Current Affairs March 1-2, 2020 (Tamil) - Download as PDF

Daily TNPSC Tamil Current Affairs March 1-2, 2020

TNPSC Tamil Current Affairs March 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

நடப்பு நிகழ்வுகள் மார்ச் 1-2, 2020
சர்வதேச நிகழ்வுகள்
உலகின் இரண்டாவது இளைய பில்லியனர் 'ரித்தேஷ் அகர்வால்' 
  • ஓயோ ஹோட்டல் (Oyo Hotels) இந்திய தொடக்க நிறுவனத்தின் நிறுவனர் 'ரித்தேஷ் அகர்வால்' (Ritesh Agarwal), உலகின் இரண்டாவது இளைய பில்லியனர் (world’s second youngest billionaire) என பெயர் பேற்றுள்ளார்.
  • சமீபத்தில் வெளியான ஹுருன் உலகளாவிய கோடீஸ்வரர்கள் 2020 (Hurun Global Rich List 2020) பட்டியலில் , ரித்தேஷ் அகர்வால் உலகின் இரண்டாவது இளைய கோடீஸ்வரராக அறிவிக்கப்பட்டார்.
இந்திய நிகழ்வுகள்
இந்தியாவில் ‘செம்மொழி’ தகுதி பெற்றுள்ள '06 மொழிகள்' 
  • இந்தியாவில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய ஆறு (06) மொழிகளுக்கு ‘செம்மொழி’ (Classical language) என்ற தகுதி வழங்கப்பட்டுள்ளது.
  • சமீபத்தில், மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் இரு அவைகளும் ஒருமனதாக தீர்மானங்களை நிறைவேற்றி, மராத்தியுக்கு ‘செம்மொழி மொழி’ அந்தஸ்தை வழங்குமாறு மைய அரசை கோரியது.
  • ‘செம்மொழி’ என அறிவிக்கப்பட்ட மொழிகள் தங்கள் மொழி ஆய்வுக்கான மையங்களை அமைப்பது மற்றும் அவர்களின் அறிஞர்களுக்கு சர்வதேச விருதுகளை வழங்குவது போன்ற நன்மைகளைக் பெறும்.
சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு - பீகார் தீர்மானம் 
  • பீகார் சட்டமன்றம் சமீபத்தில் மாநிலத்தில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை (caste-based census 2020) நடத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. பீகார் முதல்வர் நிதீஷ்குமார் சட்டசபையில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்மொழிந்தார்.
பள்ளி மாணவர்களுக்கு 'செயற்கை நுண்ணறிவு பாடத்தொகுதி'
  • இந்திய பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பாடத்தொகுதியைத் தொடங்க நிதி ஆயோக் (NITI Aayog) அமைப்பின் அடல் புதுமை மிஷன் (AIM) திட்டத்துடன், தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கத்தின் (NASSCOM) ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • செயற்கை நுண்ணறிவு அடிப்படைத் தொகுதி, கிட்டத்தட்ட 5,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்களில் (ATL) செயல்படுத்தப்பட உள்ளது, இது 2.5 மில்லியன் மாணவர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  • செயற்கை நுண்ணறிவு (AI) கருத்து செயல்பாடுகள் மற்றும் வீடியோக்களைக் கொண்ட தொகுதி, பிப்ரவரி 27 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • AI: Artificial Intelligence. ATL: Atal Tinkering Labs.
  • NASSCOM: National Association of Software and Services Companies
நில பதிவுகள் மற்றும் சேவைகள் குறியீடு 2020 (N-LRSI 2020)
  • தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (NCAER) சமீபத்தில் NCAER நில பதிவுகள் மற்றும் சேவைகள் குறியீட்டை (N-LRSI 2020) வெளியிட்டது.
  • 33 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் நில பதிவுகளின் எண்மயமாக்கல் (digitisation of land records) மற்றும் அவற்றின் தரத்தை இந்த குறியீடு மதிப்பீடு செய்கிறது.
  • சிறந்த ஐந்து மாநிலங்கள்: இந்த குறியீட்டின்படி, மத்தியப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மற்றும் தமிழ்நாடு ஆகியவை சிறப்பாக செயல்படும் ஐந்து மாநிலங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • NCAER: National Council of Applied Economic Research
தொழில் பழகுநர் வாய்ப்புகளை வழங்கும் 'ஸ்ரேயாஸ்' வலைத்தளம் 
  • இளைஞர்களுக்கு தொழில் பழகுநர் வாய்ப்புகளை வழங்குவதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிமுகப்படுத்திய ஸ்ரேயாஸ் (SHREYAS portal) என்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தினார்.
