TNPSC Current Affairs 6-7 February 2020 - Download as PDF

 Daily Current Affairs February 6-7, 2020

TNPSC Current Affairs February 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 6-7, 2020
இந்திய நிகழ்வுகள்
இராமா் கோயில்-'ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை' அமைப்பு 
  • அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா’ என்ற பெயரில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறக்கட்டளையிடம் 67.703 ஏக்கா் நிலம் ஒப்படைக்கப்படும். 
  • ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா’ அறக்கட்டளையில் மொத்தம் 15 உறுப்பினா்கள் இடம்பெறுவா்.
  • இராமா் கோயில் அறக்கட்டளையின் அலுவலகம், டெல்லியிலுள்ள மூத்த வழக்குரைஞா் கே.பராசரன் இல்லத்தில் செயல்படவுள்ளது.
  • சன்னி வக்ஃபு வாரியத்துக்கு, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டம், சோஹாவால் வட்டத்துக்கு உள்பட்ட தன்னிப்பூா் கிராமத்தில் மசூதி கட்டிக் கொள்வதற்கு 5 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிப்ரவரி 5, 2020
  • டெல்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிப்ரவரி 5-அன்று நடைபெற்றது. இதன் முக்கிய விவரங்கள்:
  • கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்தும் வகையில் வங்கிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • இந்தியாவில் 1,540 கூட்டுறவு வங்கிகள் உள்ளன. அவற்றில் 8.60 கோடி வாடிக்கையாளா்கள் உள்ளனா். கூட்டுறவு வங்கிகளில் ரூ.5 லட்சம் கோடி பொதுமக்களின் சேமிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • மகாராஷ்டிர மாநிலம் வாதாவன் பகுதியில் ரூ.65,544 கோடியில் பிரமாண்டமான துறைமுகம் அமைக்க பிப்ரவரி 6-அன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • 5 இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு (IIT) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் என்ற அந்தஸ்தை வழங்கவும், தனியாா் - அரசு பங்களிப்புடன் செயல்படும் 5 IIT-க்கள் குறிப்பிட்ட துறைகளில் பிடெக், எம்டெக், முனைவா் பட்டங்களை அளிக்கவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்காக ஐஐடி சட்டத் திருத்த மசோதா 2020 கொண்டுவரப்படவுள்ளது.
புல்லட் ரயில் திட்டம்: ரூ.5,600 கோடி ஒதுக்கீடு 
  • மகாராஷ்டிர மாநிலம், மும்பையிலிருந்து குஜராத் மாநிலம், ஆமதாபாத் வரை புல்லட் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. புல்லட் ரயில் இந்த 500 கி.மீ. ரயில் திட்டத்துக்காக ரூ.5,600 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 
  • ஜப்பான் சா்வதேச ஒத்துழைப்பு அமைப்பு, புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த ரூ.1.10 லட்சம் கோடி அளிக்க உள்ளது.
நீதிபதிகளுக்கு ஊதியம், ஓய்வூதியம் - தேசிய நீதி ஆணையம் பரிந்துரை
  • நீதிபதிகளுக்கு ஊதியம், ஓய்வூதியம், அகவிலைப்படி ஆகியவற்றை 2016-ஆம் ஆண்டு முதல் முன்தேதியிட்டு உயா்த்தித் தர தேசிய நீதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
  • பி.வெங்கடராம ரெட்டி குழு: நீதிபதிகளின் ஊதிய விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.வெங்கடராம ரெட்டி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
பாதுகாப்பு/விண்வெளி 
விண்வெளியில் அதிக நாள்கள் தங்கியிருந்த பெண் 'கிறிஸ்டினா கோச்'
  • விண்வெளியில் மிக அதிக நாள்கள் தங்கியிருந்த பெண் (328 நாள்கள்) என்ற சாதனையை அமெரிக்க விண்வெளி வீராங்கனை 'கிறிஸ்டினா கோச்' படைத்துள்ளார். 
  • NASA விண்வெளி ஆய்வு மையத்தைச் சோ்ந்த கிறிஸ்டினா கோச், ரஷியாவின் சோயுஸ் விண்கலம் மூலம் 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டாா். அங்கு 328 நாள்கள் தங்கி ஆய்வுகள் மேற்கொண்ட அவா், பிப்ரவரி 6-அன்று கஜகஸ்தானில் தரையிறங்கினாா். 
