Daily Current Affairs December 26th 2019
TNPSC Current Affairs December 26, 2019 for forthcoming various TNPSC and Government exams 2020.
நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 26, 2019
TNPSC Current Affairs December 26, 2019 for forthcoming various TNPSC and Government exams 2020.
நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 26, 2019
சர்வதேச நிகழ்வுகள்
சாகித் கலந்தரி, சாகித் பெஹெஷ்டி துறைமுகங்கள் - சிறு தகவல்
- இந்தியா-ஈரான் கூட்டு ஆணையத்தின் 19-வது அமர்வு சமீபத்தில் தெஹ்ரானில் நடைபெற்றது, சாபாஹர் துறைமுகத்தை (Chabahar port) செயல்படுத்துவதில் அடைந்த முன்னேற்றம் குறித்து இரு நாடுகளும் திருப்தி தெரிவித்தன.
- சாபாஹர் துறைமுகம், ஷாஹித் கலந்தரி (Shahid Kalantari) மற்றும் ஷாஹித் பெஹெஷ்டி (Shahid Beheshti Port) ஆகிய இரண்டு தனித்தனி துறைமுகங்களைக் கொண்ட ஈரானின் ஒரே கடல் துறைமுகமாக செயல்படுகிறது.
'கனால் இஸ்தான்புல் திட்டம்'
- கனால் இஸ்தான்புல் திட்டம் (Kanal Istanbul project) மர்மாரா கடலை கருங்கடலுடன் இணைக்கிறது.
- கனால் இஸ்தான்புல் என்பது செயற்கை கடல் மட்ட நீர்வழிக்கான துருக்கி அரசின் திட்டமாகும். இத்திட்டம், கருங்கடல் மற்றும் மர்மாரா கடல், ஈஜியன் மற்றும் மத்திய தரைக்கடல் கடல்களை இணைக்கும் ஒரு திட்டமாகும்.
வருமான சமத்துவமற்ற பகுதிகள் 'தென்னாப்பிரிக்கா & நைஜீரியா
- கண்டத்தின் அடிப்படையில் ஆப்பிரிக்காவின் தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியா பகுதிகள் அண்மையில் ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் மனித மேம்பாட்டு (UNDP) குறியீட்டின்படி, வருமானத்தில் மிகவும் சமத்துவமற்ற பகுதியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் தேசிய வருமானத்தில் சமூகத்தின் பங்கு 10% மட்டுமே உள்ளது.
அராக் அணு உலை - சிறு தகவல்
- ஈரான் நாட்டில் உள்ள அராக் அணு உலை (Arak Nuclear Reactor) தற்போது மறுவடிவமைக்கப்பட்டு வருகிறது.
- 2015-இல் அணுசக்தி ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது, தெஹ்ரானின் தென்மேற்கே அராக் பகுதியில் உள்ள அணு உலையை மூட ஒப்புக்கொண்டது.
- அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வெளிநாட்டு அரசாங்கங்கள் (இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி மற்றும் ரஷ்யா) இந்த அணு உலையில், புளூட்டோனியத்தை உற்பத்தி செய்யவும் அதை இது அணு குண்டுகளில் பயன்படுத்தலாம் என ஐயப்பாடு கொண்டுள்ளன.
இந்திய நிகழ்வுகள்
நல்லாட்சி குறியீட்டு பட்டியல் 2019 (GGI 2019)
- மாநிலங்களில் நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய மாநிலங்களில் இடையிலான 2019 நல்லாட்சி குறியீட்டு பட்டியலை (Good governance index 2019), தேசிய நல்லாட்சி தினமான டிசம்பர் 25-அன்று இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
- 18 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், 11 வடகிழக்கு & மலை பகுதி மாநிலங்கள் என மூன்று பிரிவுகளாக இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டது.
