TNPSC Current Affairs January 30-31, 2020 - Download as PDF

Daily Current Affairs January 30-31, 2020

TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 30-31, 2020

இந்திய நிகழ்வுகள்

அபிலாஷை மாவட்டங்களின் உருமாற்ற திட்டப்பட்டியல் (ADP)- டிசம்பர் 2019
  • ஜனவரி 29, 2020 அன்று, நிதி ஆயோக் வெளியிட்ட டிசம்பர் மாதத்திற்கான நாட்டின் அபிலாஷை (Aspirational Districts) மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டது.
  • இந்த பட்டியலில் உத்திரப்பிரதேசத்தின் சந்தலி மாவட்டம் முதலிடம் பிடித்தது.
  • முதல் 5 இடங்கள் பிடித்த மாவட்டங்கள் விவரம்:
    1. சந்தலி மாவட்டம் (உத்திரப்பிரதேசம்)
    2. போலங்கீர் மாவட்டம் (ஒடிசா)
    3. ஒய்.எஸ்.ஆர்/கடப்பா மாவட்டம் (ஆந்திரா)
    4. சாஹிபஞ்ச் மாவட்டம் (ஜார்கண்ட்)
    5. ஹைலாக்கண்டி மாவட்டம் (அசாம்)
  • ஏழை சமூக-பொருளாதார குறிகாட்டிகளால் (Poor Socio-Economic Indicators) பாதிக்கப்பட்டுள்ள இந்த மாவட்டங்கள் அபிலாஷை மாவட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 
  • மத்திய அரசினால் 2018 ஜனவரியில், ‘அபிலாஷை மாவட்டங்களின் உருமாற்ற திட்டம் (ADP) தொடங்கப்பட்டது.
  • ADP: Transformation of Aspirational Districts’ Programme
இந்தியாவில் ஆப்பிரிக்க சிறுத்தை: உச்ச நீதிமன்றம் அனுமதி 
  • நமீபியாவிலிருந்து ஆப்பிரிக்க சிறுத்தை (African Cheetahs) விலங்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்திய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதித்தது. 
  • பொதுவாக இந்திய சீட்டா என்று அழைக்கப்படும் ஆசிய சிறுத்தைகள் கிட்டத்தட்ட அழிந்துவிட்ட நிலையில், தேசிய புலி பாதுகாப்பு ஆணையம் (NTCA) ஒரு மனுவை தாக்கல் செய்தது, இது ஆப்பிரிக்க சிறுத்தைகளை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்த அனுமதி கோரியது.
ஈரநிலங்கள் தொடர்பான ‘ராம்சார் தள' பட்டியலில் '10 ஈரநிலங்கள் சேர்ப்பு'
  • இந்தியாவில் ஜனவரி 28 அன்று, ‘ராம்சார் தளம்’ (Ramsar sites) என்ற ஈரநிலங்கள் தொடர்பான பட்டியலில் புதிதாக 10 ஈரநிலங்கள் சேர்க்கப்பட்டன. தற்போது வரை நாட்டில் 37 ராம்சார் தளங்கள் உள்ளன.
  • ராம்சார் மாநாடு என்று அழைக்கப்படும் ஈரநிலங்களின் மாநாடு என்பது, 1971-ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் நிறுவப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் ஒப்பந்தமாகும், இது 1975 இல் நடைமுறைக்கு வந்தது.
2019 ஆக்ஸ்போர்டு இந்தி வார்த்தை ‘சம்விதான்’
  • ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் 2019-ஆம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு இந்தி (Oxford Hindi Word of 2019) வார்த்தையாக ‘சம்விதான்’ (Samvidhaan) என்ற இந்தி வார்த்தையைத் தேர்ந்தெடுத்துள்ளது. 
  • சம்விதான் என்றால் 'அரசியலமைப்பு' என்று பொருள் படும். 
  • சம்விதான் என்பது, ஒரு அமைப்பு நிர்வகிக்கப்பட வேண்டிய அடிப்படைக் கொள்கைகளின் அமைப்பையும் குறிக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 'கூட்டு பிராந்திய மையம்' திறப்பு 
  • அந்தமான் & நிக்கோபார் ஒன்றிய பிரதேசத்தின் போர்ட் பிளேர் நகரில், மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் பெறுவதற்கான கூட்டு பிராந்திய மையத்தை (Composite Regional Centre) மத்திய சமூக நீதி அமைச்சர் தாவர் சந்த் கெஹ்லோட் சமீபத்தில் திறந்து வைத்தார்.
சர்தார் படேல் அதிகாரமளித்தல் மற்றும் வாழ்வாதார மையம் (குஜராத்)
  • ‘சர்தார் வல்லபாய் படேல் அதிகாரமளித்தல் மற்றும் வாழ்வாதார மையம்’ என பெயரிடப்பட்ட பழங்குடியினருக்கு பயிற்சி அளிக்கும் திறன் மேம்பாட்டு மையம் குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது.
  • குஜராத்தின் கெவாடியா நகரில் உள்ள ஒற்றுமை சிலைக்கு அருகே, (Sardar Vallabhbhai Patel Centre for Empowerment and Livelihoods) இந்த மையத்திற்கான அடிக்கல்லை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜனவரி 29 அன்று நாட்டினார்.
சட்டரீதியான கருக்கலைப்புக்கான உயர் வரம்பு - 24 வாரங்கள்
  • சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த கர்ப்ப மருத்துவ நிறுத்தம் (திருத்த) மசோதா 2020-இன்படி , சட்டரீதியான கருக்கலைப்புக்கான உயர் வரம்பு 24 வாரங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இதற்காக கர்ப்ப மருத்துவ நிறுத்தச் சட்டம், 1971 திருத்தப்பட்டது. Medical Termination of Pregnancy (Amendment) Bill 2020.
அமேசான் நிறுவனத்தின் பிக்-அப் கியோஸ்க் - சீல்டா (கொல்கத்தா) 