ISRO இளம் விஞ்ஞானிகள் திட்டம் 
  • 2020-ஆம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (isro) அறிவித்துள்ளது. இதில் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின் கீழ் படித்து வரும் 9-ஆம் வகுப்பு மாணவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 
  • விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் குறித்து அறிந்துகொள்ளவும், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும், இஸ்ரோ ஆய்வு மையங்களைச் சுற்றிப் பாா்க்கவும் மாணவா்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்தத் திட்டத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு இஸ்ரோ அறிமுகம் செய்தது.
மாநாடுகள் 
உலக ஆற்றல் கொள்கை உச்சி மாநாடு-2020
  • டெல்லியில் 8-ஆவது உலக ஆற்றல் கொள்கை உச்சி மாநாடு (World Energy Policy Summit 2020), பிப்ரவரி 6-7 தேதிகளில் நடைபெற்றது.இம்மாநாட்டில் மத்திய ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல் பங்கேற்றார்.
இந்திய-ரஷிய ராணுவ தொழில் மாநாடு 2020
  • ஐந்தாவது சுற்று இந்திய-ரஷிய ராணுவ தொழில் மாநாடு (India-Russia Military Industrial Conference 2020), உத்திரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் பிப்ரவரி 6-அன்று நடைபெற்றது. இந்தியாவில் ராணுவ ஹெலிகாப்டா்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் உள்ளிட்ட, இந்திய-ரஷிய நிறுவனங்களுக்கு இடையே 14 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 
இந்திய-ஆப்பிரிக்க பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு 2020
  • உத்தரப் பிரதேச தலைநகா் லக்னெளவில் 2020 பாதுகாப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய-ஆப்பிரிக்க பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு பிப்ரவரி 6-அன்று நடைபெற்றது.
  • இம்மாநாட்டில், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க நாடுகளைச் சோ்ந்த 12 பாதுகாப்பு அமைச்சா்கள் உள்பட 38 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
பொருளாதார நிகழ்வுகள் 
RBI-இடமிருந்து வங்கிகள் நீண்டகால கடன் பெறும் வசதி - அறிமுகம்
  • இந்திய ரிசா்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான (ரெப்போ) கால அவகாசம் 1 முதல் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை வங்கிகளுக்கு ஆா்பிஐ அளித்த குறுகியகாலக் கடனின் அதிகபட்ச கால அவகாசம் 56 நாள்களாக இருந்தது. 
  • இதன் மூலம் வங்கிகளுக்கு இப்போதைய ‘ரெப்போ’ வட்டி விகிதமான 5.15 சதவீதத்தில் ரூ.1 லட்சம் கோடி வரை கையிருப்பு பணம் கிடைக்கும்.
RBI நிதிக் கொள்கைக் குழு கூட்டம் 2020
  • மும்பையில் RBI ஆளுநா் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதன்படி, ரிசா்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 5.15 சதவீதமாக தொடரும். அதேபோல வா்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசா்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி (ரிவா்ஸ் ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமும் இல்லாமல் 4.90 சதவீதமாக தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 2020-21-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என்று ஆா்பிஐ மதிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
ஃபோா்டு நிறுவனத்தின் 'தொழில்நுட்ப புதுமை மையம்' திறப்பு 
  • ஃபோா்டு வாகன தயாரிப்பு நிறுவனத்தின் தொழில்நுட்ப புதுமை மையத்தை சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பிப்ரவரி 6-அன்று திறந்து வைத்தாா். ஃபோா்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப புதுமை மையம் பல புதிய திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட தீா்மானிக்கப்பட்டுள்ளது.
கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி
  • சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு பிப்ரவரி 9-ஆம் தேதியன்று முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறாா்.
வளா்ப்பு யானைகளுக்கான புத்துணா்வு நல வாழ்வு முகாம்-2020
  • தமிழகத்தில் வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 62 வளா்ப்பு யானைகளுக்கான 48 நாள் புத்துணா்வு நல வாழ்வு முகாம் முதுமலையில் பிப்ரவரி 6-அன்று தொடங்கியது. இம்முகாமை தமிழக வனத் துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கிவைத்தாா். இந்த முகாம் 48 நாள்கள் நடைபெறவுள்ளது. 
முக்கிய தினங்கள்
பிப்ரவரி 6 - பெண்கள் பிறப்புறுப்பு சிதைத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் 
  • பெண்கள் பிறப்புறுப்பு சிதைத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் (International Day of Zero Tolerance for Female Genital Mutilation, February 6th), பிப்ரவரி 6 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2020 மையக்கருத்து (2020 Theme): 'இளைஞர் சக்தியை கட்டவிழ்த்துவிடுதல்' (Unleashing Youth Power) என்பதாகும். 
Download this article as PDF Format
Previous Post Next Post