Daily Current Affairs February 22-23, 2020
TNPSC Current Affairs February 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 22-23, 2020
TNPSC Current Affairs 22-23 February 2020 - Download as PDF |
சர்வேதேச நிகழ்வுகள்
அஹ்லு சுன்னா வால்ஜாமா - சூஃபி துணை ராணுவக் குழு
- அஹ்லு சுன்னா வால்ஜாமா (Ahlu Sunna Waljama) சோமாலியா நாட்டில் உள்ள ஒரு சூஃபி துணை ராணுவக் குழு (Paramilitary Sufi Group) ஆகும். சோமாலியா உள்நாட்டுப் போரில், அல்-ஷபாப் (Al-Shabaab) என்ற தீவிர இஸ்லாமிய குழுவை எதிர்த்துப் போரிடுகிறது.
- சூஃபிசம் (Sufism) என்பது இஸ்லாமிய ஆன்மீகவாதம் ஆகும்.
சோமாலியா பிரேசில் நாட்டின் 'ஆபரேஷன் கார் வாஷ்'
- ஆபரேஷன் கார் வாஷ் (Operation Car Wash) என்பது பிரேசில் நாட்டில் ஒரு குற்றவியல் மற்றும் ஊழல் ஊழல் விசாரணையின் பெயர் ஆகும்.
இலங்கையில் ‘பர்தா’ அணிய தடைக்கு பரிந்துரை
- இலங்கையில் ‘பர்தா’ அணிய உடனடி தடை விதிக்க வேண்டும் என்று, மாலித் ஜெயதிலகா தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற குழு சிபாரிசு செய்துள்ளது.
நியண்டர்தால் மனிதர்களின் எச்சங்கள் உள்ள 'ஷானிதர் குகை'
- ஷானிதர் குகை (Shanidar Cave) ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் ஜாக்ரோஸ் மலைகளில் அமைந்துள்ளது. 1950-களில் ஷானிதர் குகை தோண்டப்பட்டது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ரால்ப் சோலெக்கி பத்து நியண்டர்தால் கால மனிதர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
- நியண்டர்தால்கள் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை யூரேசியாவில் வாழ்ந்த தொன்மையான அழிந்துபோன மனிதர்களின் கிளையினங்கள் ஆகும்.
காங்கோவில் அதிகமாக கிடைக்கும் 'கோபால்ட்'
- செல்போன்கள் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதான மின்சார வாகனங்களில் பயன்படும் கோபால்ட் என்ற தனிமம் சுமார் 60% காங்கோ ஜனநாயக குடியரசிலிருந்து (DRC) பெறப்படுகிறது. காங்கோவின் அரசியல் சூழல் காரணமாக அதன் தொடர்ச்சியான கிடைக்கும் தன்மைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- DRC:Democratic Republic of Congo
இந்திய நிகழ்வுகள்
உலகின் மிகப்பெரிய பாமாயில் இறக்குமதி செய்யும் நாடு 'இந்தியா'
- 2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, பாமாயிலை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா ஆகும். 2019 அக்டோபர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த சந்தைப்படுத்தல் ஆண்டில் இந்தியா மொத்தம் 9.4 மில்லியன் டன் பாமாயிலை இறக்குமதி செய்தது. இதில் 2.72 மில்லியன் டன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் அடங்கும்.
- இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெயில் மூன்றில் இரண்டு பங்கை பாமாயில் வகிக்கிறது.
- உலகின் முதல் முதலிரண்டு உற்பத்தியாளர்களான இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து பாமாயிலை இந்தியா வாங்குகிறது.
பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதா 2020/ அர்ப்பணிப்பு நிதி - ரூ. 50,000 கோடி
- பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதா 2020-இன் கீழ், இயல்புநிலை பூச்சிக்கொல்லி நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதங்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் பங்களிப்புகளில் இருந்து ரூ. 50,000 கோடி கார்பஸ் அளவு அர்ப்பணிப்பு நிதி திரட்டப்பட்டுள்ளது.
இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை - 04
- இந்தியாவில், அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) உட்பட தொலைத் தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை நான்காக குறைந்துள்ளது. 2016-ல் இந்த எண்ணிக்கை 9-ஆக இருந்தது.
- இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அண்மையில் தெரிவித்துள்ள தகவல்கள் விவரம்:
- மொபைல் சேவைகளின் நுகர்வு மாதத்திற்கு ஒரு பயனருக்கு 366 நிமிடங்களிலிருந்து 691 ஆக (88%) உயர்ந்துள்ளது.
- 2016 மற்றும் 2019-க்கு இடையில் தரவு நுகர்வு 0.5 ஜிகாபைட்டிலிருந்து கிட்டத்தட்ட 11 ஜிகாபைட் அளவுக்கு (GB) அதிகரித்துள்ளது.
7-வது பொருளாதார கணக்கெடுப்பு - சில தகவல்கள்
- தற்போது, இந்தியாவில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு செல்போன் செயலி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
- 7-வது பொருளாதார கணக்கெடுப்பை மத்திய புள்ளிவிவர அமைச்சகம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI), பொருளாதார புள்ளிவிவர அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.
- வணிகப் பதிவேடு: வளரும் நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நடைமுறைகளின்படி UNSD பரிந்துரைகளுக்கு ஏற்ப நாடு தழுவிய வணிகப் பதிவேடு (Business Register) கணக்கெடுப்பும் இதில் மேற்கொள்ளப்படுகிறது.
- UNSD: United Nations Statistics Division
- MoSPI: Ministry of Statistics and Programme Implementation
தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) - சிறு தகவல்
- தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் (NPR) படி, ஒரு நபர் “வழக்கமான குடியிருப்பாளர்”, என்ற வரையறை (usual residents) , உள்ளூர் பகுதியில் கடந்த 6 மாதங்களாக வசித்து வருகிறார் என்பதை கொண்டு அளவிடப்படுகிறது.
- தேசிய மக்கள்தொகை பதிவு (NPR) என்பது நாட்டின் "வழக்கமான குடியிருப்பாளர்கள்" பட்டியலாகும், இது கடந்த ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலமாக ஒரு உள்ளூர் பகுதியில் வசித்த நபர் அல்லது அடுத்த ஆறு மதத்திற்கு அந்த பகுதியில் வசிக்க விரும்பும் நபர் என வரையறுக்கப்படுகிறது.
- இது கிராமத்தில் இருந்து மாவட்டத்திற்கு மாநிலத்தில் இருந்தது தேசிய அளவில் இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரின் பயோமெட்ரிக் மற்றும் புள்ளிவிவர விவரங்களைக் கொண்ட ஒரு பதிவேடு ஆகும்.
- NPR: National Population Register.
டாக்டர் கே விஜய் ராகவன் தொழில்நுட்பக் குழு
- மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான (PSUs) தொழில்நுட்ப அமலாக்கம் (Technology Implementation) பற்றி ஆலோசனை வழங்க, டாக்டர் கே விஜய் ராகவன் (Dr K Vijay Raghavan) தலைமையில் 12 உறுப்பினர்களைக் கொண்ட “தொழில்நுட்பக் குழு” (Technology Group) அமைக்கப்பட்டுள்ளது.
- டாக்டர் கே விஜய் ராகவன் தற்போது பிரதமர் மோடியின் முதன்மை அறிவியல் ஆலோசகராக (Principal Scientific Advisor to PM) உள்ளார்.
பாதுகாப்பு/விண்வெளி
இராணுவ தலைமையகம்: டெல்லியில் அடிக்கல் விழா
- டெல்லியில் இராணுவ தலைமையகம் (தள சேனா பவன்) கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பிப்ரவரி 22-அன்று நடைபெற்றது.
- 39 ஏக்கா் பரப்பளவில் சூரியன் உதயமாகும் தோற்றத்தில் 7 மாடிகளுடன் ராணுவத்துக்கான புதிய தலைமையகம் கட்டப்படவுள்ளது.
- பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அவர்களால் புதிய ராணுவ தலைமையகதிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
நியமனங்கள்
ஆப்கானிஸ்தான் அதிபர் 'அஷ்ரப் கனி'
- சமீபத்தில், ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில், அதிபராக அஷ்ரப் கனி (Ashraf Ghani) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அஷ்ரப் கானி கட்சி சார்பற்ற ஒரு சுயேச்சை அரசியல்வாதி ஆவார்.