- தமிழ்நாடு முதலிடம்: இந்த பட்டியலில் சிறந்த நிர்வாகத்தை கொண்ட மாநிலமாக 5.62 புள்ளிகள் பெற்று, தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
- உத்திரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்கள் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளது
- முதல் 5 இடங்கள்: 1. தமிழ்நாடு (5.62), 2. மகாராஷ்ட்ரா (5.40) 3. கர்நாடகா (5.10), 4. சத்தீஸ்கர் (5.05), 5. ஆந்திரா (5.05).
- ஒன்றிய பிரதேசங்கள் பட்டியல்: புதுச்சேரி முதலிடம் பிடித்துள்ளது. சண்டிகர், டெல்லி அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. லட்சத்தீவுகள் கடைசி இடத்தில் உள்ளது.
- வடகிழக்கு மாநிலங்கள் பட்டியல்: வடகிழக்கு மாநிலங்களில் இமாச்சலப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. உத்தரகாண்ட், திரிபுரா, மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடம் பிடித்துள்ளது.
- காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து போன்ற மாநிலங்களில் நிர்வாகம் சற்று முறையாக நடைபெறவில்லை என்றும் ஆய்வறிக்கை தகவல் அளித்துள்ளது.
GGI INDEX 2019 , N.I.EXPRESS 27/12/2019 |
ஐக்கிய நாடுகளில் '2019 இந்தியாவுக்கு வெற்றியின் காலம்'
- சையத் அக்பருதீன் ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி (Syed Akbaruddin) ஆவார். அவர் சமீபத்தில் 2019 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கான வெற்றிபெற்ற ஆண்டு என்று தெரிவித்தார், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம், நிலையான வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் இந்தியா இந்த காலகட்டத்தில் பல சாதனைகளை அடைந்துள்ளது என கூறினார்.
தெலுங்கானா போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதிய வயது 60-ஆக உயர்வு
- தெலுங்கானா மாநில அரசு சாலை போக்குவரத்துக் கழகத்தின் ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 58-லிருந்து 60 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம் டிசம்பர் 24, 2019
- தேசிய மக்கள்தொகை பதிவேடு: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டிசம்பர் 24-அன்று டெல்லியில் நடைபெற்றது. தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க ரூ.3,941.35 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- 2010-ம் ஆண்டு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான விவரங்கள் சேகரிக்கப்பட்டன. 2015-ம் ஆண்டு, வீடு, வீடாக ஆய்வு நடத்தி, இந்த விவரங்கள் புதுப்பிக்கப்பட்டன.
- தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம்வரை அசாம் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இப்பணி நடத்தப்படும். இதில் பதிவு செய்வது ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
- மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021: 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2 கட்டமாக நடத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். 2-வது கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பிப்ரவரி 9-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி வரை நடத்தப்படும்.
- காஷ்மீர், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் பனி நிறைந்த பகுதிகளில் அக்டோபர் 1-ந் தேதி கணக்கெடுப்பு நடத்தப்படும். கணக்கெடுப்பு பணிக்கு ரூ.8,754.23 கோடி ஒதுக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
- ஒரே தலைமை தளபதி பதவி-ஒப்புதல்: முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதி பதவியை உருவாக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. அஜித் தோவல் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- முப்படை தலைமை தளபதி 4 நட்சத்திரங்கள் பெற்றவராகவும், ராணுவ விவகாரங்கள் துறை தலைவராகவும் இருப்பார்.
- ரெயில்வே வாரியம் மாற்றி அமைப்பு: ரெயில்வே வாரியத்தை மாற்றி அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன்படி, ரெயில்வே வாரிய உறுப்பினர்கள் எண்ணிக்கை 8-ல் இருந்து 5 ஆக குறைக்கப்படும்.
- ரெயில்வேயில் உள்ள என்ஜினீயரிங், மெக்கானிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள், இந்திய ரெயில்வே சேவை என்ற ஒரே பிரிவாக ஒருங்கிணைக்கப்படும்.
