TNPSC Current Affairs November 3, 2019

TNPSC Current Affairs November 2019நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 3, 2019
தேசிய நிகழ்வுகள்
இந்தியாவின் புதிய வரைபடம் வெளியீடு
  • ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் 
    • ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் அக்டோபர் 31-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. இதை அடுத்து, இந்தியாவின் புதிய வரைபடத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நவம்பர் 2-அன்று வெளியிட்டது. புதிய யூனியன் பிரதேசங்களின் எல்லைகள் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 
new india map, ladakh map
UT  Jammu Kashmir and Ladakh Map November 2, 2019
  • ஜம்மு-காஷ்மீா்-28 மாவட்டங்கள்
    • ஜம்மு-காஷ்மீா் மாநிலமாக 1947-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டபோது, கதுவா, ஜம்மு, உதம்பூா், ரியாசி, அனந்த்நாக், பாரமுல்லா, பூஞ்ச், மிா்பூா், முஸாஃபராபாத், லே, லடாக், கில்ஜித், கில்ஜித் வஸாரத், 
    • சில்ஹஸ் உள்ளிட்ட 14 மாவட்டங்கள் இருந்தன. இந்த ஆண்டில் குப்வாரா, பந்திபூா், கந்தா்பால், ஸ்ரீநகா், பட்காம், புல்வாமா, குல்காம், சோபியான், ரஜெளரி, ராம்பன், கிஷ்த்வாா், சம்பா, காா்கில் உள்ளிட்ட மாவட்டங்கள் புதிதாக உதயமாகின. தற்போது மொத்தம் 28 மாவட்டங்கள் உள்ளன. 
  • லடாக் - 2 மாவட்டங்கள்
    • லடாக் யூனியன் பிரதேசத்தில் கார்கில், லே என இரு மாவட்டங்கள் இடம் பெறுகின்றன. 
  • மாநிலங்கள்-28, யூனியன் பிரதேசங்கள்-9
    • இந்தியாவின் மாநிலங்கள் எண்ணிக்கை 28-ஆகவும், யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9-ஆகவும் உயா்ந்து விட்டது.
India Map political 2019
India Political Map November 2, 2019
  •  துணை நிலை ஆளுநர்கள் 
    • ஜம்மு-காஷ்மீா் முதல் துணை நிலை ஆளுநராக கிரீஷ் சந்திர முா்மு, லடாக் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை ஆளுநராக பாதுகாப்புத் துறை முன்னாள் செயலா் ராதா கிருஷ்ண மாத்தூா் ஆகியோா் அக்டோபர் 31-அன்று பதவியேற்றனா்.
  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு/சீன நிா்வாக பகுதிகள் 
    • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சில பகுதிகளும், புதிய வரைபடத்தில் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முஸாஃபராபாத் புதிய வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது.
    • ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும், லடாக் யூனியன் பிரதேசத்தில் கில்ஜித்-பல்டிஸ்தானும் இடம்பெற்றுள்ளன.
    • அக்சாய் சின் மற்றும் கில்ஜித்-பல்டிஸ்தான் ஆகிய பகுதிகளை சீனா நிா்வகித்து வருகிறது. இந்நிலையில், அந்தப் பகுதிகளை புதிய வரைபடத்தில் சோ்த்து அவை இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை சீனாவுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    • லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததன் மூலம் கடுமையான சவால்களை இந்தியா எதிா்கொள்ள நேரிடும் என்று சீனா எச்சரித்திருந்தது.
மேகாலய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம்-2016
  • மேகாலயத்துக்கு செல்வதற்கு இனி முன்பதிவு கட்டாயம் 
    • 2016-ஆம் ஆண்டு மேகாலய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் (Meghalaya Residents Safety and Security Act, 2016) கொண்டுவரப்பட்டது. 
    • இந்த சட்டத்திருத்தத்துக்கு நவம்பர் 2-அன்று மேகாலய மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
    • வெளியிலிருந்து மேகாலயத்துக்கு வருபவா்கள் (Inner Line Permit-ILP System) ஒரு நாளுக்கு மேல் தங்க நேரிட்டால் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    • பிற மாநில அரசு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், மாவட்ட கவுன்சில் அதிகாரிகள் ஆகியோருக்கு முன்பதிவு செய்வதிலிருந்து விதிவிலக்கு உண்டு.
