TNPSC Current Affairs January 11-12, 2020 - Download as PDF

Daily Current Affairs January 11-12, 2020

TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC and Government exams 2020.

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 11-12, 2020
சர்வதேச நிகழ்வுகள் 
சூரிய ஒளி பூங்கா: கியூபாவிக்கு இந்தியா நிதி உதவி 
  • சூரிய ஒளி பூங்காக்களை நிறுவுவதற்காக இந்தியாவில் இருந்து 75 மில்லியன் டாலர் கடனுதவியை (LOC) கியூபா நாடு பெறவுள்ளது. இந்தியாவின் எக்சிம் வங்கி (Exim Bank) மூலம் இந்த நிதிஉதவி வழங்கப்படவுள்ளது.
  • LOC: Line Of Credit.
42 நாடுகளுடன் குற்றவியல் சட்ட உதவி ஒப்பந்தங்கள் 
  • சமீபத்தில், பிற நாடுகளுடனான குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவிக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. தற்போது 2020 ஜனவரி வரை இந்தியாவில் மொத்தம் 42 நாடுகளுடன் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. உள்துறை அமைச்சகம் ஈந்த விவகாரங்களை மேற்கொள்கிறது.
15 நாடுகளின் தூதர்கள் காஷ்மீர் வருகை 
  • காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலையை ஆராய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஐ ஜஸ்டர் உட்பட 15 நாடுகளின் தூதர்கள் ஸ்ரீநகர் வந்துள்ளனர். இவர்கள் ஜனவரி 10 முதல் 11 வரை தங்கி ஆராயவுள்ளனர்.
  • 2019 ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அங்கு ஊரடங்கு உட்பட பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன.
இந்திய நிகழ்வுகள்
ஆந்திர அரசின் தாய்மடி (அம்ம வொடி) திட்டம் 
  • குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ஆண்டுக்கு ரூ. 15,000 வழங்கும் தாய்மடி (அம்ம வொடி) திட்டத்தை ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி சித்தூரில் ஜனவரி 9-அன்று தொடங்கி வைத்தாா்.
உலகில் வேகமாக வளரும் நகரங்கள் பட்டியல்: மலப்புரம் முதலிடம்
  • சர்வதேச வார இதழான தி எகானமிஸ்ட் வெளியிட்டிருக்கும் பட்டியலில், உலகிலேயே மிக வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தின் திருப்பூர் 30வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • கேரளாவின் கோழிக்கோடு 4-வது இடத்திலும், கொல்லம் 10-வது இடத்திலும், திரிசூர் 13-வது இடத்திலும், சூரத் 27-வது இடத்திலும், தமிழகத்தின் திருப்பூர் 30-வது இடத்திலும் உள்ளன.
முக அங்கீகார தொழில்நுட்பம் நிறுவப்பட்ட ரயில் நிலையங்கள் 
  • இந்திய ரயில்வே மகாராஷ்டிராவில் மன்மத் மற்றும் பூசாவல் நிலையங்கள் மற்றும் கர்நாடகாவின் பெங்களூரு நிலையத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முக அங்கீகார தொழில்நுட்பத்தை (Facial Recognition Technology) நிறுவியுள்ளது.
  • ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ரெயில்டெல் நிறுவனம், வீடியோ கண்காணிப்பு அமைப்பு (Video Surveillance System) மற்றும் முக அங்கீகார திட்டத்தை மேற்கொள்கிறது.
  • AI: Artificial Intelligence.
ஜம்மு-காஷ்மீரில் அமையும் 'உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம்' (359 மீ.) 
  • காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கும் முக்கிய உதம்பூர்- ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, பக்கல் மற்றும் கவுரி பகுதிகளை இணைக்கும் வகையில் (Bakkal and Kauri) புதிய ரயில் பாலம் (highest railway bridge) கட்டப்பட உள்ளது.
  • ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள இந்த பாலம் உலகின் மிக உயர்ந்த ரயில் பாலமாக இருக்கும்.
  • 1.315 கி.மீ நீளம் மற்றும் நதி படுக்கைக்கு 359 மீ உயரத்தில் இந்த பாலம் கட்டப்படுகிறது. இந்த திட்டம் டிசம்பர் 2021 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தற்போது, உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் சீனாவின் பீபன் நதி சுய்பாய் ரயில் பாலம் ஆகும்.
அருணாச்சல பிரதேச சட்டமன்றத்தின் 'புதிய இலச்சினை'
  • அருணாச்சல பிரதேசம் தனது சட்டமன்றத்திற்கு (APLA) புதிய இலச்சினையை சமீபத்தில் ஏற்றுக்கொண்டது.