  • 2019 ஏப்ரல் முதல் வெளியேறும் பட்டதாரிகளுக்கு, தேசிய பயிற்சி மேம்பாட்டு திட்டம் (NAPS) மூலம், தொழில்துறை பயிற்சி வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், உயர் கல்வி இளைஞர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டம் (SHREYAS) தொடங்கப்பட்டது.
  • SHREYAS: Scheme for Higher Education Youth in Apprenticeship and Skills.
  • NAPS: National Apprenticeship Promotional Scheme.
இந்திய அரசின் உலக பாரம்பரிய பட்டியல் 'பரிந்துரைகள்' 2020 
  • இந்திய அரசு ‘தோலவீரா: ஒரு ஹரப்பன் நகரம்’ (Dholavira: A Harappan City) மற்றும் ‘டெக்கான் சுல்தானேட்டின் நினைவுச்சின்னங்கள் மற்றும் கோட்டைகள்’ (Monuments and Forts of Deccan Sultanate) ஆகிய இரண்டு தொல்லியல் இடங்களை, 2020-ஆம் ஆண்டிற்கான உலக பாரம்பரிய பட்டியலில் சேர்ப்பதற்காக பரிந்துரை ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது.
  • இவற்றில் தோலவீரா நகரம், குஜராத் நகரில் உள்ளது. டெக்கான் நினைவுச்சின்னங்கள், கர்நாடகாவின் பீஜப்பூர் மற்றும் பீதார் நகரங்களில் உள்ளது.
பாதுகாப்பு/விண்வெளி   
'ரெய்டர்-எக்ஸ்' புதிய வெடிபொருள் கண்டறியும் சாதனம் - அறிமுகம் 
  • DRDO & IISc பெங்களூரு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட 'ரெய்டர்-எக்ஸ்' (RaIDer-X) என்ற புதிய வெடிபொருள் கண்டறியும் சாதனம், புனேவில் 2020 மார்ச் 1 அன்று வெளியிடப்பட்டது
  • புனேவில் நடைபெற்ற இருநாள் கண்டறிதலுக்கான தேசிய பட்டறையில் (NWED-2020) இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. 
  • ரெய்டர்-எக்ஸ் வெடிபொருட்களை ஒரு தூரத்திலிருந்து கண்டுபிடிக்கும் திறனைக் கொண்டது.
GISAT-1 செயற்கைகோள்/GSLV-F10 இராக்கெட் - தகவல்கள் 
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) தனது, பூமி கண்காணிப்புக்கான GSAT-1 செயற்கைகோள் GSLV-F10 இராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் (SHAR) உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து வரும் மார்ச் 5-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது. 
  • GISAT-1 செயற்கைகோள்
  • பூமி கண்காணிப்புக்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஜிசாட்-1 என்ற செயற்கைகோள் ஜியோ இமேஜிங் என்று அழைக்கப்படும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கைகோளாகும். 
  • GSLV-F10 இராக்கெட் 
  • 2020-ம் ஆண்டு ஏவப்படும் முதல் ராக்கெட் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரேயோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட 8-வது ராக்கெட் என்ற பெருமையும் பெருகிறது. 
  • ஜி.எஸ்.எல்.வி. வகையில் 14-வது ராக்கெட் என்பதுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 76-வது ராக்கெட்டாகும்.
  • இந்த ராக்கெட்டில் முதல் முறையாக 4 மீட்டர் விட்டம் கொண்ட ‘ஆகிவ் வடிவ பேலோட் பேரிங்’ என்று அழைக்கப்படும் வெப்ப கவசம் பொருத்தப்பட்டுள்ளது. 
  • GISAT-1: GEO Imaging Satellite.
மாநாடுகள்
ஆயுர்வேதம், யுனானி, சித்த மருந்தவ தரப்படுத்தல் மாநாடு 2020 (ICoSDiTAUS-2020)
  • ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருந்துகளில் நோயறிதல் மற்றும் சொற்களஞ்சியங்களின் தரப்படுத்தல் குறித்த சர்வதேச மாநாடு (ICoSDiTAUS-2020) புது தில்லி நகரத்தில் பிப்ரவரி 25-26 தேதிகளில் நடைபெற்றது.
