TNPSC Current Affairs November 8, 2019

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 8, 2019
சர்வதேச நிகழ்வுகள் 
காலாபனி பிராந்திய தகராறு - சில தகவல்கள் 
  • இந்தியாவின் புதிய அரசியல் வரைபடத்தில், காலாபனி (Kalapani) பிரதேசத்தை சேர்த்ததற்கு நேபாள அரசாங்கம் ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளது. தற்போது இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையில் காலாபனி பிரதேசம் ஒரு பிரச்சினையாக (Kalapani Territorial Dispute) மாறியுள்ளது. 
  • நேபாள அரசாங்கம் அதன் தூர மேற்கு பகுதியில் அமைந்துள்ள கலபானி பிரதேசம் அதன் பிராந்தியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று தெரிவித்துள்ளது.
  • காலாபனி என்பது இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் சர்ச்சைக்குரிய ஒரு பகுதி, ஆனால் உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மேற்கு இமயமலைபகுதியில் 600 மீட்டர் உயரத்தில் காளி ஆற்றின் தொடக்கத்தில் காலாபனி பிராந்தியம் அமைந்துள்ளது. காலாபனி பள்ளத்தாக்கு ஒரு பழங்கால யாத்திரைத் தளமாக, கைலாஷ்-மானசரோவருக்கு இந்திய வழியை உருவாக்குகிறது.
  • புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களை சித்தரிக்கும் புதிய அரசியல் வரைபடத்தை இந்தியா நவம்பர் 2, 2019 அன்று வெளியிட்டது.
  • இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியானது ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட இடமாகவும், கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதி லடாக் யூனியன் பிரதேச அதிகாரத்துக்கு உள்பட்டதாகவும் குறிக்கப்பட்டுள்ளது.
  • இதுதொடா்பாக இந்தியா வெளியுறவுத் துறை தெரிவித்துள்ள தகவல்கள் விவரம்:
  • இந்தியாவின் புதிய வரைபடத்தில், நாட்டின் ஆட்சி அதிகாரத்துக்கு உள்பட்ட இடங்கள் மட்டுமே துல்லியமாக குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த வரைபடத்தில், நேபாளத்துடனான எல்லைப் பகுதியில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. அந்நாட்டுடனான எல்லையை மறுவரையறை செய்வது தொடா்பான முயற்சிகள் தற்போது இருக்கும் நிலையிலேயே தொடா்கிறது. 
தேசிய நிகழ்வுகள்
பஞ்சாப்-அரியாணா மாநில சிறப்பு சட்டசபைக் கூட்டம் நவம்பர் 7, 2019
  • சீக்கிய மத நிறுவனர் குருநானக் தேவின் 550-வது பிறந்தநாள் வருகிற நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பஞ்சாப் மற்றும் அரியாணா மாநில சிறப்பு சட்டசபைக் கூட்டம் நவம்பர் 7-அன்று நடைபெற்றது. இரண்டு மாநிலத்தின் சட்டசபைக் கட்டிடங்களும் சண்டிகரில் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது 
  • நிர்வாகக் காரணங்களுக்காக பஞ்சாபில் இருந்து அரியாணா மாநிலம் நவம்பர் 1, 1966 அன்று பிரிக்கப்பட்டது. இதையடுத்து, 50 ஆண்டுகளுக்குப் பின்னர் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்கள் இணைந்த சட்டசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. 
  • கர்தார்பூர் வழித்தடம்: குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம், வரும் நவம்பர் 12-இல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்க்கப்பட்டுள்ளது. இந்த கர்தார்பூர் வழித்தடம் முறைப்படி நவம்பர் 9-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
உடான் திட்டம்: டெல்லி காசியாபாத்-ஹூப்ளி முதல் விமான சேவை தொடக்கம் 
  • சிறுநகரங்களை வான்வழியாக இணைக்கும் உடான் திட்டத்தின் கீழ், டெல்லியை அடுத்த காசியாபாத்தின் ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து, கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு முதல் நேரடி பயணிகள் விமான சேவையை ஸ்டார் ஏர் என்ற தனியார் நிறுவனம் நவம்பர் 7-அன்று தொடங்கியுள்ளது.  உடான் திட்டத்தின் கீழ் மிக அதிக தூரத்திற்கு இயக்கப்படும் விமானம் இதுவாகும்.
