Daily Current Affairs February 24-27, 2020
TNPSC Current Affairs February 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 24-27, 2020
இந்திய நிகழ்வுகள்
உலகளாவிய செழிப்புக் குறியீடு 2020
- இந்தியா 131-வது இடம்: WHO உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் (UNICEF) வெளியிட்டுள்ள ‘உலகளாவிய செழிப்புக் குறியீடு’ (Global Flourishing index) அட்டவணையில் இந்தியாவின் 131-வது இடத்தை பிடித்துள்ளது.
- ‘உலக குழந்தைகளுக்கான எதிர்காலம்’ என்ற தலைப்பிலான, குழந்தைகளின் உயிர்வாழ்வு மற்றும் நல்வாழ்வின் நடவடிக்கைகளில் நாடுகளை ஒப்பிடும் இந்த பட்டியலை aலான்செட் இதழ் வெளியிட்டது.
- மதிப்பிடப்பட்ட 180 நாடுகளில், இந்தியா செழிப்பு (flourishing index) குறியீட்டில் 131-வது இடத்திலும், நிலைத்தன்மை குறியீட்டில் 77-வது இடத்திலும் (sustainability index) உள்ளது.
நேச்சர் தரவரிசை குறியீடு 2020
- நிறுவனங்களின் மொத்த ஆராய்ச்சி வெளியீட்டை அடிப்படையாகக் கொண்ட வருடாந்திர ‘நேச்சர் தரவரிசை குறியீடு 2020 (Nature Ranking Index-2020) பட்டியல்படி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) நிறுவனம் நாட்டில் முதலிடத்தில் உள்ளது.
- 2018 டிசம்பர் முதல் 2019 நவம்பர் வரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டது
- முதல் 3 இடங்களில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்:
- அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), நியூ டெல்லி.
- இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (IISc), பெங்களூரூ.
- டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (TIFR) மும்பை.
உலகின் மோசமான காற்று மாசு நகரங்கள் பட்டியல் 2020
- டெல்லி 5-வது இடம்: உலக காற்று தர அறிக்கை 2019 என்ற தலைப்பில் உலகின் மோசமான காற்று மாசு நிறைந்த 30 நகரங்களை பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் டெல்லி 5-வது இடத்தை பெற்றுள்ளது.
- காசியாபாத் முதலிடம்: இதில் இந்தியாவில் மட்டும் 21 நகரங்கள் உள்ளன, காசியாபாத் நகரம் (உத்தரபிரதேச மாநிலம்) முதலிடத்தில் உள்ளது.
- உலகின் 5 நகரங்கள் விவரம்:
- காசியாபாத் (இந்தியா, உத்தரபிரதேசம்)
- ஹோடான் (சீனா)
- குஜ்ரன்வாலா (பாகிஸ்தான்)
- பைசலாபாத் (பாகிஸ்தான்)
- டெல்லி (இந்தியா)
- இந்திய அளவில் வரிசைப்படி 21 நகரங்கள் விவரம்: காசியாபாத், டெல்லி, நொய்டா, குருகிராம், கிரேட்டர் நொய்டா, பந்த்வாரி, லக்னோ, புலந்த்ஷர், முசாபர்நகர், பாக்பாத், ஜிந்த், பரிதாபாத், கோரவுட், பிவாடி, பாட்னா, பல்வால், முசாபர்பூர், ஹிசார், குடைல், ஜோத்பூர் மற்றும் மொராதாபாத்.
- உலகளவில் மோசமான காற்று மாசு நிறைந்த தலைநகரங்கள் பட்டியலில் டெல்லிக்கே முதலிடம் கிடைத்துள்ளது.
- இந்தியா 5-வது இடம்: நாடுகள் அளவிலான தகவலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. வங்காளதேசம் முதலிடத்திலும், அடுத்த இடங்களில் பாகிஸ்தான், மங்கோலியா, ஆப்கானிஸ்தான் நாடுகளும் உள்ளன.