- அடல் புஜல் யோஜனா திட்டம்: நிலத்தடி நீர் வளத்தை பெருக்க ரூ.6 ஆயிரம் கோடி செலவிலான அடல் புஜல் யோஜனா என்ற திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- கர்நாடகா, மத்தியபிரதேசம், மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 8 ஆயிரத்து 350 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். நிலத்தடி நீரை பெருக்கும் பணியில் சமுதாயங்கள் ஈடுபடுத்தப்படும்.
- திவால் சட்டத்தில் மேலும் திருத்தம் செய்வதற்கான அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
வாஜ்பாயின் '25 அடி உயர வெண்கல சிலை'
- மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின், 25 அடி உயர வெண்கல சிலை உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலகமான லோக் பவன் நுழைவாயிலில் டிசம்பர் 25-ம் தேதி பிரதமர் மோடி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
- ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ் குமார் பண்டிட் என்பவரால் ரூ.89.6 லட்ச மதிப்பில் இந்த சிலை செதுக்கப்பட்டுள்ளது.
- இந்த சிலை மாநிலத்தின் மிக உயரமான சிலை என்ற பெருமையைப் பெருகிறது.
அடல் நிலத்தடி நீர் திட்டம் - தொடங்கி வைப்பு
- நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட 'அடல் பூஜல் யோஜ்னா' என்று பெயரிடப்பட்டுள்ள 'அடல் நிலத்தடி நீர் திட்டத்தை, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் டிசம்பர் 25-அன்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
- ரூ.6000 கோடி மதிப்பிலான அடல் நிலத்தடி நீர் திட்டம், 2024ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர் கிடைப்பதைஉறுதி செய்யும்
- நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் முதற்கட்டமாக குஜராத், அரியாணா, ராஜஸ்தான், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் 7 பேரில் ஒருவருக்கு மனநலம் பாதிப்பு
- இந்தியாவில் 7 பேரில் ஒருவர் இதில் ஏதாவது ஒரு பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்தியா நடத்திய இந்திய மக்களின் மனநிலை தொடர்பாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
- மன அழுத்தம், பதற்றத்தால் ஏற்படும் படபடப்பு, மனச்சிதைவு, இருவிதமான எண்ணங்கள், அறிவுத்திறன் பாதிப்பு, மனநிலை வேறுபாடு, ஆட்டிசம் போன்றவை மனநிலை பாதிப்பாக கருதப்படுகிறது. இந்திய மக்களில் 19 கோடியே 70 லட்சம் பேருக்கு பாதிப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. 1990-ம் ஆண்டை ஒப்பிடும் போது இது 2 மடங்கு அதிகரித்துள்ளது.
பொருளாதார நிகழ்வுகள்
மேற்கு ஆப்பிரிக்காவில் எட்டு நாடுகளின் 'பொதுவான நாணயம்'
- மேற்கு ஆப்பிரிக்காவில் எட்டு நாடுகள் இணைந்து, சமீபத்தில் 'எக்கோ' (Eco) என்ற பொதுவான நாணயத்தை (common currency( அறிமுகப்படுத்தியுள்ளன.
- இந்த நாடுகளில் தற்போது புழக்கத்தில் உள்ள நாணயமான 'சி.எஃப்.ஏ பிராங்கை' (CFA franc) விட்டுவிட முடிவு செய்துள்ளன.
- மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெனின், புர்கினா பாசோ, கினியா-பிசாவ், ஐவரி கோஸ்ட், மாலி, நைஜர், செனகல் மற்றும் டோகோ ஆகியவை 'எக்கோ' (Eco) நாணயத்தைப் பயன்படுத்துகின்றன.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் - முகேஷ் அம்பானி
- ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நடப்பு ஆண்டில், டிசம்பர் 23-ந் தேதி நிலவரப்படி 1,700 கோடி டாலர் (சுமார் ரூ.1.20 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக உள்ளார். போர்ப்ஸ் பத்திரிகையின் 2019 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் 9-வது இடத்தில் உள்ளார்.
- இதனையடுத்து அவரது மொத்த சொத்து மதிப்பு 6,100 கோடி டாலரை எட்டி இருக்கிறது.
- பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் முன்னணி 10 இந்திய நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தில் ஆர்.ஐ.எல். உள்ளது. நேற்றைய நிலவரப்படி அதன் மதிப்பு சுமார் ரூ.9.80 லட்சம் கோடியாகும்.
சீனாவில் 850+ பொருட்களின் இறக்குமதி கட்டணம் குறைப்பு
- உறைந்த பன்றி இறைச்சி (frozen pork) உட்பட 850 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி கட்டணத்தை ஜனவரி 2020 முதல் குறைக்க சீனா முடிவு செய்துள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம்
செஞ்சிலுவை சங்க செயலி - அறிமுகம்
- ஐதராபாத்தில் சமீபத்தில் குடியரசுத்தலைவரால், இரத்த வங்கிகளுக்கான அணுகலை மேம்படுத்த செஞ்சிலுவை சங்க செயலி (Red Cross App) மொபைல் செயலி பயன்பாடு வெளியிடப்பட்டது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
காஷ்மீரில் ‘சில்லாய்-காலன்’ குளிர்காலம் தொடக்கம்
- ‘சில்லாய்-காலன்’ (Chillai Kalan) என அழைக்கப்படும் காஷ்மீரில் நிலவும் பாரம்பரியமான 40 நாள் கடுமையான குளிர்காலம் டிசம்பர் 21 முதல் அன்று தொடங்கியுள்ளது. சில்லாய்-காலன் நிகழ்வு 2020 ஜனவரி 31 அன்று முடிவடைகிறது.
வெப்ப தலைகீழ் நிகழ்வு - சிறு தகவல்
- வெப்பத்தலைகீழ் (thermal inversion) நிகழ்வால் ஈரான் நாடு, சமீபத்தில் தனது பள்ளிகளை மூடியது.
- வெப்பத்தலைகீழ் என்பது, சூடான காற்றின் ஒரு அடுக்கு தரையின் அருகே அமைந்துள்ள குளிரான காற்றின் ஒரு அடுக்கு மீது குடியேறும் (Cooler air held close to the ground by the hot air above) போது நிகழ்கிறது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் 2020
- தமிழக ஆளுநர் இந்திய அரசமைப்பு, பிரிவு 174(1)-ன் கீழ் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டத்தை 2020 ஜனவரி 6-ந்தேதி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட்டுகிறார்.
- இந்திய அரசமைப்பு, பிரிவு 176(1)-ன் கீழ், தமிழ்நாடு ஆளுநர் புதிய ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.
விளையாட்டு நிகழ்வுகள்
கிரிக்கெட்
IPL வீரர்கள் ஏலம் 2020
- கொல்கத்தாவில் சமீபத்தில் நடைபெற்ற 2020-ஆம் ஆண்டிற்கான IPL கிரிக்கெட் தொடருக்கான கிரிக்கெட் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது. 8 அணிகளும் சேர்ந்து மொத்தம் 62 வீரர்களை தேர்வு செய்தன.
- அதிக விலைக்குத் தேர்வானவர் 'பேட் கம்மின்ஸ்': இந்த வருட IPL ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வானவர் என்கிற பெருமையை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் 'பேட் கம்மின்ஸ்' பெற்றுள்ளார்.
- பேட் கம்மின்ஸை ரூ. 15.50 கோடிக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தேர்வு செய்தது.
விஸ்டன் இதழின் '10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்கள்'
- கிரிக்கெட்டின் பைபிள் என்று வர்ணிக்கப்படும் புகழ்பெற்ற விஸ்டன் கிரிக்கெட் இதழ், 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்தியவர்களை ஆய்வு செய்து கனவு அணியாக வெளியிட்டுள்ளது.
- டெஸ்ட் அணியில் இந்திய வீரர் விராட் கோலியை கேப்டனாகவும், அஸ்வின் சுழற்பந்து வீச்சாளராகவும், இடம் பிடித்துள்ளானர்.
- ஒரு நாள் போட்டி கனவு அணியில் விராட் கோலிம், டோனி, ரோகித் சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளானர்.
