Daily Current Affairs February 1, 2020
TNPSC Current Affairs February 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 1, 2020
சர்வதேச நிகழ்வுகள்ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய 'பிரிட்டன்'
- ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் ஜனவரி 31-அன்று வெளியேறியது.
- பிரிட்டன் வெளியயேறுவதன் மூலம், ஐரோப்பிய யூனியன் உறுப்பினா்களின் எண்ணிக்கை 27-ஆகக் குறைந்துள்ளது.
இந்திய நிகழ்வுகள்
உலகளாவிய சிந்தனையாளர் குழுக்கள் தரவரிசை பட்டியல் 2019
- 2019-ஆம் ஆண்டின் உலகளாவிய சிந்தனையாளர் குழுக்கள் தரவரிசை பட்டியலில் (Global Go To Think Tank Index Report), இந்தியாவை சேர்ந்த அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (ORF) உலகளவில் 27-வது இடத்தை பிடித்துள்ளது.
- இந்த அறிக்கையை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் லாடர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவின் சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட் (Carnegie Endowment) முதலிடம் பிடித்தது.
- ORF: Observer Research Foundation
- சர்வதேச மொபைல் கருவி அடையாள எண் (IMEI) மொபைல் சாதனங்களின் 15 இலக்க தனித்துவமான வரிசை எண் ஆகும்.
- அண்மையில், தொலைதொடர்புத்துறை இந்தியாவில் மொபைல் போன்களுக்கான IMEI எண்களை வழங்குவதற்கு, மொபைல் ஸ்டாண்டர்ட்ஸ் அலையன்ஸ் ஆஃப் இந்தியா (MSAI) எனேற தனியார் நிறுவனதிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- IMEI: International Mobile Equipment Identity, MSAI: Mobile Standards Alliance of India
- IRCTC-யின் மூன்றாவது தனியார் ரயில் இந்தூர்-வாரணாசி இடையே ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் (Humsafar Express) என்ற பெயரில் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
- நாட்டின் முதல் தனியார் ரயில் சிறப்பை பெற்ற டெல்லி-லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்
- இரண்டாவதாக தனியார் ரயில் அகமதாபாத்-மும்பை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்
- காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் டைட்டன் (Titan). நிறுவனத்துடன் இணைந்து தனித்துவமான காதி கை கடிகாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
- மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள இந்த கடிகாரங்கள் காதி சின்னமான சர்காவும் இடம்பெற்றுள்ளது.
விருதுகள்
PEN கௌரி லங்கேஷ் விருது 2020 - யூசுப் ஜமீல்
- மூத்த இந்திய பத்திரிகையாளர் யூசுப் ஜமீல் (Yusuf Jameel), ‘ஜனநாயகக் கருத்தியலுக்கான 2019-2020-ஆமா ஆண்டுக்கான PEN கௌரி லங்கேஷ் விருதுக்கு (PEN Gauri Lankesh Award 2020) தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
பாதுகாப்பு/விண்வெளி
கூட்டு இராணுவ பயிற்சி 'சம்பிரிதி 2020'
- ‘சம்பிரிதி’ (SAMPRITI) என்பது இந்தியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான ஒரு கூட்டு இராணுவ பயிற்சி ஆகும்.
- ஒன்பதாவது சம்பிரிதி (SAMPRITI-IX) கூட்டு இராணுவ பயிற்சி, 2020 பிப்ரவரி 3 முதல் 16 வரை மேகாலயாவின் உம்ரோய் நகரில் நடத்தப்பட உள்ளது.
நியமனங்கள்
IBM நிறுவன புதிய தலைமை செயல் அதிகாரி - அரவிந்த் கிருஷ்ணா
- IBM நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா (வயது 57, IBM CEO Arvind Krishna) நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநாடுகள்
சூரஜ்குண்ட் சர்வதேச கைவினை மேளா 2020
- சூரஜ்குண்ட் சர்வதேச கைவினை மேளா (Surajkund International Crafts Mela) அரியானா மாநிலத்தால் ஏற்பாடு செய்யப்படும் முதன்மையான வருடாந்திர நிகழ்வு ஆகும்.
- 34-வது சூரஜ்குண்ட் சர்வதேச கைவினை மேளா 2020 பிப்ரவரி 1 முதல் 16 வரை ஹரியானா மாநிலத்தின் சூரஜ்குண்ட் நகரில் நடைபெற உள்ளது.
- தோல் ஏற்றுமதி கவுன்சில், இந்திய வா்த்தக மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் சாா்பில், சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் இந்திய சா்வதேச தோல் கண்காட்சி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோா் துறை அமைச்சா் மகேந்திர நாத் பாண்டே தொடங்கி வைத்தார்.
பொருளாதார நிகழ்வுகள்
2019-20 நிதி ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை
- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20-ஆம் நிதி ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை ஜனவரி 31 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மரபுப்படி பட்ஜெட்டுக்கு முந்தைய நாளில் பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey 2020) சமர்ப்பிக்கப்படுகிறது.
- இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தயாரித்து அளித்த ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
- 2019-20 பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய விவரங்கள்:
- நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும். வரும் 2020-21-ஆம் ஆண்டில் வளர்ச்சி 6-6.5 சதவீதமாக அதிகரிக்கும்.
- உலக வங்கியின் 2019-ஆம் ஆண்டு தரவரிசை பட்டியலின்படி தொழில் புரிய சாதகமான நாடுகளில் இந்தியா 63-வது இடத்திற்கு வந்துள்ளது.
- நிதி ஆண்டின் முதல் 8 மாதங்களில் (2019 ஏப்ரல்-நவம்பர்) ஜி.எஸ்.டி. வரி வசூல் 4.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
- 2020 ஜனவரி மாதத்தில் GST வரி வருவாய் ரூ.1.1 லட்சம் கோடி (1,10,828 crore) வசூலாகியுள்ளது. இதன் மூலம் தொடா்ந்து மூன்றாவது மாதமாக GST வருவாய் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக விழா 2020
- தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக விழா பிப்ரவரி 5-ந் தேதி நடக்கிறது. இந்த கும்பாபிஷேகத்தில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது
- தஞ்சை பெரிய கோவில். முதலாம் ராஜராஜ சோழன் கி.பி.1010-ம் ஆண்டில் கட்டபட்டது.
Download this article as PDF Format