இந்திய ரெயில்வேயில் 'ரெயில் பயணி உயிரிழப்பு இல்லாத நிதி ஆண்டு'
- இந்திய ரெயில்வேயில் நடப்பு நிதியாண்டில் எந்த ரெயில் விபத்திலும் எந்த பயணியும் உயிரிழக்கவில்லை என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.
- இந்திய ரெயில்வேயில் நடப்பு நிதியாண்டில், 2019 ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2020 பிப்ரவரி 24-ந் தேதிவரையிலான 11 மாத காலத்தில் எந்த ரெயில் விபத்திலும் ஒரு ரெயில் பயணி கூட உயிரிழக்கவில்லை. கடந்த 1853-ம் ஆண்டு ரெயில்வே சேவை அமலுக்கு வந்ததில் இருந்து 166 ஆண்டுகள் ஆகியுள்ளன. இத்தனை ஆண்டுகளில் இத்தகைய சாதனை நிகழ்த்தப்படுவது, இதுவே முதல்முறை ஆகும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் இந்திய சுற்றுப்பயணம்
- பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவில் பிப்ரவரி 24-25 தேதிகளில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
- டொனால்டு டிரம்ப் பிப்ரவரி 24 பிரதமர் மோடி, விமான நிலையத்துக்கு வந்து டிரம்பை நேரில் வரவேற்றதும், அதைத் தொடர்ந்து தேசப்பிதா அன்று அகமதாபாத் வந்தார். மகாத்மா காந்தியின் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடைய சபர்மதி ஆசிரமத்துக்கு டிரம்ப் மற்றும் மனைவி மெலனியா டிரம்ப் சென்று பார்வையிட்டனர்.
- உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்று கருதப்படுகிற அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடந்த ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் டிரம்ப், மெலனியா தம்பதியர் கலந்து கொண்டனர்.
- டிரம்ப் தம்பதியர், ஆக்ராவுக்கு சென்று, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிட்டனர்.
- பிப்ரவரி 25 அன்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில் டிரம்ப் தம்பதியருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
- இராணுவ ஒப்பந்தம்: ஐதராபாத் இல்லத்தில் டிரம்ப், பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். ரூ.21 ஆயிரத்து 600 கோடி (3 பில்லியன் டாலர்) மதிப்பிலான இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இந்த ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு, உலகிலேயே தலைசிறந்தவை என கருதப்படுகிற MH-60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் (24 எண்ணிக்கை), AH-64 E அபாச்சி ஹெலிகாப்டர்கள் (6 எண்ணிக்கை) ஆகியவற்றை அமெரிக்கா வழங்கும்.
- 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: இரு தரப்பிலும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆயின.
- மனநலம் தொடர்பாக இருதரப்பு சுகாதார துறைகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம்.
- மருத்துவ பொருட்கள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்புக்கும், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- இந்திய எண்ணெய் கழகம் (IOC), எக்ஸான் மொபில் இந்தியா எல்.என்.ஜி. நிறுவனம் ஆகியவற்றுக்கும் அமெரிக்காவின் சார்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- ‘குவாட்’ நாடுகள் பேச்சுவார்த்தை: அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இடையேயான ‘குவாட்’ முன் முயற்சியை (Quadrilateral Security Dialogue) புதுப்பிக்க முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. (இது ராணுவம் சார்ந்த 4 தரப்பு பேச்சுவார்த்தை ஆகும்).
- அதிகபட்ச வரி: வர்த்தகத்தை பொறுத்தமட்டில் இந்தியா (அமெரிக்காவுக்கு) அதிக வரிகளை விதிக்கிற நாடாக இருக்கிறது. ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு அதிகபட்ச வரி விதிக்கிறது என்று ட்ரெம்ப் தெரிவித்தார்.
இனிப்புகளின் உற்பத்தி, காலாவதி தேதிகள் 'குறிப்பது கட்டாயம்'
- 2020 ஜூன் 1 முதல் அமல்: பைகளில் அடைக்கப்படாத சில்லறையில் விற்கப்படும் இனிப்புகளின் உற்பத்தி மற்றும் காலாவதி தேதியை ஜூன் 1-ஆம் தேதி முதல் கட்டாயம் குறிக்க வேண்டும் என உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம் (FISSAI) அறிவுறுத்தியுள்ளது.
- உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) விதிமுறைகள், 2011-இன் படி, பெட்டிகளில் அடைக்கப்பட்ட இனிப்புகளுக்கு இந்த விதிமுறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது சில்லறையில் விற்பனை செய்யப்படும் இனிப்புகளுக்கும் இந்த விதிமுறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
தெலுங்கானா அரசின் 'நடவடிக்கை தேஜ்'
- தெலுங்கானா மாநில அரசால் 'நடவடிக்கை தேஜ்' (Project Tej) அண்மையில் தொடங்கப்பட்டது.
- 2020 பயோ ஏசியா -பயோடெக் மற்றும் லைஃப் சயின்சஸ் மன்ற மாநாட்டின் போது, 'MedTechConnect' என்ற தளத்துடன் இணைந்து தெலுங்கானா 'தேஜ்-நடவடிக்கை'யை அறிமுகப்படுத்தியது.
- நடவடிக்கை தேஜ், தொழில் நுட்ப வல்லுநர்கள் மருத்துவ தொழில்நுட்ப துறையில் தங்கள் கருத்துக்களை சோதிக்க உதவும் ஒரு தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) - சிறு தகவல்
- 2019 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) உருவாக்கப்படும் என்று உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் சமீபத்தில் அறிவித்தார்.
- 2020 ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்திற்குள் இந்த ஆணையம் நிறுவப்படுகிறது. 1986-ஆம் ஆண்டு நுகர்வோர்பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றம் ஒப்புதலுடன் மாற்றியமைக்கப்பட்டது.
- CCPA: Central Consumer Protection Authority.
அடல் கிசான்-மஜ்தூர் கேன்டீன் திட்டம்
- ஹரியானா அரசு 'அடல் கிசான்-மஜ்தூர் கேன்டீன் திட்டம்' (Atal Kisan-Majdoor Canteens Scheme) எனப்படும் மலிவு விலை உணவகங்களை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சந்தைகளிலும், சர்க்கரை ஆலைகளிலும் திறக்கும் என்று அறிவித்தது.
- விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு தட்டுக்கு 10 ரூபாய்க்கு மலிவு விலையில் இந்த திட்டதின்கீழ் உணவு வழங்கப்படவுள்ளது.
இந்தியாவின் முதல் மிதக்கும் படகுத்துறை
- 'இந்தியாவின் முதல் மிதக்கும் படகுத்துறை' (India’s first floating jetty) அண்மையில் கோவா மாநிலத்தின் மண்டோவி ஆற்றின் கரையில் உள்ள பனாஜி நகரில் திறக்கப்பட்டது.
பஞ்சாப் அரசின் 'NRI சபா'
- சமீபத்தில் செய்தி வெளிவந்த NRI சபா (NRI Sabha), என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் (NGO) பஞ்சாப் மாநில அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. NRI சபா பஞ்சாப் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
- எந்தவொரு வெளிநாடு வாழ் பஞ்சாபியரும் 10,500 ரூபாய் கட்டணம் செலுத்துவதன் மூலம் அதன் உறுப்பினராக முடியும்.
விருதுகள்
எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) தொழில்முனைவோர் விருதுகள் 2019
- 2019 ஆம் ஆண்டின் எர்ன்ஸ்ட் அண்ட் யங் (Ernst and Young) விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- இந்தியாவை சேர்ந்த சிறந்த தொழில்முனைவோராக Biocon நிறுவனத்தின் கிரண் மஜும்தார்-ஷா (Dr. Kiran Mazumdar-Shaw) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- EY உலக தொழில்முனைவோர் விருது - கிரண் மஜும்தார்-ஷா, பயோகான் நிறுவனம்
- EY வாழ்நாள் சாதனையாளர் விருது - ஆதி கோத்ரேஜ், கோத்ரேஜ் குழுமம்
- EY ஆண்டின் உருமாற்ற தாக்க நபர் விருது - துஹின் பாரிக், பிளாக்ஸ்டோன் நிறுவனம்
சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருது 2019
- சாகித்ய அகாடமி விருது: இந்தியாவின் முக்கிய 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
- 2019-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுகள் (Sahitya Akademi Translation Award 2019) பிப்ரவரி 24-அன்று அறிவிக்கப்பட்டன.
