TNPSC Current Affairs January 24, 2020 - Download as PDF

Daily Current Affairs January 24, 2020

TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 24, 2020
சர்வதேச நிகழ்வுகள்
உலகளாவிய ஜனநாயக தர வரிசை 2019 
  • உலகின் 165 சுதந்திர நாடுகள் மற்றும் 2 பிரதேசங்களில் ஜனநாயகத்தின் நிலை குறித்த பொருளாதார புலனாய்வு அமைப்பு (EIU) 2019-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஜனநாயக தர வரிசை பட்டியலை (2019 Democracy Index), வெளியிட்டுள்ளது.
  • நார்வே, ஐஸ்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் முறையே முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. வடகொரியா கடைசி இடத்தில் உள்ளது.
  • இந்தியா 51-வது இடம்: இந்த பட்டியலில் இந்தியா 6.90 புள்ளிகள் பெற்று, 51-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா, 2018-ம் ஆண்டு 7.23 புள்ளியுடன் 41-வது இடத்தை பிடித்திருந்தது.
  • "குறைபாடுள்ள ஜனநாயகம்" (Flawed Democracy) என்ற பிரிவில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது.
  • நாட்டில் "சிவில் உரிமைகள் அரிப்பு" (erosion of civil liberties) என்பது வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணம் என்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. 
  • EIU: Economist Intelligence Unit.
தலைமை நிர்வாக அதிகாரிகள் குறித்த 'PwC கணக்கெடுப்பு 2020'
  • PwC என்ற சர்வதேச ஆலோசனை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEOs) குறித்த சமீபத்திய கணக்கெடுப்பின்படி, அமெரிக்க நாடு அதிக வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. 
  • இந்த கணக்கெடுப்பில், சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது, இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்தது. PwC: Price Waterhouse Coopers.
இந்தியாவின் முதல் ஆப்பிரிக்க மாநாட்டு மையம் 'MGICC' 
  • இந்தியாவின் முதல் ஆப்பிரிக்க மாநாட்டு மையம் (MGICC) சமீபத்தில் நைஜர் (Niger) என்ற ஆப்பிரிக்க நாட்டில் திறக்கப்பட்டது.
  • இந்தியாவின் உதவியுடன் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கட்டப்பட்ட மகாத்மா காந்தி சர்வதேச மாநாட்டு மையத்தை (MGICC) இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் சமீபத்தில் திறந்து வைத்தார்.
  • MGICC: Mahatma Gandhi International Convention Centre.
இந்திய நிகழ்வுகள்
இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரம் - ஜாரியா (ஜார்கண்ட்) 
  • கிரீன்ஸ்பீஸின் இந்தியா என்ற என்ற அரசு சாரா சுற்றுச்சூழல் அமைப்பால் 2020 ஜனவரி 21 அன்று தேசிய சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு திட்டத்தின் (NAMP) அடிப்படையில் வெளியிடப்பட்ட (Greenpeace Report Airpocalypse-IV)   அறிக்கையின்படி, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாரியா நகரம் இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரம் என்று தெரிவித்துள்ளது. 
  • நிலக்கரியினால் மாசிற்கு பெயர் பெற்ற ஜார்கண்டில் உள்ள ஜாரியா நகரம் 322 µg / m3 (ஒரு கன மீட்டர்/ மைக்ரோகிராம்) கொண்ட மிகவும் மாசுபட்ட இந்திய நகரமாகும். 
  • அதே ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லி 10-வது இடத்தில் உள்ளது. 
  • உத்தரப்பிரதேசத்தில் ஆறு நகரங்கள்: நாட்டின் மிகவும் மாசுபட்ட பத்து நகரங்களில் ஆறு நகரங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளன (நொய்டா, பரேலி, காஜியாபாத், அலகாபாத், அலகாபாத், ஃபிரோசாபாத் மற்றும் மொராதாபாத்).
  • குறைவான மாசுபட்ட நகரம்  லுங்லே: மிசோரம் மாநிலத்தின் லுங்லே நகரம் (Lunglei) மிகக் குறைவான மாசுபட்ட நகரமாக விளங்குகிறது. இது உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைக்கப்பட்ட மாசு துகள் (PM) அளவைக் கொண்ட ஒரே நகரமாகும்.
