TNPSC Current Affairs December 2-3, 2019 - View and Download PDF

நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 2-3, 2019
சர்வதேச நிகழ்வுகள்
இந்தியா-ஸ்வீடன் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • ஸ்வீடன் மன்னா் கார்ல் கஸ்தாஃப், அரசி சில்வியா ஆகியோர் ஐந்து நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தனர். பிரதமா் நரேந்திர மோடி-மன்னா் காா்ல் கஸ்தாஃப் மற்றும் இந்தியா-ஸ்வீடன் குழுவினா் இடையே உயா்நிலை கொள்கைப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. 
  • துருவப் பகுதி ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி, கடல்சாா் விவகாரங்கள் ஆகிய துறைகளில் டிசம்பர் 2-அன்று 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 
G20 தலைமை பதவியேற்றுள்ள முதல் அரபு நாடு - சவுதி அரேபியா
  • டிசம்பர் 1 அன்று, G20 தலைமை பதவியை சவுதி அரேபியா நாடு (G20 presidency) ஏற்றுள்ளது. இதற்கு முன்பு ஜப்பான் தலைமை பதவி வகித்தது. இருந்து பொறுப்பேற்ற பின்னர் ஜி 20 (குழு 20) க்கு தலைமை தாங்கிய அரபு உலகில் முதல் நாடு என்ற பெருமையை சவுதி அரேபியா பெற்றது.
  • 2020-ஆம் ஆண்டுக்கான G20 உச்சி மாநாடு, சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் “அனைவருக்குமான 21-ஆம் நூற்றாண்டின் வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது” (Realising Opportunities of the 21st Century for All) என்ற தலைப்பில் 2020 நவம்பர் 21-22 வரை நடைபெறுகிறது.
இந்திய நிகழ்வுகள்
மிஷன் இந்திரதானுஷ் (IMI) 2.0 - தொடக்கம் 
  • தீவிரப்படுத்தப்பட்ட மிஷன் இந்திரதானுஷ் (IMI) 2.0 இன் கீழ் எட்டு நோய்களைத் தடுப்பதற்கான நாடு தழுவிய தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது
  • எட்டு நோய்களைத் தடுப்பதற்கான 'தீவிரப்படுத்தப்பட்ட மிஷன் இந்திரதானுஷ் (IMI) 2.0 திட்டம்', டிசம்பர் 2 அன்று நாடு தழுவிய தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 
  • இந்ததிட்டம், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு எட்டுவகை நோய்களுக்கு எதிராக நோய்த்தடுப்பு ஊசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மிஷன் இந்திரதானுஷ் (2017): பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 8, 2017 அன்று மிஷன் இந்திரதானுஷ் (IMI) திட்டத்தை தொடங்கிவைத்தார். 
  • IMI: Intensified Mission Indradhanush.
முப்படை தளபதி பொறுப்புகள்: 'அஜித் தோவல் குழு' அறிக்கை சமர்பிப்பு 
  • முப்படை தளபதி பதவிக்கான பொறுப்புகளையும், பணிகளையும் இறுதி செய்வதற்காக நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் தலைமையிலான உயா்நிலைக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமா்ப்பித்தது.
  • முப்படைகளுக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்படுவது, அந்தந்தப் படைகளுக்கான தேவைகளை ஒதுக்கீடு செய்வது போன்றவையே முப்படை தளபதியின் முக்கிய பணிகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • காா்கில் மறு ஆய்வுக் குழு கடந்த 1999-ஆம் ஆண்டு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், முப்படை தளபதி பதவியை உருவாக்குவதாக மத்திய அரசு 2019 ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிவித்தது. 
