Daily Current Affairs January 23, 2020
TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC and Government exams 2020.
நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 23, 2020
சர்வதேச நிகழ்வுகள்
சமூக இடம்பெயர்வு குறியீடு 2020: இந்தியா 76-வது இடம்
- உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) சமீபத்தில் ‘சமூக இடம்பெயர்வு குறியீட்டு (Social Mobility Index 2020) தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
- இப்பட்டியலில் இந்தியா 76-வது இடத்தில் உள்ளது. டென்மார்க் பின்லாந்து, நோர்வே, சுவீடன் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் முதல் 5 இடங்களில் உள்ளன.
அரச குடும்ப பட்டங்களை துறந்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி
- இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவிகளை துறக்கின்றனர். இந்த முடிவுக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.
- அரச பட்டங்களை துறந்த இளவரசர் ஹாரி, கனடாவுக்கு சென்று வசிக்கவுள்ளார்.
UNWTO உலக சுற்றுலா பாரோமீட்டர் அறிக்கை 2020
- ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பு (UNWTO), உலகளாவிய சுற்றுலா குறித்த தனது விரிவான அறிக்கையை ‘UNWTO உலக சுற்றுலா பாரோமீட்டர் அறிக்கை’ (UNWTO World Tourism Barometer report’) என்ற தலைப்பில் வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, 2019-ஆம் ஆண்டில் உலகெங்கிலும் 1.5 பில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
- சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனமான, ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் தலைமையிடம் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் அமைந்துள்ளது.
2019-இல் 56 பத்திரிகையாளர்கள் கொலை - ஐ.நா. தகவல்
- 2019-ஆம் ஆண்டில் 56 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பிரச்னைக்குரிய இடங்களுக்கு வெளியே இறந்தனர் என்று ஐ.நா. யுனெஸ்கோ ஆய்வகம் தெரிவித்துள்ளது.
- யுனெஸ்கோ 2010 முதல் 2019 வரையிலான தசாப்தத்தில் 894 பத்திரிகையாளர் கொலைகளை பதிவு செய்துள்ளது, இது ஆண்டுக்கு சராசரியாக 90 ஆகும்
- லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதி 22 கொலைகள், ஆசிய - பசிபிக் நாடுகளில் 15, அரபு நாடுகளில் 10 கொலைகள் என பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்திய நிகழ்வுகள்
2020 குடியரசு தின தலைமை விருந்தினர் - ஜெயிர் பொல்சொனாரோ
- பிரேசில் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோ (Jair Bolsonaro), 2020 ஜனவரி 26-ஆம் தேதி, இந்தியாவின் 71-ஆவது குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக அவா் பங்கேற்கவுள்ளார்.
- இந்தியாவில் ஜனவரி 24 முதல் 27 வரை நான்கு நாள்களுக்கு பிரேசில் அதிபா் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.
காய்கறி உற்பத்தி: மேற்கு வங்காளம் முதலிடம்
- 2018-19 ஆம் ஆண்டிற்கான வேளாண் அமைச்சகத்தின் மாநில வாரியாக தோட்டக்கலை உற்பத்தி
- தரவுகளின்படி, காய்கறி உற்பத்தியில் மேற்கு வங்காளம் கடந்த 2019-ஆம் ஆண்டு 29.55 மில்லியன் டன் காய்கறிகளுடன் முதலிடம் பெற்றுள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த காய்கறி உற்பத்தியில் மாநிலத்தின் பங்கு 15.9% ஆகும்.
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் - 2020 ஜூன் 01 முதல் அமல்
- ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம், நாடு முழுவதும் ஜூன் மாதம் 01-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இந்த ஒரே குடும்ப அட்டை திட்டம் மின்னணு முறையில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் அமல்படுத்தப்பட உள்ளது. ஆதாா் எண்ணை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் பயனாளா்கள் பலனடைய முடியும்.
- 2020 ஜனவரி 01-ஆம் தேதி முதல் 12 மாநிலங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு/விண்வெளி
6 நீா்மூழ்கிக் கப்பல்கள் உருவாக்கம்: 2 நிறுவனங்கள் தேர்வு
- இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ், ரூ.45000 கோடி மதிப்பிலான, 06 அடுத்ததலைமுறை நீா்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்படவுள்ளன. (Next Generation Conventionally Powered Submarines)
- இந்தியாவைச் சோ்ந்த எல் அண்ட் டி குழுமம் (L&T), எம்டிஎல் (MDL) ஆகியவை நீா்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கவுள்ளன. ஜொ்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட 5 வெளிநாடுகளைச் சோ்ந்த கப்பல்கட்டுமான நிறுவனங்களும் தோ்வுப் பட்டியலில் உள்ளன.
