பொருளாதார ஆய்வறிக்கை
- இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கை என்பது பொது பட்ஜெட் தினத்திற்கு முந்தைய நாளில் தாக்கல் செய்யப்படும் ஆவணம் ஆகும். மத்திய நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்படும் மிக முக்கிய ஆண்டறிக்கை இது.
- மத்திய நிதி அமைச்சகத்தில் பணியாற்றும் தலைமை பொருளியல் ஆலோசகரின் கீழ் செயல்படும் குழு ஒன்றால் ஆய்வறிக்கை தயாரிக்கப்படுகிறது.
- அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை ஒரு நிதி ஆண்டின் பொருளாதார முன்னேற்றம் பற்றிய மதிப்பீடு ஆகும். குறிப்பிட்ட ஆண்டில் பல்வேறு பொருளாதார குறியீடுகளில் நாடு வெளிப்படுத்தி உள்ள செயல்திறன் பற்றிய விரிவான அறிக்கையாகவும் இருக்கிறது.
- மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளுக்கு முந்தைய நாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதன் முடிவுகளை பட்ஜெட் ஒரு பின்னணியாக வைத்துக் கொண்டாலும் ஆய்வறிக்கையும், பட்ஜெட்டும் கண்டிப்பாக ஒன்றின் மீது ஒன்று தாக்கம் ஏற்படுத்தும் என்று கூற இயலாது.
- அரசின் அனைத்து முக்கிய திட்டங்கள் குறித்த புள்ளி விவரங்களும் ஆய்வறிக்கையில் இடம் பெறுகின்றன. அரசின் பிரதான கொள்கைகள் மற்றும் அவற்றின் விளைவுகளும் இதில் அடங்கும்.
- கடந்த ஆண்டின் முன்னேற்றங்களை காட்டுவதுடன், குறுகிய-நடுத்தர கால அடிப்படையில் எதிர்கால வளர்ச்சி பற்றிய கண்ணோட்டமாகவும் பொருளாதார ஆய்வறிக்கை இருக்கிறது.