Current Affairs March 3-4, 2020 (Tamil) - Download as PDF

Daily TNPSC Tamil Current Affairs March 3-4, 2020

TNPSC Tamil Current Affairs March 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

நடப்பு நிகழ்வுகள் மார்ச் 3-4, 2020
இந்திய நிகழ்வுகள்
இரண்டாம் கட்ட தூய்மை இந்தியா (கிராம) திட்டம் - தொடக்கம்
  • மத்திய அரசு சார்பில் தூய்மை இந்தியா (கிராம) திட்டத்தின் 2-ஆம் கட்டப் பணிகள் (SBM (G) Phase-II), 2020 மார்ச் 4-அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பணிகள் ரூ.1,40,881 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது.
  • டெல்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், தூய் இந்தியா திட்டத்தின் 2-ஆம் கட்டப் பணிகளை தொடங்கிவைத்தார்.
  • இந்த திட்டம், 2020-2021முதல் 2024-2025 வரை செயல்படுத்தப்படும். இதற்காக மத்திய குடிநீா் மற்றும் துப்புரவு பணிகள் துறையின் நிதியில் இருந்து ரூ.52,497 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 
  • திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை திறம்பட மேற்கொள்ளப்படுவதை 2-ஆம் கட்டப் பணிகள் உறுதி செய்யும்.
  • SBM (G) Phase-II: Swachh Bharat Mission (Grameen) Phase-II
இந்தியாவில் 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 
  • இந்தியாவில் மார்ச் 4-வரை இத்தாலியைச் சேர்ந்த 16 பேர் உட்பட 28 பேருக்கு கரோனா வைரஸ் (COVIT 19) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் '25 மாடியில் புதிய தலைமைச்செயலகம்'
  • பட்ஜெட்டில் அனைத்து அரசுத் துறைகளும் ஒரே கட்டிடத்தில் செயல்பட வசதியாக, 25 மாடிகளைக் கொண்ட இரட்டை கோபுரக் கட்டிடம் பெங்களூரு ஆனந்த் ராவ் வட்டத்தில் ரூ .400 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. கர்நாடக அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு 
  • உத்தரபிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியை (MLAs’ Local Area Development Fund) ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வரம்பில் இருந்து, ரூ.3 கோடியாக உயர்த்தியுள்ளது. 
நிலையான அபிவிருத்தி இலக்கு குறித்த முன்னோடி திட்டம் 
  • நிலையான அபிவிருத்தி இலக்குகள் (Sustainable Developmental Goals) குறித்த முதலாவது முன்னோடி (First Pilot Project) திட்டத்திற்கு ஜம்மு-காஷ்மீர் ஒன்றியப்பிரதேசத்தை நிதி ஆயோக் அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது. 
26 சாதனங்களை உள்ளடக்கிய 'எரிசக்தி பாதுகாப்பு சட்டம் (BEE)'
  • எரிசக்தி பாதுகாப்பு பணியகம் (Bureau of Energy Efficiency), எரிசக்தி பாதுகாப்பு சட்டம், 2001-இன் கீழ் ஸ்டார் லேபிளிங் திட்டத்தை வகுத்துள்ளது.
  • 2020 மார்ச் நிலவரப்படி, எரிசக்தி திறன் பணியகத்தின் ஸ்டார் லேபிளிங் திட்டம் 26 சாதனங்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது.
  • எரிசக்தி திறன் பணியகம் சமீபத்தில், அதன் 19-வது நிறுவன தினத்தில், தனது ஸ்டார் லேபிளிங் திட்டத்தை, டீப் ஃப்ரீசர்கள் (Deep Freezers) மற்றும் லைட் கமர்ஷியல் ஏர் கண்டிஷனர்கள் (Commercial Air Conditioners) ஆகிய 2 சாதனங்களுக்கு விரிவுபடுத்தியது. 
பாதுகாப்பு/விண்வெளி   
சந்திரயான்-3 விண்கலம் 
  • நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலம், 2021-ஆம் ஆண்டின் முதல் பாதியில் செலுத்தப்படும் என்று விண்வெளி ஆய்வுத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் மக்களவையில் மார்ச் 4-அன்று தெரிவித்தார்.
  • 2019 ஜூலை மாதம் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக, ஆா்பிட்டரிலிருந்து பிரித்து விடப்பட்ட 'விக்ரம்' லேண்டா், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க 2.1 கி.மீ. தொலைவே இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பை இழந்தது. கட்டுப்படுத்த இயலாத நிலையில் நிலவின் தரைப்பகுதியில் 'விக்ரம்' லேண்டா் விழுந்ததால், சந்திரயான்-2 திட்டம் பின்னடைவைச் சந்தித்தது.
நியமனங்கள் 
பேஸ்புக் இந்திய தகவல் தொடர்புத்துறை தலைவர் 'பிபாஷா சக்ரபர்த்தி' 
  • பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தகவல் தொடர்புத்துறை தலைவராக 'பிபாஷா சக்ரபர்த்தி' நியமிக்கப்பட்டுள்ளார். சக்ரபர்த்தி, சிஸ்கோ நிறுவனத்தில் கம்யூனிகேஷன்ஸ் துறையின் தலைவராக பணிபுரிந்துள்ளார்.
மாநாடுகள்
108-வது இந்திய அறிவியல் மாநாடு 2021 (புனே)
  • 108-வது இந்திய அறிவியல் மாநாட்டின் 2021 ஆண்டு அமர்வு மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் நடைபெறுகிறது. கடந்த 100 ஆண்டுகளில், புனே 4 வது முறையாக இந்த மாநாட்டை நடத்துகிறது.
  • 2021 ஜனவரி 3-7 தேதிகளில் புனே சிம்பியோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் லாவலே வளாகத்தில் இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கம் (ISCA) நடத்துகிறது.
