நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 13-14, 2019
தேசிய நிகழ்வுகள்
உலகின் முதல் இயற்கை எரிவாயு துறைமுக முனையம் (குஜராத்)
- உலகின் முதல் இயற்கை எரிவாயு துறைமுக முனையம் (CNG Port Terminal), இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாவ்நகரில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
- 1,900 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த முனையத்தை, இங்கிலாந்தை தளமாகக் கொண்ட போர்சைட் குழுமம் (Foresight Group மற்றும் மும்பையைச் சேர்ந்த பத்மநாப் மபத்லால் குழுமம் (Padmanabh Mafatlal Group) இணைந்து கட்டுகின்றன. இந்த CNG முனையத்திற்கு குஜராத் அரசு பாமாயில் ஒப்புதல் அளித்தது. குஜராத் கடல் வாரியம் (Gujarat Maritime Board) பாவ்நகர் துறைமுகத்தை நிர்வகித்து வருகிறது.
- CNG: Compressed Natural Gas.
உறுப்பு தானத்தை ஊக்குவிக்க ஒடிசா அரசின் 'சூரஜ் விருது'
- உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்காக ஒடிசா மாநில அரசு சூரஜ் என்ற பெயரிலான விருதை (Suraj award) வழங்க முடிவு செய்துள்ளது.
'சிஷு சுரக்ஷா' செல்பேசி செயலி
- குழந்தைகள் உரிமை மீறல்கள் பற்றிய புகார்களை அளிக்க 'சிஷு சுரக்ஷா' என்ற செல்பேசி செயலியை (Sishu Suraksha app) அறிமுகம் செய்ய அசாம் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஸ்வச்- நிர்மல் தத் அபியான் திட்டம்
- சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற மத்திய அமைச்சகம், கடற்கரைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘ஸ்வச்- நிர்மல் தத் அபியான்’ (Swachh-Nirmal Tat Abhiyaan) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
- 2019 நவம்பர் 11-17 தேதிகளில் அடையாளம் காணப்பட்ட 50 கடற்கரைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவின் முதல் யானைகள் நினைவுச்சின்னம்
- இந்தியாவின் முதல் யானைகள் நினைவுச்சின்னம் ஆக்ரா நகருக்கு அருகே மதுரா (Mathura) என்ற இடத்தில் திறந்துவைக்கப்பட்டுளள்து.
- சட்டவிரோத கடத்தல், துஷ்பிரயோகம் மற்றும் கொடுமைக்கு உயிரை இழந்த யானைகளை கௌரவிக்கும் விதமாக, இந்தியாவை தளமாகக் கொண்ட Wildlife SOS என்ற அமைப்பு, நாட்டின் முதல் யானைகள் நினைவுச்சின்னத்தை (India’s first elephant memorial ) மதுராவில் திறந்துள்ளது.
- இந்த நினைவுச்சின்னம், தாஜ்மஹாலில் இருந்து 20 மைல் தொலைவில், அமைந்துள்ளது.
மகாராஷ்டிரா: 'குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்'
- மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தொடர்ந்து குழப்பமும், இழுபறியான சூழ்நிலையும் நீடித்து வந்த நிலையில் அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நவம்பர் 12 -அன்று அமல்படுத்தப்பட்டது.
- குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்
- அரசியலமைப்பு சட்டப்படி மாநிலத்தில் அரசு அமைக்க முடியாததால், 356-வது விதியின் கீழ் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசின் உள்துறைக்கு, மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பரிந்துரை கடிதம் அனுப்பினார். பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்தியஅமைச்சரவை கூட்டம் நவம்பர் 12-அன்று நடந்தது. அதில், மகாராஷ்டிர ஆளுநரின் பரிந்துரை குறித்து ஆலோசிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- அரசமைப்புச் சட்டத்தின் 356(1) பிரிவு
- மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, அரசமைப்புச் சட்டத்தின் 356(1) பிரிவின்படி மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தும் பிரகடனத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார். அந்த மாநில சட்டப்பேரவை தற்காலிகமாக முடக்கி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மூன்றாவது முறையாக குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்
- மகாராஷ்டிர மாநிலம் 1960-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் கடந்த 59 ஆண்டுகால வரலாற்றில் இப்போது மூன்றாவது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களையும் பிடித்தன. சிறிய கட்சிகள் 16 இடங்களிலும், 13 சுயேச்சை எம்.எல்.ஏ.க் களும் வெற்றி பெற்றனர்.
