Daily Current Affairs January 22, 2020
TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC and Government exams 2020.
நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 22, 2020
சர்வதேச நிகழ்வுகள்
JLL பெருநகர உந்த குறியீட்டு தரவரிசை 2020
- அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகளாவிய ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான ஜோன்ஸ் லாங் லாசல்லே (JLL) , சமீபத்தில் உலகெங்கிலும் உள்ள 129 நகரங்களின் மதிப்பிட்டு குறியீட்டை வெளியிட்டது.
- இதில் 2020 JLL பெருநகர உந்த குறியீட்டு தரவரிசையின்படி (JLL City Momentum Index 2020), ‘உலகின் மிகவும் ஆற்றல் வாய்ந்த நகரம்’ என்று ஐதராபாத் நகரம், தேர்வு செய்யப்பட்டுள்ளது. முக்கிய இந்திய நகரங்கள் பேட்டாருல்ல தரவரிசை இடங்கள் விவரம்:
- ஐதராபாத் - 1, பெங்களூரு - 2, சென்னை - 5, டெல்லி - 6.
- இந்திய- நேபாள நாடுகளுக்கிடையே வா்த்தகம் மற்றும் மக்கள் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் தோக்பானி-பிரட்நகா் இடையில் இந்திய உதவியுடன் இரண்டாவது சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச் சாவடியை, பிரதமா் நரேந்திர மோடியும், நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஒலியும் ஜனவரி 21-அன்று கூட்டாக திறந்துவைத்தனர்.
இந்திய நிகழ்வுகள்
ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்கள் மசோதா 2020
- ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்கள் அமைப்பது குறித்து மாநில அரசு தயாரித்த மசோதா சட்டப்பேரவையில் ஜனவரி 20 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, திட்டமிடபட்டுள்ள தலைநகரங்கள் விவரம்:
- நிர்வாகப் பணி தலைநகரம் - விசாகப்பட்டினம்,
- சட்டப்பேரவை தலைநகரம் - அமராவதி
- நீதித் துறைக்கு தலைநகரம் - கர்னூல் மாவட்டம்.
காவல் துறையினருக்கான 'போல்நெட் 2.0' தளம்
- காவல் துறையினா் மற்றும் பாதுகாப்புப் படையினா் தங்களுக்குள் எளிதில் தொடா்புகொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்ட 'போல்நெட் 2.0' (POLNET 2.0) தளத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஜனவரி 20-அன்று தொடக்கிவைத்தார்.
வாக்காளர் 'முக அடையாளம் காணும் செயலி' தெலுங்கானாவில் அறிமுகம்
- நாட்டிலேயே முதல்முறையாக, வாக்காளர்களின், முக அடையாளம் காணும் செயலி தெலுங்கானா மாநிலத்தில் அறிமுகப்படுத்த, தெலுங்கானா மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
- இங்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில், மேட்சால் மால்கஜ்கிரி மாவட்டம், கோம்பல்லி நகராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள, 10 வாக்குச் சாவடிகளில், முதற்கட்டமாக இந்த செயலி, பயன்படுத்தப்படவுள்ளது.
பீகார் மாநிலத்தில் '18034 கி.மீ. நீள மனிதசங்கிலி'
- பீகார் மாநில அரசு தனது ‘ஜல்-ஜீவன்-ஹரியாலி’ பிரச்சாரத்தின் (Jal-Jeevan-Hariyali campaign) கீழ், சமீபத்தில் 18034 கி.மீ நீளமுள்ள மனித சங்கிலியை ஏற்பாடு செய்தது, இதில் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.
- இந்த நிகழ்வில் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார்.
ஒடிசாவின் சிலிக்கா ஏரியில் காணப்பட்ட '146 இர்ராவடி டால்பின்கள்'
- சிலிகா மேம்பாட்டு ஆணையம் சார்பில், டால்பின் கணக்கெடுப்புப்பணி ஒரே நேரத்தில் ஒடிசா கடற்கரையிலும் இந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரியான சிலிக்கா ஏரியிலும் நடத்தப்பட்டது. நேரடியாக நடத்தப்பட்ட இந்த காலா ஆய்வில் 146 இர்ராவடி டால்பின்கள் (Irrawaddy Dolphins) உள்ளதாக கண்டறியப்பட்டது.
