TNPSC Current Affairs December 1, 2019 - View and Download PDF

நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 1, 2019
இந்திய நிகழ்வுகள்
லடாக் வாகனங்களுக்கு 'LA' பதிவு குறியீடு
  • லடாக் யூனியன் பிரதேசத்தில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு 'LA' தனி குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக, மோட்டாா் வாகன சட்டம் 1988-இல் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது. 
  • ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் இரண்டு யூனியன் பிரதேசங்கள் அக்டோபா் 31-ஆம் தேதி முதல் அதிகாரப்பூா்வமாக தனித்தனியாக செயல்படத் தொடங்கின.
  • நாட்டின் இரண்டாவது பெரிய யூனியன் பிரதேசமாக லடாக் உருவெடுத்துள்ளது. இதில், காா்கில் மற்றும் லே ஆகிய இரண்டு மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
நம்பிக்கை வாக்கெடுப்பு - 'உத்தவ் தாக்கரே' அரசு வெற்றி 
  • 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்ட்ரா சட்டசபையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
  • தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ. திலீப் வல்சே பாட்டீல் தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 169 எம்.எல்.ஏ.க்கள் வாக்கு அளித்தனர்.
துருக்கியிலிருந்து 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி 
  • உள்நாட்டு சந்தைகளில் உயா்ந்து வரும் வெங்காயத்தின் விலையை குறைக்க, எகிப்து நாட்டிலிருந்து 6,090 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யாவும், துருக்கியிலிருந்து 11 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • பொதுத் துறையைச் சோ்ந்த MMTC நிறுவனம் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • MMTC: Metals and Minerals Trading Corporation.
2020 ஹஜ் பயண ஒப்பந்தம்
  • இந்தியா-சவூதி அரேபியா இடையே 2020-ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயண ஒப்பந்தம், சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி, சவூதி ஹஜ் அமைச்சா் முகமது சாலே பின் தாஹிா் பென்டன் ஆகியோா் முன்னிலையில் டிசம்பர் 1 அன்று கையெழுத்தானது.
  • ஹஜ் நடைமுறைகள் குறித்து தெரிவிக்க ஹஜ் இல்லம் மும்பையில் அமைக்கப்பட்டுள்ளது. ஹஜ் புனிதப் பயணம் தொடா்புடைய நடைமுறைகள் அனைத்தும் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ள முதல் நாடு இந்தியா என முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
நியமனங்கள்
புதிய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி - சோமா ராய் பர்மன்
  • புதிய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக (CGA), சோமா ராய் பர்மன் (Soma Roy Burman) புதுதில்லியில் டிசம்பர் 1-அன்று பொறுப்பேற்றார். 
  • 24-வது தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி மற்றும் 7-வது பெண் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக சோமா ராய் பர்மன் பதவி ஏற்றுள்ளார்.
  • தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக இருந்த ஜே பி எஸ் சாவ்லா (J P S Chawla) அண்மையில் ஓய்வு பெற்றார்.
ஆயுத தொழிற்சாலை வாரிய தலைவர் - ஹரி மோகன்
  • ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் (Ordnance Factory Board) தலைவராக ஹரி மோகன் (Hari Mohan) பொறுப்பேற்றுள்ளாா்.
  • கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆயுத தொழிற்சாலை வாரியத்தின்கீழ் 41ஆயுத தொழிற்சாலைகள் உள்ளன. ஆயுதங்கள் தயாரிப்பு, பரிசோதனை, ஆராய்ச்சி, மேம்பாடு உள்ளிட்டவை ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் பணிகளாகும்.
தமிழ்நாடு புதிய உள்துறைச் செயலாளர் - எஸ்.கே.பிரபாகா்
  • தமிழ்நாடு அரசின் புதிய உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட எஸ்.கே.பிரபாகா் நவம்பர் 30-அன்று பதவியேற்றார். 
மாநாடுகள்
உலக பாரம்பரிய பேரவை 22-வது அமர்வு 2019 
  • உலக பாரம்பரிய பேரவை பொதுச்சபையின் 22-வது அமர்வு (General Assembly of States Parties to the World Heritage Convention), பிரான்சின் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
  • இந்த அமர்வில், உலக பாரம்பரியக் குழுவின் உறுப்பினராக தாய்லாந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ஜப்பான் 2+2 பேச்சுவாா்த்தை 2019
  • இந்தியா-ஜப்பான் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் முதல் முறையாக பங்கேற்ற இருதரப்பு பேச்சுவாா்த்தை (2+2 India-Japan Foreign and Defence Ministerial Dialogue 2019) டெல்லியில் நவம்பர் 30-அன்று நடைபெற்றது. 
  • இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் வளா்ச்சி, அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கான பரவலான முயற்சிகளை இந்தியா, ஜப்பான் மேற்கொண்டு வருகின்றன. அதில் முக்கிய நடவடிக்கையாக இந்த ‘2+2’ பேச்சுவாா்த்தை உள்ளது.