1,807 தொண்டு நிறுவனங்களின் பதிவு ரத்து
- வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யாத, வெளிநாட்டு நன்கொடை பெறும் 14 ஆயிரத்து 800 தொண்டு நிறுவனங்களின் பதிவு, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டப்படி இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2019), 1,807 தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிர்வாகங்களின் பதிவை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
நியமனங்கள்
மொரீஷியஸ் புதிய பிரதமர் - பிரவீந்த் ஜுக்நாத்
- மொரீஷியஸ் நாட்டின் புதிய பிரதமராக பிரவீந்த் ஜுக்நாத் (Pravind Jugnauth) பதவியேற்றுள்ளார். பிரவீந்த் ஜுக்நாத், மொரீஷியஸ் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி இல்லத்தில் பதவியேற்றார். மொரிஷியஸ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ரெங்கநாதன் படயாச்சி அவர்களுக்கு நிதித்துறை வழக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் 'பதவி விலகல்'
- மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் அரவிந்த் சாவந்த் பதவி விலகியுள்ளார். குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் ஏற்றார். ரவிந்த் சாவந்த் வகித்து வந்த கனரக தொழில் துறை மற்றும் பொதுநிறுவனங்கள் துறை, கூடுதல் பொறுப்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநாடுகள்
IUCN ஆசியா பிராந்திய பாதுகாப்பு மன்ற மாநாடு 2019 (இஸ்லாமாபாத்)
- இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN), ஆசியா பிராந்திய பாதுகாப்பு மன்ற மாநாடு 2019, இஸ்லாமாபாத் நகரத்தில், 'இயற்கை மற்றும் மக்களுக்காக ஆசியாவை பசுமைப்படுத்துதல்' (Greening Asia for Nature and People) என்ற மையகருத்தில், நவம்பர் 6 முதல் 8 தேதிகளில் நடைபெற்றது.
வடகிழக்கு மாநிலங்கள் விழா-2019
- 7-வது பதிப்பு வடகிழக்கு மாநிலங்கள் விழா-2019 (North East Festival-2019), புது தில்லி நகரத்தில் நவம்பர் 8 முதல் 10 வரை நடைபெற்றது, ஜன்பத் பகுதியில், இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் நடைபெற்றது.
விருதுகள்
ஜார்ஜ் ஷாலர் வாழ்நாள் விருது 2019 - கே.உல்லாஸ் கரந்த்
- வனவிலங்கு உயிரியலாளர் கே.உல்லாஸ் கரந்த் (K. Ullas Karanth) அவர்களுக்கு, 2019-ஆம் ஆண்டின் முதலாவது ஜார்ஜ் ஷாலர் வாழ்நாள் விருது (George Schaller Lifetime Award) வழங்கப்பட்டுள்ளது.
- உல்லாஸ் கரந்த், பெங்களூரு வனவிலங்கு ஆய்வுகள் மையத்தின் இயக்குனராக உள்ளார்.
- உலகளவில் மிகப் பெரிய வனவிலங்கு விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாவலர்களில் ஒருவராகக் கருதப்படும் டாக்டர் ஜார்ஜ் ஷாலரின் நினைவாக நியூயார்க்கின் வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் (Wildlife Conservation Society) நிறுவியுள்ளது. கே.உல்லாஸ் கரந்த், முதலாவது நபராக இந்த விருதை பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு
- தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை நவம்பர் 12-அன்று வெளியிடப்பட்டது. அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:
- வேலூரை பிரித்து வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதுபோன்று நெல்லையை பிரித்து நெல்லை மற்றும் தென்காசி என 2 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் காஞ்சிபுரத்தை பிரித்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்:
- தென்காசி மாவட்டம்: தென்காசி, சங்கரன்கோவில் என 2 புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நெல்லை, பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை என 8 தாலுகாக்கள் நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், சங்கரன்கோவில், திருவேங்கடம், வி.கே. புதூர் என 8 தாலுகாக்கள் தென்காசி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
- நெல்லை மாவட்டம்: பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை ஆகிய தாலுகாக்கள் நெல்லை மாவட்டத்தின் கீழ் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே புதூர், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய தாலுகாக்கள் தென்காசி மாவட்டத்தின் கீழ் இயங்கும். குருக்கள் பட்டி, சேர்ந்தமங்கலம், கரிவலம்வந்த நல்லூர், வீரசிகாமணி ஆகிய வருவாய் கிராமங்களை கொண்ட சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
- வேலூர் மாவட்டம்: வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் கீழ் செயல்படும் பகுதிகளின் விவரம் வெளியிடப்பட்டது. அதில், வேலூர், குடியாத்தம் என புதிய வருவாய் கோட்டங்கள்
- உருவாக்கப்பட்டுள்ளன. வேலூர், அரக்கோணம், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் (புதியது) தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.