  • க்ரீன்பீஸ் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது, இந்தியாவில், அமைப்பின் தலைமையகம் பெங்களூரில் உள்ளது.
  • PM 2.5 என்ற அளவை விட காற்றின் மாசு துகள் பொருள் செறிவு (PM2.5 concentration) அதிகமாகும்போது மக்களின் நலன் பாதிக்கிறது.
  • PM: Particulate Matter, NAMP: National Ambient Air Quality Monitoring Programme 
விவசாய நில குத்தகைக் கொள்கை 'உத்தரகண்ட்டில்' அமல் 
  • விவசாய நில குத்தகைக் கொள்கையை (Agricultural land leasing policy) அமல்படுத்திய நாட்டில் முதல் மாநிலமாக உத்தரகண்ட் விளங்குகிறது. 
  • உத்தரகண்ட் மாநில அரசு சமீபத்தில் விவசாய நிலங்களை குத்தகைக்கு விடுவதற்கான கொள்கையை உருவாக்கியுள்ளது.
இந்திய கடற்படை-புவியியல் ஆய்வு மையம் இடையே ஒப்பந்தம் 
  • இந்திய கடற்படைக்கும் இந்திய புவியியல் ஆய்வு மையத்திற்கும் (GSI) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) சமீபத்தில் கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தம் ‘வானிலை மற்றும் கடல்சார்வியலில் கடற்படை பயன்பாட்டிற்கான கடற்பரப்பு வண்டல் தரவு, தயாரிப்புகள் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்வது குறித்தானது ஆகும். 
2020 குடியரசு தின விழா அலங்கார வாகன அணிவகுப்பு - 16 மாநிலங்கள்/அமைச்சகங்கள்
  • டெல்லி ராஜபாதையில் நடைபெறும் 2020 குடியரசு தின விழா அலங்கார வாகன அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்கள் சார்பிலும், மத்திய பொதுப்பணித்துறை, ஜல் சக்தித்துறை உள்ளிட்ட 6 மத்திய அமைச்சக அலுவலகங்கள் சார்பிலும் அலங்கார வாகனங்கள் 
  • அணிவகுக்கின்றன.
  • அய்யனார் கோவில் கொடைவிழா: தமிழ்நாடு அரசு சார்பில் அய்யனார் கோவில் கொடைவிழா அமைப்பு காட்சிப்படுத்தப்படுகிறது.
பாதுகாப்பு/விண்வெளி
உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட ‘சாரங்’ பீரங்கித் துப்பாக்கிகள் 
  • இந்திய இராணுவத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட 18 ‘சாரங்’ பீரங்கித் துப்பாக்கிகளின் முதல் தொகுதி 2020 மார்ச் 31-க்குள் இராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது.
  • Sharang: Indigenously upgraded artillery guns.
விருதுகள்
பால புரஸ்கார்’ விருதுகள் 2020 
  • வீர தீர செயல் புரியும் சிறுவர்களுக்கான (National Bravery Awards for children 2020) 2020-ஆம் ஆண்டின் ‘பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார்’ விருதுகள் ஜனவரி 22 அன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களால் வழங்கப்பட்டன. 
  • மொத்தம் 49 சிறுவர்களுக்கு இந்த விருது வழங்கபட்டது 
  • சமூக சேவை, கல்வியியல், விளையாட்டு, கலை, கலாசாரம் ஆகியவற்றில் புதுமைகள் படைத்த 5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ஆண்டு தோறும் வந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • விருது பேரிடர் முக்கிய சிறுவர்கள்: இஷான் சர்மா, லால்கன்சங் கவுரி மிஸ்ரா, டார்ஷ் மலானி 
  • குழந்தைகளுக்கான தேசிய துணிச்சல் விருதுகள் ஆண்டுதோறும் இந்திய குழந்தைகள் நல கவுன்சில் அமைப்பால் (Indian Council for Child Welfare) வழங்கப்படுகின்றன.