நீா் ஆற்றல் மற்றும் பேரிடா் மேலாண்மை கருத்தரங்கம் 2019
  • ஒரே இந்தியா சிறப்பான இந்தியா திட்டத்தின் கீழ் நீா் ஆற்றல் மற்றும் பேரிடா் மேலாண்மை (Ek Bharat Shreshtha Bharat/water conservation, disaster management) என்னும் தலைப்பில் ஜம்முவில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, 
  • ஜம்மு காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இணைந்து நீா் ஆற்றல் மற்றும் பேரிடா் மேலாண்மை துறைகள் குறித்த அனுபவங்களையும், இந்த துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
சீன வளர்ச்சி & ஆய்வு மையம்-நிதி அயோக் பேச்சுவார்த்தை
  • சீன அரசவையின் வளர்ச்சி மற்றும் ஆய்வு மையம்- இந்தியாவின் நிதி அயோக் இடையேயான 5-ஆவது பேச்சுவார்த்தை 28-ஆம் நாள் சீனாவின் வூ ஹான் நகரில் நடைபெற்றது.
  • புள்ளிவிவரங்களின் படி 2018-ஆம் ஆண்டில் சீன-இந்திய வர்த்தகத் தொகை பத்தாயிரம் கோடி டாலரை எட்டி, 2000-ஆம் ஆண்டில் இருந்ததை விட 33 மடங்கு அதிகரித்துள்ளது.
பொருளாதார நிகழ்வுகள்
சரக்கு மற்றும் சேவை வரி வசூல் நவம்பர் 2019 - ரூ.1,03,492 கோடி
  • 2019 நவம்பர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (GST), நாடு முழுவதும் மொத்தம் ரூ.1,03,492 கோடி வசூலாகியுள்ளது.
  • நவம்பரில் மத்திய GST-யாக (CGST) ரூ.19,592 கோடியும், மாநில GST-யாக (SGST) ரூ.27,144 கோடியும், ஒருங்கிணைந்த GST-யாக (IGST) ரூ.49,028 கோடியும் (இதில் ரூ.20,948 கோடி இறக்குமதி மூலம் கிடைத்தது), கூடுதல் வரி (CESS) மூலம் ரூ.7,727 கோடியும் கிடைத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட 2017 ஜூலையில் வரி வசூல், ரூ. ஒரு லட்சம் கோடியைத் தாண்டிய நிலையில், தற்போது 8-வது முறையாக ஒரு லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2019 மார்ச் மற்றும் ஏப்ரலுக்குப் பிறகு, 3-வது மாதமாக நவம்பர் 2019-ல், அதிக அளவிற்கு வரி வசூலாகியுள்ளது.
தமிழ்நாட்டு  நிகழ்வுகள்
உடல் உறுப்பு தானம்: தமிழ்நாடு முதல் இடம்
  • டெல்லியில் 10-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழா நடந்தது. உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதல் இடம் பெற்றமைக்கான விருது உள்ளிட்ட மூன்று தேசிய அளவிலான விருதுகளை பெற்றுள்ளது. தமிழ்நாடு 5-வது முறையாக முதல் இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசு-16 புதிய தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • சென்னை கிண்டியில் தொழில் வளர் தமிழ்நாடு முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு அமர்வு நிகழ்ச்சி நவம்பர் 30-அன்று நடைபெற்றது. 
  • இந்த நிகழ்ச்சியில் ஒரே நாளில் 16 புதிய தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • 5 ஆயிரத்து 27 கோடி ரூபாய் முதலீட்டில் 20 ஆயிரத்து 351 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் 9 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதல்மைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழக அரசு மேற்கொண்டது.
  • ரூ.28.43 கோடி மதிப்பீட்டில் 2 தொழில் பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், சென்னை ஐ.ஐ.டி. ஆகியவற்றுடன் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருவழித் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என 16 புதிய தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
  • 3 அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்கள், 60 கோடி ரூபாய் மதிப்பிலான 3 உயர்நிலை திறன் மேம்பாட்டு மையங்கள், தொழில் நிறுவனங்களின் குறைகளைத் தீர்க்க உதவும் தொழில் நண்பன் (பிஸ் பட்டி) இணையதளம் ஆகியவற்றை அவர் தொடங்கி வைத்தார்.
  • தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பெயர் மற்றும் இலச்சினை முதல்வர் வெளியிட்டார். 
  • பொருளாதாரத்தில் 2-ம் இடம்: இந்தியாவில் தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாக தமிழகம் விளங்குவதோடு, அதன் பொருளாதாரம் நாட்டிலேயே 2-ம் இடம் வகிக்கிறது.
சின்னாறு வனப் பகுதி - சுற்றுலாத் தலமாக அறிவிப்பு 
  • திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள சின்னாறு வனப் பகுதியை சுற்றுலாத் தலமாக வனத் துறை அறிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகளை நேரில் சென்று பார்வையிடும் வகையில் சுற்றுலாத் திட்டம் நவம்பர் 30-அன்று தொடங்கப்பட்டது.