- 2020 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, கனி 50.64% வாக்குகளுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதமரின் ஆலோசகர்களாக பாஸ்கர் குல்பெ, அமர்ஜீத் சின்கா - நியமனம்
- பிரதமர் மோடியின் ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற IAS அதிகாரிகள் பாஸ்கர் குல்பெ (Bhaskar Khulbe), அமர்ஜீத் சின்கா (Amarjeet Sinha) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநாடுகள்
சர்வதேச நீதித்துறை மாநாடு 2020 (டெல்லி)
- சர்வதேச நீதித்துறை மாநாடு 2020 (International Judicial Conference 2020), டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. பிப்ரவரி 22-அன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று தொடங்கிவைத்தார்.
தேசிய வாழை கண்காட்சி 2020
- தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் திருச்சியில் தேசிய வாழை கண்காட்சி வாழை கண்காட்சி பிப்ரவரி 23-அன்று தொடங்கியுள்ளது.
வணிகம்/பொருளாதார நிகழ்வுகள்
GST வரிவிதிப்பு - 2020 பிப்ரவரி - சில தகவல்கள்
- 2020 பிப்ரவரி மாத நிலவரப்படி எரிபொருள், கட்டுமானம், ஆல்கஹால் (Fuel, Construction, Alcohol) மூன்று பொருட்களும் GST வரிவிதிப்பின் கீழ் வரவில்லை.
- திரைப்பட டிக்கெட்டுகளில் ரூ.100 வரையிலான GST வரிவிகிதம் 18% ஆகும், ரூ.100-க்கு மேல் உள்ள டிக்கெட்டுகளுக்கு 28% GST ஆகும்.
- கட்டுமானத்தில் உள்ள சொத்துக்களை முன்பதிவு செய்வதற்கான விகிதம் 12% ஆகும்.
- சில தொழில்கள் மற்றும் தயாரிப்புகள் அரசாங்கத்தால் விலக்கு அளிக்கப்பட்டன மற்றும் பால் பொருட்கள், அரைக்கும் தொழில்களின் தயாரிப்புகள், புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள், இறைச்சி பொருட்கள் மற்றும் பிற மளிகை பொருட்கள் மற்றும் தேவைகள் போன்றவை GST-யின் கீழ் வரவில்லை.
- ஈ-வே மசோதா 2018: ஈ-வே மசோதா என்பது ஒரு வழித்தடத்திற்கு ஒத்த எந்தவொரு பொருளையும் அனுப்ப ஒரு மின்னணு அனுமதி.
- 2018 ஜூன் 1 முதல் மாநிலங்களுக்கு இடையேயான பொருட்களின் போக்குவரத்துக்கு 'E-Way' ரசிது கட்டாயமாக்கப்பட்டது.
- ஒவ்வொரு மாநிலங்களுக்கிடையில் 10 கிலோமீட்டருக்கு அப்பால் செல்லும் பொருட்களுக்கான வரம்பு ரூ, 50,000-மாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக வருமான வரி விகித அடுக்கு - 30%
- 2020-21 வரவு செலவுத் திட்டத்திற்குப் பிறகு இந்தியாவில் அதிக வருமான வரி விகித அடுக்கு (Highest Income tax Rate Slab), 30% ஆகும். 15,00,000 க்கு மேல் உள்ள வருமானத்திற்கு அதிக வருமான வரியாக 30% வசூலிக்கப்படுகிறது.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி - 4.9%: NCAER கணிப்பு
- இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 2020-21 நடப்பு நிதியாண்டில் 4.9 சதவீதமாக இருக்கும் என பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி தேசிய கவுன்சில் (NCAER) தெரிவித்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டிருந்தது.
- NCAER: National Council of Applied Economic Research.
உலக வங்கியால் வழங்கப்படும் 'தொற்று பத்திரங்கள்'
- "தொற்று பத்திரங்கள்" (Pandemic Bonds) உலக வங்கியால் (World Bank) வழங்கப்படுகின்றன. சியரா லியோன், கினியா மற்றும் லைபீரியாவில் 2013 முதல் 2016 எபோலா நோய் பரவலுக்கு பதிலளிக்கும் விதமாக 2017-ஆம் ஆண்டில் உலக வங்கியால் அதன் தொற்று அவசர நிதி குடையின் கீழ் தொற்று பத்திரங்கள் தொடங்கப்பட்டன.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் மணிமண்டபம் திறப்பு
- தமிழக அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தினத்தந்தி அதிபர் மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் அவர்களின் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மணி மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 22-அன்று திறந்து வைத்தார்.