- 31 வயதான விராட் கோலி 84 டெஸ்டுகளில் 27 சதம் உள்பட 7,202 ரன்களும், 242 ஒரு நாள் போட்டிகளில் 43 சதங்கள் உள்பட 11,609 ரன்களும் குவித்துள்ளார்.
- விஸ்டனின் டெஸ்ட் கனவு அணி: அலஸ்டயர் குக் (இங்கிலாந்து), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), சங்கக்கரா (இலங்கை), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), விராட் கோலி (இந்தியா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), அஸ்வின் (இந்தியா), டேல் ஸ்டெயின் (தென்ஆப்பிரிக்கா), காஜிசோ ரபடா (தென்ஆப்பிரிக்கா), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து).
- விஸ்டன் ஒரு நாள் போட்டி அணி: ரோகித் சர்மா (இந்தியா), விராட் கோலி (இந்தியா), வார்னர் (ஆஸ்திரேலியா), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), டோனி (இந்தியா), லசித் மலிங்கா (இலங்கை), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), டிரென்ட் பவுல்ட் (நியூசிலாந்து), ஸ்டெயின் (தென்ஆப்பிரிக்கா).
பத்தாண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் - ஆர். அஸ்வின்
- கடந்த பத்தாண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையை இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஆர். அஸ்வின் பெற்றுள்ளார்
- சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்
- ஆர். அஸ்வின் - 564 விக்கெட்டுகள்
- ஆண்டர்சன் - 535 விக்கெட்டுகள்
- ஸ்டூவர்ட் பிராட் - 525 விக்கெட்டுகள்
- டிம் செளதி - 472 விக்கெட்டுகள்
- டிரெண்ட் போல்ட் - 458 விக்கெட்டுகள்
குத்துச்சண்டை
இந்திய குத்துச்சண்டை அணித்தோ்வுக் குழு உறுப்பினா் வி.தேவராஜன்
- இந்திய மகளிா் குத்துச்சண்டை அணியின் தோ்வுக் குழு உறுப்பினராக தமிழகத்தின் வி.தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா். வி.தேவராஜன்,1994-இல் பாங்காக்கில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றாா்.
டென்னிஸ்
லியாண்டர் பயஸ் - 2020-இல் ஓய்வு
- புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் (Leander Paes), 2020 ஆண்டுக்குப் பிறகு ஓய்வு பெறுகிறார்.
- 46 வயதான பயஸ், எட்டு இரட்டையர் மற்றும் பத்து கலப்பு இரட்டையர் உள்ளிட்ட 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் ஆவார். இவரது டென்னிஸ் வாழ்வு மூன்று தசாப்தங்களாக நீடித்தது.
முக்கிய தினங்கள்
சுனாமி நினைவு தினம் - டிசம்பர் 26
- 15-வது சுனாமி நினைவு தினம் 2019 டிசம்பர் 26-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது
- இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, மலேசியா, மாலத்தீவு, மியான்மர், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில், கடற்கரையோரம் வசித்த 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பலியானார்கள்.
- தமிழ்நாட்டில் மட்டும் 7,941 பேர் மாண்டு போனார்கள். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6,039 பேர் பலியானார்கள்.
- சுனாமி: சுனாமி என்பது ஜப்பானிய சொல்.
- "சு" என்றால் ஜப்பான் மொழியில் துறைமுகம் என்று பொருள். ‘னாமி’ என்றால், அலையை குறிக்கிறது.
- சுனாமி என்றால் ‘துறைமுக அலை’ என்று பொருள்படுகிறது.
- கடலில் எழும் பெரிய அலைகளால் பெரும்பாலும் துறைமுகங்களே அதிகம் பாதிக்கப்படுகின்றன. அதனால்தான், ஜப்பானியர்கள் ‘சுனாமி’ என்று பெயர் வைத்து அழைத்துள்ளனர்.
- 2004-ம் ஆண்டுக்கு பிறகு இதே பெயர் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
Download this article as PDF Format