  • "பாரம்பரிய மருத்துவம் (TM) கண்டறியும் தரவை சேகரித்தல் மற்றும் வகைப்படுத்துதல் பற்றிய புது தில்லி பிரகடனம்" இந்த மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • நோயறிதல் மற்றும் சொற்களஞ்சியங்களின் தரப்படுத்தலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகப்பெரிய சர்வதேச நிகழ்வு இதுவாகும்.
பூசா கிருஷி விஜியன் மேளா 2020 (புதுடெல்லி)
  • மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 2020 பூசா கிருஷி விஜியன் மேளா (Pusa Krishi Vigyan Mela-2020) என்ற விழாவை புதுடெல்லியில் தொடங்கி வைத்தார்.
பொருளாதார நிகழ்வுகள் 
இந்தியாவின் முதல் 'சிறப்பு ஃபின்டெக் மையம்'
  • இந்தியாவின் முதல் சிறப்பு ஃபின்டெக் மையம் (FinTech Centre) சென்னையில் அமைக்கப்படுகிறது.
  • சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆஃப் இந்தியா (STPI) சென்னையில், ஃபின்ப்ளூ’ (FinBlue) என்று அழைக்கப்படும் இந்தியாவின் முதலாவது 'சிறப்பு ஃபின்டெக் மையம்' (Centre of Excellence in FinTech) ஒன்றை அமைத்துள்ளது.
  • இந்த ஃபின்ப்ளூ’ மையம், வழிகாட்டல், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் ஃபின்டெக் தொடக்க நிலை நிறுவனங்களுக்கான ஆகியவற்றின் அடிப்படையில் நிதி வளங்களை வழங்கும் நோக்கத்துடன் அமைக்கப்படுகிறது. 
  • இந்த மையம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 58-க்கும் மேற்பட்ட தொடக்க நிலை நிறுவனங்களை அமைக்க விரும்புகிறது. தொழில்முனைவோருக்கு இந்த நிதி தொழில்நுட்பம் மையம் உதவியாக இருக்கும். 
  • எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் தமிழ்நாடு லிமிடெட் (ELCOT) மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவை ஃபின்ப்ளூ அமைப்பிற்கு ஆதரவை வழங்க உள்ளன.
நிறுவனங்களுக்கான விதிமுறைகள் தொடர்பான ஆணை 'CARO 2020' 
  • நிறுவனங்களுக்கான விதிமுறைகள் (Regulations for companies) தொடர்பான CARO 2020 என்ற ஆணை அறிவிப்பை மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது.
  • இந்த அறிவிப்பின்படி, பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தணிக்கையாளர்களுக்கும் அனைத்து விசில்-ஊதுகுழல் புகார்களையும் கட்டாயமாக வெளியிட வேண்டும் மற்றும் புகார்கள் தணிக்கை அறிக்கைகளில் குறிப்பிடப்பட வேண்டும்.
  • 2019 ஏப்ரல் நிதியாண்டு முதல் அனைத்து தணிக்கைகளுக்கும் இந்த ஆணை பொருந்தும்.
  • CARO 2020: Companies (Auditor’s Report) Order, 2020.
2 கோடி வாடிக்கையாளர்கள் கொண்ட 'இந்திய அஞ்சலக வங்கி (IPPB)' 
  • இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) சமீபத்தில் இரண்டு கோடி வாடிக்கையாளர்கள் என்ற மைல் கல்லை எட்டியது.
  • இந்திய அஞ்சலக வங்கி (IPPB), இந்தியப் பிரதமரால், 2018 செப்டம்பர் 1 அன்று நிதி சேர்க்கும் முக்கிய நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
  • 2019 செப்டம்பரில், ஆதாருடன்-இணைக்கப்பட்ட பணம் செலுத்தும் வங்கி சேவைகளை (AePS) அறிமுகப்படுத்தியது.
  • AePS: Aadhaar-Enabled Payment System. IPPB: India Post Payments Bank.
தமிழ்நாடு நிகழ்வுகள்
மேட்டூர் சரபங்கா நீரேற்ற திட்டம்
  • சேலம் மாவட்டம், இருப்பாளி கிராமத்திலுள்ள மேட்டுப்பட்டி ஏரி அருகில் மார்ச் 4-ந்தேதி 'மேட்டூர் சரபங்கா நீரேற்ற திட்டத்திற்கு அடிக்கல் விழா நடத்தப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடக்கி வைக்கிறார்.