கடலூர், நாகை பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணை ரத்து
- காவிரி ஆற்றுப் படுகை மண்டலத்திலுள்ள வேளாண் நிலங்களைப் பாதுகாப்பதற்காக சட்ட மசோதா பேரவையில் பிப்ரவரி 20-அன்று நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால் இந்தச் சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த பகுதியில் பெட்ரோலியம் கெமிக்கல் மற்றும் பெட்ரோலிய கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த அரசாணைபடி 45 கிராமங்களில் சுமார் 57,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு பாலிமர் தொழிற்பூங்கா (பொன்னேரி)
- தமிழ்நாடு பாலிமர் தொழிற்பூங்கா, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.217 கோடியில் டிட்கோ மற்றும் சிப்காட் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் பிப்ரவரி 22-அன்று அடிக்கல் நாட்டினார்.
- தமிழக அரசு மற்றும் தேசிய தொழில்துறை வழித்தடம் மேம்பாடு மற்றும் நடைமுறை அறக்கட்டளை இடையே சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடத்துக்கான மாநில அளவிலான ஆதரவு ஒப்பந்தமும், வழிகாட்டி நிறுவனம் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த டெவலப்பர்கள் பூங்கா இடையே ரூ.800 கோடி முதலீட்டில் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பிப்ரவரி 22-அன்று கையெழுத்தானது.
விளையாட்டு நிகழ்வுகள்
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் 2020
- முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளை (KIUG 2020) பிரதமா் நரேந்திர மோடி பிப்ரவரி 22-அன்று, ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் தொடங்கி வைத்தாா்.
- இந்த போட்டிகள் புவனேஸ்வர் நகரில் KIIT பல்கலைக்கழகத்திலும், கட்டாக் நகரில் ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கிலும், பிப்ரவரி 22 முதல் மார்ச் 1 வரை நடைபெறுகின்றன.
- KIUG 2020: Khelo India University Games 2020.
துபாய் ஓபன் டென்னிஸ் 2020: 'சிமோனா ஹலேப்' சாம்பியன்
- துபாய் நடந்த 2020 துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவில், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹலேப் (Simona Halep) சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆசிய மல்யுத்தம் 2020 (டெல்லி)
- ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பதக்கம் வென்ற வீரர்/வீராங்கனைகள் விவரம்:
- ஆண்கள் பிரிவு
- ரவி தாஹியா (57 கிலோ) - தங்கப்பதக்கம்
- பஜ்ரங் பூனியா (65 கிலோ) - வெள்ளிப்பதக்கம்
- சத்யவாட் காடியன் (97 கிலோ) - வெள்ளிப்பதக்கம்
- கவுரவ் பாலியன் (79 கிலோ) - வெள்ளிப்பதக்கம்
- பெண்கள் பிரிவு
- சாக்ஷி மாலிக் (65 கிலோ) - வெள்ளிப்பதக்கம்
- வினேஷ் போகட் (53 கிலோ) - வெண்கலப் பதக்கம்
- அன்ஷு மாலிக் (57 கிலோ) - வெண்கலப் பதக்கம்
ஹங்கேரி ஓபன் டேபிள் டென்னிஸ் 2020
- ஹங்கேரி ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சரத் கமல்-மனிகா பத்ரா இணை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் கௌரவ குடிமகன் அந்தஸ்து பெற்ற 'டேரன் சமி'
- பாகிஸ்தானில் மீண்டும் சா்வதேச கிரிக்கெட் தழைக்க உதவியதாக மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி'க்கு (Darren Sammy) பாகிஸ்தான் நாட்டின் கௌரவ குடிமகன் அந்தஸ்தை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தாயின் உயரிய சிவிலியன் விருதான நிஷான் இ ஹைதா் விருதும் (Nishan-e-Pakistan) சமிக்கு வழங்கப்படுகிறது.
முக்கிய தினங்கள்
- 2020 கருப்பொருள் (Theme): "சமூக நீதியை அடைய ஏற்றத்தாழ்வுகள் இடைவெளியை மூடுவது" (Closing the Inequalities Gap to Achieve Social Justice).
பிப்ரவரி 24 - பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்
- தமிழ்நாடு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் பிப்ரவரி 14-அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24, தமிழ்நாடு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 19-அன்று அறிவித்துள்ளார்.
Download this article as PDF Format