  • முப்படை தளபதி பதவி தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) வரம்புக்குள் கொண்டுவரப்படுகிறது என பாதுகாப்புத் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
தமிழ்நாடு, கேரளா 544 ரயில் நிலையங்களில் இலவச 'WIFI'
  • தெற்கு ரயில்வேயில் தமிழ்நாடு, கேரளாவில் உள்ள 544 ரயில் நிலையங்களில் இலவச அதிகவேக வைஃபை (விபியி) சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • ரயில்களில் பயணம் செய்வோர் - 2 கோடி 40 லட்சம் போ்: நாடு முழுவதும் 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதில்லாத பயணிகள் ரயில், 5,000 மின்சார ரயில்கள் என்று மொத்தம் 13,100 ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சராசரியாக 2 கோடியே 40 லட்சம் போ் பயணம் செய்கின்றனா்.
ஜனநாயக ஜனதா கட்சி (JJP) மாநிலக் கட்சியாக அங்கீகரிப்பு 
  • ஹரியானாவில் மாநிலத்தில் செயல்படும் ஜனநாயக ஜனதா கட்சியை (Jannayak Janta Party) என்ற கட்சியை, தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சியாக அங்கீகரித்துள்ளது, 'சாவி' சின்னத்தை (key) ஒதுக்கியுள்ளது. ஹரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதலா தலைமையில் இந்த கட்சி இயங்குகிறது.
பாதுகாப்பு/விண்வெளி 
இந்தியா-இலங்கை கூட்டு ராணுவப் பயிற்சி-2019 'மித்ரா சக்தி-VII 
  • இந்தியா-இலங்கை நாடுகளின், ஏழாவது கூட்டு ராணுவப் பயிற்சி, 'மித்ரா சக்தி-VII' (MITRA SHAKTI–VII) என்ற பெயரில் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநில புனே நகரில் ஆந்த் ராணுவ நிலையத்தில், டிசம்பர் 1 முதல் 14 வரை நடைபெறுகிறது.
TNPSC Current Affairs December 2-3, 2019
TNPSC Current Affairs December 2-3, 2019
விக்ரம் லேண்டர் - கண்டுபிடிப்பு 
  • விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துள்ளதாக NASA தெரிவித்துள்ளது. LRO ஆர்பிட்டர் கேமராவின் உதவியுடன் அதனால் நிலவின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை புகைப்படம் டிசம்பர் 3-அன்று வெளியிட்டது.
  • சண்முக சுப்பிரமணியன்: நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த நிலவின் புகைப்படங்களை, சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் (வயது 33) தொடர்ந்து ஆய்வு செய்து விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டறிந்துள்ளார். 
குலசேகரப்பட்டினத்தில் 3-வது, 4-வது ராக்கெட் ஏவு தளதங்கள் 
  • தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு மிக அருகில் உள்ள குலசேகரப்பட்டினத்தில், 3-வது, 4-வது ராக்கெட் ஏவு தளத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாராளுமன்றத்தில் மத்திய அணுசக்தி துறை மந்திரி ஜிதேந்திரசிங் இந்த தகவலை தெரிவித்தார்.
  • சென்னை அருகே ஆந்திரா மாநிலத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முதல் இரண்டு ராக்கெட் ஏவு தளதங்கள் அமைந்துள்ளன. 
  • குலசேகரப்பட்டினம் இயற்கையாகவே விண்ணுக்கு ராக்கெட்டை அனுப்பும் சூழலில் அமைந்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினம் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. குலசேகரப்பட்டின தட்பவெட்ப சூழ்நிலையும் அதிக சாதகமாக உள்ளது.
  • ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளி பாதை 13 டிகிரி கோணத்தில் உள்ளது. ஆனால் குலசேகரப்பட்டினத்தில் இருந்து தெற்கு நோக்கிய விண்வெளி பாதை 8 டிகிரி கோணத்தில் அமைந்து இருக்கிறது.
எல்லைப் பாதுகாப்புப்படையின் 'பார்டர்மேன்' இதழ்
  • எல்லை பாதுகாப்புப்படை (BSF), பார்டர்மேன் (Borderman magazine) என்ற பெயரில் இதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. எல்லை பாதுகாப்புப்படை வீரர்களின் சாதனைகளின் கதைகளின் தொகுப்பு இந்த இதழ் ஆகும். 