- உலகின் நீர்வாழ் பாலூட்டிகளான இர்ராவடி டால்பின்கள் ஒரே ஏரியில் முதல்முறையாக இந்த அளவில் கண்டறியப்பட்டுள்ளன.
- கடந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிலிக்காவில் 151 இர்ராவடி டால்பின்கள் காணப்பட்டன.
பாதுகாப்பு/விண்வெளி
தஞ்சாவூரில் சுகோய் விமானப்படை பிரிவு '222 டைகர் சார்க்ஸ்' தொடக்கம்
- தஞ்சாவூர் விமான படைத்தளத்தில் சுகோய்-30 ரக போர் விமான படைப்பிரிவை முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் ஜனவரி 20-அன்று தொடங்கி வைத்தார்.
- 'டைகர் சார்க்ஸ்' எண்-222 (222 Tiger Sharks’ Squadron) என பெயரிடப்பட்ட இந்த புதிய விமானப்படை பிரிவு, பிரமோஸ் ஏவுகணை பொருத்தப்பட்ட சுகோய்-30 எம்.கே.ஐ. ரக (Sukhoi-30MKI) போர் விமானங்களை கொண்டதாகும்.
- இந்த நிகழ்வில், இந்திய விமானப்படை தலைமை தளபதி ஆர்கேஸ்.பதோரியா, பாதுகாப்புதுறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை செயலாளர் சதீஷ்ரெட்டி, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் தலைவர் மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
K-4 ஏவுகணை வெற்றிகர சோதனை
- நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை எடுத்துச்சென்று ஏவக்கூடிய K-4 ஏவுகணை ஜனவரி 19-அன்று ஆந்திர மாநில கடற்பகுதியில், பகல் நேரத்தில் நீருக்கு அடியில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
- இந்திய பாதுகாப்புத் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இந்த ஏவுகணையை உருவாக்கியது. இந்தியாவில் தயாரிக்கப்படும் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலில் இந்த ஏவுகணைகள் பொருத்தப்படும்.
- K-4 ஏவுகணை 3,500 கி.மீ. தொலைவு வரை உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
ஜப்பான் உருவாக்கும் 'விண்வெளி பாதுகாப்புப் படை'
- ஜப்பான் வான் பாதுகாப்பு படையின் ஓா் அங்கமாக டோக்கியோ அருகே உள்ள ஃபியூச்சு விமானப் படை தளத்தில் 'விண்வெளி பாதுகாப்புப் படை' உருவாக்கப்பட உள்ளது.
- அமெரிக்க பாதுகாப்புப் படையின் புதிய பிரிவாக, விண்வெளிப் பாதுகாப்புப் படைப் பிரிவை அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் தொடங்கி வைத்தார்.
விருதுகள்
தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா 2020
- சென்னை கலைவாணர் அரங்கில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மொத்தம் 45 பேருக்கு விருதுகளை வழங்கினார்.
- விருது பெற்றவர்களின் விவரம்:
- 2020-ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது- ந.நித்தியானந்தபாரதி,
- 2019-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது- செஞ்சி ந.ராமச்சந்திரன்,
- அம்பேத்கர் விருது - க.அருச்சுனன்
- அண்ணா விருது - கோ.சமரசம்
- பெருந்தலைவர் காமராஜர் விருது- மதிவாணன்
- மகாகவி பாரதியார் விருது - பேராசிரியர் ப.சிவராஜி
- பாவேந்தர் பாரதிதாசன் விருது - த.தேனிசை செல்லப்பா
- தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - சே.சுந்தரராஜன்
- முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது - மணிமேகலை கண்ணன்
- தமிழ்த்தாய் விருது - சிகாகோ தமிழ்ச் சங்கம்
- கபிலர் விருது- புலவர் வெற்றியழகன்
- உ.வே.சா.விருது- வே.மகாதேவன்
- கம்பர் விருது- சரஸ்வதி ராமநாதன்
- சொல்லின் செல்வர் விருது- சிந்தனைக் கவிஞர் முனைவர் கவிதாசன்
- உமறுப்புலவர் விருது- லியாகத் அலிகான்
- ஜி.யு.போப் விருது- மரிய ஜோசப் சேவியர்
- இளங்கோவடிகள் விருது- கவிக்கோ ஞானச்செல்வன் என்ற கோ.திருஞானசம்பந்தம்
- அம்மா இலக்கிய விருது- உமையாள் முத்து
- சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது- அசோகா சுப்பிரமணியன் என்ற சோ.கா.சுப்ரமணியன்
- மறைமலையடிகளார் விருது- ப.முத்துக்குமாரசுவாமி
- அயோத்திதாசப் பண்டிதர் விருது- புலவர் வே.பிரபாகரன்
- முதலமைச்சர் கணினித் தமிழ் விருது- முனைவர் த.நாகராஜன்
- சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது - சா.முகம்மது யூசுப், மஸ்தான் அலி, சிவ.முருகேசன், மரபின் மைந்தன் (முத்தையா), வத்சலா, முருகுதுரை, மாலன் என்ற வே.நாராயணன், கிருசாங்கினி என்ற பிருந்தா நாகராஜன், அ.மதிவாணன்.