  • அமேசான் இந்தியா சமீபத்தில் கிழக்கு ரயில்வேயுடன் கூட்டு சேர்ந்து, சீல்டா (கொல்கத்தா) ரயில் நிலையத்தில் பிக்-அப் கியோஸ்க் (pick-up kiosk) அமைந்துள்ளது. 
  • மும்பைக்குப் பிறகு, அமேசான் இந்தியா தனியார் இ-காமர்ஸ் நிறுவனம் தனது இரண்டாவது பிக் அப் கியோஸ்கை சீல்டா ரயில் நிலையத்தில் அமைத்துள்ளது.
விருதுகள்
சிறந்த அலங்கார அணிவகுப்பு ஊர்தி விருதுகள் 2020
  • 2020 குடியரசு தின விழாவில் சிறந்த அலங்கார அணிவகுப்பு ஊர்திக்கான (Best Tableaux awards 2020) முதல் பரிசை அசாம் மாநிலம் வென்றுள்ளது.
  • “தனித்துவமான கைவினைத்திறன் மற்றும் கலாச்சாரத்தின் நிலம்” (Land of Unique Craftsmanship and Culture) என்ற கருப்பொருளுடன் அசாமின் அலங்கார ஊர்தி இயக்கப்பட்டது.
  • ஒடிசா மற்றும் உத்தரபிரதேசத்தின் அலங்கார ஊர்திகள் கூட்டாக இரண்டாவது பரிசினை வென்றன. 
  • தேசிய பேரிடர் நிவாரணப் படை மற்றும் ஜல் சக்தி மிஷன் அமைச்சகத்தின் அலங்கார ஊர்திகள் சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
நியமனங்கள் 
தாய்லாந்தின் ஐ.நா. குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் - கீதா சபர்வால்
  • இந்திய வம்சாவளி கீதா சபர்வால் (Gita Sabharwal) சமீபத்தில் தாய்லாந்தில் உள்ள ஐக்கிய நாடுகளின் குடியுரிமை ஒருங்கிணைப்பாளராக (UN Resident Coordinator) நியமிக்கப்பட்டார்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் - தரஞ்சித் சிங் சந்து
  • அமெரிக்காவுக்கான இந்திய தூதராக தரஞ்சித் சிங் சந்து (Taranjit Singh Sandhu) நியமிக்கப்பட்டார்.
வெளியுறவுத்துறை செயலாளர் - ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா
  • மூத்த இராஜதந்திரி ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா (Harsh Vardhan Shringla) இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக ஜனவரி 9 அன்று பொறுப்பேற்றார்.
மாநாடுகள்
உலக நிலையான அபிவிருத்தி உச்சி மாநாடு 2020
  • உலக நிலையான அபிவிருத்தி உச்சி மாநாடு (WSDS) 2020, புதுடெல்லியில் உள்ள இந்தியா வாழ்விட மையத்தில், ஜனவரி 29 முதல் 31 வரை நடைபெற்றது.
  • எரிசக்தி மற்றும் வள நிறுவனம் (TERI) ஏற்பாடு செய்த இந்த மாநாடு, 'Towards 2030 Goals: Making the Decade Count' என்ற மையக்கருத்தில் நடைபெற்றது. 
  • WSDS: World Sustainable Development Summit, TERI: The Energy and Resources Institute.
சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா 2020 (பங்களாதேஷ்)
  • சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா (2020 International Children’s Film festival) சமீபத்தில் பங்களாதேஷ் நாட்டின் டாக்கா நகரில் ‘உலகத்தின் கீழ்’ (Under The World) என்ற கருப்பொருளுடன் ஜனவரி 24 முதல் 31 வரை நடைபெற்றது. 
சா்வதேச உருளைக்கிழங்கு மாநாடு 2020
  • 2020 சா்வதேச உருளைக்கிழங்கு மாநாடு (3rd Global Potato Conclave), குஜராத் மாநிலம், காந்திநகரில் ஜனவரி 28 அன்று பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். ஜனவரி 28 முதல் 30 வரை மாநாடு நடைபெறுகிறது. 
  • இந்திய உருளைக்கிழங்கு சங்கம், டெல்லியில் விவசாய ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில், மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்தின.
பாரத் பர்வ் 2020
  • 'பாரத் பர்வ் 2020’ (Bharat Parv 2020( என்ற வருடாந்திர நிகழ்வு ஜனவரி 26 முதல் 31 வரை டெல்லி செங்கோட்டையில் ‘ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்’ (Ek Bharat Shreshtha Bharat) என்ற மையக்கருத்தில் நடைபெற்றது.
அறிவியல் தொழில்நுட்பம்
புவன் பஞ்சாயத்து வலை தளம் 3.0 
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) உருவாக்கிய செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படும் புவன் பஞ்சாயத்து வலை தளத்தின் 3.0 (Bhuvan Panchayat 3.0) என்று புதிய பதிப்பை மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் சமீபத்தில் வெளியிட்டார்.
  • புவன் பஞ்சாயத்து வலை தளத்திட்டம் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கிராம பஞ்சாயத்துகளை (Gram Panchayats) வளர்ப்பதற்கான செயல்முறைக்கு உதவ புவி-இடம் சார்ந்த சேவைகளை (Geo-Spatial Services) வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
OPPO- IIT- ஐதராபாத் ஒப்பந்தம் 
  • OPPO சர்வதேச ஸ்மார்ட்போன் நிறுவனம் சமீபத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் ஒத்துழைப்பதற்காக IIT- ஐதராபாத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
விளையாட்டு நிகழ்வுகள்
பில்லியர்ட்ஸ் 

