நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 21-22, 2019
சர்வதேச நிகழ்வுகள்
மேற்குகரை யூதக் குடியிருப்புகள் - சில தகவல்கள்
- இஸ்ரேலுக்கும், எகிப்து, சிரியா, ஜோா்டான், இராக் ஆகிய நாடுகளின் கூட்டணிக்கும் இடையே கடந்த 1967-ஆம் நடந்த ‘6 நாள்’ போரின் முடிவில், மேற்குக் கரை, பாலஸ்தீனம் உள்ளிட்டவற்றில் சில பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. சா்வதேச நாடுகளால் ‘ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி’யாகக் கருதப்படும் இந்தப் பகுதிகளில், யூத மதத்தைப் பின்பற்றும் தங்கள் நாட்டவா்களுக்கான குடியிருப்புகளை இஸ்ரேல் அமைத்துள்ளது. இந்தக் குடியிருப்புகள் சா்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்று உலக நாடுகள் கூறி வருகின்றன. ஐ.நா.வும், இந்தக் குடியிருப்புகள் (Israeli settlements on West Bank) 4-ஆவது ஜெனீவா ஒப்பந்தத்தை மீறுவதாக கண்டித்துள்ளது.
- மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியிருப்புகளை இனியும் சட்டவிரோதமானவையாகக் கருதப் போவதில்லை என்று அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது.
இந்தியாவுடன் கடித சேவை - மீண்டும் தொடங்கிய பாகிஸ்தான்
- ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து, தூதரக சேவை, ரயில் சேவை போன்றவற்றை நிறுத்திய பாகிஸ்தான், ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவுடனான அஞ்சல் சேவையை நிறுத்திக் கொண்டது. சுமாா் 3 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவுடன் அஞ்சல் சேவையை பாகிஸ்தான் மீண்டும் நவம்பர் 19-அன்று தொடங்கியுள்ளது.
ஹாங்காங் மீது அமெரிக்கா பொருளாதார தடை
- இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங் 1997-ம் ஆண்டு, ஜூலை 1-ந் தேதி, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாடு, இரண்டு அமைப்புகள் என்ற வகையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் உள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் ஹாங்காங் போராட்டம் தொடர்பாக ஹாங்காங் மீது தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கவும், பொருளாதார தடைகளை விதிக்க வகை செய்யும் 2 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கோத்தபய ராஜபட்ச - இந்தியா வருகை
- இலங்கையின் புதிய அதிபரான கோத்தபய ராஜபட்ச, இந்தியாவுக்கு நவம்பர் 29-ஆம் தேதி வருகை தரவுள்ளாா் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், கோத்தபயவை நவம்பர் 19-அன்று சந்தித்துப் பேசினாா்.
தேசிய நிகழ்வுகள்
'லே' மாவட்டத்தில் அமையும் - தேசிய சோவா ரிக்பா நிறுவனம் (NISR)
- இந்தியாவில், லடாக் ஒன்றியப்பிரதேசத்தின், 'லே' மாவட்டத்தில், தேசிய சோவா ரிக்பா நிறுவனம் (NISR) அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சோவா-ரிக்பா மருத்துவ முறையை ஊக்குவிப்பதற்காகவும், லடாக்கின் பூர்வீக கலாச்சாரத்தைமேம்படுத்துவதற்காகவும் இந்த நிறுவனம் நிறுவப்படவுள்ளது.
- சோவா-ரிக்பா: திபெத்திய மருத்துவ முறை என அழைக்கப்படும் “சோவா-ரிக்பா” என்பது உலகின் பழமையான, வாழும் மற்றும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மருத்துவ பாரம்பரியங்களில் ஒன்றாகும்.
- NISR:National Institute of Sowa Rigpa
பெட்ரோ கெமிக்கல் முதலீடு குறித்த 'ரஜத் பார்கவா' குழு
- பெட்ரோ கெமிக்கல் முதலீடு குறித்த குழுவின் தலைவராக ரஜத் பார்கவா (Rajat Bhargava) நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டிலுள்ள பெட்ரோலியம், கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு பிராந்தியங்களில் (PCPIR) அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கு தேவையான கொள்கை முன்முயற்சிகளை பரிந்துரைக்க மத்திய வேதியியல் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை மூத்த அதிகாரியான ரஜத் பார்கவாவை உயர்மட்டக் குழுவின் தலைவராக நியமித்துள்ளது.
