Daily Current Affairs January 7, 2020
TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC and Government exams 2020.
நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 7, 2020
இந்திய நிகழ்வுகள்
- பாடோலா புடவைகளின் (Patola sarees) உற்பத்தியை அதிகரிப்பதற்காக காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் (KVIC) முதல் பட்டு பதப்படுத்தும் தொழிற்சாலை குஜராத் மாநிலத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் அமைக்கப்படுகிறது.
- படோலா என்பது குஜராத்தின் வர்த்தக முத்திரை பெற்ற பட்டுச்சேலை வகை ஆகும்.
- KVIC: Khadi and Village Industries Commission
APEDA ஆணையத்தின் 'வேளாண் ஏற்றுமதி கொள்கை செயல்திட்டம்'
- வேளாண் ஏற்றுமதி மற்றும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி ஆணையம் (APEDA), மாநிலங்கள் வேளாண் ஏற்றுமதி கொள்கையை தீவிரமாக கடைப்பிக்க ஊக்குவித்து வருகிறது.
- தற்போதைய நிலையில் தமிழகம், அசாம், பஞ்சாப், கர்நாடகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் வேளாண் ஏற்றுமதி கொள்கைக்கான செயல்திட்டத்தை இறுதி செய்துள்ளன.
- தமிழகத்தில் தேனியில் வாழைப்பழம், சேலத்தில் கோழிப்பண்ணை உற்பத்தி போன்ற செயல் திட்டங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
- APEDA: Agricultural and Processed Food Products Export Development Authority.
பெண்களுக்கான ‘டாமினி’ ஹெல்ப்லைன் வசதி
- உத்தரபிரதேச மாநிலத்தின் போக்குவரத்துத் துறை (UPSRTC) சமீபத்தில் பெண்களுக்கு ‘டாமினி’ (Damini) என்ற ஹெல்ப்லைன் வசதியை அறிமுகப்படுத்தியது.
- இந்த திட்டத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை குழுசேர்ந்த ‘81142-77777’ என்ற ஹெல்ப்லைன் எண் மூலம் அழைப்பு விடுக்கலாம், வாட்ஸ்அப் சேவை மூலம் தொடர்பு கொள்ளலாம்.
- ‘நிர்பயா திட்டத்தின்’ (Nirbhaya Scheme) மத்திய அரசின் ஒரு பகுதியாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப்படை அகாடமி (நாக்பூர்)
- தேசிய பேரிடர் மீட்புப்படை அகாடமிகான (NDRF Academy), அடிக்கல் சமீபத்தில் மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களால் நாட்டப்பட்டது.
- நாக்பூரை தளமாகக் கொண்ட தேசிய தீயணைப்புக் கல்லூரியின் வளாகத்தையும் அவர் திறந்து வைத்தார்
- தேசிய பேரிடர் மீட்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கான அர்ப்பணிப்பு சக்தியான தேசிய பேரிடர் மீட்புப்படை 2006-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
- NDRF: National Disaster Response Force.
நியமனங்கள்
இலங்கை எதிா்க்கட்சித் தலைவர் 'சஜித் பிரேமதாச'
- இலங்கை நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியத் தலைவா் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஜனவரி 3-அன்று பொறுப்பேற்றார்.
மாநாடுகள்
ரைசினா உரையாடல் 2020
- ரைசினா உரையாடல் (Raisina Dialogue) என்பது 2016-ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் தலைமையில் ஆண்டுதோறும் நடைபெறும், புவிசார் அரசியல் (geopolitical) மற்றும் புவிசார் மூலோபாய (Geostrategic) மாநாடு ஆகும்.
- இது வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தினால் முன்னணி சிந்தனைக் குழுவான அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் (ORF) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.
- Raisina Dialogue 2020: இந்த 2020-ஆம் ஆண்டின் நிகழ்வு, ஜனவரி 14 முதல் 16 வரை புதுதில்லியில், ‘ஆல்பா நூற்றாண்டை வழிநடத்துதல்’ (Navigating the Alpha Century) என்ற தலைப்பில் நடைபெறகிறது.
- ORF: Observer Research Foundation
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
கன்றை ஈன்ற ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் (R3A)
- மனாஸ் தேசிய பூங்கா (Manas National Park), அசாமில் அமைந்துள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளம் மற்றும் ஒரு உயிர்க்கோள காப்பகம் ஆகும்.
- சமீபத்தில் இந்த தேசிய பூங்காவில், R3A என்ற ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் அதன் கன்றை ஈன்றது. R3A அதே பூங்காவில் Laisri என்ற மூத்த காண்டாமிருகத்திற்கு 2013-இல் பிறந்தது.
