Daily Current Affairs January 2, 2020
TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC and Government exams 2020.
நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 2, 2020
சர்வதேச நிகழ்வுகள்
2020 புத்தாண்டு தொடக்கத்தைக் கொண்டாடிய உலகின் முதல் நகரம் - ஆக்லாந்து
- 2020-ஆம் ஆண்டு புத்தாண்டு மற்றும் புதிய தசாப்தத்தின் (2020 New Year and new decade) தொடக்கத்தைக் கொண்டாடிய உலகின் முதல் பெரிய நகரம் என்ற சிறப்பை நியூஸிலாந்து நாட்டின் 'ஆக்லாந்து' நகரம் (Auckland) பெற்றது.
- ஆக்லாந்தை தொடர்ந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தைத் தொடர்ந்து ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா ஆகியவை 2020-ஆம் ஆண்டை வரவேற்றன.
பாகிஸ்தான் சிறைகளில் 282 இந்தியா்கள்
- பாகிஸ்தான் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் 282 இந்தியா்கள் அடைக்கப்பட்டுள்ளனா். இதில் 55 போ் பொதுமக்கள், 227 போ் மீனவா்கள் ஆவா்.
- 2008 மே 21-ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களிடம் உள்ள சிறைக்கைதிகள் தொடா்பான விவரத்தை ஜனவரி மற்றும் ஜுலை 1-ஆம் தேதி பரிமாறிக் கொள்ள வேண்டும்.
இந்திய நிகழ்வுகள்
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலையின் நீளம் -1,32,500 கி.மீ.
- இந்தியாவில் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 91 ஆயிரத்து 287 கி.மீ. நீளத்துக்கே தேசிய நெடுஞ்சாலைகள் இருந்ததாகவும், அது கடந்த 31.12.2019-ந் தேதி நிலவரப்படி 1 லட்சத்து 32 ஆயிரத்து 500 கி.மீட்டராக அதிகரித்து இருப்பதாகவும் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல வாகனங்கள் பயன்படுத்தும் ‘பாஸ்டேக்‘ அட்டைகள் டிசம்பர் 26-ந் தேதி வரை 1 கோடியே 11 லட்சத்து 70 ஆயிரத்து 811 வினியோகிக்கப்பட்டுள்ளது.
குஜராத் 'காக்ராபார் அணு மின் நிலையம்'
- குஜராத் மாநிலம், காக்ராபாா் அணு மின் நிலையத்தில் 700 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 3-ஆவது உலை 2020 ஏப்ரல் மாதம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
- மகாராஷ்டிரத்தில் உள்ள தாராபூா் அணு மின் நிலையத்தின் முதலாவது மற்றும் 2-ஆவது உலைகள் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நாட்டின் முதல் இரு அணு மின் உற்பத்தி உலைகளான, இவை1969-ஆம் ஆண்டு அக்டோபரில் தனது உற்பத்தியை தொடங்கின.
- கா்நாடகத்தில் உள்ள காய்கா அணு மின் நிலையத்தின் முதல் உலை 941 நாள்கள் இயங்கி உலக சாதனை படைத்துள்ளது.
- இந்திய அணுசக்தி நிறுவனத்தின் (NPCIL) கட்டுப்பாட்டில் மொத்தம் 22 மின் உற்பத்தி உலைகள் உள்ளது.
22-வது ஆண்டில் 'திரிணாமுல் காங்கிரஸ்'
- காங்கிரஸ் கட்சியில் முன்னணி தலைவராக விளங்கி வந்த மம்தா பானர்ஜி, பின்னர் அதில் இருந்து விலகி கடந்த 1998-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி திரிணாமுல் காங்கிரசை தொடங்கினார். திரிணாமுல் காங்கிரஸ் 2020 ஜனவரி 1-அன்று 22-வது ஆண்டில் அடியெடுத்து வைத்ததுள்ளது.
அகில் பாரதிய குஜராத்தி சமாஜ் சங்கலன் சமிதி (ABGSSS)
- அகில் பாரதிய குஜராத்தி சமாஜ் சங்கலன் சமிதி (ABGSSS) என்ற அமைப்பு சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் உருவாக்கப்பட்டது.
- இந்த அமைப்பின் நோக்கம், மாநிலத்தின் அபிவிருத்திச் செயற்பாட்டில் வெளிநாடு வாழ் குஜராத்திகளை (Non-resident Gujaratis) இணைப்பது ஆகும்.
- அகில் பாரதிய குஜராத்தி சமாஜ் சங்கலன் சமிதி, இந்த அமைப்பின் தலைமை புரவலராகவும், வெளிநாடு வாழ் குஜராத்திகளின் அமைச்சராகவும் (NRGs) மாநிலத்தின் முதலமைச்சர் செயல்படுவார்.
- ABGSSS: Akhil Bharatiya Gujarati Samaj Sankalan Samiti.
