TNPSC Current Affairs November 7, 2019

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 7, 2019
சர்வதேச நிகழ்வுகள் 
அல்சைமர் நோய்க்கான உலகின் முதல் மருந்து 'GV-971'-சீனா அங்கீகாரம் 
  • “GV-971” என்ற அல்சைமர் நோய்க்கான உலகின் முதலாவது மருந்தை சமீபத்தில் சீனா நாடு அங்கீகரித்துள்ளது. 
  • அல்சைமர் நோய்க்கான (Alzheimer’s disease), உலகின் முதல் பல இலக்கு மற்றும் கார்போஹைட்ரேட் அடிப்படையிலான இந்த GV-971 மருந்து, பழுப்பு ஆல்காவிலிருந்து (brown algae) எடுக்கப்படுகிறது.
  • GV-971 அல்லது “Oligomannate” என்றழைக்கப்படும் இந்த மருந்து, ஒரு கடற்பாசி கொண்டு தயாரிக்கப்பட்டு, வாய்வழியாக கொடுக்கப்படுகிறது.
  • அல்சைமர் நோய்: இது மீளமுடியாத மூளைக் கோளாறு நோய் ஆகும், இது மெதுவாக நினைவகம், சிந்தனை திறன் மற்றும் எளிய பணிகளைச் செய்வதற்கான திறனை அழிக்கிறது.
பங்களாதேஷ் இஸ்லாமிய அமைப்பு ‘அலார் டால்-க்கு தடை விதிப்பு 
  • பங்களாதேஷ் நாட்டு அரசு, ‘அலார் டோல்’ (Allar Dol) என்ற இஸ்லாமிய அமைப்பை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் தடை செய்துள்ளது. பங்களாதேஷில் தீவிரவாததிற்காக தடை விதிக்கப்பட்ட 9 வது இஸ்லாமிய குழு இதுவாகும்.
தேசிய நிகழ்வுகள்
ஹார்மோனைஸ் சிஸ்டம் குறியீடு - சில தகவல்கள் 
  • சமீபத்தில் செய்திகளில் வெளிவந்த ஹார்மோனைஸ் சிஸ்டம் குறியீடு (HS code) காதி துறையுடன் தொடர்புடையது ஆகும். ஏற்றுமதிக்கான காதி தயாரிப்புகளை வகைப்படுத்துகிறது.
  • காதி தயாரிப்புகளை ஏற்றுமதியில் பிரத்தியேகமாக வகைப்படுத்துவதற்காக, இந்தியாவில் உள்ள பொது ஜவுளி பொருட்களிலிருந்து காதியைப் பிரிக்க மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் ஒரு ஒத்திசைவான அமைப்பு ஹார்மோனைஸ் சிஸ்டம் (HS code) குறியீட்டை வெளியிட்டுள்ளது.
  • HS குறியீடு என்பது உலக சுங்க அமைப்பு (WCO) உருவாக்கிய 6 இலக்க அடையாள குறியீடாகும், மேலும் இது தயாரிப்புகளை சர்வதேச எல்லைகளை கடக்க அனுமதிக்க சுங்க அதிகாரிகளால் பயன்படுத்தப்படுகிறது. இந்த குறியீடு 1974 கியோட்டோ மாநாட்டிலிருந்து பின், 200 க்கும் மேற்பட்ட நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.
  • HS Code: Harmonized System Code.
ரியல் எஸ்டேட் துறைக்கு 'ரூ.25 ஆயிரம் கோடி'
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நவம்பர் 6-அன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
தென்னக ரெயில்வே இடங்களில் பேனர்கள் வைக்க 'தடைவிதிப்பு' 
  • தென்னக ரெயில்வேக்கு சொந்தமான இடங்களில் பேனர்கள் வைக்க தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிளக்ஸ் போர்டு வைக்க தடை அமலில் உள்ளது.
மிகப்பெரிய வானியற்பியல் அசெம்பிளி - உருவாக்கம் 
  • கொல்கத்தா மாணவர்கள் மிகப்பெரிய வானியற்பியல் திரட்டை (Astrophysics Assemble) உருவாக்கி கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளனர். கொல்கத்தாவில் நடைபெற்ற, 2019 சர்வதேச இந்திய அறிவியல் ((IISF 2019) விழாவின் நவம்பர் 5-அன்று, 1,598 க்கும் மேற்பட்ட கொல்கத்தா மாணவர்கள் இணைந்து, வானியற்பியல் பாடத்தையும் (45 நிமிடங்கள்) மற்றும் ஸ்பெக்ட்ரோஸ்கோப்களின் அசெம்பிளி கூட்டத்தையம் நடத்தி கின்னஸ் உலக சாதனை புரிந்தனர்.
பாதுகாப்பு/விண்வெளி
இந்தியா-ரஷியா ராணுவ தொழில்நுட்ப ஆணைய உயா்நிலை கூட்டம்-2019
  • இந்தியா, ரஷியா இடையிலான ராணுவம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஆணையத்தின் 19-ஆவது உயா்நிலை கூட்டம் (IRIGC-M&MTC), ரஷியத் தலைநகா் மாஸ்கோ நகரில் நவம்பர் 6-அன்று நடைபெற்றது. 
  • இதில், இந்தியா சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழுவினரும், ரஷியா சார்பில் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கே ஷோய்கு தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனா். 
  • இந்தியா, ரஷியா இடையே 2021-30-ஆம் காலகட்டத்துக்கான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு திட்டத்தை இறுதி செய்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.
  • ‘மேக் இன் இந்தியா’ (Make in India) முயற்சியின் கீழ் இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதில் ரஷ்யா முழு ஆதரவையும் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. 
  • IRIGC-M&MTC: India-Russia Inter-Governmental Commission on Military and Military-Technical Cooperation.
