நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 1, 2019
சர்வதேச நிகழ்வுகள்யுனெஸ்கோ ஆக்கபூர்வ நகரங்கள் பட்டியல் 2019 - ஐதராபாத், மும்பை இணைப்பு
- 2019 அக்டோபர் 31-அன்று, 66 நகரங்களை யுனெஸ்கோ அமைப்பு ஆக்கபூர்வ நகரங்களாக அறிவித்துள்ளது.
- யுனெஸ்கோ ஆக்கபூர்வ நகரங்கள் பிணையத்தில் (UNESCO Creative Cities Network), இந்தியாவில் இருந்து, ஐதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்கள், இந்த 2019-ஆம் ஆண்டு படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
- மும்பை நகரம் (Films) திரைப்படத்துறைக்காகவும், ஐதராபாத் நகரம் (Gastronomy) சுவையுணவு கலைக்காகவும் இந்த USSN பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
- இந்தியாவில் இருந்து ஆக்கபூர்வ நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நகரங்கள் விவரம்:
- வாரணாசி - இசை (Music)
- சென்னை - இசை (Music)
- ஜெய்ப்பூர் - கைவினை மற்றும் நாட்டுப்புற கலை (Crafts and Folk art)
- மும்பை - திரைப்படம் (Films)
- ஐதராபாத் - சுவையுணவு கலை (Gastronomy)
வியன்னா மாநாட்டு விதியை மீறியது பாகிஸ்தான் - சா்வதேச நீதிமன்றம் அறிவிப்பு
- குல்பூஷண் ஜாதவ் வழக்கில் வியன்னா மாநாட்டு விதி 36-ஐ பாகிஸ்தான் மீறிவிட்டது, என்று சா்வதேச நீதிமன்ற நீதிபதி அப்துல்லாவி யூசுஃப் ஐ.நா. பொதுச் சபையில் தெரிவித்தாா்.
- கூடுதல் தகவல்கள்
- ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, இந்தியாவுக்காக உளவு பாா்த்ததாக, குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் கடந்த 2016-ஆம் ஆண்டு கைது செய்தது. இது தொடா்பான வழக்கில், குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் மரண தண்டனை விதித்தது.
- இதை எதிா்த்து, இந்தியா தொடுத்த வழக்கை விசாரித்த சா்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் மறுஆய்வு செய்ய கடந்த ஜூலை 17-ஆம் தேதி உத்தரவிட்டது.
ஜப்பானின் ஷுரி கோட்டை - தீவிபத்தில் எரிந்து நாசம்
- யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஜப்பானின் ஷுரி கோட்டையில், அக்டோபர் 31-அன்று ஏற்பட்ட தீவிபத்தில் அதன் பெரும் பகுதி எரிந்து நாசமானது.
- ஜப்பானின் ஒகினாவா பகுதி கலாசாரத்தின் அடையாளமாக பாரம்பரியம் மிக்க ஷூரி கோட்டை கருதப்பட்டது.
குருநானக் 550-ஆவது பிறந்த தினம் - பாகிஸ்தானில் நாணயம் வெளியீடு
- சீக்கிய மதத்தை நிறுவியவரும், சீக்கியா்களின் முதல் குருவுமான குருநானக் தேவின் 550-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது நினைவாக பாகிஸ்தானில் நாணயம் அக்டோபர் 31-அன்று வெளியிடப்பட்டது.
- பாகிஸ்தானின் ஸ்ரீ நன்கானா சாஹிப் பகுதியில் பிறந்தவா் குருநானக் தேவ். சீக்கிய மதத்தைப் பரப்பிய அவரது 550-ஆவது பிறந்த தினம் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.
- குருநானக் தேவின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்காக, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகா்கள் பாகிஸ்தானின் கா்தாா்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
- இந்த யாத்திரை மேற்கொள்வதற்கு வசதியாக, பஞ்சாபின் குருதாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கா்தாா்பூரில் உள்ள தா்பாா் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.
- குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம் நவம்பர் மாதம் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
- இதையொட்டி, கா்தாா்பூா் வழித்தடம் திறக்கப்படவுள்ளது. கா்தாா் வழித்தடப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியதையடுத்து, இரு நாடுகளும் அண்மையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, நாளொன்றுக்கு 5,000 யாத்ரீகா்கள் கா்தாா்பூா் குருத்வாரா செல்வதற்கு அனுமதிக்கப்பட உள்ளனா்.
தேசிய நிகழ்வுகள்
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் 2019
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை, 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
- வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்களிக்கும் வசதி அறிமுகம்
- நாட்டிலேயே முதன்முறையாக வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு முறையில் வாக்களிக்கும் வசதி ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது
- இதுவரை காவலர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு மட்டும்தான் தபால் வாக்கு முறையில் வாக்களிக்கும் வசதி இருந்து வந்தது.
டெல்லியில் 'பொதுசுகாதார அவசர நிலை பிரகடனம்'
- டெல்லியில் நவம்பர் 1-அன்று காலை காற்றின் தரம் கடுமையான பிரிவில் நீடித்ததால், தலைநகர் டெல்லியில் பொதுசுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
- டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர் 5ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த காற்றின் தரம் 582 புள்ளிகளாக உயர்ந்தது.
- காற்றின் தரக் குறியீடு
- ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு பூஜ்யம் முதல் 50 வரை இருந்தால் நல்லது பிரிவிலும், 51-100 வரை இருந்தால் திருப்தி பிரிவிலும், 101-200 வரை இருந்தால் மிதமான பிரிவிலும், 201-300 வரை இருந்தால் மோசம் பிரிவிலும், 301 -400 வரை இருந்தால் மிகவும் மோசம் பிரிவிலும், 401 -500 வரை இருந்தால் கடுமையான பிரிவிலும், 500-க்கு மேல் இருந்தால் மிகவும் கடுமையான பிரிவிலும் கணக்கிடப்படுகிறது.
- காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பு - சஃபா்
- ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தொடர்ந்து விவசாயக் கழிவுகளை எரிப்பதால், தில்லியில் காற்று மாசு உயர்ந்து வருகிறது.
- இந்த பயிர்க் கழிவுகள்எரிப்பு புதன்கிழமை 35 சதவீதம் வரை அதிகரிக்கச் செய்துள்ளது’ என மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பான சஃபா் அமைப்பு தெரிவித்திருந்தது.
2050-க்குள் கடலில் மூழ்கவுள்ள 'மும்பை, சூரத், சென்னை, கொல்கத்தா' நகரங்கள்
- புவி வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு நடத்தி வரும் கிளைமேட் சென்டர் தன்னார்வ நிறுவனம் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது
- கார்பன் வெளியேற்றத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் 2050-ம் ஆண்டுக்குள் மும்பை, சூரத், சென்னை, கொல்கத்தா நகரங்களின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- இந்தியாவில் தற்போது கடலோரப் பகுதிகளில் வாழும் 3.1 கோடி மக்கள் ஆண்டுதோறும் வெள்ள அபாயத்தில் சிக்குவதாகவும், இது 2050க்குள் 3.5 கோடி மக்களாகவும், 2100ல் 5.1 கோடி மக்களாக அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
- 20-ம் நூற்றாண்டில் தற்போதிருக்கும் கடல் மட்டத்தை விட, 11-16 செ.மீ. அல்லது 500 மி.லிட்டர் கோக் பாட்டலின் உயரத்தில் பாதி அளவுக்கு கடல் மட்டம் உயர்ந்துவிடும் என்றும் எச்சரிக்கிறது.
- உலகளவில் கார்பன் வெளியேற்றம் அதிகரித்து வருவதன் காரணமாக ஏற்படும் எதிர்வினைகளே இந்த அபாய நிலைக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்
ஜம்மு-காஷ்மீா், லடாக் துணைநிலை ஆளுநா்கள் - பதவியேற்பு
- புதிதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநா்கள் அக்டோபர் 31-அன்று பதவியேற்றனா்.
- ஜம்மு-காஷ்மீா் ஆளுநர் - கிரீஷ் சந்திர முா்மு
- ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை ஆளுநராக கிரீஷ் சந்திர முா்மு (வயது 59) அக்டோபர் 31-அன்று பதவியேற்றாா்.
