ISRO விண்வெளிக்கு அனுப்பும் பேசும் பெண் ரோபோ ‘வயோம மித்ரா’
ககன்யான் திட்டம்
- விண்வெளிக்கு இந்திய வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னோடியாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ‘வியோம மித்ரா’ (Robot Vyomamitra) என்னும் பேசும் பெண் ரோபோ விண்வெளிக்கு அனுப்பவுள்ளது.
- இந்த ரோபோ விண்வெளியில் வீரர்களின் செயல்பாடுகளை மிகச்சரியாக உருவகப்படுத்தும். அமைப்பு (சிஸ்டம்) சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கும். மனிதர்கள் விண்வெளிக்கு செல்கிறபோது, இந்த ரோபோ உதவிகரமாக இருக்கும்.
ISRO Robot Vyomamitra for Gaganyaan Mission |
- இந்தியாவின் சார்பில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானிகள், 2021 டிசம்பர் மாதம் விண்வெளிக்கு விண்கலத்தில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். Gaganyaan: India's maiden human spaceflight mission.
- இதற்கு முன்னோடியாக இஸ்ரோ, 2020 டிசம்பர் மாதமும், 2021 ஆண்டு ஜூன் மாதமும் ஆளில்லா விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பி வைக்கிறது.
- இந்த ஆளில்லா விண்கலத்தில் வயோம் மித்ரா என்ற பேசும் பெண் ரோபோவை இஸ்ரோ அனுப்பி வைக்க உள்ளது.
- வயோம மித்ரா
- வயோம் மித்ரா என்பது வயோம், மித்ரா என்ற இரு சமஸ்கிருத வார்த்தைகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள பெயர். வயோம் என்றால் விண்வெளி, மித்ரா என்றால் தோழி என பொருள் ஆகும்.
- பெங்களூருவில் அறிமுகம்
- வயோம மித்ரா பேசும் பெண் ரோபோ, பெங்களூருவில் ஜனவரி 22-அன்று ‘மனித விண்வெளிப்பயணம் மற்றும் ஆய்வு, தற்போதைய சவால்கள் மற்றும் எதிர்கால போக்கு’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்டது.