    • சட்டவிரோதமாக குடியேறியவா்களைக் கண்டறிவதற்காக மேகாலய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.
அயோத்தியில் '725 அடி உயரத்தில் ராமர் சிலை'
  • அயோத்தியில் சரயு நதிக்கரையை மேம் படுத்தும் வகையில் 'ராம் நகரி அயோத்தியா' என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்துக்காக மொத்தம் 447.46 கோடி ரூபாய் ஒதுக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் சரயு நதிக்கரையில் 725 அடி உயரத்தில் ராமர் சிலை அமைக்கப்படவுள்ளது. 
  • ராமர் சிலை 495 அடி உயரம் கொண்டதாக இருக்கும். சிலைக்கு மேல் 65 அடி உயர குடையும் அமைக்கப்படும். சிலை 165 அடி உயரம் உடைய பீடத்தில் நிறுத்தப்பட உள்ளது. 
டெல்லி ராஜபாதை சீரமைப்பு பணி - இடம் மாறும் பிரதமர் இல்லம்
  • டெல்லியில் நாடாளுமன்ற கட்டடம், அதைச் சுற்றியிருக்கும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சக அலுவலகங்கள், ராஜபாதை மற்றும் பார்லிமென்ட் கட்டடத்தை சீரமைக்க மத்திய அரசு முடிவு செய்து, இதன் பணிக்கான ஒப்பந்தம், குஜராத்தை சேர்ந்த 'HCP., டிசைன், பிளானிங் அண்ட் மேனேஜ்மெனட்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. .
  • இந்த சீரமைப்புபணியின் கீழ் தற்போது லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லம் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு தெற்கே பிளாக் டல்ஹசி சாலையில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு/விண்வெளி 
நிலவில் லேண்டரை இறக்க மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்படும் - ISRO 
  • டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (IIT) 50-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நவம்பர் 2-அன்று நடைபெற்றது. 
  • இந்த விழாவில் பங்கேற்ற, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) தலைவர் கே. சிவன், நிலவின் தென் துருவத்தில் மீண்டும் லேண்டரை தரையிறக்குவதற்கு, முயற்சிகள் மேற்கொள்ளப்படும், 
  • சந்திரயான்-2 திட்டம் முடிவுக்கு வந்துவிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
  • டெல்லி IIT-யில் விண்வெளி தொழில்நுட்ப பிரிவு 
    • டெல்லி IIT-யில் விண்வெளி தொழில்நுட்ப பிரிவை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டெல்லி IIT கல்வி நிறுவனம் ISRO-இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி, டெல்லி IIT-யில் பயிலும் மாணவா்கள், விண்வெளி தொடா்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட முடியும். ஏற்கெனவே, மும்பை IIT, பெங்களூரு IISC ஆகிய கல்வி நிறுவனங்களில் இந்த தொழில்நுட்பப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
நியமனங்கள் 
சிறப்பு பாதுகாப்பு படை நிா்வாகத் தலைவர் - ராஜேஷ் பூஷண் 

  • மத்திய அமைச்சரவை செயலகத்தின் ஒருங்கிணைப்பு செயலர் 'ராஜேஷ் பூஷண்' அவர்களுக்கு, தற்போது பாதுகாப்பு செயலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படையின் தெற்கு பிராந்திய தளபதி - 'ஏா் மாா்ஷல் அமித் திவாரி' 
  • இந்திய விமானப் படையின் தெற்கு பிராந்திய தளபதியாக 'ஏா் மாா்ஷல் அமித் திவாரி' நவம்பர் 1-அன்று திருவனந்தபுரத்தில் பதவியேற்றாா்.