  • ஃபோக்ஸ்டைல் ஆர்க்கிட் (Foxtail Orchid) மலர்களை கொண்ட இந்த புதிய சட்டமன்ற இலச்சினை, மாநிலத்தின் தனித்துவமான அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிறது.
குஜராத் ஆயுர்வேத நிறுவனங்களுக்கு 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அந்தஸ்து' 
  • குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆயுர்வேத நிறுவனங்களுக்கு (A cluster of Ayurveda institutions), “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்” (Institutes of National Importance) என்ற நிலையை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் 'LGBT சமூகத்தினர்கான மாநில சிறப்பு நீதிமன்றம்' 
  • LGBT எனப்படும் ஒரே பாலின உறவாளர் சமூகத்திற்காக மாநில அளவிலான சிறப்பு நீதிமன்றத்தை (Adalat for LGBT community) அமைக்க கேரள மாநிலம் முடிவுசெய்துள்ளது. இந்த நீதிமன்றம் மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைக்கப்படவுள்ளது.
  • LGBT ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையில் சுகாதார காப்பீட்டுக் கொள்கையை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இது LGBT ஊழியர்கள் என்பவர்கள் ஒரே பாலின உறவாளர்களாவர்.
விவசாயிகள் தற்கொலை பட்டியல் 2018 மகாராஷ்டிரா முதலிடம் 
  • தமிழ்நாடு இரண்டாம் இடம்: நாடு முழுவதும் 2018-ம் ஆண்டில் மட்டும் 1,34,516 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 17,972 விவசாயிகளின் தற்கொலையுடன் மகாராஷ்டிரம் முதல் இடத்திலும், 13,896 விவசாயிகளின் தற்கொலையுடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளன. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய கட்டடங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தல்
  • மத்திய கலாச்சாரத்துறை சார்பில் கொல்கத்தாவில் உள்ள பழைய கரன்சி கட்டடம், பெல்வேடியர் இல்லம், மெட்கால்ஃப் இல்லம் மற்றும் விக்டோரியா நினைவரங்கம் ஆகிய 4 புதுப்பிக்கப்பட்ட கட்டடங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • கொல்கத்தா துறைமுக சபையின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
இணையம் அடிப்படை உரிமை - தீர்ப்பு உச்ச நீதிமன்றம்
  • ஜனநாயகத்தில் பேச்சுரிமை அடிப்படை உரிமையாக இருப்பது போல, இணையதளத்தின் மூலம் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் என்பதும் ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாக உள்ளது.
  • இணையதளத்தில் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் சட்டப்பிரிவு 19-ன் கீழ் வருகிறது என்று ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள்-2020
  • 31 விவரங்கள்: 2020 ஏப்ரல் 1 முதல் செப்டம்பா் 30 வரை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் செல்லிடப்பேசி செயலி மூலம் 
  • வீடுகள்தோறும் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் 31 விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளன. 
  • தொலைபேசி இணைப்பு, காா், இருசக்கர வாகனங்கள், மிதிவண்டி, செல்லிடப்பேசி, தொலைக்காட்சி, 
  • 2021 மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் செல்லிடப்பேசி செயலி மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.
நீதிக்கான சீக்கியா்கள் அமைப்பு - சிறு தகவல் 
  • காலிஸ்தான் ஆதரவு சீக்கிய அமைப்பான ‘நீதிக்கான சீக்கியா்கள்’ (Sikhs for Justice) அமைப்புக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2019 ஜூலை மாதம் மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது. 
  • மத்திய அரசு தடை விதித்தது சரி என்று, டெல்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேல் தலைமையிலான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழான தீா்ப்பாயம் ஜனவரி 9-அன்று தெரிவித்துள்ளது.
டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் 2020
  • டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் 2020 பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் 
  • அறிவித்தது. டெல்லி சட்டமன்றத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 70 ஆகும். கடந்த தேர்தல்களில் 67 இடங்களை ஆம் ஆத்மி கட்சி வென்றது.
  • பிப்ரவரி 8 ம் தேதி நடைபெறும் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் சுமார் 1.46 கோடி வாக்காளர்கள் (80.55 லட்சம் ஆண்கள் + 66.35 லட்சம் பெண்கள்) வாக்களிக்க உள்ளனர். முடிவுகள் பிப்ரவரி 11 அன்று அறிவிக்கப்படஉள்ளது. 
  • கடந்த தேர்தலில் 70 இடங்களில், 67 இடங்களை ஆம் ஆத்மி கட்சி வென்றது.
பாதுகாப்பு/விண்வெளி 
சர்வதேச பல்தரப்பு கடற்படைப் பயிற்சி ‘மிலன்’ 2020
  • 2020 மார்ச் மாதத்தில் சர்வதேச பல்தரப்பு கடற்படைப் பயிற்சி நிகழ்வான ‘மிலன்’ (MILAN Naval Exercise) விசாகப்பட்டினம் நகரில் நடைபெறுகிறது.
