TNPSC Current Affairs 16-17 February 2020 - Download as PDF

Daily Current Affairs February 16-17, 2020

TNPSC Current Affairs February 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 16-17, 2020
 இந்திய நிகழ்வுகள்
'பிரதான் மந்திரி வான் தன் யோஜனா’ திட்டம்
  • பிரதான் மந்திரி வன் தன் யோஜனா (PMVDY) பழங்குடியினர் விவகார அமைச்சகம் (Ministry of Tribal Affairs) அமைச்சகத்தின் முதன்மை திட்டம் ஆகும்.
  • மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம், TRIFED என்ற இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு மூலம், 2019-ஆம் ஆண்டில் ‘பிரதான் மந்திரி வான் தன் யோஜனா’ திட்டம் (PMVDY) அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இத்திட்டம், வன விளைபொருட்களைப் பயன்படுத்தி பழங்குடி மக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
  • PMVDY: Pradhan Mantri Van Dhan Yojana
  • TRIFED: Tribal Cooperative Marketing Development Federation of India.
பள்ளி சுகாதார மற்றும் ஆரோக்கிய தூதர் முயற்சி திட்டம்
  • ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) திட்டத்தின் கீழ், பள்ளி சுகாதார மற்றும் ஆரோக்கிய தூதர் முயற்சி திட்டம் (School Health and Wellness Ambassador initiative) அண்மையில் தொடங்கப்பட்டது.
  • மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு ஆசிரியர்கள் சுகாதார பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ‘சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய தூதர்’ (Health and wellness ambassador) என்று நியமிக்கப்படுவார்கள்.
  • இந்த திட்டம் ஆரம்பத்தில் 200 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் மற்றும் ஃபிட் இந்தியா இயக்கம் (Fit India movement), ஈட் ரைட் பிரச்சாரம் (Eat Right campaign), போஷன் அபியான் (Poshan Abhiyaan) உள்ளிட்ட பிற அரசு திட்டங்களுடன் இணைக்கப்படும்.
தங்கியிருக்கும் இடத்தில் வாக்குப்பதிவு: IIT சென்னை-தோ்தல் ஆணையம் ஆய்வு 
  • வாக்காளா்கள் தங்கள் சொந்தத் தொகுதிக்குச் செல்லாமல் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே வாக்களிப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக, சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் (IIT சென்னை) தோ்தல் ஆணையம் இணைந்துள்ளது. இந்த திட்டத்தின்படி, இரு வழி மின்னணு வாக்களிப்பு தொழில்நுட்பம் உருவாக்கப்படும்.
அனைத்து விமான/விமான நிலையங்களில் இ-சிகரெட்டை-தடை 
  • சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பணியகம் (BCAS) சமீபத்தில் அனைத்து விமான நிலையங்களிலும், விமானங்களிலும் இ-சிகரெட்டை (e-Cigarettes) தடைசெய்தது. 
  • இந்தியாவில் விமானப் பாதுகாப்பு கட்டுப்பாட்டாளரான சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (BCAS) சமீபத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் இ-சிகரெட்டுகள் (e-Cigarettes) மற்றும் ஒத்த தயாரிப்புகளை தடை செய்துள்ளதாக அறிவித்தது.
  • கடந்த ஆண்டு, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மின்-சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் இறக்குமதியை தடை செய்தது. மின்னணு நிகோடின் விநியோக முறையும் (ENDS) இதில் அடங்கும்.
  • BCAS: Bureau of Civil Aviation Security, ENDS: Electronic Nicotine Delivery System.
தேனீ வளர்ப்பிற்கு உதவும் 'அப்பியரி ஆன் வீல்ஸ்' திட்டம் 
  • “Apiary on Wheels” தேனீ வளர்ப்பிற்கு உதவும் ஒரு தனித்துவமான திட்டம் ஆகும், பிப்ரவரி 13, 2020 அன்று, MSME (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) அமைச்சகம் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
பீகார் அரசின் மரம் நடும் இயக்க பிரச்சாரம் ‘பியார் கா பவுதா’ 
  • பீகார் மாநில அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மாநிலத்தில் மரங்களை நடவு செய்வதை ஊக்குவிக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
  • பிப்ரவரி 13-அன்று காதலர் தினத்தன்று ‘பியார் கா பவுதா’ (அன்பின் செடி) என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
  • Pyaar ka Paudha: a plant of love.