- ராணிப்பேட்டை மாவட்டம்: வேலூரை பிரித்து உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாலாஜா, ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் என 4 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. ராணிப்பேட்டை, அரக்கோணம் என புதிய வருாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி என 4 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. திருப்பத்தூர், வாணியம்பாடி என 2 வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- செங்கல்பட்டு மாவட்டம்: செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், திருக்கழுக்குன்றம் பல்லாவரம், வண்டலூர் என 8 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.
- காஞ்சிபுரம் மாவட்டம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் குன்றத்தூர் ஆகிய தாலுகாக்கள் செயல்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- கள்ளக்குறிச்சி மாவட்டம்: விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கான அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை.
விளையாட்டு நிகழ்வுகள்
கால்பந்து
ஸ்லம் சாக்கா் திட்டம்
- இந்தியாவில் சிறுவா், சிறுமியா் மத்தியில் கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்தவும், கொண்டு செல்லும் வகையிலும் ஸ்லம் சாக்கல் திட்டத்தை FIFA பவுண்டேஷன் செயல்படுத்தி வருகிறது. ஒடுக்கப்பட்ட, ஏழ்மை நிலையில் உள்ள குடிசை வாழ் சிறுவா், சிறுமியா் மத்தியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கிரிக்கெட்
ICC தரவரிசை: விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா முதலிடம்
- ICC கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோா் தங்கள் முதலிடங்களை தக்க வைத்துள்ளனா். பேட்டிங்கில் 895 புள்ளிகளுடன் கோலி முதலிடத்திலும், ரோஹித் சா்மா 834 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனா். பந்துவீச்சில் 797 புள்ளிகளுடன் பும்ரா முதலிடத்திலும், 740 புள்ளிகளுடன் நியூஸி. வீரா் டிரென்ட் பௌல்ட் இரண்டாவது இடத்திலும் உள்ளனா்.
நிகோலஸ் பூரனுக்கு 4 ஆட்டங்களில் விளையாட தடை
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் பந்தில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்டதை அடுத்து, மே.இ.தீவுகள் அணியின் விக்கெட் கீப்பா் நிகோலஸ் பூரனுக்கு 4 ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து
இந்திய பெண்கள் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் - தாமஸ் டென்னர்பி
- இந்திய பெண்கள் கால்பந்து அணியின் (17 வயதுக்குட்பட்டோர்), தலைமை பயிற்சியாளராக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த தாமஸ் டென்னர்பி (Thomas Dennerby) பொறுப்பேற்ற்றுள்ளார்.
தடகளம்
உலக பாரா தடகள போட்டி 2019 (துபாய்)
- உலக பாரா தடகள சாம்பியன் போட்டி 2019, துபாய் நகரில் நடைபெற்று வருகிறது, ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் வென்ற பதக்கங்கள் விவரம்:
- சுந்தா் குா்ஜாா் - தங்கப்பதக்கம் (ஆண்கள் ஈட்டி எறிதல், ஆடவா் F46 பிரிவு, 61.22 மீ தூரம்)
- அஜித் சிங் - (ஆண்கள் ஈட்டி எறிதல், ஆடவா் F46 பிரிவு, 59.46 மீ தூரம்).
முக்கிய தினங்கள்நவம்பர் 12
உலக நிமோனியா தினம் - நவம்பர் 12
- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 ஆம் தேதி உலக நிமோனியா தினம் (World Pneumonia Day) அனுசரிக்கப்படுகிறது.
- 2019 உலக நிமோனியா தின மையக்கருத்து: 'அனைவருக்கும் ஆரோக்கியமான நுரையீரல்' (healthy lungs for all) என்பதாகும்.
நவம்பர் 13
உலக கருணை தினம் (World Kindness Day): நவம்பர் 13
நவம்பர் 14
உலக நீரிழிவு தினம் (World Diabetes Day): நவம்பர் 14
- 2019 உலக நீரிழிவு தின மையக்கருத்து: 'Protect your Family'.
இந்திய குழந்தைகள் தினம் - நவம்பர் 14
- நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14-அன்று, அவரது நினைவாக இந்தியாவில் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.உலக குழைந்தைகள் தினம் நவம்பர் 20 அன்று கடைபிடிக்கப்படுகிறது.