Daily Current Affairs January 16-17, 2020
TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC and Government exams 2020.
நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 16-17, 2020
பாஸ்டேக் முறையில் கட்டண வசூலிக்கும் முறை - அமல்
இந்திய நிகழ்வுகள்‘புரூ’ பழங்குடியினருக்கு திரிபுராவில் நிரந்தர குடியுரிமை
- மிசோரம் மாநிலத்தில் இருந்து இடம்பெயா்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக திரிபுராவில் வசித்துவரும் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘புரூ’ பழங்குடியினத்தவா்களுக்கு (Bru refugees) திரிபுராவில் நிரந்தர குடியுரிமையை வழங்கும் ஒப்பந்தம் உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் திரிபுரா, மிஸோரம், மத்திய அரசு ஆகியவற்றுக்கு இடையே ஜனவரி 16-அன்று டெல்லியில் கையெழுத்தானது.
- திரிபுராவில் கடந்த 1997-ஆம் ஆண்டிலிருந்து அகதிகளாக புரூ பழங்குடியினத்தவா்கள் வாழ்ந்து வந்தனா். இந்த ஒப்பந்தம் மூலம் அவா்கள் திரிபுரா மாநிலத்தவா்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனா்.
- ஹிமந்த் விஸ்வ சா்மா: புரூ பழங்குடியின மக்களுக்கும், திரிபுரா, மிஸோரம் அரசுகளுக்கும் இடையே தீா்வை ஏற்படுத்த ஹிமந்த் விஸ்வ சா்மா மிக முக்கியப் பங்கு வகித்தாா்.
- நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில் கட்டண வசூலிக்கும் முறை 2020 ஜனவரி 15-முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2021 ஜனவரி 15 முதல் தங்க நகைகளுக்கு 'ஹால்மார்க்' கட்டாயம்
- 2021 ஜனவரி 15-ஆம் தேதி முதல் ஆபரண விற்பனையாளா்கள் ஹால்மாா்க் பொறிக்கப்பட்ட தங்க நகைகளை, 14,18,22 காரட்டுகளில் மட்டுமே விற்பனை செய்ய முடியும் மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை இதற்கான ஆணையை வெளியீட்டுள்ளது.
தென்-மத்திய ரயில்வே வருவாய்: வீட்டுவாசல் வங்கி முறையில் சேகரிக்கும் SBI வங்கி
- இரயில் நிலையங்களிலிருந்து பெறப்படும் வருவாயை வீட்டுவாசல் வங்கி முறையில் (Doorstep Banking ) சேகரிப்பதற்காக இந்திய ரயில்வேயின் தென்-மத்திய ரயில்வே மண்டலத்துடன் (SCR) சமீபத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- SBI வங்கி, தென்-மத்திய ரயில்வே மண்டலத்தின் அனைத்து 585 நிலையங்களையும் உள்ளடக்கிய வருவாயை நேரடியாக எடுப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
- SCR: South-Central Railway zone
மடகாஸ்கருக்கு '1 லட்சம் கல்வி உரை புத்தகங்கள்'
- உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு உதவ, இந்தியா சமீபத்தில் மடகாஸ்கர் (Madagascar) நாட்டிற்கு கிட்டத்தட்ட 1 லட்சம் கல்வி உரை புத்தகங்களை (text books) வழங்கியது.
- மடகாஸ்கருக்கான இந்திய தூதர் அபய் குமார் சமீபத்தில் இந்த கல்வி உரை புத்தகங்களை கிழக்கு ஆபிரிக்க நாடான மடகாஸ்கருக்கு வழங்கினார்.
- ‘பிரதம்’ (NGO Pratham) என்று அழைக்கப்படும் அரசு சாரா அமைப்பு இந்தியாவில் கல்வி நிலை அறிக்கையை (ASER) வெளியிடுகிறது. 2019-ஆம் ஆண்டிற்கான கல்வி நிலை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஐந்து வயது குழந்தைகளின் கற்றல் நடவடிக்கைகள், அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகளை விட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் குழந்தைகளின் கற்றல் நடவடிக்கைகளில் சிறப்பாக உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
- ASER: Annual Status of Education Report.
ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளம் (IRAD) - உருவாக்கம்
- சாலை பாதுகாப்பு பங்குதாரர்களின் கூட்டத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளம் (IRAD), IIT சென்னை (IIT Madras) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
- IRAD: Integrated Road Accident Database
மகாராஷ்டிராவில் 350 அடி உயர 'அம்பேத்கர் சிலை'
- மகாராஷ்டிரத்திவில் 350 அடி உயரத்தில் அம்பேத்கருக்கு வெண்கலச் சிலை அமைக்க மகாராஷ்டிர அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தாதர் பகுதியிலுள்ள இந்து மில்ஸின் 12 ஏக்கர் நிலத்தில் இச்சிலை அமைக்கப்படவுள்ளது. சிலைக்கு கீழ் பகுதியில் 100 அடிக்கு அம்பேத்கர் நினைவகம் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளது. ரூ. 1,069.95 கோடியில் நிறுவப்படவுள்ள அம்பேத்கர் சிலையின் மொத்த உயரம் 450 அடி வரை இருக்கும்.
பாதுகாப்பு/விண்வெளி
கே-9 வஜ்ரா பீரங்கி செயல்பாடு - தொடக்கிவைப்பு
- குஜராத்தில் உள்ள L&T ஆயுத தொழிற்சாலையில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 51-ஆவது கே-9 வஜ்ரா-டி (K9-Vajra-T) ரக பீரங்கியின் செயல்பாட்டை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஜனவரி 16-அன்று நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
- 50 டன் எடையுள்ள கே-9 வஜ்ரா-டி ரக பீரங்கி, 47 கிலோ எடை கொண்ட வெடிபொருள்களை வீசி எறியக் கூடியது. 43 கி.மீ தொலைவு வரை வெவ்வேறு இடங்களில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
இந்திய-ஜப்பான் கடலோரக் காவல்படை கூட்டுப்பயிற்சி 2020 - ‘சாஹ்யோக்-கைஜின்’
- இந்திய - ஜப்பான் நாடுகள் இடையே 19-ஆவது கடலோரக் காவல்படை கூட்டுப் பயிற்சி சென்னை கடற்பகுதியில் 15 நாட்டிக்கல் மைல் தொலைவில், ஜனவரி 16-அன்று நடைபெற்றது.
- இக்கூட்டுப் பயிற்சிக்கு ‘சாஹியோக்-கைஜின்’ (Sahyog-Kaijin) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
- ஜப்பான் கடலோரக் காவல் படையின் ‘எச்சிகோ’ ரோந்துக் கப்பல் இந்த பயிற்சியில் பங்கேற்றது.
விருதுகள்
திருவள்ளுவர் திருநாள் விருதுகள் 2020
தமிழக அரசு சார்பில், 2020ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாள் விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அவை:
- 2020-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது - ந.நித்தியானந்த பாரதி
- 2019-ம் ஆண்டுக்கான விருதுகள்
- பேரறிஞர் அண்ணா விருது - கோ.சமரசம்(
- பெருந்தலைவர் காமராஜர் விருது - மா.சு.மதிவாணன்
- மகாகவி பாரதியார் விருது - ப.சிவராஜி
- பாவேந்தர் பாரதிதாசன் விருது - த.தேனிசை செல்லப்பா
- தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - சே.சுந்தரராஜன்
- முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - டாக்டர் மணிமேகலை கண்ணன்
சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள் 2019
- 2019-ம் ஆண்டுக்கான சித்திரை தமிழ்ப் புத்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை:
- தமிழ்த்தாய் விருது (2019) – சிகாகோ தமிழ்ச் சங்கம்
- கபிலர் விருது – புலவர் வெற்றியழகன்
- உ.வே.சா. விருது – வே.மகாதேவன்
- கம்பர் விருது – சரசுவதி ராமநாதன்
- சொல்லின்செல்வர் விருது – கவிதாசன்
- ஜி.யு.போப் விருது – மரியஜோசப் சேவியர்
- உமறுப்புலவர் விருது – லியாகத் அலிகான்
- இளங்கோவடிகள் விருது – ஞானச்செல்வன் என்ற கோ.திருஞானசம்பந்தம்
- அம்மா இலக்கிய விருது – உமையாள் முத்து
- சிங்காரவேலர் விருது – அசோகா சுப்பிரமணியன்
- மறைமலையடிகளார் விருது – புலவர் ப.முத்துக்குமாரசுவாமி
- அயோத்திதாச பண்டிதர் விருது – புலவர் வே.பிரபாகரன்
- சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது – சா.முகம்மது யூசுப் உள்ளிட்ட 10 பேர்
- முதலமைச்சர் கணினித் தமிழ் விருது (2018) – த.நாகராசன்
- உலக தமிழ்ச் சங்க விருதுகள்
- இலக்கிய விருது - மலேசியா பெ.ராசேந்திரன்;
- இலக்கண விருது – பிரான்ஸ் முத்து கஸ்தூரிபாய்;
- மொழியியல் விருது – இலங்கை சுபதினி ரமேஷ்.
