TNPSC current Affairs January 8, 2020 - Download as PDF

Daily Current Affairs January 8, 2020

TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC and Government exams 2020.

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 8, 2020
இந்திய நிகழ்வுகள்
உலகில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகள்: இந்தியா முதலிடம் 
  • 2018-19-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா 1.25 கோடி டன் அரிசியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 
  • இந்தியாவுக்கு அடுத்தபடியாக தாய்லாந்து 1.03 கோடி டன்னும், அதற்கு அடுத்து வியத்நாம் 70 லட்சம் டன்னும் ஏற்றுமதி செய்துள்ளன. 42.5 லட்சம் டன் ஏற்றுமதி செய்து பாகிஸ்தான் நான்காவது இடத்தில் உள்ளது.
சிறு நிதி வங்கியாக மாறியுள்ள 'சிவாலிக் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கி' 
  • சிறு நிதி வங்கியாக மாற்ற அனுமதிக்கப்பட்ட முதல் நகர்ப்புற கூட்டுறவு வங்கி (UCB) என்ற சிறப்பை சிவாலிக் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கி பெற்றுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் சிவாலிக் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கிக்கு ‘கொள்கை அடிப்படையில்’ சிறிய நிதி வங்கியாக மாற ஒப்புதல் அளித்துள்ளது.
  • UCB: Urban Cooperative Bank.
பீகார் மாநிலத்தின் ‘ஜல்- ஜீவன்- ஹரியாலி’ திட்டம் 
  • பீகார் மாநிலத்தில் சமீபத்தில் ‘ஜல்- ஜீவன்- ஹரியாலி’ திட்டம் என்ற காலநிலை மாற்ற முன்முயற்சி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் காலநிலை மாற்றம் மற்றும் நீர் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பாதுகாப்பு/விண்வெளி 
60 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய 'ஸ்பேஸ்-எக்ஸ்'
  • அமெரிக்காவின் தனியாா் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ், சா்வதேச அளவில் இணையதள இணைப்பு வசதியை ஏற்படுத்தும் நோக்கில் மேலும் 60 செயற்கைக்கோள்களை ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவெரலில் இருந்து விண்ணில் செலுத்தியது. 
  • பூமியை வலம் வரும் அந்த நிறுவனத்தின் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 180 உயர்ந்துள்ளது. 
பாரிய கருந்துளைகள் கொண்ட குள்ள விண்மீன் திரள்கள் கண்டுபிடிப்பு 
  • விஞ்ஞானிகள் மிகப் பெரிய அணிவரிசை (Very Large Array) ஆய்வுக்கூடத்தை பயன்படுத்தி பாரிய கருந்துளைகள் கொண்ட குள்ள விண்மீன் திரள்களை (dwarf galaxies) சமீபத்தில் கண்டுபிடித்தனர். அந்த ஆய்வுக்கூடம் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ பகுதியில் அமைந்துள்ளது.
  • ‘ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னலில்’ (Astrophysical Journal) சமீபத்தில் வெளியான ஆய்வின்படி, சில குள்ள விண்மீன் திரள்களில் பதிமூன்று பெரிய கருந்துளைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மாநாடுகள் 
ஹர்பின் பனி சிற்ப திருவிழா 2020
  • சீனாவின் ஹெலியோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹர்பின் நகரில் வருடாந்திர பனி சிற்ப திருவிழா (Harbin Ice Festival 2020), ஜனவரி 5 முதல் பிப்ரவரி 17-வரை, "20-year Grand Ceremony & Review" என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. 
அறிவியல் தொழில்நுட்பம் 
ஹூண்டாய்-யூபெர் உருவாக்கும் மின்சார விமான டாக்ஸிகள் 

  • ஹூண்டாய் நிறுவனம் மின்சார விமான டாக்ஸிகளை (electric air taxis) உருவாக்க, யூபெர் (Uber) சவாரி-பகிர்வு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. 
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் 2020
  • 2020-ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6-அன்று தொடங்கி ஜனவரி 10-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
  • ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். ஆளுநர் உரையை தமிழில் சபாநாயகர் ப.தனபால் வாசிக்கவுள்ளார்.
62 வனத்துறை யானைகளுக்கு 48 நாட்கள் சிறப்பு முகாம் 

  • வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுமலை யானைகள் முகாமில் உள்ள 26 யானைகள், ஆனைமலை யானைகள் முகாமில் உள்ள 26 யானைகள் உள்பட மொத்தம் 62 வனத்துறை யானைகளுக்கு 48 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. 
விளையாட்டு நிகழ்வுகள்
கால்பந்து

டேனியல் டி ரோஸி - ஓய்வு அறிவிப்பு 

  • இத்தாலி நாட்டை சேர்ந்த உலகக் கோப்பை வென்ற கால்பந்து வீரர் டேனியல் டி ரோஸி (Daniele De Rossi), அண்மையில் தொழில்முறை கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 
  • டேனியல் டி ரோஸி, ரோமா கால்பந்து கிளப் அணி மற்றும் A சீரிஸ் போட்டிகளில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் விளையாடியுள்ளார்.
செஸ்

ஹேஸ்டிங்ஸ் சர்வதேச செஸ் மாநாடு 2020: பி மாகேஷ் சந்திரன் சாம்பியன் 
  • தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இந்திய கிராண்ட்மாஸ்டர் பி மாகேஷ் சந்திரன் (P Magesh Chandran) , இங்கிலாந்தில் நடைபெற்ற ஹேஸ்டிங்ஸ் சர்வதேச செஸ் மாநாட்டில் (Hastings International Chess Congress) மதிப்புமிக்க சாம்பியன் பட்டத்தை வென்றார்.
கிரிக்கெட்

ஜூனியர் உலக கோப்பை 2020 

  • ஜூனியர் உலக கோப்பை போட்டி 2020 (ICC Under-19 Cricket World Cup 2020) தென்ஆப்பிரிக்காவில் ஜனவரி 17 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறுகிறது. 
Download this article as PDF Format
Previous Post Next Post