TNPSC current Affairs January 3, 2020 - Download as PDF

Daily Current Affairs January 3, 2020

TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC and Government exams 2020.

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 3, 2020
 சர்வதேச நிகழ்வுகள்
அணு ஆயுத சோதனை தடை கைவிட வட கொரியா முடிவு 
  • அணு ஆயுத சோதனைகளுக்கு சுயமாக விதித்துக்கொண்ட தடையைக் கைவிடுவதாக வட கொரியா அறிவித்துள்ளது. அணு ஆயுத சோதனைகளுக்கு சுயமாக விதித்துக்கொண்ட தடையைக் கைவிடுவதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
  • இந்திய எல்லையில் செல்லிடப்பேசி சேவை: வங்கதேசம் தடை விதிப்பு 
  • இந்திய எல்லைப் பகுதிகளையொட்டியுள்ள இடங்களில் கிராமீன்போன், டெலிடாக், ரோபி, பங்ளாலிங்க் ஆகிய செல்லிடப்பேசி சேவைக்கு வங்கதேச அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. 
குரு கோபிந்த் சிங் பிறந்த நாள் 'பிரகாஷ் பர்வ்' 
  • 2020 ஜனவரி 2 அன்று, 'பிரகாஷ் பர்வ்' (Prakash Parv) என்ற பெயரில் பத்தாவது சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
  • நானாசாஹி (Nanakshahi) என்ற பாரம்பரிய சீக்கிய நாட்காட்டியின்படி, குரு கோபிந்த் சிங்கின் பிறந்த நாள் இந்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி வருகிறது (குரு கோபிந்த் சிங், கிரிகோரியன் நாட்காட்டியின்படி 1666 ஜனவரி 5 ஆம் தேதி பிறந்தார்).
இந்திய நிகழ்வுகள் 
ஸ்வச் சர்வேஷன் லீக் தரவரிசை-2020: இந்தூர் முதலிடம் 
  • 2020-ஆம் ஆண்டின் ஸ்வச் சர்வேஷன் லீக் தரவரிசையில் (Swachh Survekshan League 2020), முதல் மூன்று இடங்களை இந்தூர் போபால் மற்றும் சூரத் நகரங்கள் பெற்றுள்ளன.
இந்திய ரயில்வேயின் ஒருங்கிணைந்த ஹெல்ப்லைன் '139' 
  • இந்திய ரயில்வே பயணிகளுக்காக '139' என்ற ஒருங்கிணைந்த ஹெல்ப்லைன் தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பயணங்களின் போது பயணிகள் தங்கள் குறைகளையும், விசாரணைகளையும் இந்த எண்ணில் தெரிவிக்கலாம். 
உலகின் 2-வது பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலை
  • உலகின் 2-வது பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலையை, ஜனவரி 3 அன்று குஜராத் முதல்வர் விஜய் ராம்னிக்லால் ரூபானி, குஜராத்தின் அகமதாபாத் அருகிலுள்ள சர்தர்தாம் வளாகத்தில் திறந்து வைத்தார்.
  • 50 அடி உயரமும் 70,000 கிலோகிராம் எடையுள்ள இந்த வெண்கல சிலையை, பத்ம பூஷண் விருது பெற்ற ராம் வஞ்சி சுதார் (Ram Vanji Sutar) என்ற சிற்பி ரூ .3.25 கோடி செலவில் வடிவமைத்துள்ளார்.
பாதுகாப்பு/விண்வெளி
சந்திரயான்-3 திட்டம் 
  • நிலவை ஆய்வு செய்வதற்காக ரூ.615 கோடி செலவில், ‘சந்திரயான்-3’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ‘சந்திரயான்-2’ திட்டத்தின் அடிப்படையை கொண்ட ‘சந்திரயான்-3’ திட்டத்தில் லேண்டர், ரோவர், உந்துவிசை தொகுப்பு (பிரோபல்சன் மாடுல்) ஆகியவை உள்ளன. 
ககன்யான் திட்டம் - விமானப்படையினர் 4 வீரர்கள் 

  • இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான்’ திட்டம் வருகிற 2022-ம் ஆண்டு செயல்படுத்தப்படும். ‘ககன்யான்’ விண்வெளி ஓடம் வடிவமைப்புக்கான பெரும்பாலான பணிகள் முடிவடைந்துவிட்டது. ‘ககன்யான்’ திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல 4 இந்திய விமானப்படையினர் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ரஷியாவில் அவர்களுக்கு பயிற்சி தொடங்க இருக்கிறது. 
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் 

  • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. 
  • இதேபோல் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்திலும் புதிதாக ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது.
  • இங்கு 2,300 ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 
  • முதலில் எஸ்.எஸ்.எல்.வி. (SSLV) வகை ராக்கெட் இங்கிருந்து ஏவப்படும். 
  • SSLV: Small Satellite Launch Vehicle.
விருதுகள்
கிருஷி கர்மான் விருதுகள் 2020 - வழங்கும் விழா
  • கிருஷி கர்மன் விருது (Krishi Karman Award) விவசாயத்தின் உற்பத்தி (Production) என்ற அம்சத்தை மையமாகக் கொண்டு வழங்கப்படுகிறது.
  • மத்திய அரசின் வேளாண்மை துறை சார்பில் சாதனை படைத்த 28 விவசாயிகளுக்கு, 21 மாநிலங்களுக்கு ‘கிருஷி கர்மான் விருது வழங்கும் விழா ஜனவரி 2-அன்று கர்நாடக மாநிலம் தும்கூருவில் நடைபெற்றது.
  • ரூ.12000 கோடி வரவு வைக்கும் திட்டம் 
    • ‘கிருஷி சம்மான்’ திட்டத்தில் 8 கோடி விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
    • 'இந்த விழாவில், கிருஷி சம்மான்’ திட்டத்தில் ஒரே நாளில் 6 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.12 ஆயிரம் கோடி வரவு வைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
  • எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி-தமிழ்நாட்டுக்கு விருது 
    • எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் சிறந்த செயல்பாட்டுக்காக தமிழ்நாட்டுக்கு ‘கிருஷி கர்மான் விருதை’ வழங்கப்பட்டது. 
  • தோட்டக்கலை விளைபொருட்கள் பதப்படுத்தும் மையம் 
    • கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானாவில் தோட்டக்கலை விளைபொருட்கள் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த அதற்கான பதப்படுத்தும் மையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நியமனங்கள்  
குயின்ஸ் பல்கலைக்கழக வேந்தராக 'ஹிலாரி கிளிண்டன்' நியமனம் 
  • ஹிலாரி ரோடம் கிளிண்டன் (Hillary Rodham Clinton) இங்கிலாந்தின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் (UK’s Queen’s University) 11-வது மற்றும் முதலாவது பெண் வேந்தராக நியமிக்கப்பட்டார்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) முதல் தலைவர் 'சுரேஷ் சந்திர ஷர்மா'
  • ஜனவரி 2 அன்று டெல்லி AIIMS ’பேராசிரியர் சுரேஷ் சந்திர ஷர்மா (Suresh Chandra sharma) அவர்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • தேசிய மருத்துவ ஆணைய மசோதா: 2019 ஆகஸ்ட் 8, அன்று இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1956-ஐ மாற்றியமைக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2019 அறிமுகப்படுத்தப்பட்டது.
  • NMC: National Medical commission
பொருளாதார நிகழ்வுகள் 
இந்தியாவில் அதிக அந்நிய நேரடி முதலீடு: சிங்கப்பூர் முதலிடம் 
  • 2019-2020 நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவில் அதிக அந்நிய நேரடி முதலீட்டை (FDI) சிங்கப்பூர் நாடு செய்துள்ளது.
  • இந்தியாவில் 8 பில்லியன் டாலர் ($8 billion) அளவிலான முதலீடுகளை செய்து, சிங்கப்பூர் இந்தியாவில் மிகப்பெரிய நேரடி நேரடி முதலீட்டிற்கான ஆதாரமாக உள்ளது.
  • FDI: Foreign Direct Investment.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
‘Reef-Toxic’ என்ற சன் கிரீமை தடை செய்த முதல் நாடு 'பலாவ்' 
  • பவளப்பாறைகள், கடல் வாழ் உயிரினங்களிடம் சேதத்தை ஏற்படுத்தும் நச்சுத்தன்மையுள்ள ‘reef-toxic’ என்ற சன் கிரீமை தடை செய்த முதல் நாடு என்ற சிறப்பை பசிபிக் தீவு நாடான பலாவ் (Palau) பெற்றுள்ளது.
  • பலாவ், பிலிப்பைன்ஸுக்கு அருகிலுள்ள மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு ஆகும்.
விளையாட்டு நிகழ்வுகள் 
ATP கோப்பை டென்னிஸ் 2020
  • ATP கோப்பை என்ற பெயரில் முதல்முறையாக ஆண்கள் டென்னிஸ் தொடர் நடத்தப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி, பிரிஸ்பேன், பெர்த் ஆகிய நகரங்களில் டிசம்பர் 3 முதல்12-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 24 அணிகள் கலந்து கொள்கின்றன.
Download this article as PDF Format
Previous Post Next Post