எச். ஆர். கான் குழு 
  • பொறுப்பு கடன் வழங்குவதற்கான குறியீட்டின் (CRL-Code for Responsible Lending) வழிநடத்தல் குழுவின் (chairman of microfinance panel) தலைவராக எச். ஆர். கான் (H R Khan) நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் துணை ஆளுநர் எச். ஆர் கான் ஆவார்.
நியமனங்கள்
கடற்படையில் இணைந்த முதல் பெண் விமானி - ஷிவாங்கி சிங்
  • இந்திய கடற்படையில் இணைந்த முதல் பெண் விமானி (1st woman of Indian Navy-Shivangi) என்ற சிறப்பை ஷிவாங்கி சிங் பெற்றுள்ளார்.
  • ஷிவாங்கி சிங் கேரள மாநிலம் கொச்சி கடற்படையில் டிசம்பர் 2 அன்று பணியை தொடங்கினார். 
  • ஷிவாங்கி பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்தவர். டிசம்பர் 4-அன்று இந்தியாவில் கடற்படை தின விழா கொண்டாடப்பட உள்ளது.
  • இந்திய கடற்படையில் பயிற்சியை முடித்து விமானிகளாக 2 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். பிரதிபா சிங் மற்றும் ஷிவாங்கி சிங் ஆகியோர் சமீபத்தில் விமானிகளாக பயிற்சிகளை முடித்து சான்றிதழையும் பெற்றுள்ளனர். 
நமீபியா அதிபர் - 'ஹேக் ஜெயிங்காப்' 
  • தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில், அந்த நாட்டு அதிபா் ஹேக் ஜெயிங்காப் (வயது 78) மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். எனினும், இதுவரை இல்லாத வகையில் மிகக் குறைந்த வாக்கு விகிதத்தில் (56.3 சதவீதம்) அவா் வெற்றி பெற்றுள்ளாா். 
மாநாடுகள்
ஐ.நா.வின் காலநிலை மாற்ற மாநாடு 2019, மாட்ரிட் (ஸ்பெயின்)
  • ஐ.நா.வின் காலநிலை மாற்ற மாநாடு (COP25) 2019, சிலி நாட்டின் தலைமையில், ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் டிசம்பர் 2 தொடங்கியுள்ளது. டிசம்பர் 13 வரை நடைபெறுகிறது. சிலி நாட்டில் நடைபெறவிருந்த இந்த மாநாடு, அங்கு அமைதியின்மை காரணமாக நடத்துவதில் இருந்து சிலி விலகியது.
நிலச்சரிவு அபாயக் குறைப்பு & பின்னடைவு மாநாடு 2019
  • “நிலச்சரிவு அபாயக் குறைப்பு மற்றும் பின்னடைவு” (Landslides Risk Reduction and Resilience-2019) குறித்த முதல் சர்வதேச மாநாடு புது தில்லியில் நவம்பர் 29-அன்று நடைபெற்றது.
விருதுகள்
சக்தி பட் முதல் புத்தக பரிசு 2019 - டோனி ஜோசப்
  • ஆங்கில எழுத்தாளர் டோனி ஜோசப் தனது 2018 ஆம் ஆண்டின் புதினமான 'ஆரம்பகால இந்தியர்கள்: எங்கள் மூதாதையர்களின் கதை மற்றும் எங்கிருந்து வந்தோம்' (Early Indians: The Story of Our Ancestors and Where We Came From) என்ற புத்தகத்திற்காக 12 வது ‘சக்தி பட் முதல் புத்தக பரிசை’ (Shakti Bhatt First Book Prize 2019) வென்றுள்ளார்.
