Daily Current Affairs February 4, 2020
TNPSC Current Affairs February 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 4, 2020
சர்வதேச நிகழ்வுகள்உகானில் 'ஹுவோஷென்ஷான்' மருத்துவமனை - திறப்பு
- கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் உகானில் 1000 படுக்கைகள் கொண்ட 'ஹுவோஷென்ஷான்' என பெயரிடப்பட்டு 60 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள, முதல் மருத்துவமனை ஜனவரி 3-அன்று திறக்கப்பட்டது.
- இந்த ஆஸ்பத்திரி பல்துறை பணியாளர்கள் கொண்ட 7 ஆயிரம் பேர் அடங்கிய மிகப்பெரும் குழு மூலம் கடந்த 10 நாட்களாக 24 மணி நேரமும் பணியாற்றி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய நிகழ்வுகள்
கிருஷி உதான் திட்டம்
- வேளாண் பொருட்களை கொண்டு செல்வதற்காக, விமான போக்குவரத்து அமைச்சகத்தால் பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டு கிருஷி உதான் திட்டம்' (Krishi Udan Scheme) என்ற பெயரில் செயல்படுத்தப்படவுள்ளது.
- இந்த திட்டம் விவசாயிகளுக்கு வடகிழக்கு மற்றும் பழங்குடி மாவட்டங்களில் உதவும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு: கேரளாவில் மாநில பேரிடராக அறிவிப்பு
- கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுவதால், கொரோனா பாதிப்பை மாநில பேரிடராக கேரளா அரசு அறிவித்துள்ளது.
விருதுகள்
BBC சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது - 5 பேர் பரிந்துரை
- BBC செய்தி நிறுவனம், 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதுக்கு 5 பேரை தோ்ந்தெடுத்து பரிந்துரைத்துள்ளது.
- தூத்தி சந்த் (தடகளம்), மானஸி ஜோஷி (பாரா-பேட்மிண்டன்), மேரி கோம் (குத்துச்சண்டை), வினேஷ் போகத் (ஃப்ரீஸ்டைல் மல்யுத்தம்), பி.வி.சிந்து (பேட்மிண்டன்) ஆகியோா் பரிந்துரைக்கப்பட்ட வீரா்கள் ஆவா்.
நியமனங்கள்
கோல் இந்தியா தலைவர் - பிரமோத் அகர்வால்
- மகாரத்ன பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (CIL) நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பிரமோத் அகர்வால் (Pramod Agrawal) பொறுப்பேற்றார்.
- CIL: Coal India Limited.
இலங்கைக்கான இந்தியாவின் தூதர் - கோபால் பாக்லே
- மூத்த இந்திய இராஜதந்திரி கோபால் பாக்லே (Gopal Baglay) சமீபத்தில் இலங்கைக்கான இந்தியாவின் தூதராக (High Commissioner) நியமிக்கப்பட்டார்.
மாநாடுகள்
இராணுவத் தளவாட கண்காட்சி 2020 (லக்னௌ)
- உத்தரப்பிரதேச மாநிலம், லக்னௌவில் பிப்ரவரி 5 முதல் 9 வரை ராணுவத் தளவாட கண்காட்சி (DefExpo 2020) நடைபெறுகிறது.
பொருளாதார நிகழ்வுகள்
முதலீடுகளைத் திரும்பப் பெறுவதற்கான இலக்கு - ரூ. 1.2 லட்சம் கோடி
- சமீபத்திய மத்திய பட்ஜெட் 2020-21-இன் படி, 2020-21க்கான இந்திய அரசாங்கத்தின் முதலீடுகளைத் திரும்பப் பெறுவதற்கான (Disinvestment Target) இலக்கு ₹ 1.2 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மத்திய பட்ஜெட்டில் 2020-21, 2020-21 நிதியாண்டில் அரசாங்கம் தனது முதலீட்டு இலக்கை ₹ 1.2 லட்சம் கோடியாக நிர்ணயித்துள்ளது.
- நிதி பற்றாக்குறை: 2020-21க்கான நிதி பற்றாக்குறை இலக்கை (Fiscal Deficit Target for 2020-21) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது (Budget Estimate).
- மத்திய நிதியமைச்சர், 20-21 ஆம் ஆண்டில் வங்கி வைப்புகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச காப்பீட்டை ஒரு டெபாசிட்டருக்கு 5 லட்சமாக உயர்த்தியுள்ளார்.