  • ரூ.565 கோடி மதிப்பிலான இந்த திட்டம், மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள சரபங்கா வடிநிலப்பகுதியில் வறண்ட 100 ஏரிகள் மற்றும் குளங்கள் ஆகியவற்றிற்கு நீரேற்றம் மூலம் நீர்வழங்கும் திட்டம் ஆகும்.
புதிய மாவட்டங்களில் வரும் ஊராட்சி ஒன்றியங்கள் 
  • தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வரும் மாவட்ட பஞ்சாயத்துகளுக்குள் எந்தெந்த ஊராட்சி ஒன்றியங்கள் வருகின்றன என்பதற்கான பட்டியலை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரம்:
  • விழுப்புரம் மாவட்டத்தில் முகையூர், திருவெண்ணெய்நல்லூர், காணை, விக்கிரவாண்டி, கோலியனூர், கண்டமங்கலம், ஓலக்கூர், மயிலம், மரக்காணம், வானூர், வல்லம், மேல்மலையனூர், செஞ்சி ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் வருகின்றன.
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருவம், கல்வராயன்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
  • திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், நான்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், களக்காடு ஊராட்சி ஒன்றியங்களும், தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், தென்காசி, செங்கோட்டை, கடைய நல்லூர், வாசுதேவநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களும் அமைந்துள்ளன.
  • வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, கணியம்பாடி, வேலூர், காட்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமிரி, ஆற்காடு, வாலாஜாபேட்டை, காவேரிபாக்கம், நெமிலி, அரக்கோணம், சோளிங்கர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
  • திருப்பத்தூர் மாவட்டத்தில் கந்திலி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, மாதனூர், ஆலங்காயம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் வருகின்றன.
விளையாட்டு நிகழ்வுகள்
டென்னிஸ்

மெக்சிகன் சர்வதேச டென்னிஸ் 2020 
  • மெக்சிகோவில் அகாபுல்கோ நகரில் நடந்த 2020 மெக்சிகன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் (Mexican Open 2020) சாம்பியன் பட்டம் வென்றவர்கள் விவரம்:
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு: இரபெல் நடால் (ஸ்பெயின்)
  • பெண்கள் ஒற்றையர் பிரிவு: ஹீதர் வாட்சன் (இங்கிலாந்து) 
துபாய் டென்னிஸ் 2020: ஜோகோவிச் ‘சாம்பியன்’
  • 2020 துபாய் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி (Dubai Tennis Championships), துபாய் நகரில் நடைபெற்றது. இதில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் விவரம்:
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு: நோவக் ஜோகோவிச் (செர்பியா)
  • பெண்கள் ஒற்றையர் பிரிவு: சிமோனோ ஹாலப் (ருமேனியா).
முக்கிய தினங்கள்
மார்ச் 01 - பூஜ்ய பாகுபாடு நாள் (Zero Discrimination Day)
  • பூஜ்ய பாகுபாடு நாள் (Zero Discrimination Day 2019) என்பது ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் கொண்டாடப்படும் நாளாகும். இந்நாள் அனைத்து நாடுகளிலும் சட்டம் மற்றும் நடைமுறையில் சமத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • 2020 பூஜ்ய பாகுபாடு நாள் கருப்பொருள்: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பூஜ்ய பாகுபாடு (Zero Discrimination Against Women and Girls).
மார்ச் 1 - பொதுக் கணக்கு தினம் (Civil Accounts Day) 
  • மார்ச் 1, 1976 அன்று புது டெல்லியில் இந்திய சிவில் அக்கவுண்டஸ் சர்வீஸ் (ICAS) தொடங்கப்பட்டதின் நினைவாக ஆண்டுதோறும் மார்ச் 1 அன்று "பொதுக் கணக்கு தினம் (Civil Accounts Day 2020) கடைபிடிக்கப்படுகிறது. 
மார்ச் 1 - தியாகராஜ பாகவதர் பிறந்த தினம் 
  • எம். கே. தியாகராஜ பாகவதர், மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக MKT என அழைக்கப்படுகிறார். தமிழ்த் திரையுலகின் முடிசூடா வேந்தர், ஏழிசை மன்னர் என்று போற்றப்பட்ட தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் மார்ச் 1 ஆகும்.
  • கர்நாடக சங்கீதத்துக்கு ஒரு தியாகராஜர் என்றால், திரை இசைக்கு ஒரு தியாகராஜ பாகவதர். தமிழ் தியாகராஜர் என்று அழைக்கப்பட்டவர்.
Download this article as PDF Format
Previous Post Next Post