IFFI விருதுகள் 2019 - பட்டியல்
  • கோவாவில் நடைபெற்ற, 50-வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ((International Film Festival of India) -2019 ) வழங்கப்பட்ட விருதுகள் விவரம்: 
    1. கோல்டன் மயில் விருது 2019 - Particles (பிரெஞ்சு-ஸ்விஸ் திரைப்படம்)
    2. சிறந்த இயக்குனர் - லிஜோ ஜோஸ் பெல்லிசேரி (ஜல்லிக்கட்டு,மலையாள திரைப்படம்) 
    3. சிறந்த நடிகர் - சியு ஜார்ஜ் (Seu Jorge). 
    4. சிறந்த நடிகை - உஷா ஜாதவ் (Usha Jadhav).
    5. சிறப்பு ஜூரி விருது: (பலூன்) பெமா செடென் 
    6. சிறந்த அறிமுக இயக்குனர்: அமீன் சிடி பானுமெடீன் (அபோ லீலா மரியஸ் ஓல்டான் பார் மொன்ஸ்டர்ஸ்) 
    7. ICFT –UNESCO காந்தி பதக்கம்: ருவாண்டா
2019 கர்மவீர் சக்ரா விருது - ராகுல் அதிகாரி 
  • iCONGO அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை, இணைந்து வழங்கிய 2019 கர்மவீர் சக்ரா விருது மற்றும் REX கர்மவீர் குளோபல் பெல்லோஷிப் விருது, ராகுல் அதிகாரி (Rahul Adhikari) அவர்களுக்கு வழங்கப்பட்டது.
பொருளாதார நிகழ்வுகள்
வர்த்தக ஆவணங்களை பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட முதல் நிறுவனம் 'ABFL'
  • ஆதித்யா பிர்லா நிதி லிமிடெட் (ABFL) நிறுவனம், தனது வர்த்தக ஆவணங்களை (Commercial Papers-CPs) பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட முதல் நிறுவனமாக மாறியுள்ளது.
புத்தக வெளியீடு  
தி வால்ட் ஆஃப் விஷ்ணு - அஸ்வின் சங்கி
  • பிரபல எழுத்தாளர் அஸ்வின் சங்கி Ashwin Sanghi), "தி வால்ட் ஆஃப் விஷ்ணு" (The Vault of Vishnu ) என்ற தலைப்பிலான புத்தகத்தை, ஜனவரி 23, 2020 அன்று வெளியிடுகிறார். வெஸ்ட்லேண்ட் (Westland) நிறுவனம் இந்த புத்தகத்தை வெளியீடுகிறது.
தமிழ்நாட்டு  நிகழ்வுகள்
தமிழ்நாடு கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் 2019
  • தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பா் 27 மற்றும் 30 தேதிகளில் இருகட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 
  • டிசம்பர் 27-ஆம் தேதி, முதற்கட்டமாக, 194 ஊராட்சி ஒன்றியங்கள் உள்பட 3,232 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும், 6,251 கிராம ஊராட்சித் தலைவா் பதவியிடங்களுக்கும், 49 ஆயிரத்து 638 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
  • டிசம்பர் 30-ஆம் தேதி, இரண்டாம் கட்டமாக, 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,239 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும், 6 ஆயிரத்து 273 கிராம ஊராட்சித் தலைவா் பதவியிடங்களுக்கும், 49 ஆயிரத்து 686 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும் வரும் 30-இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
  • மாநகராட்சி, நகராட்சிகள் உள்பட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. 
  • வாக்குப் பதிவு
    • முதல் கட்டத் தேர்தல்: டிசம்பர் 27
    • இரண்டாம் கட்டத் தேர்தல்: டிசம்பர் 30
  • வாக்கு எண்ணிக்கை: ஜனவரி 2
    • தேர்தல் முடிவு பெறும் நாள்: ஜனவரி 4
    • தேர்வான உறுப்பினர் பதவியேற்பு: ஜனவரி 6
  • மறைமுகத் தேர்தல்: ஜனவரி 11
  • 4 நிறங்களில் வாக்குச்சீட்டுகள்: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 பதவிகளுக்கு பிரதிநிதிகளை தேர்வுசெய்ய ஒவ்வொருவரும் 4 ஓட்டுகளை போட வேண்டும். அதற்காக 4 விதமான நிறங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. அதன் விவரம்:
    1. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - வெள்ளை நிறம்
    2. கிராம ஊராட்சி தலைவர் - இளஞ்சிவப்பு நிறம்
    3. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - பச்சை நிறம்
    4. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - மஞ்சள் நிறம்
திருநங்கைக்கு முதன்முறையாக 'செவிலியா் பணி'
  • தமிழ்நாடு மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் வாயிலாக அன்பு ரூபி என்ற திருநங்கை தோ்வு செய்யப்பட்டு அவருக்கு செவிலியா் பணிக்கான நியமன ஆணையை டிசம்பர் 3-அன்று, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நேரடியாக வழங்கினாா்.
