சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருது 2019

  • Sahitya Akademi Translation Award 2020 Announced 24.2.2020
சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருது 2019
  • சாகித்ய அகாடமி விருது: இந்தியாவின் முக்கிய 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. 
  • 2019-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுகள் பிப்ரவரி 24-அன்று அறிவிக்கப்பட்டன. 
  • 23 மொழிகளுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 
  • கன்னட மொழிக்கு மட்டும் விருது அறிவிக்கப்படவில்லை.
சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருது (தமிழ்): கே.வி.ஜெயஸ்ரீ
  • மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலை கே.வி.ஜெயஸ்ரீ தமிழில் மொழி பெயர்த்தார். 
  • இந்த நாவல் மொழிபெயர்ப்புக்காக தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • ரூ.50 ஆயிரம் ரொக்கம், செம்பு பட்டயமும் விருதாக அவருக்கு அளிக்கப்படும்.
  • கே.வி.ஜெயஸ்ரீ: சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள கே.வி.ஜெயஸ்ரீ திருவண்ணாமலையில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 
  • கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் படித்தது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில்தான். 
  • அரசியல் விமர்சகரும், மொழி பெயர்ப்பாளரும், எழுத்தாளருமான உத்திரகுமாரை திருமணம் செய்து கொண்டார். 
  • ஜெயஸ்ரீயின் மகள் சுகானா. இவரும் எழுத்தாளராக, மொழிப்பெயர்ப்பாளராக உள்ளார்.
  • Complete List: Sahitya Akademi Prize for Translation-2019
Previous Post Next Post