- 23 மொழிகளுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
- கன்னட மொழிக்கு மட்டும் விருது அறிவிக்கப்படவில்லை.
- சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருது (தமிழ்): கே.வி.ஜெயஸ்ரீ
- மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலை கே.வி.ஜெயஸ்ரீ தமிழில் மொழி பெயர்த்தார். 2016-ஆம் ஆண்டு வெளியான இந்த புதினத்தின் மொழிபெயர்ப்புக்காக தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- ரூ.50 ஆயிரம் ரொக்கம், செம்பு பட்டயமும் விருதாக அவருக்கு அளிக்கப்படும்.
- கே.வி.ஜெயஸ்ரீ: சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள கே.வி.ஜெயஸ்ரீ திருவண்ணாமலையில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
- கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் படித்தது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில்தான்.
- அரசியல் விமர்சகரும், மொழி பெயர்ப்பாளரும், எழுத்தாளருமான உத்திரகுமாரை திருமணம் செய்துள்ளார்.
- ஜெயஸ்ரீயின் மகள் சுகானா. இவரும் எழுத்தாளராக, மொழிப்பெயர்ப்பாளராக உள்ளார்.
சாகித்ய அகாதெமி விருது 2019
- சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான 2019-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கும் விழா டெல்லி கமானி அரங்கில் பிப்ரவரி 25-அன்று நடைபெற்றது. இந்திய மொழிகளைச் சோ்ந்த 24 எழுத்தாளா்களுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சிக்கு சாகித்ய அகாதெமியின் தலைவா் சந்திரசேகா் கம்பாா் தலைமை வகித்தாா். செயலா் கே.ஸ்ரீநிவாச ராவ் வரவேற்புரையாற்றினாா். தலைமை விருந்தினராக ஹிந்தி மொழிக் கவிஞரும், பாடலாசிரியருமான குல்ஷாா் கலந்து கொண்டாா்.
- சோ.தருமன் (சூல்): தமிழ் எழுத்தாளா் சோ.தருமன் அவர்களுக்கு ‘சூல்’ என்ற நாவலுக்காக 2019-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
ESPN இந்தியா விளையாட்டு விருதுகள் 2019
- 2019-ஆண்டிற்கான ESPN இந்தியா நிறுவனத்தின் விளையாட்டு விருதுகள் (2019 ESPN India Awards) அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்:
- வாழ்நாள் சாதனையாளர் விருது: பல்பீர் சிங் சீனியர் (ஹாக்கி)
- ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் (பெண்): பி.வி.சிந்து (பாட்மிண்டன்)
- ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் (ஆண்): சவுரவ் சவுத்ரி (துப்பாக்கிச்சுடுதல்)
- ஆண்டின் மறுபிரவேசம்: கொனேரு ஹம்பி (சதுரங்கம்)
- ஆண்டின் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்: தீபக் புனியா (மல்யுத்தம்)
- ஆண்டின் சிறந்த பயிற்சியாளர்: புல்லேலா கோபிசந்த் (பாட்மிண்டன்)
- ஆண்டின் சிறந்த அணி: மனு பாகர்-சவுரவ் சவுத்ரி (துப்பாக்கிச்சுடுதல்)
- மாற்றுத்திறனாளி தடகள வீரர்: மனசி ஜோஷி (பாரா பாட்மிண்டன்)
- ஆண்டின் சிறந்த விளையாட்டு தருணம்: பி.வி சிந்துவின் உலக சாம்பியன்ஷிப் இறுதி வெற்றி
- தைரிய விருது: டூட்டி சந்த் (ஓட்டப்பந்தய வீராங்கனை)
மாநாடுகள்
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் 2020
- காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைத்த பிறகு நடைபெறும் ஐந்தாவது கூட்டம், டெல்லி ராமகிருஷ்ணா புரத்தில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய புதிய தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் பிப்ரவரி 25-அன்று நடைபெற்றது.