திருவண்ணாமலை தீபத் திருவிழா 2019
  • திருவண்ணாமலை தீபத் திருவிழா டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
விளையாட்டு நிகழ்வுகள் 
தெற்காசிய விளையாட்டு-2019 - தொடக்கம் 
  • 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு, போக்ஹரா ஆகிய நகரங்களில் நடிப்பெறுகிறது. டிசம்பர் 1 அன்று காத்மண்டு நகரில் தொடங்கியுள்ளது. டிசம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது. 
  • இந்த தெற்காசிய போட்டியில் இந்தியா, வங்காளதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 7 நாடுகளை சேர்ந்த 2,700 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இதில் 26 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. 
  • 319 தங்கம் உள்பட 1,119 பதக்கங்கள் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
  • தேசிய கொடியேந்தும் தேஜிந்தர் பால் சிங்: தெற்காசிய போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினர் குண்டு எறிதல் வீரர் தேஜிந்தர் பால் சிங் தலைமையில் தேசிய கொடியேந்தி தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.
  • தெற்காசிய விளையாட்டு போட்டி 1984-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள கவுகாத்தி (அசாம்) மற்றும் ஷில்லாங் (மேகாலயா) ஆகிய இடங்களில் நடைபெற்றது.

டேவிஸ் கோப்பை: உலக குரூப் சுற்றுக்கு இந்தியா - தகுதி
  • டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப்-1 முதல் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நடந்தது. 
  • இந்திய அணி 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி, 2020 மார்ச் 6 மற்றும் 7-ந் தேதி நடைபெறும் உலக குரூப் சுற்றுக்கு தகுதி பெற்றது. உலக குரூப் சுற்றில் இந்திய அணி குரோஷியாவை சந்திக்கிறது. 
  • வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள் 
  • ஒற்றையர் பிரிவு - ராம்குமார், சுமித் நாகல்
  • இரட்டையர் பிரிவு - லியாண்டர் பெயஸ்-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 335 ரன்கள் குவித்து - சாதனை
  • ஆஸ்திரேலிய வீரரின் 2-வது அதிகபட்சம் ரன் இதுவாகும். மேத்யூ ஹைடன் 380 ரன்கள் சேர்த்ததே ஆஸ்திரேலிய அதிகபட்ச சாதனை ஆகும்.
  • டெஸ்டில் அதிவேகமாக 7000 ரன்: ஸ்டீவன் சுமித் சாதனை 
  • ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித், டெஸ்டில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் இந்த இலக்கை வேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்தார். 70-வது டெஸ்டில் ஆடும் சுமித் அதில் பேட்டிங் செய்த 126-வது இன்னிங்சில் இச்சாதனையை படைத்துள்ளார்.
  • 30 வயதான சுமித் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 26 சதம், 27 அரைசதம் உள்பட 7,013 ரன்கள் (சராசரி 63.75) சேர்த்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் 7 ஆயிரம் ரன்களை கடந்த 50-வது வீரர் ஆவார். 
  • இவர்களில் 60 ரன்களுக்கு மேல் சராசரி கொண்ட ஒரே வீரர் சுமித் மட்டும் தான். டான் பிராட்மேனின் ஒட்டுமொத்த ஸ்கோரையும் (6,996 ரன்) சுமித் தாண்டியது குறிப்பிடத்தக்கதாகும்.
முக்கிய தினங்கள்
டிசம்பர் 1

உலக எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 1, 2019
  • 2019 உலக எய்ட்ஸ் தின மையக்கருத்து: சமூகங்கள் மாற்றத்தை உருவாக்குகின்றன (Communities make the difference).
  • 2030-ஆண்டுக்குள் முன்னர் எச்.ஐ.வி எய்ட்ஸை ஒழிப்பதற்கான அரசாங்கம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.
நாகாலாந்து மாநில தினம் - டிசம்பர் 1, 2019 
  • 57-ஆவது நாகாலாந்து மாநில தினம் (57th Nagaland Statehood Day 2019) டிசம்பர் 1, 2019அன்று கடைபிடிக்கப்பட்டது.
  • மியான்மரின் எல்லையில் உள்ள நாகாலாந்து, டிசம்பர் 1, 1963 அன்று இந்தியாவின் 16-வது மாநிலமாக பிரிக்கப்பட்டது.
  • நாகாலாந்து முதல்வா்: நெப்யூ ரியோ
எல்லை பாதுகாப்புப்படை எழுச்சி தினம் - டிசம்பர் 1, 2019
  • இந்திய எல்லை பாதுகாப்புப்படையின் 55-வது எழுச்சி தினம் (55th BSF Raising Day), டிசம்பர் 1, 2019 அன்று கடைபிடிக்கப்பட்டது.
  • பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷுடனான 6,386 கி.மீ நீளமுள்ள எல்லைகளை பாதுகாக்கவும் ட்ரோன்களின் அச்சுறுத்தலை தடுக்கவும் புதிய தொழில்நுட்ப தீர்வுகளை இந்திய எல்லை பாதுகாப்புப்படை மேற்கொண்டு வருகிறது.
  • BSF: Border Security Force.
Previous Post Next Post