  • நாட்டிலேயே திருநங்கை ஒருவா் அரசு செவிலியராகப் பணியமா்த்தப்படுவது இதுவே முதன்முறை ஆகும். 
விளையாட்டு நிகழ்வுகள் 
கிரிக்கெட்

சையது முஷ்டாக் அலி கோப்பை 2019: கா்நாடாக அணி சாம்பியன்
  • 2019 சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தேசிய T20 சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் கா்நாடக அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
  • ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வென்று தொடா்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது கா்நாடக அணி.
உலக கோப்பை கிரிக்கெட் (U-19) 2020
  • 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 13-வது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) தென்ஆப்பிரிக்காவில் 2020 ஜனவரி 17-ந் தேதி முதல் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடக்கிறது.
  • பிரியம் கார்க்: இந்தப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக பிரியம் கார்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த போட்டியில் இந்தியா உட்பட 16 அணிகள் கலந்து கொள்கின்றன.
தெற்காசிய விளையாட்டு போட்டி 2019
  • டிரையத்லான்
    • (750 மீட்டர் நீச்சல், 20 கிலோ மீட்டர் தூர சைக்கிளிங், 5 கிலோ மீட்டர் தூர ஓட்டத்தை உள்ளடக்கியது) 
    • ஆதர்ஷா எம்.என்.சினிமோல் - தங்கப்பதக்கம் (ஆண்கள் தனிநபர் பிரிவு)
    • பிஷ்வோர்ஜித் - வெள்ளிப்பதக்கம் (ஆண்கள் தனிநபர் பிரிவு)
    • சரோஜினி - வெள்ளிப்பதக்கம் (பெண்கள் தனிநபர் பிரிவு)
    • பிரகன்யா - வெண்கலப்பதக்கம் (பெண்கள் தனிநபர் பிரிவு)
  • பேட்மிண்டன்
    • ஆண்கள் அணிகள் பிரிவு - தங்கப்பதக்கம் 
    • பெண்கள் அணிகள் பிரிவு - தங்கப்பதக்கம். 
  • அஞ்சலி சந்த் - சாதனை: 2019 தெற்காசிய விளையாட்டு போட்டியில், மாலத்தீவு-நேபாள அணிகள் இடையே நடந்த பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில். நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் ரன் எதுவும் விட்டுக்கொடுக்காமல் 6 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். 20 ஓவர் சர்வதேச போட்டியில் சிறப்பான பந்து வீச்சு இதுவாகும். 
பேட்மிண்டன்

சையத் மோடிபேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2019
  • சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி லக்னோவில் நடந்தது. இதில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் விவரம்:
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு: வாங் ஜூ வெய் (சீனதைபே) 
  • பெண்கள் ஒற்றையர் பிரிவு: கரோலினா மரின் (ஸ்பெயின்) 
முக்கிய தினங்கள்
டிசம்பர் 2
  • சர்வதேச அடிமைத்தன ஒழிப்பு நாள் டிசம்பர் 2, 2019  (International Day for the Abolition of Slavery 2019).
டிசம்பர் 3
  • சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் - டிசம்பர் 3, 2019 (International Day of Persons with Disabilities - December 3, 2019) 
  • 2019 Theme:  "The Future is Accessible"
Previous Post Next Post