- ஒரு கொம்பு காண்டாமிருகம்
- ஒரு கொம்பு கொண்ட காண்டாமிருகம் அல்லது இந்திய காண்டாமிருகம் எனப்படும் இவை, ஒரு அச்சுறுத்தப்படும் உயிரினமாகும், இவை சிவப்பு பட்டியலில் (IUCN Red list) ‘பாதிக்கப்படக்கூடிய’ (Vulnerable) உயிரினங்கள் வகையில் பட்டியலிடப்பட்டுள்ளது. தற்போது, இந்த தேசிய பூங்காவில் 42 காண்டாமிருகங்கள் உள்ளன.
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ
- ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் காட்டுத் தீ (Australia fires) வேகமாகப் பரவி வருகிறது. அந்த நாட்டின் நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெப்பநிலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
3 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு
- தமிழகத்தில் தற்போது 24 அரசு மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகை ஆகிய மாவட்டங்களில் அமைய உள்ள புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு தலா ரூ.70 கோடி வீதம் மொத்தம் ரூ.210 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கத்திற்கு 'இந்தியன் வங்கி' நிதிஉதவி
- தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி, தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்கத்திற்கு (WEWA), தொழிலைத் தொடங்க நிதி உதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
- WEWA: Women Entrepreneurs Welfare Association.
விளையாட்டு நிகழ்வுகள்
டேபிள் டென்னிஸ்
டேபிள் டென்னிஸ் தரவரிசை (U-21): மனவ் தாக்கர் - முதலிடம்
- சமீபத்தில் செய்திகளில் வெளிவந்த மனவ் தாக்கர் (Manav Thakkar), டேபிள் டென்னிஸ் விளையாட்டின் பிரபலமான ஆளுமை ஆவார்.
- தரவரிசையில் முதலிடம்: 19 வயதான இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் மனவ் தாக்கர் 21 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றை பிரிவில் சமீபத்திய சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (ITTF) தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
- ITTF: International Table Tennis Federation.
மாரத்தான்
சென்னை மாரத்தான் 2020
- சென்னையில், ஜனவரி 5-அன்று நடைபெற்ற, 2020 சென்னை மாரத்தான் போட்டியில் (Chennai Marathon 2020) ஆண்கள் பிரிவில் கென்ய வீரா் பெலிக்ஸ் ராப் முதலிடத்தைப் பெற்றாா் (2: 29:03 மணி நேரம்) பெண்கள் பிரிவில் தமிழகத்தின் ராசிபுரத்தைச் சோ்ந்த சுகுணா முதலிடத்தைப் பெற்றாா் (3:44:30 மணி நேரம்).
கிரிக்கெட்
இா்பான் பதான் - ஓய்வு அறிவிப்பு
- இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டா் இா்பான் பதான் (வயது 35), அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- பந்தை ஸ்விங் செய்யும் இயற்கை தன்மை வாய்ந்தவா் இா்பான், 29 டெஸ்ட்களில் 1105 ரன்கள், 100 விக்கெட்டுகள், 120 ஒருநாள் ஆட்டங்களில் 1544 ரன்கள், 173 விக்கெட்டுகள், 24 டி20 ஆட்டங்களில் 172 ரன்கள், 28 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் 2020
- 2020-ஆம் ஆண்டின் முதல் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் ஜனவரி 6-அன்று வெளியிட்டது.
- ஆண்கள் ஒற்றையர் தரவரிசை (முதல் 3 இடங்கள்)
- 1. ரபெல் நடால் (ஸ்பெயின்), 2. நோவக் ஜோகோவிச் (செர்பியா), 3. ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)
- பெண்கள் ஒற்றையர் தரவரிசை (3 இடங்கள்)
- 1. ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா), 2. கரோலினா பிளிஸ்க்கோவா (செக் குடியரசு), 3. சிமோனா ஹலோப் (ருமேனியா).
முக்கிய நபர்கள்
முன்னாள் சபாநாயகர் - பி.எச்.பாண்டியன்
- தமிழ்நாட்டின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் (வயது 74) அண்மையில் சென்னையில் காலமானார்..
- நெல்லை மாவட்டம், கோவிந்தப்பேரியை சேர்ந்தவர் பி.எச்.பாண்டியன்.
- 1985 முதல் 89 வரை சபாநாயகர் பதவி வகித்த பி.எச்.பாண்டியன், சபாநாயகருக்கான வானளாவிய அதிகாரம் குறித்த நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர்.
நிஸான் கார் நிறுவன முன்னாள் தலைவா் - கார்லோஸ் கோசன்
- அண்மையில் செய்திகளில் வெளிவந்த, நிஸான் கார் நிறுவனத்தின் முன்னாள் தலைவா் கார்லோஸ் கோசன் (Carlos Ghosn) ஜப்பானில் இருந்து லெபனான் நாட்டிற்கு தப்பிச் சென்றார்.
- நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட கார்லோஸ் கோசன், நிபந்தனை ஜாமினில் ஜப்பானில் தங்கி இருந்தார்.
Download this article as PDF Format