- மொழியியல் விருதுகள்
- உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது - பெ.ராஜேந்திரன் (மலேசியா)
- இலக்கண விருது முத்து கஸ்தூரிபாய் (பிரான்சு)
- மொழியியல் விருது - சுபதினி ரமேஷ் (இலங்கை) .
- கலைச்செம்மல் விருதுகள்
- மரபுவழி கலை வல்லுனர் விருது - கணபதி ஸ்தலபதி, ராமஜெயம், தமிழ் அரசி, கீர்த்தி வர்மன், கோபாலன் ஸ்தலபதி
- நவீனபாணி கலை வல்லுனர் விருது - எஸ்.பி.நந்தன், கோபிநாத், ஆனந்த நாராயணன், நாகராஜன், டக்ளஸ், ஜெயக்குமார் பெற்றனர். இவர்களுக்கு கலைச்செம்மல் விருதும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.
- நாட்டுடமை ஆக்கப்பட்டதற்கான பரிவு தொகை
- நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களுக்காக 7 தமிழ் அறிஞர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் முதலமைச்சர் வழங்கினார். அவர்கள் விவரம்:
- தமிழ் அறிஞர்கள் சண்முகம், கவிஞர் நா.காமராசன், இரா.இளவரசு, அடிகளாசிரியர், புலவர் இறைகுருவனார், பண்டித மா.கோபாலகிருஷ்ணன், பாபநாசம் குறள்பித்தன்.
நியமனங்கள்
ஜவஹா்லால் நேரு நினைவு அருங்காட்சியக தலைவர் 'நிருபேந்திர மிஸ்ரா'
- புது தில்லியில் உள்ள ஜவஹா்லால் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக (NMML) நிா்வாகக் குழு தலைவராக, நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளாா்.
- பிரதமா் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலா் பொறுப்பில் இருந்தவர் நிருபேந்திர மிஸ்ரா ஆவார்.
- NMML: Nehru Memorial Museum & Library.
பாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவர் 'ஜெ.பி. நட்டா'
- பாரதிய ஜனதா கட்சியின் 14-வது தேசியத் தலைவராக ஜெ.பி. நட்டா (J.P.NATTA) ஜனவரி 20 அன்று தேர்வு செய்யப்பட்டார்.
