TNPSC Current Affairs 18-19 February 2020 - Download as PDF

Daily Current Affairs February 18-19, 2020

TNPSC Current Affairs February 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 18-19, 2020
 இந்திய நிகழ்வுகள்
தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் (NMHC)
  • தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் (NMHC) குஜராத் (Gujrat) மாநிலத்தில் லோத்தல் (Lothal) என்ற இடத்தில் போர்ச்சுகல் நாட்டில் உதவியுடன் அமைக்கப்பட உள்ளது. லோத்தல், சிந்துவெளி நாகரிகத்தின் (ஹரப்பன் நாகரிகம்) துறைமுக நகரங்களில் ஒன்றாகும்
  • NMHC: National Maritime Heritage Complex 
அசாம் சட்டப்பேரவையில் பூா்வகுடிமக்களுக்கு 67% இடஒதுக்கீடு
  • நீதிபதி விப்லப் குமாா் சா்மா குழு: அசாம் மாநில சட்டப்பேரவையில் அந்த மாநில பூா்வகுடிமக்களுக்கு 67 சதவீத இடஒதுக்கீடு (மூன்றில் இரு பங்கு) அளிக்க வேண்டுமென்று ஓய்வு பெற்ற நீதிபதி விப்லப் குமாா் சா்மா தலைமையிலான 13 போ் அடங்கிய உயா்நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது. 
  • அசாம் ஒப்பந்தம் 1985: 1985-ஆம் ஆண்டு இந்தியா அரசு மற்றும் அசாம் மாணவா்கள் சங்கம் இடையே ‘அசாம் ஒப்பந்தம்’ கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி, 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு அஸ்ஸாமில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்றுவதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது.
  • இப்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்குமுன் குடியேறியவா்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் உள்ளது. 
63 அடி உயர 'தீனதயாள் உபாத்யாயா' சிலை-திறப்பு 
  • உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், ஸ்ரீஜகத்குரு விஸ்வரதயா குருகுலத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
  • காசி மகா கால் எக்ஸ்பிரஸ்: IRCTC-யின் 3-வது தனியார் ரெயிலான (Third Corporate Passenger Train) ‘காசி மகா கால் எக்ஸ்பிரஸ்‘ ரெயிலை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். காசி மகா கால் எக்ஸ்பிரஸ் (Kashi Mahakal Express), மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களின் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைக்கிறது.
  • 63 அடி உயர சிலை: பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நினைவு மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர சிலையை திறந்து வைத்தார். 
இந்தியாவின் முதல் இடை-நகர மின்சார பேருந்து சேவை
  • இந்தியாவின் முதலாவது நகரங்களுக்கு இடையேயான மின்சார பேருந்து சேவை (India’s first Inter-City Electric Bus Service) 
  • மும்பை மற்றும் புனே இடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தொடங்கிவைத்தார்.
பாதுகாப்பு/விண்வெளி 
இந்தியாவில் ஆராய்ச்சி கப்பல்களை உருவாக்கும் 'டைட்டாகர் வேகன்ஸ் லிட்.'
  • இந்தியாவில் ஆராய்ச்சி கப்பல்களை உருவாக்கி வழங்கும் முதல் மற்றும் ஒரே தனியார் நிறுவனம் டைட்டாகர் வேகன்ஸ் லிமிடெட் ஆகும். 
  • இந்திய தனியார் நிறுவனமான டைட்டாகர் வேகன்ஸ் லிமிடெட் (Titagarh Wagons Ltd) சமீபத்தில், (Sagar Anveshika) ‘சாகர் அன்வேஷிகா என்ற இரண்டாவது கடலோர ஆராய்ச்சி கப்பலை சென்னையைச் சேர்ந்த தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்திற்காக (NIOT) தயாரித்து வழங்கியுள்ளது.
  • ‘சாகர் தாரா’ (Sagar Tara) என்ற முதல் ஆய்வுக் கப்பல் 2019 ஆகஸ்டு மாதத்தில் இந்த நிறுவனத்தால் கட்டி வழங்கப்பட்டது. NIOT: National Institute of Ocean Technology.
முப்படைகளையும் ஒருங்கிணைத்து புதிய இராணுவ நிலைகள் 
  • புதிய முப்படை இராணுவ நிலைகள்: நாட்டின் மேற்கு, வடக்கு எல்லையில் பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ளும் வகையில், வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் 2 முதல் 5 வரையிலான முப்படைகளையும் ஒருங்கிணைத்து புதிய ராணுவ நிலைகள் ஏற்படுத்தப்படும். 
  • தீபகற்ப ராணுவ நிலை: கடற்படையின் கிழக்கு, மேற்கு பிராந்தியப் பிரிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ‘தீபகற்ப ராணுவ நிலை’ ஏற்படுத்தப்பட உள்ளது.
  • இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ளும் பொறுப்பை ஏற்கும். 
  • வான் பாதுகாப்பு ராணுவ நிலை: வான் பாதுகாப்பு ராணுவ நிலையும் அடுத்த ஆண்டுக்குள் தொடங்கப்படும். 
  • இது, விமானப் படையின் தலைமையில் அமையும். நீண்ட தொலைவுக்கு பாயும் ஏவுகணைகள் மற்றும் விமானப் படை தளவாடங்கள் இந்தப் பிரிவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும். 
  • ஜம்மு-காஷ்மீர் ராணுவ நிலை: ஜம்மு-காஷ்மீருக்கென பிரத்யேக ராணுவ நிலையை ஏற்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 