- ஸ்ரீநகரில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
- லடாக் ஆளுநர் - ராதா கிருஷ்ண மாத்துா்
- லடாக் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை ஆளுநராக ராதா கிருஷ்ண மாத்துா் (வயது 65) லடாக்கின் லே பகுதியில் உள்ள சிந்து சம்ஸ்கிருதி அரங்கில் பதவியேற்றுக்கொண்டாா். ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கீதா மிட்டல் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
- ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு 2019ஆகஸ்ட் மாதம் பிரித்தது. அந்த இரு யூனியன் பிரதேசங்களும் அக்டோபர் 31 முதல் செயல்பாட்டுக்கு வந்தன. இதன் மூலம் நாட்டிலுள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9-ஆக உயா்ந்தது. அதே வேளையில், மாநிலங்களின் எண்ணிக்கை 28-ஆகக் குறைந்தது.
- வானொலி நிலைய பெயர் மாற்றம்
- ஜம்மு-காஷ்மீா் மாநில வானொலி நிலையத்தின் பெயரை பிரசார் பாரதி நிறுவனம் மாற்றியமைத்து உள்ளது. அதன்படி ‘காஷ்மீர் ரேடியோ’ என்ற பெயர் ‘ஆல் இந்திய ரேடியோ’ என மாற்றப்பட்டுள்ளது.
மாநிலங்களவையின் 8 நிலைக்குழுகளின் தலைவர்கள் - நியமனம்
- நாடாளுமன்ற மாநிலங்களவையின் 8 நிலைக்குழுக்களை மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு மாற்றியமைத்துள்ளாா். குழுக்கள் மற்றும் கட்சியின் விவரம்:
- மாநிலங்களவை நிா்வாக ஆலோசனைக் குழு தலைவர் - வெங்கய்ய நாயுடு (மாநிலங்களவைத் தலைவா்)
- விதிகள் குழு தலைவர் - வெங்கய்ய நாயுடு (மாநிலங்களவைத் தலைவா்)
- சலுகைகள் குழு தலைவர் - ஹரிவன்ஸ் நாராயண் சிங் (மாநிலங்களவை துணைத் தலைவா்)
- மாநிலங்களவை நெறிகள் குழுத் தலைவர் - 'பிரபாத் ஜா' (பாரதிய ஜனதா)
- மனுக்கள் தொடா்பான குழு தலைவர் - பிரசன்னா ஆச்சாா்யா (பிஜு ஜனதா தளம்)
- துணைநிலை சட்டக்குழு தலைவர் - டி.சுப்பராமி ரெட்டி (காங்கிரஸ்)
- அரசு உத்தரவாதக் குழு தலைவர் - நவநீத கிருஷ்ணன் (அ.தி.மு.க.)
- உறுப்பினர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தரும் குழு தலைவர் - ஓம் பிரகாஷ் மாத்துா் (பாரதிய ஜனதா).
பாதுகாப்பு/விண்வெளி
நிலவில் 'ஆர்கான் 40' வாயுவைகண்டுபிடித்த 'சந்திரயான்-2 விண்கலம்'
- நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள 'சேஸ்-2 என்ற கருவி', நிலவில் இருக்கும் வாயுக்களை ஆராய்ந்து தகவல் அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது.
- நிலவின் புறக்காற்று மண்டலத்தில் 'ஆர்கான் 40' என்ற வாயு இருப்பதை சந்திரயான்-2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் கண்டறிந்து இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு (இஸ்ரோ) தகவல் அனுப்பியுள்ளது.
இந்தியா-சவூதி அரேபியா முதலாவது கடற்படை கூட்டுப்பயிற்சி-2020
- இந்தியா-சவூதி அரேபியா இடையே முதல் கடற்படை கூட்டுப்பயிற்சி, 2020 மாா்ச் மாதம் நடைபெறவுள்ளது.
- சவூதியின் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த அந்நாடு முயற்சித்து வருகிறது.
