் என்ற சிறப்பை ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) பெற்றுள்ளது.
- குர்கானை தளமாகக் கொண்ட இந்தியாவின் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) சமீபத்தில் ஒரு கிடங்கு, விநியோகம் மற்றும் வர்த்தக வசதியை அமைப்பதற்காக GMR ஹைதராபாத் ஏவியேஷன் செஸ் லிமிடெட் (GHASL) நிறுவனத்துடன் தனது பங்காளித்துவத்தை அறிவித்தது.
நியமனங்கள்
கிரீஸ் நாட்டின் முதல் பெண் அதிபர் - கேதரீனா சாகில்லாரொபோலு
- தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக கேதரீனா சாகில்லாரொபோலு, மார்ச் 14-அன்று பதவியேற்றுக் கொண்டாா்.
தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாய நிா்வாக தலைவர் - நீதிபதி பி.எல். பட்
- தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் (NCLAT) நிா்வாக தலைவராக நீதிபதி பி.எல். பட் நியமிக்கப்பட்டுள்ளார்.
- நீதிபதி அனந்த் விஜய் சிங் மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் நீதித் துறை உறுப்பினராகவும், ஸ்ரீஷா மொ்லா மற்றும் அலோக் ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் தொழில்நுட்ப குழு உறுப்பினா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்
- NCLAT: National Company Law Appellate Tribunal
பொருளாதார நிகழ்வுகள்
39-வது GST கவுன்சில் கூட்டம் (டெல்லி)
- டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் தலைமையில் 39-வது GST கவுன்சில் கூட்டம் மார்ச் 14-அன்று நடைபெற்றது.
- செல்போன்கள் மற்றும் அதன் குறிப்பிட்ட பாகங்கள் மீதான GST 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- விமானங்கள் பராமரிப்பு, பழுதுபார்த்தல், முற்றிலும் மாற்றியமைத்தல் பணிக்கான வரி விகிதம் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. தீப்பெட்டிகளுக்கு ஒரே விகிதமாக 12 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
- இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும்.
- GST நெட்வொர்க்கை இன்போசிஸ் நிறுவன வடிவமைத்துள்ளது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை - 1%
- இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பின்படி, 2019-20 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான நடப்பு கணக்கு பற்றாக்குறை (CAD), மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தின் அடிப்படையில், 1 சதவீதமாக உள்ளது.
- CAD: Current Account Deficit.
இந்திய ரிசர்வ் வங்கியின் 'எஸ் வங்கி' புனரமைப்பு திட்டம்
- இந்திய ரிசர்வ் வங்கியின் புனரமைப்பு திட்டத்தின் படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி, ரூ .7250 கோடியை எஸ் வங்கியில் (YES Bank) செலுத்த உள்ளது. இந்த திட்டத்தின் படி, முதலீட்டாளர் வங்கி, யெஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்க வேண்டும்.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
அறிவிக்கப்பட்ட தொற்றுநோய் பட்டியலில் 'கொரோனா வைரஸ்' சேர்ப்பு
- தமிழக அரசியலமைப்பு சட்டத்தின் 62-வது பிரிவினால் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி, கொரோனா வைரஸ் (கோவிட் - 19) என்பது, தமிழக பொது சுகாதார சட்டம் 1939-ன்கீழ் அறிவிக்கப்பட்ட தொற்றுநோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மூளையுறை அழற்சி காய்ச்சல், மலேரியா, தட்டம்மை, பெரியம்மை, ரேபிஸ், பிளேக், தொழுநோய், காசநோய், டெட்டனஸ், எய்ட்ஸ், டைபாய்டு உள்ளிட்ட 21 நோய்கள், தமிழக பொதுசுகாதார திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட தொற்றுநோய்கள் பட்டியலில் இடம்பெற்று உள்ளன.
- நீராருங் கடலுடுத்த” என தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு 2020 பொன்விழா ஆண்டு ஆகும்.
