TNPSC Current Affairs January 25, 2020 - Download as PDF

Daily Current Affairs January 25, 2020

TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 25, 2020
சர்வதேச நிகழ்வுகள்
நேபாள அரசின் ‘சாகா்மாதா சம்பாத்’ நிகழ்ச்சி 2020
  • சாகா்மாதா சம்பாத் (Sagarmatha Sambad) என்ற நேபாள அரசின் உலகளாவிய அளவிலான முதலாவது கலந்துரையாடல் முயற்சி, ஏப்ரல் 2 முதல் 4 வரை நடைபெற உள்ளது. 
  • நேபாளத்தின் ஆளுகைக்கு உள்பட்ட லிம்பியதுரா, லிபுலெக், களாபாணி ஆகிய பகுதிகள் அண்மையில் வெளியிடப்பட்ட இந்தியாவின் புதிய வரைபடத்தில் இணைக்கப்பட்டிருந்தன. 
சீனாவின் வுகான் நகரில் ‘கொரோனா’ வைரஸ் 
  • சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரமான வுகான் நகரில் ‘கொரோனா’ வைரஸ் நோய் தோன்றியது கண்டறியப்பட்டது. சர்வதேச அளவில் இந்த னாய் பெரும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
  • ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது.
மியான்மரில் - இன அழிப்பு நடவடிக்கை
  • மியான்மரில் சிறுபான்மையினரான ரோஹிங்கயாக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்த நாட்டு அரசுக்கு நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் வசித்து வரும் சிறுபான்மை ரோஹிங்கயா இனத்தினருக்கு அந்த நாட்டு அரசு குடியுரிமை மறுத்து வருகிறது.
கார்பன் வெளிப்படுத்தல் திட்டம்: இந்தியா 5-வது இடம்
  • இந்தியாவின் கார்பன் வெளிப்படுத்தல் திட்ட (CDP) ஆண்டு அறிக்கையில் இந்தியா 5-வது இடம் பெற்றுள்ளது.
  • 2018 மற்றும் 2019 க்கு இடையில் கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில் 98% காலநிலை தொடர்பான பிரச்சினைகள் குறித்து குழு அளவிலான மேற்பார்வை கொண்டுள்ளது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
  • இந்த பட்டியலில் 135 நிறுவனங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது
  • ஜப்பான் முறையே 83 நிறுவனங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது
  • யுனைடெட் கிங்டம் 78 நாடுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது
  • 51 நிறுவனங்களுடன் பிரான்ஸ் நான்காவது இடத்தில் உள்ளது
  • 38 நிறுவனங்களுடன் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இந்திய நிகழ்வுகள்
பரஸ்பர பரிமாற்ற பிரதேசமாக 'ஐக்கிய அரபு எமிரேட்ஸ்' அறிவிப்பு 
  • இந்தியாவின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஐக்கிய அரபு நாடுகள் (United Arab Emirates) நாட்டின் ‘பரஸ்பர பரிமாற்ற பிரதேசமாக’ (Reciprocating Territory) அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 1908-ஆம் ஆண்டு சிவில் நடைமுறைக் கோட் பிரிவு 44A-இன் கீழ் 'பரஸ்பர பரிமாற்ற பிரதேசமாக' என்று அறிவித்துள்ளது.
  • இந்தியாவின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, எந்த நாடு ‘பரஸ்பர பரிமாற்ற பிரதேசமாக’ (Reciprocating Territory) அறிவிக்கப்பட்டது? ஐக்கிய அரபு நாடுகள் (United Arab Emirates) 
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை வாசிப்பு 
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சனிக்கிழமைதோறும் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை மாணவா்கள் கட்டாயமாக வாசிக்க வேண்டும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு '100% அந்நிய நேரடி முதலீடு'க்கு ஒப்புதல் 
  • இந்திய டெலி-காம் சேவை நிறுவனம் பாரதி ஏர்டெல் (Bharti Airtel) சமீபத்தில் அந்நிய நேரடி முதலீட்டின் (FDI) வரம்பை 100% ஆக உயர்த்த தொலைத்தொடர்பு துறையிடம் ஒப்புதல் பெற்றது.