பாதுகாப்பு/விண்வெளி
2020-ஆம் ஆண்டின் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் 'GSAT-30'
- 2020-ஆம் ஆண்டின் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளாக ஜனவரி 17 அன்று 'GSAT-30' என்ற செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது.
- GSAT-30 கனரக புவி-நிலை தகவல் தொடர்பு செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கொரூ விண்வெளி மையத்திலிருந்து Ariane-5ECA என்ற ஏவுதல் வாகனம் மூலம் செலுத்தப்படவுள்ளது.
சைனியா கர்த்தா விபாக் - சிறு தகவல்
- சைனியா கர்த்தா விபாக் (Sainya Karta Vibhag) என்றும் அழைக்கப்படும் புதிய இராணுவ விவகாரத்துறைக்கு (Department of Military Affairs) பாதுகாப்புப் படைத் தலைவரான முப்படைகளின் தலைமை தளபதி தலைமை (Chief of Defence Staff) தாங்குவார்.
விருதுகள்
எர்த்ஷாட் சுற்றுச்சூழல் பரிசு
- காலநிலை மாற்ற நெருக்கடியைச் சமாளிக்க புதிய தீர்வை ஊக்குவிக்க கேம்பிரிட்ஜ் டியூக் இளவரசர் வில்லியம், எர்த்ஷாட் (Earthshot Prize) எனப்படும் சுற்றுச்சூழல் பரிசை (Environmental Prize) அறிவித்துள்ளார்.
- 2021 முதல் தொடங்கி அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வெற்றியாளர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்படுவர். பல மில்லியன் பவுண்டுகள் விருதாக வழங்கப்படும்.
- 2030-ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு குறைந்தது 50 தீர்வுகளை வழங்குவதே இதன் பரிசின் நோக்கம் ஆகும்.
சங்கீதா கலநிதி’ விருது 2019: எஸ்.சௌம்யா
- சமீபத்தில் மியூசிக் அகாடமியின் புகழ்பெற்ற ‘சங்கீதா கலாநிதி’ (Sangita Kalanithi) விருதுக்கு முன்னணி கர்நாடக பாடகர் 'எஸ்.சௌம்யா' தேர்வு செய்யப்பட்டு சமீபத்தில் இந்த விருதைப் பெற்றார்.
நியமனங்கள்
இரயில்வே வாரியத்தலைவர் 'வினோத் குமார் யாதவ்'
- சமீபத்தில் ரயில்வே வாரியத்தின் தலைவராக வினோத் குமார் யாதவ் (Vinod Kumar Yadav) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநாடுகள்/விழா
மணிப்பூரி மெய்டி சமூகங்களின் 'லாய் ஹரோபா' திருவிழா
- லாய் ஹரோபா (Lai Haroba) என்ற ஐந்து நாள் திருவிழா, திரிபுரா மாநிலத்தின் அகர்தலா நகரில் நடைபெற்றது. லாய் ஹரோபா என்பது மணிப்பூரி மெய்டி சமூகங்கள் (Manipuri meitei communities) கடைபிடிக்கும் ஒரு சடங்கு திருவிழா ஆகும்.
பொருளாதார நிகழ்வுகள்
2019 டிசம்பர் மாத GST வருவாய் - ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் கோடி
- 2019 டிசம்பர் மாதம், ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 184 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், தொடர்ந்து 2-வது மாதமாக ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.
- 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.97 ஆயிரத்து 276 கோடி தான் இருந்தது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
நத்தை இனம் 'டோனி விட்டன்' - சிறு தகவல்
- டோனி விட்டன் (Tony Whitten) என்று பெயரிடப்பட்ட 'லாண்டூரியா டோனிவிட்டேனி' (Landouria tonywhitteni) என்பது ஒரு நத்தை (Snail) இனமாகும்.
- டோனி விட்டன் ஒரு பிரிட்டிஷ் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். இவர் இறந்த பிறகு அவரது பெயரில் ஒரு பரிசு நிதி அமைக்கப்பட்டது. இந்த பரிசை சமீபத்தில் வென்றவர்களில் ஒருவர் இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு நத்தை இனத்திற்கு டோனி விட்டன் பெயரை சூட்டினார்.
முக்கிய தினங்கள்
ஜனவரி 1 - பீமா-கோரேகான் போர் நினைவு தினம்
- பீமா-கோரேகான் போர் நினைவு தினம் (Battle of Koregaon Bhima), ஜனவரி 1 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள பீமா-கோரேகான் பகுதியில் 1818-இல் உயர் ஜாதியினரான பேஷ்வாக்களுக்கும், தலித் பிரிவைச் சேர்ந்த மஹர் இன வீரர்களை உள்ளடக்கிய ஆங்கிலேயப் படைக்கும் இடையே போர் நடைபெற்றது.
- இந்த போரில் ஆங்கிலேயப் படை வெற்றி பெற்றது. இதையொட்டி, பீமா-கோரேகானில் நினைவுச் சின்னம் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது.
Download this article as PDF Format