  • 'Science and Technology for Sustainable Development with Women Empowerment' என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
  • இம்மாநாட்டின் தலைவராக டாக்டர் விஜய் லக்ஷ்மி சக்சேனா தேர்ந்தெடுக்கப்பட்டார். 
தமிழ்நாடு நிகழ்வுகள்
தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டம் 2020
  • 2020 மார்ச் 3 அன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 5 ஆண்டு தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டத்தை (TNHSRP) சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் உலக 
  • வங்கியின் நிதியுடன் செயல்படுத்தப்படும் .இது இந்தியாவில் முடிவுகளுக்கான நிரல் என்ற அடிப்படையில் இந்திய வங்கிகளுக்கான முதல் (PforR) திட்டமாகவும், தமிழகத்திற்கான முதல் திட்டமாகவும் செயல்படுத்தப்படவுள்ளது.
  • தொற்றா நோய்கள் மற்றும் காயங்கள் நிர்வாகம், பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துதல், இனப்பெருக்க மற்றும் குழந்தை சுகாதார சேவைகளில் ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் ஆகியவற்றை இந்த திட்டம் நோக்கமாக கொண்டது.
  • மொத்த செலவு ரூ .2,857.003 கோடி, இதில் உலக வங்கி ரூ. 1999.902 கோடியை வழங்கவுள்ளது. மீதமுள்ள செலவு தமிழக மாநில அரசால் வழங்கப்படும்.
  • TNHSRP: Tamil Nadu Health System Reform Programme
  • PforR: Program-for-Results 
12.95 லட்சம் லி. பால் விற்பனை: ஆவின் சாதனை
  • 2020 மார்ச் 4 அன்று, சென்னையில் 12.95 லட்சம் லிட்டா் விற்பனை செய்து, ஆவின் நிறுவனம் புதிய சாதனை படைத்தது. 
  • சென்னையில் இதற்கு முன்னதாக 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் 4-ஆம் தேதி 12.64 லட்சம் லிட்டா் பால் விற்பனையானது. 
விளையாட்டு நிகழ்வுகள்
இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் தொடர் 2020 
  • முழுமையாக கைப்பற்றிய நியூசிலாந்து: நியூசிலாந்தில் நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் -நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது. 
  • விராட்கோலி தலைமையில் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் முழுமையாக (ஒயிட்வாஷ்) தொடரை இழந்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டியில் ‘ஒயிட்வாஷ்’ ஆகி உள்ளது. 
  • நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி (மொத்தம் 14 விக்கெட்டுகள்) தொடர்நாயகன் விருது பெற்றார்.
  • நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது நடந்த ஒருநாள் போட்டி தொடரில் 0-3 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி கண்டது.
ஆக்கி அணிகள் தரவரிசை: இந்திய ஆண்கள் ஆக்கி அணி 4-வது இடம் 
  • சர்வதேச ஆக்கி சம்மேளனம் ஆக்கி அணிகளின் தரவரிசை பட்டியலில், இந்திய ஆண்கள் ஆக்கி அணி தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது இந்திய அணியின் சிறந்த தரநிலையாகும். 
  • பெல்ஜியம் அணி முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 2-வது இடத்திலும், நெதர்லாந்து அணி 3-வது இடத்திலும் உள்ளன.
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு 2020
  • முதலாவது 2020 கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள் (KIUG) பிப்ரவரி 22 முதல் மார்ச் 1, 2020 வரை ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள KIIT பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
  • பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த இந்த போட்டி, ‘ஜெய் மற்றும் பிஜய்’ அதிகாரப்பூர்வ சின்னங்களுடன் நடைபெற்றது.
  • 45 பதக்கங்களுடன் (17 தங்கம், 18 வெள்ளி, 10 வெண்கலம்) பஞ்சாப் பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டம் வென்றது.இதைத் தொடர்ந்து சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகம் (37 பதக்கங்களுடன் 2 வது இடம்) மற்றும் பஞ்சாபி பல்கலைக்கழகம், பாட்டியாலா 32 பதக்கங்களுடன் மூன்றாம் இடம் பிடித்தது.
முக்கிய தினங்கள்
மார்ச் 3 - உலக வனவிலங்குகள் தினம்
  • வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் உலக வனவிலங்கு நாள் (World Wildlife Day 2019) மார்ச் 03 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • 2020 உலக வனவிலங்கு தின (Theme) மையக்கருத்து: பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் வாழ்விப்போம் (Sustaining all life on Earth) என்பதாகும்.
மார்ச் 3 - உலக செவிப்புலன் தினம்
  • காது கேளாமை மற்றும் தடுப்பது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக செவிப்புலன் தினம் (World Hearing Day) ஆண்டுதோறும் மார்ச் 3 ஆம் தேதி உலக சுகாதார அமைப்பால் அனுசரிக்கப்படுகிறது. 
  • 2020 உலக செவிப்புலன் தின  (Theme) மையக்கருத்து: Hearing for life: Don’t let hearing loss limit you.
Download this article as PDF Format
Previous Post Next Post