  • FDI: Foreign Direct Investment
உத்தரப்பிரதேச அரசின் ‘முக்யமந்திரி கிருஷக் துர்கத்னா கல்யாண் யோஜனா’ 
  • உத்தரப்பிரதேசம் மாநில அரசு சமீபத்தில் ‘முக்யமந்திரி கிருஷக் துர்கத்னா கல்யாண் யோஜனா’ (Mukhyamantri Krishak Durghatna Kalyan Yojana) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
  • 18 முதல் 70 வயதுக்குட்பட்ட விவசாயிகளின், குடும்பத்திற்கு அவர்களின் மரணம் அல்லது வேலை செய்யும் போது உடல் ஊனம் ஏற்பட்டால் இத்திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வழங்கப்படும். 
தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ தலைநகரமாக 'டாமன்' அறிவிப்பு 
  • புதிதாக உருவாக்கப்பட்ட தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ யூனியன் பிரதேசத்தின் தலைநகரமாக டாமன் நகரம் (Daman) அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்கள், தமன் & டியு மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி ஆகியவை ஒரே யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையு ஆகியவை டிசம்பர் 3, 2019 அன்று ஒன்றாக இணைக்கப்பட்டன. 
  • தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் தலைநகராக சில்வாசா இருந்தது.
இந்தியன் ஆயில்-கானா புரிந்துணர்வு ஒப்பந்தம் 
  • இந்தியாவின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) சமீபத்தில் கானா நாட்டின் பெட்ரோலிய ஆணையத்திற்கு உதவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • நாட்டின் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக கானாவில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) மற்றும் கானா நாட்டின் தேசிய பெட்ரோலிய ஆணையம் (NPA) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
SERVICE என்ற தன்னார்வ திட்டம் 
  • ஸ்டீல் ஆணையம் ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்காக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் சமீபத்தில் ‘SERVICE’ என்ற தன்னார்வ திட்டத்தை தொடங்கிவைத்தார். 
  • இந்த திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தானாக முன்வந்து சமூக நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிக்கப்படுவார்கள். கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றில் இத்திட்டம் முக்கிய கவனம் செலுத்துகிறது.
  • SERVICE: SAIL Employees Rendering Volunteerism & Initiatives for Community Engagement
பாதுகாப்பு/விண்வெளி
பாகிஸ்தான் 'காஸ்னவி' அணு ஏவுகணை சோதனை 
  • பாகிஸ்தான், தரையில் இருந்து புறப்பட்டு சென்று தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் ஆற்றல் வாய்ந்த காஸ்னவி அணு ஏவுகணை சோதனையை ஜனவரி 23-அன்று நடத்தியது. 290 கி.மீ. தொலைவு வரையில் சென்று இலக்குகளை தாக்கக்கூடியது ஆகும்.
விருதுகள்
கிரிஸ்டல் விருது 2020 - நடிகை தீபிகா படுகோனே
  • உலக பொருளாதார மன்றத்தின் கிரிஸ்டல் விருது (Crystal Award) சமீபத்தில் எந்த இந்திய நடிகை தீபிகா படுகோனே (Deepika Padukone) அவர்களுக்கு வழங்கப்பட்டது.
  • மனநலத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் 50-வது ஆண்டு கூட்டத்தின் போது கிரிஸ்டல் விருது வழங்கப்பட்டது.
நியமனங்கள்
லெபனான் பிரதமராக 'ஹசன் டயப்' பதவியேற்பு 
  • லெபனான் நாட்டின் பிரதமராக ஹசன் டயப் (Hassan Diab), சமீபத்தில் பதவியேற்றுள்ளார். மேற்கு ஆசியா பகுதியில் பெய்ரூட் நகரை தலைநகராக கொண்ட லெபனான் (Lebanon), அதிகாரப்பூர்வமாக லெபனான் குடியரசு என்று அழைக்கப்படுகிறது.
