Daily Current Affairs January 4th, 2020
TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC and Government exams 2020.
நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 4, 2020
சர்வதேச நிகழ்வுகள்
புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள் - புள்ளிவிவர தகவல்கள்
- 2020-ம் புத்தாண்டு தினமான ஜனவரி 1-அன்று பிறந்த குழந்தைகள் பற்றி யூனிசெப் (UNICEF) நிறுவனம் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
- பசிபிக் பகுதியில் உள்ள பிஜி தீவில் 2020-ம் ஆண்டின் முதல் குழந்தை பிறந்துள்ளது. அமெரிக்காவில் புத்தாண்டு தினம் கடைசியாக வருவதால் அங்கு புத்தாண்டின் கடைசி குழந்தை பிறந்துள்ளது.
- 3,92,078 குழந்தைகள்
- 2020-ம் புத்தாண்டு தினமான ஜனவரி 1-அன்று உலகம் முழுவதும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 78 குழந்தைகள் பிறந்துள்ளன.
- 67,385 குழந்தைகள்
- இந்தியாவில் மட்டும் 67 ஆயிரத்து 385 குழந்தைகள் பிறந்துள்ளன. இது உலகளவில் முதலிடமாகும். இதில் சீனா 2-வது இடத்தை பிடித்துள்ளது. சீனாவில் 46 ஆயிரத்து 299 குழந்தைகள் பிறந்துள்ளன.
- முதல் 8 நாடுகள்
- உலகில் பிறந்த குழந்தைகளில் பாதி அளவு முதல் 8 நாடுகளில் பிறந்துள்ளன. இந்தியா (67,385), சீனா (46,299), நைஜீரியா (26,039), பாகிஸ்தான் (16,787), இந்தோனேஷியா (13,020), அமெரிக்கா (10,452), காங்கோ (10,247), எத்தியோப்பியா (8.493).
- மக்கள்தொகை விவரம் 2019
- ஐ.நா. கணக்கீட்டின்படி 2019-ம் ஆண்டில் சீனாவின் மக்கள்தொகை 143 கோடியாகவும், இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடியாகவும் உள்ளது. 2027-ம் ஆண்டில் மக்கள்தொகையில் இந்தியா சீனாவை முந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019-2050 ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் சுமார் 27.3 கோடி மக்கள் கூடுதலாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய நிகழ்வுகள்
தெலுங்கானா அறிவித்த ''செயற்கை நுண்ணறிவு ஆண்டு 2020'
- தெலுங்கானா மாநிலம் சமீபத்தில் 2020-ஆம் ஆண்டை செயற்கை நுண்ணறிவு ஆண்டாக (2020 Year of Artificial Intelligence) அறிவித்தது. மேலும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சிக்காக தொழில்நுட்ப நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
டெல்லி பூமிக்கு அடி மெட்ரோ ரெயில் தடத்தில் இலவச ‘வைபை’ வசதி
- தெற்கு ஆசிய நாடுகளில் முதல்முறையாக, பூமிக்கு அடியில் செல்லும் டெல்லி மெட்ரோ ரெயில் வழித்தடத்தில், இலவச அதிவேக ‘வைபை‘ (WIFI) வசதி ஜனவரி 2-அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ரஷியா, தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் மெட்ரோ ரெயிலில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இராஜ்ய சபா டி.வி பார்வையாளர்கள் எண்ணிக்கை - 40 லட்சம்
- 2019-ம் ஆண்டில் ராஜ்ய சபா டி.வி. (RS TV) ஒளிபரப்பை ‘யூடியூப்’ வழியாக பார்த்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை எட்டியுள்ளது.
ஆந்திர அரசின் 'வீட்டு வாசலில் மணலை வழங்கும் திட்டம்'
- ஜனவரி 2 முதல் வாடிக்கையாளரின் வீட்டு வாசலில் மணலை வழங்கும் திட்டத்தை (Sand to Customer’s Doorstep) ஆந்திர மாநிலம் சமீபத்தில் அறிவித்தது.
- இந்த திட்டம் கிருஷ்ணா மாவட்டத்தில் ஒரு முன்முயற்சி பைலட் திட்டமாக தொடங்கப்பட்டது, இது மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
PM- KISAN திட்டம்: 3-வது தவணை தொடக்கம்
- PM- KISAN திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டு நிதி உதவி ரூ. 6000 வழங்கப்படுகிறது.
- 3-வது தவணை தொடக்கம்: பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM- KISAN) திட்டத்தின் 3-வது தவணை (3rd installment) கர்நாடகாவின் துமகுருவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் ஜனவரி 2-அன்று வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.
- பி.எம்-கிசான் திட்டம்: தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு தலா ரூ. 2000 என மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ .6000 நிதி உதவி வழங்குவதற்காக பிரதமரால் 2019 பிப்ரவரி மாதம் பி.எம்-கிசான் திட்டம் தொடங்கப்பட்டது. இரண்டாவது தவணை 2019 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டது.
- PM- KISAN: Pradhan Mantri Kisan Samman Nidhi.