டெல்லி IIT-இல் அமையும் 'விண்வெளி தொழில்நுட்ப மையம்'
- இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) உதவியுடன் டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) விண்வெளி தொழில்நுட்ப மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- விண்வெளி தொழில்நுட்பத் துறையில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) பெங்களூரு, ஐஐடி மும்பை, ஐஐடி கான்பூா், ஐஐடி கரக்பூா், ஐஐடி சென்னை, ஐஐடி குவாஹாட்டி மற்றும் ஐஐடி ரூா்கி ஆகிய கல்வி நிறுவனங்களில் ஏற்கெனவே விண்வெளி தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனங்களின் வரிசையில் இப்போது ஐஐடி தில்லியும் இணைந்துள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம்
சீனாவில் 5G சேவை - தொடக்கம்
- சீனாவில் 5G சேவை நவம்பர் 1 முதல் ஆரம்பமாகிறது.
- சைனா மொபைல்ஸ், சைனா யூனிகாம், சைனா டெலிகாம்ஸ் ஆகிய சீனாவின் மூன்று அரசு நிறுவனங்கள் இச்சேவையை இன்று தொடங்குகின்றன.
- அடுத்தகட்ட இணையதளப் புரட்சியின் தொடக்கமாக 5G சேவை கருதப்படுகிறது.
- இன்றைய 3G, 4G நெட்வொர்க்குகளை விட பத்து மடங்கு அதிகமான அழைப்புகள் மற்றும் தகவல் போக்குவரத்தை கையாளும் விதத்தில் 5ஜி தொழில்நுட்பம் இருக்கும். தகவல் பதிவிறக்க வேகம் 4ஜி நெட்வொர்க்கை விட பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும்.
தமிழ்நாடு நிகழ்வுகள்
தமிழ்நாடு நாள் விழா - நவம்பர் 1, 2019
- நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நவம்பர் 1-அன்று தமிழ்நாடு நாள் விழா கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.
- கொந்தகை கிராமத்தில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம்
- கீழடி அகழாய்வின் போது கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா கொந்தகை கிராமத்தில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
- தமிழர்களின் பண்பாடு, தொன்மை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.
- தமிழ்நாடு உருவான நாள் - நவம்பர் 1, 2019
- மொழிவாரி மாநிலங்களாக மெட்ராஸ் மாகாணம் என்பது ‘மெட்ராஸ் ஸ்டேட்’, ஆந்திரம், கா்நாடகம், கேரளம் என 1956-ஆம் ஆண்டு நவம்பா் 1-இல் பிரிக்கப்பட்டது.
- இந்தியாவில் முதன்முதலாக மொழிவாரி மாநிலமாக உருவானது ஒடிஸா. இந்திய விடுதலைக்கு முன்பே, 1936-இல் மதுசூதன்தாஸ் என்பவரின் முயற்சியால், பிகாருடன் இணைந்த மாகாணமாக இருந்த ஒடிஸா தனியாகப் பிரிந்து ஒடிஸா மாநிலம் உருவானது.
- மொழிவாரி மாநில அமைப்பு முறைக்காக மாநில சீரமைப்புச் சட்டம் 1956, ஆகஸ்டு 31-ஆம் நாளில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ரூ.8,120 கோடிக்கு 21 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல்
- தமிழ்நாட்டில் ரூ.8 ஆயிரத்து 120 கோடி மதிப்பிலான 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான உயா்நிலைக் குழு நவம்பர் 1-அன்று ஒப்புதல் அளித்தது.
- இந்த தொழில் முதலீடுகள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்து சுமாா் 16 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
- இந்தத் திட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், கோவை, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி ஆகிய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு
- விக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தோ்தலில் வெற்றிபெற்ற ஆளும் அதிமுக கட்சியை சேர்ந்த ஆா்.முத்தமிழ்ச்செல்வன், மற்றும் வி.நாராயணன் ஆகியோா் சட்டமன்ற உறுப்பினர்களாக நவம்பர் 1-அன்று பதவியேற்றுக் கொண்டனா்.
- பேரவைத் தலைவா் பி.தனபால் இரண்டு பேருக்கும் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தாா்.
- சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை
- இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் புதிதாக பொறுப்பேற்ற நிலையில், சட்டப் பேரவையில் அதிமுகவின் பலம் 124 ஆக உயா்ந்துள்ளது. பேரவைத் தலைவருடன் சோ்த்து அந்தக் கட்சிக்கு 125 போ் ஆதரவு உள்ளது.
- எதிா்க்கட்சியான திமுகவுக்கு 100 உறுப்பினா்களும், காங்கிரஸ் கட்சிக்கு ஏழு பேரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, சுயேச்சை (டிடிவி தினகரன்) ஆகியோருக்கு தலா ஒரு இடமும் உள்ளன.
ஓட்டுநா் உரிமம் பெற கல்வித் தகுதி தேவையில்லை
- ஓட்டுநா் உரிமம் பெற குறைந்தபட்சக் கல்வித் தகுதி பெற வேண்டும் என்ற விதியை தமிழக போக்குவரத்துத் துறை நீக்கியுள்ளது.
- கனரக வாகன ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறத் தேவையில்லை என்று மோட்டாா் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
- இந்தியாவில் 1939-ஆம் ஆண்டு மோட்டாா் வாகனச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பின்னா் 1988-ஆம் ஆண்டு மோட்டாா் வாகனச் சட்டம் முதன் முறையாக மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 1974-ஆம் ஆண்டு தமிழக அரசால் சில மோட்டாா் வாகன விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.
1,000 பள்ளிகளில் "அடல் ஆய்வகம்"
- மாணவா்களை ஊக்கப்படுத்துவதற்கும், சிறந்த மாணவா்களாக உருவாக்குவதற்கும் தமிழகத்தில் 1,000 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் செலவில் அடல் ஆய்வகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கானப் பணிகள் வரும் ஜனவரிக்குள் நிறைவேற்றப்படும்.
- பள்ளி மாணவா்களிடம் பல்வேறு துறைகள் சாா்ந்த புத்தாக்க சிந்தனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அடல் புத்தாக்க ஆய்வக திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
அம்மா படப்பிடிப்பு தளம் - அடிக்கல் நாட்டல்
- காஞ்சீபுரம் மாவட்டம் பையனூரில் தமிழக அரசு நிதி உதவியுடன் அமைய உள்ள அம்மா படப்பிடிப்பு தளத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 1-அன்று அடிக்கல் நாட்டினார்.
- ஜெயலலிதா பெயரில் அம்மா படப்பிடிப்பு அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.5 கோடி நிதி வழங்கப்படுகிறது.
பணி நிரந்தரம் செய்யப்படாத பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுமுறை
- தமிழக அரசில் பணியாற்றும் நிரந்தர பெண் பணியாளர்கள் மகப்பேறு காலத்தில் 270 நாட்கள் வரை ஊதியத்துடன் விடுமுறை எடுத்துக்கொள்ள ஏற்கனவே அரசு அனுமதித்துள்ளது.
- தற்போது, பணி நிரந்தரம் செய்யப்படாத பெண் பணியாளர்களுக்கும் மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் 270 நாட்கள் வரை விடுமுறை எடுத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு நவம்பர் 1-முதல் அனுமதி அளிதுள்ளது.
தூய்மையே சேவை திட்டத்தில் 'கூவம் ஆற்றை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்'
- இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தேசிய பேரிடர் மீட்பு பணித்துறை சார்பில் ‘தூய்மையே சேவை’ என்ற திட்டத்தின் மூலம் நேற்று சென்னை நேப்பியர் பாலம் கூவம் ஆற்றின் கரையோரத்தில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
- இந்த நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி நவம்பர் 1-அன்று தொடங்கி வைத்தார்.
கீழடியில் 6-வது கட்ட அகழாய்வு - ஜனவரி மாதம் தொடக்கம்
- கீழடியி 6-வது கட்ட அகழாய்வு 110 ஏக்கரில் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இதற்கு ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிகழ்வுகள்
2019 அக்டோபர் மாத GST வசூல் - ரூ.95,380 கோடி
- சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் 2019 அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.95,380 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாத வசூலைவிட 5.29 சதவீதம் குறைவு. கடந்த ஆண்டு இந்த மாதத்தில் ரூ.1 லட்சத்து 710 கோடி வசூலானது. தொடர்ந்து 3 மாதங்களாக ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக ஜி.எஸ்.டி. வசூலாகி வருகிறது.