  • 2020 MILAN பயிற்சி “Synergy Across the Seas” என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது, 30 சர்வதேச கடற்படைகள் இந்நிகழ்வில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
விபின் ராவத் தலைமையின் கீழ் 37 செயலர்கள் நியமனம்
  • நாட்டின் முதலாவது முப்படைத் தளபதியாக ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி விபின் ராவத் பொறுப்பேற்றாா். ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் பணியாற்றும் திறனை மேம்படுத்தும் நோக்கிலேயே ‘முப்படைத் தளபதி’ பதவி உருவாக்கப்பட்டது. 
  • முப்படைத் தளபதி விபின் ராவத் தலைமையின் கீழ் 2 இணைச் செயலர்கள், 13 துணைச் செயலர்கள் மற்றும் 22 செயலர்கள் என மொத்தம் 37 பேர் செயல்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சகம் ஜனவரி 10-அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவர்கள் முப்படைகளின் நடவடிக்கைகள் மற்றும் குழு இயக்கம் உள்ளிட்டவற்றில் முக்கிய முடிவுகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுகள் 
இயல்விருது 2019 - சு.வெங்கடேசன் 
  • கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2019-ம் வருடத்திற்கான இயல் விருது என அழைக்கப்படும் தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதை, கவிஞரும், எழுத்தாளரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் அவர்களுக்கு அறிவித்துள்ளது.
  • இந்தப் பரிசு விருதுக் கேடயமும் 2500 டொலர் பணப்பரிசும் கொண்டது. இயல் விருது வழங்கும் விழா கனடாவின் டோறொன்ரோ நகரில், 2020 ஜூன் மாதம் நடைபெறுகிறது.
  • சாகித்ய அக்காதமி விருது 
    • இவர் எழுதிய முதல் நாவலான காவல் கோட்டம் நூலுக்கு 2011-ம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டது. 
  • சு.வெங்கடேசன்: 
    • சு. வெங்கடேசன், மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர். இவர், இதுவரை 4 கவிதை தொகுப்புகள், 5 கட்டுரை தொகுப்புகள், 2 புதினங்கள், ஒரு கிராஃபிக் நாவல் எழுதியிருக்கிறார்.
    • அண்மையில் வெளிவந்து இவரது நாவல் 'வேள்பாரி' ஆகும், வேளிர்குலத் தலைவன் பாரியை சேர சோழ பாண்டிய மன்னர் மூவரும் ஒன்றிணைந்து போர்தொடுத்தும் தோற்கடிக்க முடியாத கதையை இந்த நாவல் சொல்கிறது. 
முப்பவரப்பு வெங்கையா நாயுடு தேசிய விருதுகள் 2020
  • முதலாவது முப்பவரப்பு வெங்கையா நாயுடு தேசிய விருதுகள் 20200(Muppavarapu Venkaiah Naidu National Awards) அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விருதும் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசையும் பதக்கத்தையும் கொண்டது. முப்பவரப்பு வெங்கையா நாயுடு சிறப்பு தேசிய விருது, முப்பவரபு அறக்கட்டளையால் நிறுவப்பட்டது, சமூக சேவைக்கான முப்பவரப்பு தேசிய விருது, ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது.
  • முப்பவரப்பு வெங்கையா நாயுடு சிறப்பு தேசிய விருது (Muppavarapu Venkaiah Naidu National Award for Excellence) 
    • டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன், வேளாண் விஞ்ஞானி
  • சமூக சேவைக்கான முப்பவரப்பு தேசிய விருது (Muppavarapu National Award for Social Service) 
    • டாக்டர் குட்டா முனிரத்னம், சமூக சேவகர்
பொருளாதார நிகழ்வுகள் 
இந்திய பொருளாதார வளர்ச்சி 5.8% - உலக வங்கி கணிப்பு 
  • இந்தியாவில் வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடையும் 2019 - 20ம் நிதியாண்டில் நிதி சாராத நிறுவனங்களின் மந்த நிலையே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5% ஆகக் குறையக் காரணம் என்றும், ஆனால், வரவிருக்கும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8% ஆக உயரும். இந்தியா சரிவில் இருந்து மீளும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளது. 
  • மத்திய புள்ளியியல் அலுவலகம் (NSO) ஜனவரி 7-அன்று, நடப்பு 2019-20 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 சதவீதமாக குறையும். இது, முந்தைய நிதியாண்டில் 6.8 சதவீதமாக இருந்தது என்று குறிப்பிட்டது.