- இதில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் தலைவர் நவீன் குமார் கலந்து கொண்டார். தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரள மணிலா உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
- காவிரி ஒழுங்காற்றுக்குழு (CWRC) 26-ஆவது கூட்டம், டெல்லி மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் அக்குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றது.
முஜிபுர் ரஹ்மான் பிறந்ததன் நூற்றாண்டு விழா 2020
- வங்கதேசத்தின் முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்ததன் நூற்றாண்டு விழாவையொட்டி மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, நேபாள அதிபர் வித்யாதேவி பண்டாரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- வங்கேதசத்தின் முதல் அதிபராகவும், பின்னர் பிரதமராகவும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஏப்ரல் 17, 1971-ஆம் ஆண்டு பதவி வகித்து வந்தார். 1975 ஆகஸ்ட் 15-ஆம் தேதி படுகொலை செய்யப்படும் வரை அவர் அந்தப் பதவியில் இருந்தார். அவரது மகள் ஷேக் ஹசீனா தற்போதைய பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
இந்திய ஜவுளி மற்றும் கைவினைகளுக்கான வளர்ந்து வரும் வாய்ப்புகள் சிம்போசியம்-2020
- 2020-ஆண்டிற்கான 'இந்திய ஜவுளி மற்றும் கைவினைகளுக்கான வளர்ந்து வரும் வாய்ப்புகள் குறித்த சிம்போசியம்' (Symposium on Emerging Opportunities for Indian Textiles and Crafts), பிப்ரவரி 19-அன்று புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
- இந்த கருத்தரங்கை மத்திய ஜவுளி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி திறந்து வைத்தார்.
வடகிழக்கு மாநிலங்களின் ‘நிலையான அபிவிருத்தி இலக்குகள் கூடுகை 2020
- நிதி ஆயோக் அமைப்பின் சார்பில் கூட்டாண்மை, ஒத்துழைப்பு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி தொடர்பான ‘நிலையான அபிவிருத்தி இலக்குகள் (SDG) கூடுகை 2020', அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரத்தில் பிப்ரவரி 24-26 தேதிகளில் நடைபெற்றது. NITI Aayog’s ‘Sustainable Development Goals (SDG) Conclave 2020.
- வடகிழக்கு கவுன்சில், அசாம் அரசு, டாடா டிரஸ்ட், ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) மற்றும் வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு (RIS) ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தன.
தேசிய கரிம உணவு விழா 2020 (புதுதில்லி)
- தேசிய கரிம உணவுத் திருவிழா சமீபத்தில் புதுதில்லியில் மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரால் தொடங்கிவைக்கப்பட்டது. பிப்ரவரி 21-23 தேதிகளில் இந்த விழா, ‘Unleashing India’s Organic Market Potential’ என்ற கருப்பொருளில் நடைபெற்றது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
வரலாற்றுக்கு முந்தைய ஊர்வன இனம் 'வெல்பெர்கியா பார்தலோமேய்'
- ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி, ஒரு புதிய வரலாற்றுக்கு முந்தைய ஊர்வன இனம் கண்டுபிடிக்கப்பட்டது, ‘வெல்பெர்கியா பார்தலோமேய்’ (Vellbergia bartholomaei) என்று அழைக்கப்படும் இந்த உயிரினம் பண்டைய பல்லி இனத்தை சேர்ந்தது, மேலும் இது நவீனகால பல்லிகள் மற்றும் பாம்புகளுக்கு மூதாதையர் என்று கருதப்படுகிறது.
தாய் மங்கூர் மீன் இனப்பெருக்க மையங்கள்:மகாராஷ்டிரா அரசு அழிக்க உத்தரவு
- நன்னீர் மங்கூர் மீன் போன்ற தோற்றத்தைக் கொண்ட தாய் மங்கூர் வகை மீன் (Thai Mangur), மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகவும் சுகாதாரமற்ற உற்பத்தி மற்றும் நுகர்வு காரணமாக மக்களுக்கு நோயை ஏற்படுத்துகிறது. இதனால் தாய் மங்கூர் மீன்களின் இனப்பெருக்க மையங்களை அழிக்க மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டது.