33 தேசிய சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற 'பங்கஜ் அத்வானி'
  • உலகத் தரம் வாய்ந்த பில்லியர்ட்ஸ் வீரரும், 23-முறை உலக சாம்பியனுமான பங்கஜ் அத்வானி சமீபத்தில் சீனியர் தேசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் பட்டத்தை அண்மையில் வென்றார். இதன் மூலம் தனது 33-வது தேசிய சாம்பியன்ஷிப் பட்டங்களை  வென்றுள்ளார்.
முக்கிய நபர்கள் 

சமூக சேவகர் துஷார் காஞ்/சிலால்
  • 85 வயதான மூத்த சமூக சேவையாளரும் கல்வியாளருமான துஷார் காஞ்சிலால் (Tushar Kanjilal) சமீபத்தில் கொல்கத்தாவில் காலமானார
முக்கிய தினங்கள் 
ஜனவரி 30 - தியாகிகள் தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ஆம் தேதி, மகாத்மா காந்தியின் நினைவு தினத்தினை முன்னிட்டு நாடு முழுவதும் ‘தியாகிகள் தினம்' (Martyrs Day) அனுசரிக்கப்படுகிறது.
  • மகாத்மா காந்தியின் 73-ஆவது நினைவு தினம் (Mahatma Gandhi, 73rd death anniversary 30 January 2020) நாடு முழுவதும் ஜனவரி 30 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
Download this article as PDF Format
Previous Post Next Post