பாதுகாப்பு/விண்வெளி
DRDO இளம் விஞ்ஞானிகள் ஆய்வகங்கள்
- பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கர்நாடகாவின் பெங்களூருவில் இருந்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கான DRDO இளம் விஞ்ஞானிகள் ஆய்வகங்கள் (DYSL) என்ற பெயரிலான ஐந்து புதிய பாதுகாப்பு ஆய்வகங்களை தொடங்கி வைத்தார்.
- ஐந்து ஆய்வகங்கள்: புதுமையான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த உள்ள DYSL ஆய்வகங்கள், பெங்களூரு, மும்பை, சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய ஐந்து இந்திய நகரங்களிலிருந்து செயல்படவுள்ளன.
- DYSL: DRDO Young Scientists Laboratories.
விருதுகள்
லோக்மான்ய திலக் தேசிய பத்திரிகையாளர் விருது - சஞ்சய் குப்தா
- சமீபத்தில் ‘லோக்மான்ய திலக் தேசிய பத்திரிகையாளர் விருது’ சஞ்சய் குப்தா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
- சஞ்சய் குப்தா, முன்னணி இந்தி நாளிதழான ‘ஜக்ரான்’ தலைமை ஆசிரியர் ஆவார்.
- இந்த விருது புனேவைச் சேர்ந்த கேசரி-மராத்தா அறக்கட்டளை சார்பில், பத்திரிகைத் துறையில் தனிநபர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் பொருட்டு நிறுவப்பட்டது.
நியமனங்கள்
கினியா-பிஸ்ஸாவ் அதிபராக 'உமரோ சிசோகோ எம்பலோ' - தேர்வு
- சமீபத்தில் கினியா-பிஸ்ஸாவ் (Guinea-Bissau) நாட்டின் அதிபராக உமரோ சிசோகோ எம்பலோ (Umaro Cissoko Embalo) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு கினியா-பிஸ்ஸாவ், இது 1974 இல் போர்ச்சுகலிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
2019-இல் இந்தியாவில் இறந்த புலிகள் எண்ணிக்கை '95'
- வன சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) சமீபத்திய தரவுகளின்படி, 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 95 புலிகள் இறந்துள்ளன.
- 2018-இல், 100 புலிகள் இறந்தன, 2017-இல், புலிகள் இறந்த எண்ணிக்கை 115 ஆக இருந்தது.
- MoEFCC: Ministry of Forest Environment and Climate Change.
விளையாட்டு நிகழ்வுகள்
கைப்பந்து
தேசிய சீனியர் கைப்பந்து 2020: சாம்பியன்கள்
- 68-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (68 th Senior National Volleyball Championship) ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேசுவரத்தில் டிசம்பர் 25-ந் தேதி ஜனவரி 2-வரை நடந்தது.
- ஆண்கள் பிரிவு
- சாம்பியன்: தமிழ்நாடு அணி (தமிழ்நாடு அணி 9-வது முறையாக இந்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது).
- இரண்டாவது இடம்: ரயில்வே அணி,
- மூன்றாவது இடம்: கேரள அணி
- பெண்கள் பிரிவு
- சாம்பியன்: கேரளா அணி
- இரண்டாவது இடம்: ரெயில்வே அணி,
- மூன்றாவது இடம்: மேற்கு வங்காள அணி
- இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர்: எஸ்.வாசுதேவன்.
ஆக்கி
இந்திய ஆக்கி சுனிதா லக்ரா ஓய்வு அறிவிப்பு
- இந்திய ஆக்கி அணியின் பின்கள வீராங்கனை சுனிதா லக்ரா (Sunita Lakra) சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- ஒடிசாவை சேர்ந்த 28 வயதான சுனிதா லக்ரா இந்திய அணிக்காக 139 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். சுனிதா லக்ரா 2018 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை வகித்துள்ளார்.
முக்கிய நபர்கள்
தேசிய கூடைப்பந்து கழக ஆணையர் - டேவிட் ஸ்டெர்ன்
- தேசிய கூடைப்பந்து சங்கம் (NBA) விளையாட்டு லீக்கின் ஆணையராக இருந்த டேவிட் ஸ்டெர்ன் சமீபத்தில் காலமானர்.
- கூடைப்பந்து சமூகத்தில் பிரபலமான நபர் டேவிட் ஸ்டெர்ன், 1984 முதல் 2014 வரை தேசிய கூடைப்பந்து கழகத்தின் ஆணையராக பணியாற்றினார்.
- NBA: National Basketball Association.
முக்கிய தினங்கள்
ஜனவரி 4 - உலக பிரெயில் தினம்
- ஆண்டுதோறும் ஜனவரி 4 அன்று உலக பிரெயில் தினம் (World Braille Day) கடைபிடிக்கப்படுகிறது.
- கண்பார்வை குறைபாடு உடையவர்களுக்கு படிக்கவும் எழுதவும் உதவும் வகையில் "பிரெயில் முறையை கண்டுபிடித்தற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேரந்த லூயிஸ் பிரெயில் அவர்களின் நினைவாக அவரது பிறந்த நாளான ஜனவரி 4 அன்று இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Download this article as PDF Format