அறிவியல் தொழில்நுட்பம்
'எத்னோலோக்' - மொழிகளின் தரவுத்தளம் வெளியீடு
- 2020 பிப்ரவரி 21 அன்று சர்வதேச தாய் மொழி தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு உலகின் மிகப்பெரிய மொழி தரவுத்தளமான எத்னோலோக்கின் (Ethnologue) 23-வது பதிப்பு வெளியிடப்பட்டது.
- ‘எத்னோலோக்: உலகின் மொழிகள்’ (Ethnologue: Languages of the World) என்பது வருடாந்திர வெளியீடாகும், இது உலகின் மொழிகளில் மிகப்பெரிய தரவுத்தளமாக செயல்படுகிறது.
தேசிய மின்-ஆளுமை விருது பெற்ற 'இரயில் மதத்' வலைத்தளம்
- குடிமக்களை மையமாகக் கொண்ட விநியோகத்தை வழங்குவதில் சிறந்து விளங்கியதற்காக இந்திய ரயில்வேயின் 'இரயில் மதத்' (Rail Madad) வலைத்தளம் தேசிய மின்-ஆளுமை விருதை (National e-Governance Award for excellence) வென்றது.
முகநூல் நிறுவனத்தின் பயன்பாடு ‘வியூ பாயிண்ட்ஸ்’
- சமீபத்தில் செய்திகளில் வெளிவந்த ‘வியூ பாயிண்ட்ஸ்’ (Viewpoints) முகநூல் (Facebook) தொழில்நுட்ப நிறுவனத்தின் பயன்பாடு ஆகும்.
- ‘வியூ பாயிண்ட்ஸ்’ என்பது பேஸ்புக்கின் சந்தை ஆராய்ச்சி பயன்பாடாகும். கணக்கெடுப்புகள், பணிகள் மற்றும் தயாரிப்பு-சோதனைகளில் பங்கேற்கும்படி பயனரைக் கேட்கிறது.
“ஜாவாஸ்கிரிப்ட் ஸ்னிஃபர்ஸ்” - மால்வேர்
- சமீபத்தில் செய்திகளில் வெளிவந்த “ஜாவாஸ்கிரிப்ட் ஸ்னிஃபர்ஸ்” (JavaScript sniffers) என்ற சொல், மால்வேர் (Malware) ஆகும்.
- ஜாவாஸ்கிரிப்ட் ஸ்னிஃபர்ஸ் பயன்பாட்டை கொண்டு இந்திய வாடிக்கையாளர்களின் 98% கிரெடிட் கார்டு தரவுகள் விற்கப்பட்டதாக சிங்கப்பூரைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனம் அண்மையில் தெரிவித்தது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம் 2020
- பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புத் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பிப்ரவரி 26-அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடக்கி வைத்தாா்.
- 14 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வைப்பீட்டுத் தொகைக்கான பத்திரங்களை முதல்வா் வழங்கினாா்.
விளையாட்டு நிகழ்வுகள்
செஸ்
கேன்ஸ் ஓபன் செஸ் 2020: 'குகேஷ்' முதலிடம்
- 2020 கேன்ஸ் ஓபன் செஸ் போட்டி பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடந்தது. இதில் சென்னையை சேர்ந்த மாணவர் 'குகேஷ்' முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டம்வி வென்றார். குகேஷ், அண்மையில் டென்மார்க்கில் நடந்த ஓபன் செஸ் போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்று இருந்தார்.
டென்னிஸ்
ITF டென்னிஸ் 2020: அங்கிதா ரெய்னா
- சா்வதேச டென்னிஸ் சங்கம் (ITF) சாா்பில் ஜோத்பூரில் நடைபெற்ற போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை அங்கிதா ரெய்னா சாம்பியன் பட்டம் வென்றாா்.