விளையாட்டு நிகழ்வுகள்
டென்னிஸ்
உலக டென்னிஸ் தரவரிசை - பிப்ரவரி 3, 2020
- உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் பிப்ரவரி 3-அன்று வெளியிட்டது.
- ஆண்கள் ஒற்றையர் தரவரிசை
- ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில், செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (9,720 புள்ளிகள்) மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஜோகோவி, நம்பர் ஒன் இடத்தை 276-வது வாரமாக அலங்கரிக்கிறார். (முதல் 3 இடங்கள்):
- 1. நோவக் ஜோகோவிச் (செர்பியா) , 2. ரபெல் நடால் (ஸ்பெயின்), 3. ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)
- இந்திய வீரர்கள் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஒரு இடம் முன்னேறி 122-வது இடத்தையும், சுமித் நாகல் 6 இடம் உயர்ந்து 125-வது இடத்தையும், ராம்குமார் 2 இடம் முன்னேறி 182-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
- பெண்கள் ஒற்றையர் தரவரிசை (முதல் 3 இடங்கள்):
- 1. ஆஷ்லி பார்ட்டி- ஆஸ்திரேலியா), 2. சிமோனா ஹாலெப் (ருமேனியா), 3. கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு)
- இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா 2 இடம் சறுக்கி 40-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் திவிஜ் சரண் 53-வது இடத்திலும், புரவ் ராஜா 91-வது இடத்திலும் தொடருகின்றனர்.
கிரிக்கெட்
20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை - பிப்ரவரி 3, 2020
20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை - பிப்ரவரி 3, 2020
- இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டி தொடர் முடிவை தொடர்ந்து வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பிப்ரவரி 3-அன்று வெளியிட்டது. (முதல் 3 இடங்கள்):
- பேட்ஸ்மேன் தரவரிசை
- 1. பாபர் அசாம் (பாகிஸ்தான்), 2. லோகேஷ் ராகுல் (இந்தியா), 3. ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா)
- பந்து வீச்சாளர் தரவரிசை
- 1. ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) 2. முஜீப் ரஹ்மான் (ஆப்கானிஸ்தான்), மிட்செல் சான்ட்னெர் (நியூசிலாந்து)
பளுதூக்குதல்
தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2020
- மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய சீனியா் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், வீராங்கனை ராக்கி ஹால்டா் 64 கிலோ பிரிவில் பங்கேற்று தங்கம் வென்றாா்.
- மீராபாய் சானு, 49 கிலோ எடைப் பிரிவில் ஸ்நாட்ச் பிரிவில் 88 கிலோவும், ஜொ்க்கில் 115 கிலோ என மொத்தம் 203 கிலோவை தூக்கி புதிய சாதனையுடன் தங்கம் வென்றாா்.
டென்னிஸ்
ITF சேலஞ்சா் டென்னிஸ் 2020: 'அங்கிதா ரெய்னா' சாம்பியன்
- தாய்லாந்து ITF சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா சாம்பியன் பட்டம் வென்றாா்.
- அங்கிதா ரெய்னா இரட்டையா் பிரிவிலும் பிபியன் ஸ்கூப் உடன் இணைந்து பட்டம் வென்றார்.
டேபிள் டென்னிஸ்
தேசிய சீனியா் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2020
- ஐதராபாதில் நடந்த 81-ஆவது தேசிய சீனியா் டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் ஆடவா் பிரிவில் ஹா்மித் தேசாயும், மகளிா் பிரிவில் சுதிா்தா முகா்ஜியும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினா்.
ஆக்கி
தேசிய சீனியா் ஆக்கி 2020: சா்வீஸஸ் அணி சாம்பியன்
- ஜான்ஸி நகரில் 10-ஆவது தேசிய சீனியா் ஆக்கி சாம்பியன்ஷிப் (A டிவிஷன்) போட்டியில் சா்வீஸஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
முக்கிய தினங்கள்
பிப்ரவரி 4 - உலக புற்றுநோய் தினம் (World Cancer Day 2020)
- 2020 உலக புற்றுநோய் தின மையக்கருத்து: 'I Am and I Will'
பிப்ரவரி 3, 2020 - பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினம்
Download this article as PDF Format