- PCPIR: Petroleum, Chemicals and Petrochemical Investment Regions
தங்கத்தேர் ரயில் கர்நாடகா-IRCTC ஒப்பந்தம்
- தங்கத்தேர் ரயிலை (Golden Chariot train) இயக்க கர்நாடக மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்துடன் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா நிறுவனத்துடன் (IRCTC) ஒப்பந்தம் செய்துள்ளது. 2020 முதல் தொடங்கும் இந்த தங்கத்தேர் பயணத்திட்டத்தில் பண்டிபூர், மைசூர், ஹாலேபிட், சிக்மகளூர், ஹம்பி, பிஜாப்பூர் மற்றும் கோவா ஆகியவற்றை சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் ‘மூன்றாம் நடுவர்’ RT-PCR இயந்திரங்கள்
- ‘மூன்றாம் நடுவர்’ என்ற RT-PCR இயந்திரங்களை நிறுவும் இந்தியாவின் முதல் நகரமாக கொல்கத்தா நகரம் மாறியுள்ளது. கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன், டெங்கு, காசநோய் மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களை விரைவாகக் கண்டறிவதற்காக இந்தியாவில் முதன்முதலில் உயர்நிலை தலைகீழ் டிரான்ஸ்கிரிப்ஷன் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் என்ற RT-PCR இயந்திரங்களை நிறுவியுள்ளது.
- RT-PCR: Reverse Transcription Polymerase Chain Reaction.
அசாம் அரசின் 'அருந்ததி தங்கத் திட்டம்'
- அருந்ததி தங்கத் திட்டத்தை தொடங்க (Arundhati gold scheme) அசாம் மாநில அரசு முடிவு செய்துள்ளது. 2020 ஜனவரி மாதம் தொடங்கப்படும் இந்த திட்டதின்கீழ், புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு தங்கம் வாங்க 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
நதிகள் இணைப்பு திட்டம் - ILR
- ILR என்கிற நதிகள் இணைப்பு திட்டத்தை (Interlinking of Rivers) நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தேசிய முன்னோக்கு திட்டத்தின்கீழ், இமயமலை நதிகள் திட்டத்தின் கீழ் 14 திட்டங்களையும், தீபகற்ப நதிகள் திட்டத்தின்கீழ் 16 திட்டங்களையும் நிறைவேற்ற தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.
வீடுகள் தோறும் குழாய்வழி தண்ணீர் வழங்குகிற திட்டம் - ஜலஜீவன் மிஷன்
- 'ஜலஜீவன் மிஷன்’ என்று அழைக்கப்படுகிற வீடுகள் தோறும் குழாய்வழி தண்ணீர் வழங்குகிற திட்டம் அடுத்த 5 ஆண்டு'ளில் நிறைவேற்றப்படவுள்ளது. இதற்காக 5 ஆண்டுகளில் ரூ.3½ லட்சம் கோடி செலவிடப்படும், என நாடாளுமன்ற மக்களவையில் ஜலசக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்: பணியாளா் எண்ணிக்கை 25% உயா்வு
- 2014-15 முதல் 2018-19 வரையிலான 5 ஆண்டுகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் இணைந்த பணியாளா்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014-15 காலகட்டத்தில் மொத்தம் 6.22 கோடி பணியாளா்கள் இத்திட்டத்தில் பணியாற்றிய நிலையில், 2018-2019 காலகட்டத்தில் அவா்களின் எண்ணிக்கை 7.77 கோடியாக அதிகரித்துள்ளது.
- இந்த வேலைவாய்ப்பு திட்டத்துக்காக கடந்த 2014-15 காலகட்டத்தில் மத்திய அரசு ரூ.32,977 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில், 2018-19 காலகட்டத்தில் ரூ.61,829 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் நடப்பாண்டு நவம்பா் 11-ஆம் தேதி வரை ரூ.52,845 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இது இந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டுத் தொகையில் 88 சதவீதம் ஆகும் என்று ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம்
- மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கலை சேவையை பாராட்டி ஒடிசா செஞ்சுரியன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. நவம்பர் 19-அன்று நடந்த விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பங்கேற்று பட்டம் வழங்கினார்.