லெத்போரா பகுதியில் 'CRPF பணியாளர்கள் நினைவுச்சின்னம்'
  • புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 40 CRPF பணியாளர்களின் நினைவுச்சின்னம் சமீபத்தில் ஜம்மு & காஷ்மீர் ஒன்றியபிரதேசத்தில் உள்ள புல்வாமாவின் லெத்போரா (Lethpora) முகாமில் திறக்கப்பட்டது. இந்த நினைவுச்சின்னத்தில் 40 CRPF பணியாளர்களின் பெயர்களும் அவர்களின் படங்களும் பொறிக்கப்பட்டுள்ளன
  • 2019 பிப்ரவரி 14-அன்று புல்வாமாவில் ஒரு தற்கொலை குண்டுதாரி மூலம் நாற்பது CRPF வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பு/விண்வெளி 
இலங்கை நீர்ப்பரப்பு விவரங்களை சேகரிக்கும் 'INS ஜமுனா'
  • இந்திய கடற்படையின் நீர்ப்பரப்பு கணக்கெடுப்பு கப்பல் INS ஜமுனா அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலங்கையில் விரிவான நீர்ப்பரப்பு தொடர்பான விவரங்களை (Hydrographic Survey) சேகரிக்க உள்ளது
  • ஹைட்ரோகிராஃபிக் கணக்கெடுப்பின் போது இலங்கை கடற்படை வீரர்களுக்கு பயிற்சி மற்றும் இலங்கை மாலுமிகளுக்கான துறைமுக பயிற்சி திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நியமனங்கள் 
பட்டய கணக்காளர் நிறுவன (ICAI) புதிய தலைவர் - அதுல் குமார் குப்தா
  • 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்டய கணக்காளர் நிறுவனத்தின் (ICAI) புதிய தலைவராக சமீபத்தில் அதுல் குமார் குப்தா (Atul Kumar Gupta) நியமிக்கப்பட்டுள்ளார். 
  • ICAI: Institute of Chartered Accountants.
இந்தியாவின் புதிய நிதி செயலாளர் 'தேபாசிஸ் பாண்டா'
  • சமீபத்தில் இந்தியாவின் புதிய நிதி செயலாளராக (Finance Secretary of India) தேபாசிஸ் பாண்டா (Debasish Panda) நியமிக்கப்பட்டுள்ளார்.
அரவிந்த் கேஜரிவால் முதல்வராக பதவியேற்பு 
  • ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராக பிப்ரவரி 16-அன்று பதவியேற்றார். டெல்லியில் உள்ள ராமலீலா மைதானத்தில் கேஜரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 
  • டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பிப்ரவரி 8-அன்று நடைபெற்ற தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது. 
வணிகம்/பொருளாதார நிகழ்வுகள்
ஆசியாவில் இரண்டாவது மதிப்புமிக்க மொபைல் ஆபரேட்டர் 'பாரதி ஏர்டெல்'
  • ப்ளூம்பெர்க் நிறுவனத் தரவுகளின்படி, ஆசியாவில் வளர்ந்து வரும் சந்தைகளில் பாரதி ஏர்டெல் (Bharti Airtel) இரண்டாவது மிக மதிப்புமிக்க மொபைல் ஆபரேட்டராக மாறியுள்ளது. சீன மொபைல் ஆபரேட்டர் '' முதலிடத்தில் உள்ளது.
  • ஏர்டெல் தற்போது சுமார் 41 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை (Market Capitalisation) கொண்டுள்ளது. 175 பில்லியன் டாலர் மூலதனத்துடன் ஆசியாவின் சிறந்த மொபைல் ஆபரேட்டர் சீனா மொபைல் (China Mobile) முதலிடத்தில் உள்ளது.