மாநாடுகள் 
பொலிவுறு நகரங்களுக்கான மூன்றாவது உச்சி மாநாடு 2020
  • பொலிவுறு நகரங்களுக்கான மூன்றாவது உச்சி மாநாடு, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ஜனவரி 24 அன்று நடைபெற்றது.
  • பொலிவுறு நகரத் திட்டத்தின் (ஸ்மாா்ட் திட்டம்) கீழ் கோவை, உக்கடத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்துக்கு மத்திய அரசின் விருது வழங்கப்பட்டது. 
  • திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய வகையில் நாட்டிலேயே வேலூா் மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.
உலக பொருளாதார கூட்டமைப்பு வருடாந்திர மாநாடு 2020
  • சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடு (World Economic Forum Annual Meeting 2020) ஜனவரி 21-24 நடைபெறுகிறது.
  • இந்திய ரெயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் இம்மாநாட்டில் இந்திய 23- அன்று .பங்கேற்றார். 
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
சென்னை தரமணியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகம் 
  • சென்னை தரமணியில் டிட்கோ (TIDCO) மற்றும் டி.எல்.எப் நிறுவனம் (DLF) இணைந்து ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் 27 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த பணிகளுக்காக புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகம் (Down Town) ஒன்றை அமைக்கின்றன. இந்த தொழில்நுட்ப பூங்காவிற்கான அடிக்கல்லை ஜனவரி 23-அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டினார். TIDCO 1965- ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
  • TIDCO: Tamil Nadu Industrial Development Corporation.
ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டம் - நெல்லை, தூத்துக்குடியில் அமல் 
  • ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டம், தமிழ்நாட்டில் முதல் கட்டமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரீட்சார்த்த அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
  • இந்த திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்.
  • 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் தமிழ்நாட்டில்அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2020 ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. 
  • இது தொடர்பாக அரசாணை ஜனவரி 23-அன்று வெளியிடப்பட்டது.
குடியரசு தின விழா அணிவகுப்பு - தேவிகா வழிநடத்தி செல்கிறார்.
  • நாட்டின் 71-வது குடியரசு தினம் ஜனவரி 26-ந்தேதி டெல்லியில் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் கடலோர காவல் படையின் அணிவகுப்பை தமிழ்நாட்டை சேர்ந்த பெண் அதிகாரி தேவிகா வழிநடத்தி செல்கிறார்.
முக்கிய தினங்கள் 
தேசிய வாக்காளர் தினம் - ஜனவரி 25
  • இந்தியாவில் தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதொறும் ஜனவரி 25-அன்று கொண்டாடப்படுகிறது.
  • 10-வது தேசிய வாக்காளர் தினம். இந்த 2020-ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2011-ம் ஆண்டில் முதலாவது தேசிய வாக்காளர் தினம் (National Voters Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • 2020-ஆம் ஆண்டின் மையக்கருத்து: வலுவான ஜனநாயகத்திற்கான தேர்தல் எழுத்தறிவு (Electoral Literacy for a Stronger Democracy) என்பதாகும்
  • கூடுதல் தகவல்கள் 
    • 1950-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி குடியரசு நாடானது.
    • தேர்தல் ஆணையம் 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ந் தேதி பொறுப்பு ஏற்றது. 
    • இந்தியாவில் 16 முறை நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 
    • 1984-ம் ஆண்டு முதல் 18 வயதிற்கும் மேற்பட்ட ஆண், பெண் அனைவரும் ஓட்டுரிமை பெற தகுதி உள்ளவர்களாக ஆக்கப்பட்டனர்.
Download this article as PDF Format
Previous Post Next Post