விருதுகள்  
2019 டாக்கா இலக்கிய விழா விருது: அபிசேக் சர்க்கார் 
  • மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அபிசேக் சர்க்கார் (Abhisek Sarkar), 2019-ஆம் ஆண்டுக்கான டாக்கா இலக்கிய விழா (2019 Dhaka Lit-fest) விருதை வென்றார். பங்களா அகாடமியில் இந்த விழா நடத்தப்பட்டு விருது வழங்கப்படுகிறது. 
நியமனங்கள்
தென்னிந்தியாவின் முதல் பெண் விமான நிலைய தீயணைப்பு வீரா் - ரம்யா ஸ்ரீ கண்டன்
  • இந்திய விமான நிலைய ஆணையத்தின் தென் மண்டலத்தில், முதலாவது பெண் தீயணைப்பு வீரராக ரம்யா ஸ்ரீ கண்டன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • தென்னிந்தியாவில் உள்ள, இந்திய விமான நிலைய ஆணைய விமான நிலையங்களில் முதலாவதாகவும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மூன்றாவது பெண் தீயணைப்பு பணியாளராகவும், ரம்யா ஸ்ரீகண்டன் ( வயது 28) என்பவா் சென்னை விமான நிலையத்தில் நவம்பர் 1-அன்று விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் பணியில் சோ்ந்துள்ளாா்.
மாநாடுகள்  
G20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு-2019
  • G20 கூட்டமைப்பு நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு-2019 (6th Parliamentary Speakers’ Summit), ஜப்பானின் டோக்கியோவில் நவம்பர் 3-5 முதல் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் 'ஓம் பிர்லா' தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு, பங்கேற்றது.
  • இந்த மாநாடு அதிகாரப்பூர்வமற்ற முறையில் P20 என்று அழைக்கப்பட்டது. இம்மாநாட்டை ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச நாடாளுமன்றம் (Inter-Parliamentary Union) மற்றும் எனப்படும் ஜப்பான் தேசிய நாடாளுமன்றம் (National Diet of Japan) ஆகியவை இணைந்து நடத்தின.
மோகன் ராகேஷ் நாட்டிய எவாம் சம்மன் சமரோ” என்ற நாடக விழா-2019
  • புகழ்பெற்ற நாடக ஆசிரியர் மோகன் ராகேஷுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக , “மோகன் ராகேஷ் நாத்யா எவாம் சம்மன் சமரோ” (Mohan Rakesh Natya evam Samman Samaroh) என்ற 4 நாட்கள் திருவிழாவை டெல்லி அரசாங்கத்தின் கலை மற்றும் கலாச்சார பிரிவான “சாகித்ய கலா பரிஷத்” நவம்பர் 11, 2019 முதல் காமணி ஆடிட்டோரியத்தில் நடத்துகிறது.
இராஜராஜசோழன் சதய விழா 2019 - தொடக்கம் 
  • தஞ்சாவூா் பெரியகோயிலில் 1034-ஆம் ஆண்டு சதய விழா நவம்பர் 6-அன்று தொடங்கியது. தொடா்ந்து, ராஜராஜ சோழன் பிறந்த சதய நட்சத்திர நாளான நவம்பர் 7-ஆம் தேதி, பெரியகோயில் முன்புறம் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஆட்சியா் ஆ. அண்ணாதுரை மாலை அணிவித்தாா்.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
வங்காள விரிகுடாவில் ‘புல் புல்’ புயல்
  • வங்காள விரிகுடாவில், வட அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 6-அன்று ‘புல் புல்’ என்ற பெயரிலான புயல் உருவாகி உள்ளது. ‘புல் புல்’ என்ற பெயரை பாகிஸ்தான் நாடு வழங்கியுள்ளது.
  • புல்பூல் என்ற சொல் பாரசீக அல்லது அரபு மொழிகளில் இருந்து உருவானது, இதற்கு நைட்டிங்கேல் என்ற பறவையை குறிக்கிறது.
  • மகா’ புயல்: அரபிக்கடலில் உருவான ‘மகா‘ புயல், டையு யூனியன் பிரதேசம் அருகே குஜராத் கடலோர பகுதியில் நவம்பர் 7அன்று கரையை கடந்து வலுவிழந்தது. இந்த ‘மகா‘ புயலுக்கு ஓமன் நாடு பெயர் சூட்டியுள்ளது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்  
செங்கல்பட்டில் - சர்வதேச யோகா & இயற்கை மருத்துவ அறிவியல் மையம் 
  • செங்கல்பட்டில் ரூ.96 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மைய கட்டிடத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 6-அன்று அடிக்கல் நாட்டினார்.
  • இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, உலகத்தரம் வாய்ந்த ‘சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்’ செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்படுகிறது.
தமிழ்நாட்டில் - 2 தொழில் வழித்தடத் திட்டங்கள் 
  • தமிழ்நாட்டில், சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 8.4 சதவீத பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டின் சிப்காட் வளாகங்களில், 21 தொழிற்பூங்காக்கள் உள்ளன. 
சிவகங்கை பாகனேரியில் அரிய நூல்கள் கண்டெடுப்பு
  • சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் 200 ஆண்டுகள் பழைமையான 1,000-க்கும் மேற்பட்ட அரிய நூல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 1806-ஆம் ஆண்டு வெளியான ‘மாறனலங்கார விஷய சூசிகை’ எனும் மிகப் பழைமையான அகராதி கிடைத்துள்ளது.
முக்கிய தினங்கள் 
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் - நவம்பர் 7
  • பிரபல விஞ்ஞானி மேடம் கியூரியின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 7 ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் (National Cancer Awareness Day) அனுசரிக்கப்படுகிறது
Previous Post Next Post