பொறுப்பு மற்றும் மேலாண்மை (FRBM) சட்ட விதிமுறைகள் 
  • 2020-21-ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை பொறுப்பு மற்றும் மேலாண்மை (FRBM) சட்ட விதிமுறைகளை மனதில் கொண்டே 2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
  • வருவாய் மற்றும் மொத்த செலவினம் ஆகியவற்றுக்கிடையிலான இடைவெளியை குறைக்கும் விதமாக நிதிப் பற்றாக்குறையை 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக வைத்திருக்க மத்திய அரசு முன்பு இலக்கு நிா்ணயித்திருந்தது. இந்த நிலையில் வருவாயில் ஏற்பட்ட சரிவின் காரணமாக FRBM சட்டப் பிரிவுகளை பயன்படுத்தி நிதிப் பற்றாக்குறை இலக்கை 0.5 சதவீதம் அதிகரித்து 3.8 சதவீதமாக நிா்ணயித்தது.
  • FRBM Act: Fiscal Responsibility and Budget Management Act (2003)
மூன்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு மூலதன உட்செலுத்துதல் நிதி 'ரூ. 2,500 கோடி'
  • மூலதன உட்செலுத்துதல் (Capital Infusion) திட்டத்தின் கீழ், மத்திய அரசுக்கு சொந்தமான மூன்று பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ. 2,500 கோடியை உடனடியாக விடுவிப்பதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.
  • மூன்று பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள்: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி.
  • மூலதன உட்செலுத்துதல் (Capital Infusion) என்பது IRDAI அமைப்பு நிர்ணயித்த, முக்கியமான நிதி நிலை மற்றும் ஒழுங்குமுறை கடன் தேவைகளை மீறுதல் ஆகியவற்றின் பின்னணியில் மூலதன உட்செலுத்துதல் அறிவிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டில் இந்த 3 நிறுவனங்களும் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • IRDAI: Insurance Regulatory and Development Authority.
நேரடி வரி ‘விவாத் சே விஸ்வாஸ்' திட்டம் 
  • மத்திய அமைச்சரவையின் சமீபத்திய ஒப்புதலின் படி, கடன் மீட்பு (Debt Recovery Tribunal) தீர்ப்பாயத்தின் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பது நேரடி வரி ‘விவாத் சே விஸ்வாஸ்’ (Vivad Se Vishwas) திட்டத்தின் நோக்கம் ஆகும். 
  • விவாத் சே விஸ்வாஸ் மசோதா-2020, சர்ச்சைக்குரிய நேரடி வரி வழக்குகளை தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் ₹ 9 லட்சம் கோடிக்கு மேற்பட்ட நேரடி வரி வழக்குகளில் நிலுவையில் உள்ளன.
முக்கியநபர்கள் 
மினிமலிசத்தின் குரு 'வெண்டெல் ரோட்ரிக்ஸ்'
  • பிரபல ஆடை வடிவமைப்பாளர் வெண்டெல் ரோட்ரிக்ஸ் (Wendell Rodricks) சமீபத்தில் கோவாவில் காலமானார். 
  • ஃபேஷன் டிசைனிங் (Fashion Designing) துறையில் பிரபலமான ஆளுமையான வெண்டெல் ரோட்ரிக்ஸ் ‘மினிமலிசத்தின் குரு’ (Guru of Minimalism) என்று அழைக்கப்பட்டார்.
  • நாட்டில் ‘ரிசார்ட் உடைகள் (Resort wear) மற்றும் சுற்றுச்சூழல் நட்பு ஆடைகள் (Eco-friendly garments) போன்ற யோசனைகளை அறிமுகப்படுத்தியதற்காக அறியப்பட்டவர் ரோட்ரிக்ஸ், காதி இயக்கத்தின் ஊக்குவிப்பாளராக விளங்கியவர்.
முக்கிய தினங்கள் 
பிப்ரவரி 13 - உலக வானொலி தினம் 
  • 2020 மையக்கருத்து: வானொலி மற்றும் பன்முகத்தன்மை (Radio and Diversity).
  • Download this article as PDF Format
Previous Post Next Post