நியமனங்கள்
லெபனான் பெண் ராணுவ அமைச்சர் - ஜீனா அகர் 
  • லெபனான் நாட்டின் ராணுவ அமைச்சராக ஜீனா அகர் என்ற பெண்மணி பதவி ஏற்றுள்ளார். இவர் துணைப் பிரதமராகவும் பதவி வகிப்பார். 
அறிவியல் தொழில்நுட்பம் 

ICICI வங்கியில் ‘அட்டை-இல்லாமல் பணத்தைப்பெறுதல்’ வசதி 
  • இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ICICI வங்கி, சமீபத்தில் தனது ATM-களில் இருந்து ‘அட்டை-இல்லாமல் பணத்தைப்பெறுதல்’ (Card-Less Cash Withdrawal) என்ற வசதியை அறிமுகப்படுத்தியது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
உழவன் செயலியில் கூடுதல் சேவைகள் - அறிமுகம்
  • தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான முக்கிய தகவல்களைத் தருவதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு “உழவன்” செல்போன் செயலி, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அறிமுகம் செய்யப்பட்டது. 
  • தற்போது கூடுதலாக எனது பண்ணை வழிகாட்டி, இயற்கைப் பண்ணையம் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் போன்ற மூன்று சேவைகள், உழவன் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன.
சென்னையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் அபராதம்
  • குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் கூடுதலாக அபராதம் வசூலிக்கலாம் என்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண நடைமுறையை 3 மாதங்களுக்குள் செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகம் 
  • நாட்டிலேயே தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இந்திய அளவில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள் என்ற விகிதாசாரம் நிலவுகிறது. 
  • தமிழ்நாட்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 943 பெண்குழந்தைகள் என்ற நிலை உள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள் 
கேலோ இந்தியா விளையாட்டு 2020 - கவுகாத்தி (அசாம்) 
  • 3-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி (Khelo India Youth Games 2020) அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஜனவரி 10 முதல் 22 வரை னைப்பெற்றது. 6,800 வீரர், வீராங்கனைகள் 20 வகையான பந்தயங்களில் பங்கேற்றனர். 
  • 17, 21 வயதுக்குட்பட்டோா் என இரண்டு பிரிவுகளில் பல்வேறு விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெற்றன.
  • மஹாராஷ்ட்ரா சாம்பியன்: மஹாராஷ்ட்ர மாநிலம் 78 தங்கம், 77 வெள்ளி, 101 வெண்கலம் என்று மொத்தம் 256 பதக்கங்களுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
  • அரியானா 68 தங்கம் உள்பட 200 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பெற்றது. தில்லி 122 பதக்கங்களுடனும் மூன்றாவது இடத்தை பெற்றது.
  • தமிழ்நாடு 22 தங்கம், 32 வெள்ளி, 22 வெண்கலம் என்று 76 பதக்கங்களுடன் 6-வது இடத்தை பிடித்தது.
முக்கிய தினங்கள் 
சர்வதேச கல்வி நாள் - 24 ஜனவரி
  • ஐக்கிய நாடுகள் அமைப்பால் ஜனவரி 24 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சர்வதேச கல்வி தினம் ((International Day of Education) கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2020 ஆம் ஆண்டின் கருப்பொருள்:‘மக்களுக்கான கற்றல், கிரகம், செழிப்பு மற்றும் அமைதி’ (Learning for People, Planet, Prosperity and Peace) என்பதாகும்.
  • இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டம் (RTE), ஆகஸ்ட் 4, 2009 அன்று இயற்றப்பட்டது. இது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21a-வின் கீழ் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க வழிவகை செய்கிறது. இந்தியாவில் ஏப்ரல் 1, 2010 அன்று இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.
  • RTE: Right to Education Act.
ஜனவரி 23 - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்ததினம் (ஜனவரி 23, 2020 - 124-வது பிறந்த நாள்) 

தேசிய பெண் குழந்தைகள் தினம் - ஜனவரி 24, 2020
  • ஆண்டு தோறும் இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day) கொண்டாடப்படுகிறது.
தேசிய பெண் குழந்தைகள் வாரம் 2020
  • தேசிய பெண் குழந்தைகள் வாரம் (National Girl Child Week 2020) - ஜனவரி 24 முதல் 30 வரை.
Download this article as PDF Format
Previous Post Next Post