TRB Eaam Schedule 2020 - Annual Planner 2020-2021

Tentative Annual Planner of Teachers Recruitment Board for the year 2020-2021
TRB தேர்வு கால அட்டவணை 
  • கல்வித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடத்தி தகுதியானவர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்ந்தெடுத்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டு இருக்கிறது.  
  • தொடக்கக் கல்வித்துறையில் உள்ள 97 வட்டார கல்வி அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு அடுத்த மாதம் (பிப்ரவரி) 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
  • 1,060 அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான எழுத்து தேர்வு வருகிற மே மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடக்கிறது.
  • 2020-2021-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு மே மாதம் 4-ந் தேதி வெளியாகிறது. அதற்கான எழுத்து தேர்வு ஜூன் மாதம் 27 மற்றும் 28-ந் தேதிகளில் நடைபெறும்.
  • 2020-2021-ம் ஆண்டுக்கான 497 முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் 1-ந் தேதியும், 2016-17-ம் ஆண்டு முதல் 2019-20-ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் காலியாக உள்ள 730 பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு ஜூலை மாதம் 9-ந் தேதியும், 2017-18-ம் ஆண்டு முதல் 2019-20-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலியாக உள்ள 572 இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கு ஜூலை மாதம் 17-ந் தேதியும் அறிவிப்பு வெளியாகிறது.
TN TET EXAM 2020 


Previous Post Next Post