- இந்த நீர்மூழ்கிக் கப்பல்களில் ஏர் இன்டிபென்டன்ட் ப்ராபல்ஷன் (AIP) தொழில்நுட்பம் இருக்கும், அவை வாரகணக்கில் நீருக்கடியில் தங்குவதற்கான திறனைக் கொடுக்கும்.
- பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற ராணுவத் தளவாட கொள்முதல் (DAC) குழு கூட்டத்தில் ரூ.5,100 கோடி ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டது.
- DAC: Defence Acquisition Council, MDL: Mazagaon Docks Limited, L&T: Larsen and Toubro, AIP: Air Independent Propulsion.
விருதுகள்
தமிழக முதல்வா் விருது: 3 காவல் நிலையங்கள் தோ்வு
- 2020-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் வழங்கப்படும் தமிழக அரசின் முதல்வா் விருதுக்கு 3 காவல் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அவை:
- ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம், கோயம்புத்தூா்
- திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலையம், திண்டுக்கல்
- தருமபுரி நகர காவல் நிலையம், தருமபுரி.
நியமனங்கள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 'நிர்வாக இயக்குநராக சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டி'
- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (SBI) புதிய நிர்வாக இயக்குநராக சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டி (Challa Sreenivasulu Setty) சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவன தலைவர் - ஆஷிஷ் கார்க்
- இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனத்தின் (ICSI) புதிய தலைவராக ஆஷிஷ் கார்க் (Ashish Garg ) நியமிக்கப்பட்டுள்ளார்.
- ICSI: Institute of Company Secretaries of India
நியமனங்கள்
NIC தொழில்நுட்ப மாநாடு 2020
- தேசிய தகவல் மையம் (NIC) சாா்பாக 2020 தொழில்நுட்ப மாநாடு (NIC Tech Conclave-2020), ஜனவரி 21 முதல் 22 வரை புதுடெல்லியில் நடைபெற்றது.
- இந்த 2020-ஆம் ஆண்டின் மாநாடு 'அடுத்ததலைமுறை ஆளுகைக்கான தொழில்நுட்பங்கள்' (Technologies for Next-Gen Governance), என்ற மையக்கருத்தில் நடைபெற்றது.
- NIC: National Informatics Centre.
இந்திய சா்வதேச தோல் கண்காட்சி 2020
- இந்திய சா்வதேச தோல் கண்காட்சி (India International Leather Fair 2020) சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3 வரை 4 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம்
குவால்கம் செல்லிடப்பேசிகளில் 'இந்திய செயற்கைக்கோள் வழிகாட்டும் வசதி'
- குவால்கம் நிறுவனம் (Qualcomm Technologies) இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யும் செல்லிடப்பேசிகளில், இந்திய செயற்கைக்கோள் வழிகாட்டும் வசதி (NavIC) இனி இடம்பெற உள்ளது என ISRO தெரிவித்துள்ளது.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி (ISRO) மையத்தின் முயற்சி மூலம், அமெரிக்காவின் சாண்டிகோவைச் சோ்ந்த குவால்கம் மொபைல் சிப் தயாரிப்பு நிறுவனம் இந்தப் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சிப்களை இனி வெளியிட உள்ளது.
- இந்த ஸ்மார்ட் செல்லிடப்பேசிகளில், ISRO சாா்பில் விண்ணில் செலுத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்கும் 7 IRNSSS செயற்கைக்கோள்களின் வழிகாட்டுதல் வசதி, புவி இருப்பிட வசதி (இருக்குமிடத்தை அறியும் வசதி) உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றிருக்கும்.
- அமெரிக்காவின் ஜிபிஎஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ, ரஷியாவின் குளோநாஸ், சீனாவின் பிடவ் உள்ளிட்ட செயற்கைக்கோள்களின் வழிகாட்டுதல் வசதிகளும் இடம் பெற்றிருக்கும்
- NavIC: Navigation with Indian Constellation, IRNSS: Indian Regional Navigation Satellite System.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
களக்காடு சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுப்புப் பணி 2020
- திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் ஜனவரி 21 முதல் 28 வரை நடைபெறுகிறது.
முக்கிய நபர்கள்
மன் மோகன் சூத்
- 80 வயதான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தேசிய தேர்வாளருமான மன் மோகன் சூத் (Man Mohan Sood) சமீபத்தில் காலமானார்.
Download this article as PDF Format