சுவச்சதா தர்பன் விருது: பூரி மாவட்டம், ஒடிசா
- பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் புதுமையான முறைகளைப் பின்பற்றியதற்காக ஒடிசா மாநிலத்தின் பூரி மாவட்ட நிர்வாகம் சுவச்சதா தர்பன் விருதை (Swachhata Darpan Award) வென்றுள்ளது.
- ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை (DDWS) இந்த விருதை வழங்கியது.
- DDWS: Department of Drinking Water and Sanitation.
நியமனங்கள்
CBI இயக்குநராக அலோக் குமார் வா்மா பொறுப்பேற்பு
- CBI இயக்குநராக அலோக் குமார் வா்மா (Alok Kumar Verma) மீண்டும் ஜனவரி 15-அன்று பொறுப்பேற்றுள்ளார். அலோக் குமாா் வா்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ஜனவரி 14-அன்று ரத்து செய்து தீா்ப்பளித்தது.
இரஷியாவின் புதிய பிரதமா் மிகயீல் மிஷுஸ்டின்
- இரஷியாவில் அதிபா் விளாதிமீா் புதினால் புதிய பிரதமராக மிகயீல் மிஷுஸ்டின் நியமிக்கப்பட்டுள்ளார். ரஷியா நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் திமித்ரி மெத்வதேவ் அண்மையில் ராஜினாமா செய்தார்.
CRPF நிர்வாக இயக்குநராக 'ஆனந்த் பிரகாஷ் மகேஷ்வரி' பதவியேற்பு
- மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (CRPF) நிர்வாக இயக்குநராக ஆனந்த் பிரகாஷ் மகேஷ்வரி பதவியேற்றார்.
- உலகின் மிகப் பெரிய துணை ராணுவப் படையான CRPF படையில் 3.25 லட்சம் பணியாளா்கள் உள்ளனா். நக்ஸல் தடுப்பு நடவடிக்கைகள், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், பாதுகாப்புப் பணி உள்ளிட்டவை CRPF வீரா்களின் முக்கிய பணிகளாகும்.
மாநாடுகள்
இந்தியப் பிராந்திய காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு 2020
- இந்தியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்றங்களின் கூட்டமைப்பின் ஏழாவது மாநாடு 2020, உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் உள்ள சட்டப்பேரவையில், ஜனவரி 15- முதல் 19 வரை நடைபெறுகிறது.
- 7th Commonwealth Parliamentary Association India Region Conference 2020
பொருளாதார நிகழ்வுகள்
டிஜிட்டல் மய வணிகம்: அமேசான் 1 பில்லியன் டாலர் முதலீடு
- இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை டிஜிட்டல் மயமாக்க 1 பில்லியன் டாலர் ($ 1 billion) அளவில் முதலீடு செய்ய உள்ளதாக சமீபத்தில் அமேசான் (Amazon) நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா, சீனா முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம்
- அமெரிக்கா, சீனா இடையிலான முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீனத் தலைமை ஆலோசகர் லியு ஹீ ஆகியோரது முன்னிலையில் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் ஜனவரி 15-அன்று கையெழுத்தானது.
அறிவியல் தொழில்நுட்பம்
தனியுரிமை மையப்படுத்தப்பட்ட தேடுபொறி 'OneSearch'
- சர்வதேச தொலைபேசி தொடர்பு நிறுவனமான வெரிசோன் மீடியா (Verizon) சமீபத்தில் தனியுரிமையை மையமாகக் கொண்ட புதிய தேடுபொறியை ‘ஒன் செர்ச்’ (OneSearch) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
முக்கிய நபர்கள்
பு.ரா.கோகுலகிருஷ்ணன்
- சென்னை உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், குஜராத் உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான பு.ரா.கோகுலகிருஷ்ணன் (வயது 92) ஜனவரி 15-அன்று காலமானாா்.
மன்மோகன் மொஹாபத்ரா
- ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான மன்மோகன் மொஹாபத்ரா (Manmohan Mohapatra) சமீபத்தில் காலமானார்.
- தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகளாக சிறந்த ஒடிய திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்.
- சீதா ராதி 1976-ஆம் ஆண்டில் இயக்கிய அவரது முதல் முழு நீள ஒடிய மொழி படம் ஆகும்.
முக்கிய தினங்கள்
திருவள்ளுவா் தினம் - ஜனவரி 16
- 2020ஆம் ஆண்டு ஜனவரி 16 அன்று, திருவள்ளுவர் தினம் கடைபிடிக்கப்பட்டது.
Download this article as PDF Format