ஜாலியன்வாலா பாக் நினைவிட மசோதா-2019
- ஜாலியன்வாலா பாக் நினைவிட மசோதா நிறைவேறியது. 1919-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலா பாக்கில் நூற்றுக்கணக்கானோர் ஆங்கிலேய படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1921-ம் ஆண்டு, பொதுமக்கள் நிதி உதவியுடன், ஜாலியன்வாலா பாக் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. காங்கிரஸ் தலைவராக இருப்பவர், அறங்காவலராக இருக்கும் வகையில் விதி உருவாக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையை அரசியல் சார்பற்றதாக ஆக்குவதற்காக, காங்கிரஸ் தலைவரை அறக்கட்டளையில் இருந்து நீக்குவதற்கு இந்த வழிவகை செய்கிறது.
அருணாச்சல பிரதேசத்தின் முதல் இந்தி செய்தித்தாள் ‘அருண் பூமி’
- அருணாச்சல பிரதேச மாநிலத்தில் முதல்வர் பெமா காண்டு சமீபத்தில் ‘அருண் பூமி’ (Arun Bhoomi) என்ற மாநிலத்தின் முதல் இந்தி செய்தித்தாளை வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பு/விண்வெளி
டைட்டன்-இன் முதல் 'உலகளாவிய புவியியல்' வரைபடம்
- அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (NASA) சனி கிரகத்தின் மிகப்பெரிய நிலவின் 'டைட்டனின்' முதல் 'உலகளாவிய புவியியல்' வரைபடத்தை (Global Geological mapping) எடுத்து முடித்துள்ளது.
- NASA-வின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (Jet Propulsion Laboratory) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அதில் (Saturn's largest moon-Titan) மணல் திட்டுகள், ஏரிகள், சமவெளிகள், அத்துடன் எரிமலை பள்ளங்கள் மற்றும் அணுக முடியாத பிற இடங்களும் அடங்கியுள்ளன.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்வு - மத்திய அரசு விளக்கம்
- மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, 2100-ம் ஆண்டுக்குள் புவி வெப்பமயமாவதால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடல் மட்டம் உயர்ந்து சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கடற்கரை நகரங்கள் மூழ்கும் நிலை ஏற்படும் என்று ஐ.நா. பருவநிலை மாற்றத்துக்கான நிர்வாக குழு எச்சரித்துள்ளது. இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் பபுல் சுப்ரியோ மாநிலங்களவையில் நவம்பர் 19-அன்று தெரிவித்த விவரங்கள்:
- இந்திய கடற்கரை பகுதிகளில் கடல் மட்டம் வருடத்துக்கு சராசரியாக 1.70 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் உயர்ந்து வருவதாக கருதப்படுகிறது. அப்படியென்றால் கடந்த 50 ஆண்டுகளில் இந்திய கடற்கரை பகுதிகளில் கடல் மட்டம் 8.5 சென்டிமீட்டர் உயர்ந்திருப்பதாக அர்த்தம்.
- செயற்கைகோள் தொழில்நுட்பம் மற்றும் நவீன ஆய்வுகள் வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இதில் மாறுபாடு உள்ளதை வெளிப்படுத்தி உள்ளது. 2003-2013 காலகட்ட 10 ஆண்டுகளில் இந்த பகுதியில் கடல் மட்டம் ஆண்டுக்கு 6.1 மி.மீ. என்ற விகிதத்தில் உயர்ந்துள்ளது.
- டைமண்ட் துறைமுகத்தில் கடல் மட்டம் உயரும் விகிதம் அதிகமாக இருப்பதற்கு அங்கு பெரிய அளவில் நிலப்பகுதி புதைந்ததும் ஒரு காரணம். அதேபோல கண்ட்லா, ஹால்டியா, போர்ட்பிளேர் ஆகிய இடங்களுக்கும் இது பொருந்தும்.
பொருளாதார நிகழ்வுகள்
பார்ச்சூன் வணிக நபர்கள் பட்டியல் 2019 - சத்யா நாதெல்லா முதலிடம்
- 2019-ஆம் ஆண்டின் பார்ச்சூன் வணிக நபர்கள் பட்டியலில் (Fortune’s Businessperson of the Year 2019), சத்யா மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் மேலும் இரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- அஜய் பங்கா - தலைமை நிர்வாக அதிகாரி,மாஸ்டர் கார்டு
- ஜெயஸ்ரீ உல்லால் - தலைவர், அரிஸ்டா
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் - நவம்பர் 20, 2019
- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நவம்பர் 19-அன்று தலைமைச்செயலகத்தில் நடந்தது. தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ள 5 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கான ஒப்புதலை இந்த அமைச்சரவை வழங்கியது.
- சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் அந்தஸ்தை சீர்மிகு பல்கலைக்கழகமாக நிலை உயர்த்துவதற்கான முடிவு குறித்தும் அமைச்சரவையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
- தமிழ்நாட்டில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய முக்கிய பதவிகளை, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கச் செய்யலாமா? அல்லது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் வார்டு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்க (மறைமுக தேர்தல்) செய்யலாமா? என்பது பற்றியும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் மேலும் 3 அரசு மருத்துவ கல்லூரிகள்
- தமிழ்நாட்டில் 24 அரசு மருத்துவ கல்லூரிகள், 10 சுயநிதி கல்லூரிகள் மற்றும் 10 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ கல்லூரிகள் இருக்கின்றன. அக்டோபர் 24-ந் தேதி தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
- தமிழ்நாட்டிற்கு மேலும் 3 அரசு மருத்துவ கல்லூரிகள் கேட்டு மத்திய அரசிடம், தமிழ்நாடு அரசு விண்ணப்பித்து இருக்கிறது. இது நாகை, திருவள்ளூர், கிருஷ்ணகிரியில் அமைய உள்ளது. புதிதாக தொடங்கப்படும் இந்த கல்லூரிகள் மூலம் தமிழ்நாட்டில் மருத்துவ இடங்கள் 4,250 ஆக உயர்ந்துள்ளது.
‘கஜா’ புயல் பாதிப்பு & முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வறிக்கை
- 2018 நவம்பர் மாதம் 16-ந்தேதி ‘கஜா’ புயல் தமிழ்நாட்டை தாக்கியது ‘கஜா’ புயல் பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வறிக்கை நகலை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கூடுதல் செயலாளர் வி.திருப்புகழ் வழங்கினார்.
தமிழ்நாடு சொத்து வரி உயர்வு - நிறுத்திவைப்பு - குழு அமைப்பு
- தமிழ்நாடு அரசின் சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசால் 2018-ம் ஆண்டு ஜூலை 19-ந் தேதியன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது. சொத்து வரி உயர்வு நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு நவம்பர் 19-அன்று அறிவித்து உள்ளது. உயர்த்தப்பட்ட சொத்து வரியை மறுபரிசீலனை செய்ய ஏதுவாக, தற்போது அரசு நிதித்துறை (செலவினங்கள்) முதன்மை செயலாளரின் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஐந்து புதிய மாவட்டங்கள் தொடக்க விழா: தேதிகள் அறிவிப்பு
- தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 புதிய மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கும் தேதிகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
புதிய மாவட்டங்கள் தொடங்கி வைக்கப்படும் தேதிகள் விவரம்:
- நவம்பர் 22 - தென்காசி
- நவம்பர் 26 - கள்ளக்குறிச்சி
- நவம்பர் 28 - திருப்பத்தூர், ராணிப்பேட்டை
- நவம்பர் 29 - செங்கல்பட்டு.
முக்கிய தினங்கள்
நவம்பர் 21
உலக தொலைக்காட்சி தினம் (World Television Day 2019) - நவம்பர் 21
உலக தொலைக்காட்சி தினம் (World Television Day 2019) - நவம்பர் 21
உலக தத்துவ தினம் (World Philosophy Day 2019) - நவம்பர் 21
உலக மீனவர்கள் தினம் (World Fisheries Day 2019) - நவம்பர் 21
- உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளரான இந்தியாவில் மீன் உற்பத்தி தற்போது சுமாா் 13 மில்லியன் டன் ஆகும். இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா, கோவா, மராட்டியம், குஜராத், டையுடாமன், அந்த மான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய 13 மாநிலங்கள் கடற்கரையை கொண்ட மாநிலங்களாகும். இதில் அந்த மான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய இரண்டும் தனித்தனி தீவுகளின் கூட்டங்களாகவும், மற்ற 11 மாநிலங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிலப்பரப்பிலும் அமைந்துள்ளன. 9 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இவற்றுள் மொத்த 13 கடற்கரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச கடற்கரையின் நீளம் 7516.6 கிலோ மீட்டராகும். அதில் 2 தீவு யூனியன் பிரதேசங்களின் கடற்கரையின் நீளம் 2094 கிலோ மீட்டர் தொலைவும், ஒருங்கிணைந்த நிலப்பரப்பின் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச கடற்கரை நீளம் மொத்தம் 5422.6 கிலோ மீட்டராகவும் உள்ளது.