- 23.11.1970-ம் நாளன்று, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை இயற்றிய “நீராருங் கடலுடுத்த” என்னும் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆதிச்சநல்லூா், சிவகளை அகழாய்வுப் பணிகள்
- தமிழக தொல்லியல் துறை சாா்பில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூா், சிவகளை ஆகிய பகுதிகளில் மார்ச் மாதம் 22 ஆம் தேதி அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
விளையாட்டு நிகழ்வுகள்
ISL கால்பந்து 2020: 'கொல்கத்தா அணி' சாம்பியன்
- 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து போட்டி அக்டோபர் மாதம் 20 முதல் மார்ச் 14 வரை இந்தியில் நடைபெற்றது.
- இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி (ATK-Atlético de Kolkata) 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 3-வது முறையாக (2014, 2016, 2020) கோப்பையை சொந்தமாக்கியது.
- இந்த தொடரில் சென்னையின் எப்.சி. அணியின் வல்ஸ்கிஸ் தங்க ஷூ விருதை பெற்றார்.
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் 2020: 'ஆக்சல்சென்' சாம்பியன்
- 2020-ஆம் ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்றது.
- இப்போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீரர் 'விக்டர் ஆக்சல்சென்' சாம்பியன் பட்டத்தை வென்றார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீனதைபே நாட்டின் 'தாய் ஜூ யிங்' சாம்பியன் பட்டம் வென்றார்.
- இந்திய நட்சத்திரங்கள் சாய்னா நேவால் முதல் சுற்றுடனும், உலக சாம்பியன் பி.வி.சிந்து கால்இறுதியுடனும் வெளியேறினர்.
2020 ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ்: 'சரத்கமல்' சாம்பியன்
- மஸ்கட் நகரில் நடந்த 2020 சேலஞ்சர் பிளஸ் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சரத் கமல் 6-11, 11-8, 12-10, 11-9, 3-11, 17-15 என்ற செட் கணக்கில் போர்ச்சுகல் வீரர் மார்கஸ் பிரைட்டாசை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.
ஊக்கமருந்து புகார்கள் - ரஷ்யாவிற்கு 'USD 10 million' அபராதம் விதிப்பு
- ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளை மீறியதற்காக உலக தடகள கவுன்சில், ரஷ்யாவின் தடகள சம்மேளனத்திற்கு (RusAF) 10 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்தது.
- RusAF: Athletics Federation of Russia
முக்கிய தினங்கள்
மார்ச் 15 - உலக நுகர்வோர் உரிமைகள் தினம்
- உலக நுகர்வோர் உரிமைகள் தினம் (World Consumer Rights Day) ஆண்டுதோறும் மார்ச் 15 ஆம் தேதி, நுகர்வோர்களின் அடிப்படை உரிமைகளை ஊக்குவிப்பதற்காக கடைபிடிக்கப்படுகிறது.
- 2020 ஆம் வருட உலக நுகர்வோர் உரிமைகள் தின மையக்கருத்து: "நிலையான நுகர்வோர்" (The Sustainable Consumer) என்பதாகும்.
- இந்தியாவில் டிசம்பர் 24 ம் தேதி, "தேசிய நுகர்வோர் தினம்" கடைபிடிக்கப்படுகிறது.
மார்ச் 16 - தேசிய தடுப்பூசி தினம்
- முதன்முதலாக 1995-ம் ஆண்டு மார்ச் 16-ந் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. ஆண்டுதோறும் மார்ச் 16 ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினமாக (National Vaccination Day) கடைபிடிக்கப்படுகிறது.
உலக கண் அழுத்த நோய் வாரம்
- மார்ச் மாதம் 08-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை உலக கண் அழுத்த நோய் வாரம் (World Glaucoma Week 2020) கடைப்பிடிக்கப்படுகிறது.
- 2020 உலக கண் அழுத்த நோய் வார கருப்பொருள்: Beat Invisible Glaucoma.