விருதுகள் 
கோல்டன் மணல் சிற்பக்கலை விருது 2019 - சுதர்சன் பட்நாயக்
  • ஒடிசாவை சேர்ந்த பிரபல மணல் சிற்பக்கலைஞர், சுதர்சன் பட்நாயக் (Sudarsan Pattnaik) அவர்களுக்கு, இத்தாலியின் உயரிய ‘கோல்டன் மணல் சிற்பக்கலை விருது’ (Italian Golden Sand Art Award 2019) அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • சர்வதேச மணல் சிற்ப திருவிழா 2019
    • இத்தாலியில் நவம்பர் 13 முதல் 18-ந்தேதி வரை நடைபெறும் சர்வதேச மணல் சிற்ப திருவிழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
2019 கோவா சா்வதேச திரைப்பட விழா விருதுகள் 
  • சா்வதேச திரைப்பட விழா 2019 - கோவா
    • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த 2019-ம் ஆண்டு 50-வது சா்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.
    • இந்தியா-ரஷியா
      • இந்த விழாவில் 76 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 சிறந்த படங்கள் திரையிடப்படுகின்றன. இவற்றில் 24 படங்கள் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட படங்கள் ஆகும். 50 பெண் இயக்குனர்களின் சிறந்த 50 படங்களும் திரையிடப்பட உள்ளது.
  • சா்வதேச திரைப்பட பொன்விழா  விழா 2019
    • 50-ஆவது பொன்விழா ஆண்டு சா்வதேச திரைப்பட விழாவின் முக்கிய விருதுகளை மத்திய அரசு நவம்பர் 2-அன்று அறிவித்துள்ளது.
  • ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது 2019’ - நடிகா் ரஜினிகாந்த்
    • நடிகா் ரஜினிகாந்த் அவர்களுக்கு சிறப்பு விருதாக ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது 2019’  வழங்கப்படவுள்ளது. 
  • தாதா சாகேப் பால்கே விருது-அமிதாப்பச்சன்
    • இந்த விழாவில் பிரபல ஹிந்தி நடிகா் அமிதாப்பச்சனுக்கு“தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.
  • வாழ்நாள் சாதனையாளர் விருது - இசபெல்லா ஹூப்பர்ட் (பிரான்ஸ் நடிகை)
    • 120 படங்களில் நடித்துள்ள இசபெல்லா ஹூப்பர்ட் கோல்டன் குளோப் விருதும், 102 சர்வதேச விருதுகளும் பெற்று உள்ளார்.
மாநாடுகள்
பிரதமர் மோடி-தாய்லாந்து அரசு முறைப்பயணம்/3 மாநாடுகளில் பங்கேற்பு 
  • 3 மாநாடுகளில் பங்கேற்பு
    • பிரதமர் மோடி தாய்லாந்து நாட்டிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகருகுக்கு நவம்பர் 2-அன்று சென்றடைந்தார். 
    • தாய்லாந்தில் நடைபெறும் 3 மாநாடுகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவற்றின் விவரம்: 
    1. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) - இந்தியா இடையேயான 16-ஆவது உச்சி மாநாடு (16th ASEAN-India Summit) தாய்லாந்தில், நவம்பர் 3-4 தேதிகளில் நடைபெறுகிறது. 
    2. கிழக்கு ஆசியா அமைப்பின் 14-ஆவது உச்சி மாநாடு நவம்பர் 4-அன்று நடைபெறுகிறது.
    3. ஆசியான் நாடுகள், இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகளிடையே தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகவுள்ள "பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு (RCEP) ஒப்பந்த மாநாடும் நவம்பர் 4-அன்று நடைபெறுகிறது. 
  • சுவாஸ்தி PM மோடி - நிகழ்ச்சி
    • பாங்காக் நகரில், இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற 'சுவாஸ்தி PM மோடி' (Sawasdee PM Modi event) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
  • ‘தாய்’ மொழியில்  திருக்குறள் 
    • ‘தாய்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட (Thai translation of Tamil classic 'Tirukkural') திருக்குறள் நூலையும், குருநானக்கின் 550-வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
    • பிரதமர் மோடி, "தாளாற்றி தந்த பொருளெல்லாம் தர்க்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு" என்ற திருக்குறளை மேற்கோளிட்டு பேசினார்
பயங்கரவாத நிதி தடுப்பு மாநாடு 2019
  • பயங்கரவாத நிதி தடுப்பு மாநாடு 2019, ஆஸ்திரேலியாவில் நவம்பர் 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 
  • இந்த மாநாட்டில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), ‘ஐபி’ உளவு அமைப்பு, வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்டவற்றின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தலைமையில் பங்கேற்க உள்ளது.