புத்தக வெளியீடு 
பேக்ஸ் சினிகா: இந்திய விடியலுக்கான தாக்கங்கள் / சமீர் சரண், அகில் தியோ
  • ‘பேக்ஸ் சினிகா: இந்திய விடியலுக்கான தாக்கங்கள்’ என்ற தலைப்பிலான ஆங்கில புத்தகத்தை (PAX SINICA: Implications for the Indian Dawn) மத்திய வெளிவிவகார அமைச்சர் சமீபத்தில் வெளியிட்டார். 
  • இந்த புத்தகத்தை சமீர் சரண் (Samir Saran) மற்றும் அகில் தியோ (Akhil Deo) ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
நன்னீர் ஆமைகளுக்கான 'இந்தியாவின் முதல் மறுவாழ்வு மையம்' 
  • நன்னீர் ஆமைகளுக்கான இந்தியாவின் முதல் மறுவாழ்வு மையம் (Rehabilitation Centre for Freshwater Turtles) பீகார் மாநிலத்தில் அமையவுள்ளது. 
  • ஒரே நேரத்தில் 500 ஆமைகளுக்கு இடம் அலிக்கு வகையில் இந்த மையம் பீகார் பாகல்பூர் வனப் பிரிவில் அமையவுள்ளது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
சென்னை புத்தக கண்காட்சி 2020 - தொடக்கம் 
  • தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ((BAPASI) சார்பில் 43-வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 9-அன்று தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
  • ‘சென்னை புத்தக கண்காட்சிக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் ரூ.75 லட்சம் நிதி வழங்கப்படும்’, என்று கண்காட்சி தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
  • புத்தகக் கண்காட்சியில் வழங்கப்பட்ட விருதுகள் விவரம்:
    1. சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பு செம்மல் க.கணபதி விருது - அரு.லெட்சுமணன் 
    2. புத்தக கண்காட்சி தொடக்க விழாவில், சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பு செம்மல் க.கணபதி விருது 
    3. சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்பக செம்மல் ச.மெய்யப்பன் விருது - ஆர்.அருணாசலம் 
    4. சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது - பொற்கோ
    5. சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது - என்.எஸ்.சிதம்பரம் 
    6. பபாசியின் சிறந்த பதிப்பாளருக்கான விருது - ராம லெட்சுமணன் 
    7. சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தை கவிஞர் அழ வள்ளியப்பா விருது - செ.சுகுமாரன் 
    8. பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது - ரமணிசந்திரன் 
  • கண்காட்சிக்கு அரங்கத்துக்கு வெளியே ‘கீழடி-ஈரடி தமிழ் தொன்மங்கள்’ எனும் தலைப்பில் கீழடி அகழாய்வு தொடர்பான சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டது. 
  • ஒடிசாவை சேர்ந்த பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன பட்நாயக் வடிவமைத்த திருவள்ளுவர் மணற்சிற்பமும் அமைக்கப்பட்டிருந்தது. 
விளையாட்டு நிகழ்வுகள் 
ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டம் (TOPS)
  • 2020, 2024, 2028 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரா்,வீராங்கனைகள் பதக்கம் பெறும் வகையில் நிதியுதவி செய்ய டாப்ஸ் (TOPS) என்ற சிறப்பு திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. 
  • ஒலிம்பிக் சிறப்பு பதக்கத் திட்டத்தின் கீழ் வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.1.5 கோடி நிதியை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
  • TOPS: Target Olympic Podium Scheme
பாட்மிண்டன்

மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்-2020
  • 2020 மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டிகள், மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் ஜனவரி 7 முதல் 12 வரை நடைபெறுகிறது.
  • மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் (Malaysia Masters badminton) போட்டி, 2009-இல் தொடங்கியதில் இருந்து இந்தியா மூன்று முறை வெற்றியாளராக உருவெடுத்துள்ளது.
  • இந்தியாவின் பி.வி. சிந்து 2013 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளிலும், சாய்னா நேவால் 2017 இல் சாம்பியன் பட்டன்களை வென்றனர். 
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு 2020
  • 3-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஜனவரி 10 முதல் 22 வரை நடைபெறுகிறது. 
  • 20 வகையான விளையாட்டுகளில் 17 மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட பிரிவில் வீரர்-வீராங்கனைகளுக்கு இந்த போட்டி நடத்தப்படுகிறது. 
  • நாடு முழுவதும் இருந்து 6,500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
முக்கிய தினங்கள் 
தேசிய இளைஞர் தினம் - ஜனவரி 12
  • சுவாமி விவேகானந்தர் பிறந்த நாநாளான ஜனவரி 12, தேசிய இளைஞர் தினமாக (National Youth Day) கடைபிடிக்கப்படுகிறது. (National Youth Day in India, 12 January, Birthday of Swami Vivekananda).
Previous Post Next Post