- ஜகத் பிரகாஷ் நட்டா என்கிற ஜே.பி.நட்டா (வயது 59) இமாசலபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
பொருளாதார நிகழ்வுகள்
Oxfam அமைப்பின் 'டைம் டு கேர்' ஆய்வு முடிவுகள்
- உலக பொருளாதார மன்றத்தின் 50-வது ஆண்டுக் கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை முன்னிட்டு, ஆக்ஸ்ஃபாம் உரிமைகள் குழு (Oxfam) சார்பில் 'டைம் டு கேர்' (Time to Care') என்ற ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அவற்றின் முக்கிய விவரங்கள்:
- உலகில் உள்ள 2,153 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, 60 சதவீத மக்கள் அதாவது 460 கோடி ஏழைகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
- இந்தியாவில் உள்ள 70% ஏழைகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பைவிடவும், வெறும் 1% பணக்காரர்களின் சொத்து 4 மடங்கு அதிகம் மற்றும், இந்தியாவில் உள்ள 63 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு என்பது 2018-19ம் ஆண்டில் மத்திய அரசு தாக்கல் செய்த பொதுபட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.24,42,200 கோடியை விட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதார வளா்ச்சி - 4.8% IMF கணிப்பு
- உலக அளவிலான பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை சர்வதேச செலாவணி நிதியம் (IMF) வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் 4.8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- நடப்பு நிதியாண்டில் உலகின் பொருளாதார வளா்ச்சி விகிதம் 2.9 சதவீதமாக இருக்கும். அடுத்தடுத்த நிதியாண்டுகளில் முறையே 3.3%, 3.4%-ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- IMF தலைமை பொருளாதார நிபுணா் கீதா கோபிநாத் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
புத்தக வெளியீடு
காந்தி'ஸ் ஹிந்துயிஸம்: தி ஸ்ட்ரகிள் அகெயின்ஸ்ட் ஜின்னா'ஸ் இஸ்லாம்/ எம்.ஜே.அக்பா்
- ''காந்தி'ஸ் ஹிந்துயிஸம்: தி ஸ்ட்ரகிள் அகெயின்ஸ்ட் ஜின்னா'ஸ் இஸ்லாம்'' (Gandhi’s Hinduism: The Struggle Against Jinnah’s Islam) என்ற தலைப்பிலான ஆங்கில புத்தகத்தை முன்னாள் மத்திய அமைச்சா் எம்.ஜே.அக்பா் எழுதியுள்ளார்.
- இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாளில் மகாத்மா காந்தி பாகிஸ்தானில் இருக்க விரும்பினார் என்று இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
தூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
- தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜனவரி 20-அன்று நடை பெற்றது.
- இந்த கூட்டத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 6 புதிய தொழில் நிறுவனங்களையும், தூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆலைகள், நிறுவனங்கள் மற்றும் அமையும் இடங்கள் விவரம்:
- வின்டெக் (சீனா) மின்சார கார் தொழிற்சாலை - ஸ்ரீபெரும்புதூர்
- அல்கெராபி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - தூத்துக்குடி.
விளையாட்டு நிகழ்வுகள்
கிரிக்கெட்
அதிவேகமாக 5000 ரன்களை கடந்த கேப்டன் - விராட் கோலி சாதனை
- ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் 5 ஆயிரம் ரன்களை விரைவாகக் கடந்த கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 82 இன்னிங்ஸ்களில் விளையாடி எம். எஸ். தோனியின் சாதனையை முறியடித்தார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களுருவில் ஒருநாள் ஆட்டத்தில் இச்சாதனையை கோலி படைத்தாா்.
- அதிவேக 5000 ரன்களை கடந்த கேப்டன்கள்
- விராட் கோலி - 82 இன்னிங்ஸ்
- எம். எஸ். தோனி - 127 இன்னிங்ஸ்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை 2020
- ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஜனவரி 20-அன்று வெளியிட்டது.
- அணிகள் தரவரிசை: இங்கிலாந்து அணி (125 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
- பேட்ஸ்மேன் தரவரிசை: விராட்கோலி, ரோகித் சர்மா, பாபர் அசாம் (பாகிஸ்தான்), டுபிளிஸ்சிஸ் (தென்ஆப்பிரிக்கா), ராஸ் டெய்லர் (நியூசிலாந்து)
- பந்து வீச்சாளர்கள் தரவரிசை: பும்ரா (இந்தியா), டிரென்ட் பவுல்ட் (நியூசிலாந்து), முஜீப் உர் ரஹ்மான் (ஆப்கானிஸ்தான்), ரபடா (தென்ஆப்பிரிக்கா), கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)
- ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் தொடருகிறார்.
மல்யுத்தம்
ரோம் சா்வதேச ரேங்கிங் மல்யுத்தம் 2020
- ரோம் சா்வதேச ரேங்கிங் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் வென்ற பதக்கங்கள் விவரம்:
- பஜ்ரங் புனியா - தங்கப்பதக்கம் (ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவு)
- ரவிக்குமாா் தாஹியா - தங்கப்பதக்கம் (ஆண்கள் 61 கிலோ எடைப்பிரிவு).
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டி 'ஆஸ்திரேலிய ஓபன்'
- டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் (Australian Open 2020) மெல்போா்னில் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெறுகிறது.
- ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில், ஆஸ்திரேலிய ஓபன் போட்டி முதல் போட்டியாகும்.
- ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் யுஎஸ் ஓபன் நிகழ்வுகள் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் ஆகும்.
Download this article as PDF Format