பிரிக்ஸ் ஊடகங்கள் உயர் நிலை கலந்தாய்வு 2019 (பிரேசில்)
  • நான்காவது பிரிக்ஸ் நாடுகளின் ஊடகங்களுக்கிடையே உயர் நிலை கலந்தாய்வு (Fourth BRICS Media Forum 2019 Sao Paulo, Brazil), அக்டோபர் 30-31 தேதிகளில், பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் நடைபெற்றது.
  • ரஷியாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம், இந்தியாவின் தி ஹிந்து, சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் உள்ளிட்ட 55 முக்கிய ஊடகங்களைச் சேர்ந்த சுமார் 100 பிரதிநிதிகள் இதில் பங்கேற்று, பிரிக்ஸ் நாடுகளது ஊடகங்களின் உயர் நிலை கலந்தாய்வு பற்றிய 2019-2020 செயல் திட்டத்தை வெளியிட்டனர்.
அறிவியல் தொழில்நுட்பம் 
‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் திருட்டு
  • இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரது ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் அவர்களது செல்போன்களில் ஊடுருவி திருடப்பட்டதாக ‘வாட்ஸ்-அப்’ நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
தமிழ்நாடு போக்குவரத்து துறையை சீரமைப்பு - ஜெர்மனி ரூ.1,580 கோடி நிதி
  • தமிழ்நாட்டில் போக்குவரத்து துறையை சீரமைப்பதற்காக ஜெர்மனி 200 மில்லியன் யூரோ (சுமார் ரூ.1,580 கோடி) வழங்குகிறது.
  • ஜெர்மனியின் நிதி ரூ.1,580 கோடியை பயன்படுத்தி முதல் கட்டமாக பி.எஸ்-6 தரம் கொண்ட 2,213 புதிய பஸ்களையும், 500 மின்சார பஸ்களையும் வாங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • இது தொடர்பான திட்ட ஒப்பந்தம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைக்கும், ஜெர்மனி வளர்ச்சி வங்கிக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது.
ஆழியாறு அணையில் 'நீா் திறப்பு' 
  • கோவை மாவட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் பல்வேறு பாசனப் பகுதிகளுக்கு ஆழியாறு அணையில் இருந்து வரும் நவம்பர் 4 முதல் தண்ணீா் திறந்து விட முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
  • இதனால், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களிலுள்ள 22 ஆயிரத்து 332 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். 
விளையாட்டு நிகழ்வுகள்
கிரிக்கெட்

1000-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
  • சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2005-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. 
  • நவம்பர் 3-அன்று டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில், இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, 1000-வது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியாகும். 
  • அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி 146 ஆட்டங்களில் ஆடியுள்ளது. இந்திய அணி, 120 ஆட்டங்களில் விளையாடி 74-ல் வெற்றியும், 42-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. மூன்று ஆட்டங்களில் முடிவில்லை.
ரக்பி

உலக கோப்பை ரக்பி 2019: 'தென்ஆப்பிரிக்க அணி' சாம்பியன்
  • 2019 உலக கோப்பை ரக்பி போட்டி ஜப்பானில் நடந்தது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
  • இறுதிஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 32-12 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 3-வது முறையாக (1995, 2007, 2019) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 
மல்யுத்தம் 

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 2019 - 'பூஜா கெலாட்' வெள்ளிப்பதக்கம்
  • 2019 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி (23 வயதுக்கு உட்பட்டோர்) ஹங்கேரியில் நடந்து வருகிறது. 
  • இதில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீராங்கனை 'பூஜா கெலாட்' வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆக்கி

ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்று 2019 - இந்திய ஆக்கி அணிகள் தகுதி 
  • ஒலிம்பிக் விளையாட்டு போட்டி 2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. ஒலிம்பிக் ஆக்கி போட்டிக்கான இரண்டு தகுதி சுற்று ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
  • இந்திய ஆண்கள், பெண்கள் ஆக்கி அணிகள் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றன.
முக்கிய தினங்கள்
  • நவம்பர் 4 - இந்தியப்பெண் கணித மேதை சகுந்தலாதேவி பிறந்த தினம்.
Post a Comment (0)
Previous Post Next Post