- 2019 செப்டம்பர் மாதம் ரூ.91,916 கோடியாக இருந்தது.
- அக்டோபர் மாத வசூலில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.17,582 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.23,674 கோடி, சர்வதேச ஜி.எஸ்.டி. ரூ.46,517 கோடி (ரூ.21,446 கோடி இறக்குமதி வரி உள்பட), கூடுதல் வரி ரூ.7,607 கோடி ஆக மொத்தம் ரூ.95,380 கோடி என்று வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
முக்கிய நபர்கள்
குருதாஸ் தாஸ்குப்தா - காலமானார்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான குருதாஸ் தாஸ்குப்தா (வயது 83) உடல்நலக் குறைவு காரணமாக அக்டோபர் 31-அன்று காலமானார்.
உலகிலேயே வயதான பெண் 'தான்சிலியா பிசம்பேயவா' மரணம்
- உலகிலேயே வயதான பெண் என்ற சிறப்பை பெற்ற, 123 வயதான 'தான்சிலியா பிசம்பேயவா', ரஷியாவின் அஸ்ட்ராஜன் பிராந்தியத்தில் உள்ள இஸ்லமாசி என்ற கிராமத்தில் வசித்து வந்தார்.
- 1896-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி பிறந்த இவர், 3 நூற்றாண்டுகளை கண்டவர் அண்மையில் இறந்துவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
ஆக்கி
ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்று போட்டிகள் (இந்தியா)
- 2020-ம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆக்கி தகுதி சுற்று போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில்நடைபெறுகிறது.
- ஆண்கள் பிரிவில் இந்தியா- ரஷியா அணியும், பெண்கள் பிரிவில் இந்தியா-அமெரிக்கா அணியும் விளையாடுகின்றன.
- மன்பிரீத் சிங் தலைமையில் பங்கேற்கும், இந்திய ஆண்கள் அணி தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ளது.
- ராணி ராம்பால் தலைமையில் பங்கேற்கும், இந்திய பெண்கள் அணி தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கிறது.
கிரிக்கெட்
ICC டெஸ்ட் தரவரிசை: 3 ஆண்டுகளாக இந்தியா முதலிடம்
- கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 3 ஆண்டுகளாக முதலிடத்தில் நீடித்து சாதனை படைத்துள்ளது.
- இந்திய அணி, தொடா்ந்து 11-ஆவது டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
தடகளம்
தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2019 (குண்டூர்)
- 35-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் நவம்பர் 2 முதல் 6-ந் தேதி வரை நடக்கிறது.
முக்கிய தினங்கள்
நவம்பர் 1 - தமிழ்நாடு நாள்
- தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நவம்பர் 1-ந்தேதி தமிழ்நாடு நாளாகக, முதன் முறையாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நவம்பர் 1-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது.
- இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ந் தேதி முதலாவது தமிழ்நாடு நாளாக நவம்பர் 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 1 - சத்தீஷ்கர் மாநிலம் உருவான தினம்
- 2000-ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது.
நவம்பர் 1 - கேரளா மாநிலம் உருவான தினம்
- மாநிலங்கள் மறுவரையறைச் சட்டத்தின் கீழ் 1956ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி கேரளா உருவானது.
நவம்பர் 1 - ஹரியானா மாநிலம் உருவான தினம்
- 1966-ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி ஹரியானா மாநிலம் உருவாக்கப்பட்டது.
நவம்பர் 1 - மத்தியப்பிரதேசம் மாநிலம் உருவான தினம்
- 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது.
நவம்பர் 1 - கர்நாடகம் மாநிலம் உருவான தினம்
- மாநிலங்கள் மறுவரையறைச் சட்டத்தின் கீழ் 1956ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி கர்நாடகம் உருவானது.
நவம்பர் 01 - உலக சைவ உணவு பழக்க தினம் (World vegan day)