  • முப்படைகளையும் ஒருங்கிணைத்து ராணுவ நிலைகள் ஏற்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
  • மேற்கண்ட தகவல்களை என்று முப்படை தளபதி விபின் ராவத் பிப்ரவரி 17-அன்று தெரிவித்தாா்.
இராணுவத்தில் பெண்களுக்கும் உயர் பதவி - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
  • இந்தியா இராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி வழங்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.
விருதுகள் 
உத்தரபிரதேச அரசின் 'யஷ் பாரதி' விருதுப்பெயர் மாற்றம் 
  • யஷ் பாரதி விருது 1994-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உத்தரபிரதேச மாநில அரசின் மிக உயர்ந்த விருது ஆகும். யஷ் பாரதி விருதுக்கு பதிலாக மாநில கலாச்சார விருது (State Cultural Award) என்ற பெயரில் இந்த வழங்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
நியமனங்கள் 
ஜம்மு-காஷ்மீர் தொகுதி மறு வரையறை ஆணைய உறுப்பினர் - சுஷீல் சந்திரா
  • ஜம்மு-காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தின் தொகுதி மறு வரையறை ஆணையத்தின் உறுப்பினராக தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா அவர்களை தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா நியமித்துள்ளாா். 
  • ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டம் 2019: நாடாளுமன்றத்தில் ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டம், 2019 ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டது. மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, ஜம்மு-காஷ்மீரின் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 107-இல் இருந்து 114-ஆக அதிகரிக்கவுள்ளது. 
  • மக்களவைத் தொகுதிகளைப் பொருத்தவரை, ஜம்மு-காஷ்மீரில் 5 தொகுதிகளும், லடாக்கில் ஒரு தொகுதியும் இருக்கும். மேலும் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்யும் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொள்ளும் என்று மறுசீரமைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 24 தொகுதிகள் காலியாகவே இருக்கும்.
மாநாடுகள் 
முனிச் பாதுகாப்பு மாநாடு 2020 (ஜெர்மனி)
  • 56-வது முனிச் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference) 2020, ஜெர்மனியின் முனிச் நகரில், பிப்ரவரி 14 முதல் 16 வரை நடைபெற்றது. 
  • 'Westlessness' என்ற மையக்கருத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.
ஐ.நா. இடம்பெயரும் உயிரினங்கள் பாதுகாப்பு மாநாடு 2020 (COP 13)
  • COP 13 எனப்படும் 13-வது ஐ.நா. இடம்பெயரும் உயிரினங்கள் பாதுகாப்பு மாநாடு 2020, (UN Convention on the Conservation of Migratory Species), குஜராத் மாநிலத்தின் காந்திநகரில், பிப்ரவரி 15 முதல் 22 வரை, ‘Migratory species connect the planet and we welcome them home’ என்று மையக்கருத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டை பிரதமா் மோடி, டெல்லியில் இருந்து காணொளி மூலம் பிப்ரவரி 17-அன்று தொடங்கி வைத்தார். 
  • பிரதமர் தெரிவித்த குறிப்புக்கள் சில:
    • இந்தியா உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதத்துடன், உலகளாவிய பல்லுயிரியலில் 8 சதவீதம் பங்களிக்கிறது.
    • வனவிலங்குகள் மற்றும் அதன் வாழ்விடங்களைப் பாதுகாப்பது இந்தியாவின் கலாசாரத்தின் ஒரு பகுதியாகும். 
    • தற்போது, ​​இந்தியாவில் கிட்டத்தட்ட 2,970 புலிகள் உள்ளன. 2022 ஆம் ஆண்டின் உறுதிசெய்யப்பட்ட தேதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் இலக்கை இந்தியா அடைந்துள்ளது.
    • காலநிலை நடவடிக்கைகளில் பாரிஸ் ஒப்பந்த இலக்கின் அடிப்படையில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
வணிகம்/பொருளாதார நிகழ்வுகள்
இந்திய பொருளாதார வளா்ச்சி - 5.4 % (மூடிஸ் மதிப்பீடு)
  • 2020-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை சா்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் (Moody's Corporation), 5.4 சதவீதமாக குறைத்துள்ளது.
அலைக்கற்றை கட்டணம் - ரூ.10,000 கோடி செலுத்திய ஏர்டெல்  
  • அலைக்கற்றை கட்டணம உரிமம் மற்றும் அலைக்கற்றை கட்டணம் போன்றவற்றில் மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய கட்டண பாக்கியில் ரூ.10,000 கோடியை ஏர்டெல் நிறுவனம் அண்மையில் செலுத்தியது.
புத்தகம் வெளியீடு 
Backstage traces the trajectory of India's Public Policies, Economic Growth - Montek Singh Ahluwalia
  • திட்ட ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர், மாண்டேக் சிங் அலுவாலியா, ‘Backstage traces the trajectory of India's public policies, economic growth’ (இந்தியாவின் உயர் வளர்ச்சி ஆண்டுகளின் பின்னணியில் உள்ள கதை) என்ற பெயரிலான ஆங்கில புத்தகத்தை எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை மலர் - வெளியீடு 
  • தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, “முத்திரை பதித்த மூன்றாண்டு முதலிடமே அதற்கு சான்று” என்ற மூன்றாண்டு சாதனை மலர்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), முதலமைச்சர் சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரைகள், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகள், பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகள், காலப்பேழை புத்தகத்தினையும் ஆகியவற்றினை முதலமைச்சர் வெளியிட்டார்.
கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வு
  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை பிப்ரவரி 19அன்று 
  • தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைக்கிறாா். 
  • 6-ம் கட்ட அகழாய்வு பணி கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் தொடங்க உள்ளன
  • கீழடியில் 2015 முதல் 2019-ம் ஆண்டு வரை 5 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடந்தன. முதல் 3 கட்டங்களை மத்திய தொல்லியல் துறையும், 4 மற்றும் 5-வது கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறையும் மேற்கொண்டன. 
2020-21-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை
  • 2020-21-ஆம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சட்டப்பேரவையில் பிப்ரவரி 14-அன்று தாக்கல் செய்தாா். இதன் முக்கிய விவரங்கள்: 
  • எரிபொருள்கள் மீதான வரிகள், மதுபானங்கள், பத்திரப் பதிவு மற்றும் பதிவுத் துறை ஆகியவற்றின் வரிகளில் இருந்தே தமிழகத்துக்கு மிகையளவு வருவாய் கிடைத்து வருகிறது. அதன் அடிப்படையில், வரும் நிதியாண்டில் வருவாய் வரவுகள் ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 375.14 கோடியாக இருக்கும் எனவும், செலவினங்கள் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்து 992.78 கோடியாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வருவாய் பற்றாக்குறை ரூ.21 ஆயிரத்து 617.64 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் குறைவாக இருக்கும் என நிதித்துறை மதிப்பிட்டுள்ளது.
  • ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.3,041 கோடியில் இரண்டு கடல்நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளது.
  • சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைக்கப் பெற்ற அரிய பொருள்களைக் காட்சிப்படுத்த ஒரு புதிய 'அகழ் வைப்பகம்' ஏற்படுத்த ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் மெகா உணவுப் பூங்கா அமைக்க ஒப்புதல்.
  • 5 புதிய மாவட்டங்களுக்கு ரூ.550 கோடியில் புதிய கட்டடங்கள்.
  • அத்திக்கடவு-அவிநாசி, காவிரி குண்டாறு திட்டங்களுக்கு முறையே ரூ.500, ரூ.700 கோடி ஒதுக்கீடு.
  • மூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,315.21 கோடி நிதி.
  • ஆட்சேபணை புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு மாற்று வீட்டுமனை.
  • புதிதாக தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்படும்.
  • வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை பெற, உழவா் -அலுவலா் தொடா்புத் திட்டம் உருவாக்கப்படும்.
  • மின்னணு குடும்ப அட்டை வைத்திருப்போா் எங்கும் பொருள் வாங்கலாம்.
  • விழுப்புரம், செங்கல்பட்டு, நாகையில் மீன்பிடித் துறைமுகங்கள்.
  • குடிமராமத்து திட்டப்படி ரூ.500 கோடியில் 1,364 நீா்ப்பாசன பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ரூ.2,962 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.5,500 கோடி நிதி.
  • மகளிா் நலத் திட்டங்களுக்கு ரூ.78,796.12 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அண்ணாமலைப் பல்கலை மருத்துவக் கல்லூரி, கடலூா் அரசு மருத்துவக் கல்லூரியாக அமைக்கப்படும்.
  • சென்னை- பெங்களூா் தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ், திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியில் 21,966 ஏக்கா் பரப்பளவில் தொழில்முனைய மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 
  • சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம் ஆசிய வளா்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். 
  • சென்னை கோட்டூா்புரத்தில் அமைந்துள்ள சென்னை பொருளியல் கல்வி நிறுவனம், அதன் வளாகத்துக்கு அருகே ஒரு பொது நிதிநிலை ஆராய்ச்சி மையம் நிறுவிட அரசு ஆதரவு அளிக்கும்.
சென்னையின் 2-வது சர்வதேச விமான நிலையம், பரந்தூர்
  • சென்னையில் 2-வது சர்வதேச விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. பரந்தூர் விமான நிலையத்தை மெட்ரோ ரெயில், இலகு ரெயில் போக்குவரத்து மூலமாக இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள் 
கார்பந்தயம்