டேபிள் டென்னிஸ்
ஹங்கேரி ஓபன் டேபிள் டென்னிஸ் 2020: 'சரத் கமல்-சத்யன்' வெள்ளிப் பதக்கம்
- ஹங்கேரி ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி ஆண்கள் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சரத்கமல்-சத்யன் ஞானசேகரன் இணை வெள்ளிப்பதக்கத்தை வென்றனா்.
- கலப்பு இரட்டையா் பிரிவில் சரத்கமல்-மனிகா பத்ரா இணை வெண்கலப் பதக்கம் வென்றது.
குத்துச்சண்டை
உலக ஹெவிவெயிட் சாம்பியன் - டைசன் பியூரி
- உலக குத்துச்சண்டை கூட்டமைப்பு சாா்பில் லாஸ்வேகாஸிஸ் நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 'டைசன் பியூரி' (Tyson Luke Fury) சாம்பியன் பட்டம் (WBC heavyweight 2020) வென்றார்.
முக்கிய நபர்கள்
மனித கம்ப்யூட்டர் 'கேத்தரின் ஜான்சன்'
- அமெரிக்காவை சேர்ந்த பெண் கணித மேதை கேத்தரின் ஜான்சன் (வயது 101). மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்பட்ட இவர், பிப்ரவரி 25-அன்று மரணம் அடைந்தார்.
- கேத்தரின் ஜான்சன் (Katherine Johnson), அமெரிக்க விண்வெளி துறையில் அளப்பரிய சாதனைகளை செய்தவர் ஆவார்.
ஹோஸ்னி முபாரக் - மறைவு
- எகிப்தில் 1981 முதல் 2011-ஆம் ஆண்டு வரை 30 ஆண்டு காலம் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் (வயது 91), உடல் நலக் குறைவு காரணமாக பிப்ரவரி 24-அன்று மரணமடைந்தாா்.
- மேற்கு ஆசியாவில் ‘அரபு வசந்தம்’ என்றழைக்கடும் கிளா்ச்சிப் போராட்டங்களின் ஒரு பகுதியாக, எகிப்தில் 2011-ஆம் ஆண்டு போராட்டங்கள் வெடித்தன. 18 நாள் தொடா் போராட்டத்தைத் தொடா்ந்து அவா் தனது பதவி விலகினார்.
உலகில் மிக அதிக வயதுடைய மனிதர் 'சிடேசு வாடனபே'
- உலகில் மிக அதிக வயதுடைய மனிதராக ஜப்பானைச் சோ்ந்த 'சிடேசு வாடனபே' (Chitetsu Watanabe) அவர்களுக்கு உலக சாதனைப் புத்தகமான கின்னஸ் சாா்பாக ஜனவரி 12-ஆம் தேதி சான்றிதழ் அளிக்கப்பட்டது. 112 ஆண்டுகள் மற்றும் 344 நாள்கள் வயதுடைய அவர், பிப்ரவரி 23-அன்று மரணம் அடைந்தார்.
முக்கிய தினங்கள்
பிப்ரவரி 20 - மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநில தினம்
- இரண்டு வடகிழக்கு மாநிலங்களான மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசம், பிப்ரவரி 20 அன்று தங்களது மாநில தினத்தை (Mizoram and Arunachal Pradesh Statehood Day) கடைபிடித்தன.
- மிசோரம்: 1972-வரை மிசோரம் மாநிலம், அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது, இது ஒரு தனி ஒன்றியப் பிரதேசமாக மாற்றப்பட்டு, 1987 பிப்ரவரி 20 அன்று இந்தியாவின் 23-வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.
- அருணாச்சல பிரதேசம்: வடகிழக்கு எல்லைப்புற முகமைக்கு அருணாச்சல பிரதேசம் என்று பெயரிடப்பட்டு, 1972-இல் ஒரு தனி ஒன்றியப் பிரதேசமாக மாற்றப்பட்டு, 1987 பிப்ரவரி 20 அன்று ஒரு மாநிலமாக உருவாக்கப்பட்டது.
Download this article as PDF Format