தேசிய சேலஞ்ச் கார்பந்தயம் 2020: 'அமென்டோலா' சாம்பியன்
  • சென்னை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஓடுதளத்தில் நடந்த எம்.ஆர்.எப். தேசிய சேலஞ்ச் கார்பந்தயத்தில் பெல்ஜியம் வீரர் அமென்டோலா சாம்பியன் கோப்பையை வென்றார்.
செஸ்

கேன்ஸ் செஸ் 2020: கோனேரு ஹம்பி சாம்பியன் 
  • அமெரிக்காவில் நடைபெற்ற 2020 கேன்ஸ் கோப்பை செஸ் போட்டியில், இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றாா்.
கிரிக்கெட்

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை
  • 7-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 21-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், தாய்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
சர்வதேச தொடரில் பங்கேற்கும் முதல் பெண் 'மேட்ச் ரெப்ரி' - ஜி.எஸ். லட்சுமி
  • இந்தியாவின் ஜி.எஸ். லட்சுமி (G. S. Lakshmi) சர்வதேச தொடரில் முதல் பெண் 'மேட்ச் ரெப்ரி' என்ற பெருமை பெற உள்ளார். 
  • ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான 'டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 21ம் தேதி துவங்குகிறது. இந்த போட்டியின் 'மேட்ச் ரெப்ரி' பட்டியலில் இந்தியாவின் லட்சுமி இடம் பெற்றுள்ளார்.
டென்னிஸ்

நியூயார்க் ஓபன் டென்னிஸ் 2020
  • 2020 நியூயார்க் ஓபன் டென்னிஸ் போட்டியின், ஆண்கள் ஒற்றையா் பிரிவு இங்கிலாந்து வீரர் கைலே எட்மண்ட் (Kyle Edmund) வீரா் சாம்பியன் பட்டம் வென்றார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் 2020: கிகி பெர்டென்ஸ் சாம்பியன் 
  • ரஷியாவில் நடந்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் கோப்பையை வென்றார்.
தடகளம் 

டோக்கியோ ( Tokyo 2020) ஒலிம்பிக் போட்டிக்கு 'பாவனா ஜாட்' தகுதி
  • இராஜஸ்தானைச் சோ்ந்த இந்திய வீராங்கனை பாவனா ஜாட் (Bhawna Jat), 20 கி.மீ நடை ஓட்டத்தில், 2020 டோக்கியோ ( Tokyo 2020) ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றாா்.
ஸ்குவாஷ்

தேசிய சீனியா் ஸ்குவாஷ் 2020 (சென்னை)
  • சென்னை ISA அகாதெமியில் 77-ஆவது தேசிய சீனியா் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, சௌரவ் கோஷல் ஆகியோா் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினா்.
பாட்மிண்டன்

ஆசிய அணிகள் பாட்மிண்டன் 2020
  • இந்திய அணி வெண்கலம்: பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் நடைபெற்ற 2020 ஆசிய அணிகள் பாட்மிண்டன் போட்டி ஆண்கள் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 
கோல்ப் 

டாடா ஸ்டீல் PGTI கோல்ப் சாம்பியன்ஷிப்: உதயனி மானே சாம்பியன் 
  • புனேவைச் சேர்ந்த கோல்ப் விளையாட்டு வீரர் உதயனி மானே (Udyani Mane), சமீபத்தில் டாடா ஸ்டீல் PGTI பிளேயர்ஸ் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றார்.
முக்கிய தினங்கள் 
பிப்ரவரி 18 - ‘சிந்தனைச் சிற்பி’சிங்காரவேலர் பிறந்த நாள் (161-வது பிறந்த நாள்).
Download this article as PDF Format
Previous Post Next Post