பாதுகாப்பு/விண்வெளி
இந்தியா-அமெரிக்கா முத்தரப்பு கூட்டுப்பயிற்சி 'டைகர் டிரையம்ப்-2019'
  • இந்தியாவும் அமெரிக்கா நாடுகள் இடையே 'டைகர் டிரையம்ப்' (Tiger TRIUMP-2019) என்ற பெயரிலான முத்தரப்பு நீர்-நில கூட்டுப்பயிற்சி (Tri-Services Amphibious Exercise), ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடா நகரங்களில் நடத்தப்படுகிறது. 
  • இந்த கூட்டுப்பயிற்சியில், நீர்-நிலம் மற்றும் மனிதாபிமான பேரழிவு மற்றும் நிவாரண (HADR) நடவடிக்கை ஆகிய மூன்று பயிற்சி இணைந்து நடத்தப்பட உள்ளது.
  • இந்த பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது, முதலாவது கட்டத்தில், நவம்பர் 13 முதல் 16 வரை விசாகப்பட்டினத்திலும், இரண்டாம் கட்டம் நவம்பர் 17 முதல் 21 வரை காக்கிநாடாவிலும் நடைபெறுகிறது.
  • HADR: Humanitarian Disaster and Relief.
இந்தியா-இந்தோனேசியா இருதரப்பு கடற்படை கூட்டுப்பயிற்சி-2019
  • இந்திய கடற்படை-இந்தோனேசிய கடற்படகள் பங்கேற்கும் இருதரப்பு கடற்படை கூட்டுப்பயிற்சி, ‘சமுத்திர சக்தி' (Samudra Shakti-2019) துன்ற பெயரில் விசாகபட்டினம் வங்காள விரிகுடா பகுதியில், நவம்பர் 06 முதல் 07 வரை நடைபெற்றது.
  • INS கமோர்டா, நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் மற்றும் இந்தோனேசிய போர்க்கப்பல் கே.ஆர்.ஐ. உஸ்மான் ஹருன் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டன.
விருதுகள் 
2019 டாடா இலக்கிய விருதுகள் - அறிவிப்பு 
  • 2019-ஆம் ஆண்டின் டாடா குழும இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டிற்கான டாடா வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் விருது (Tata Literature Live! Lifetime Achievement Award 2019), சாந்தா கோகலே (Shanta Gokhale) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சாந்தா கோகலே, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் பத்திரிகையாளர், திரைப்பட விமர்சகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.
  • 2019-ஆம் ஆண்டிற்கான டாடா இலக்கியகவிஞர் பரிசு (Tata Literature Live! Poet Laureate for 2019), மலையாள எழுத்தாளர் கே. சச்சிதானந்தன் (K Satchidanandan) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்
IODA-அமைப்பு துணைத்தலைவராக டாக்டர் வினயா ஷெட்டி - தேர்வு 
  • இந்தியாவை சேர்ந்த டாக்டர் வினயா ஷெட்டி, IODA-அமைப்பின் முதலாவது இந்திய மற்றும் ஆசிய பொது துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • டாக்டர் வினயா ஷெட்டி (Dr. Vinaya Shetty), 1986-ஆம் ஆண்டு சர்வதேச அமைப்பு மேம்பாட்டு சங்கம் துவங்கியதிலிருந்து, அதன் துணைத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் ஆவார்.
  • IODA: International Organisation Development Association.
மாநாடுகள்  
BRICS உச்சிமாநாடு 2019 (பிரேசில்)
  • பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து பெரும் நாடுகளை உள்ளடக்கியதாக பிரிக்ஸ் அமைப்பு செய்ல்படுகிறது. இந்த அமைப்பின் 11-வது உச்சிமாநாடு 2019 நவம்பர் 13-14 தேதிகளில் பிரேசிலில் 'புதிய எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி' என்ற தலைப்பில் நடைபெறுகிறது. இந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 
உலக உணவு, வாழ்வாதார பாதுகாப்புக்கான மண், நீர்வள மேலாண்மை மாநாடு-2019
  • சிறந்த காலநிலைகக்கான வேளாண்மை மற்றும் உலகளாவிய உணவு மற்றும் வாழ்வாதார பாதுகாப்புக்கான மண் மற்றும் நீர்வள மேலாண்மை தொடர்பான சர்வதேச மாநாடு புதுதில்லியில் நவம்பர் 5-அன்று தொடங்கியது. நவம்பர் 9-வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. 
  • சீனாவின் உலக மண் மற்றும் நீர் பாதுகாப்பு சங்கம் (WASWAC), அமெரிக்காவின் சர்வதேச மண் பாதுகாப்பு அமைப்பு (ISCO) ஆகியவற்றுடன் இணைந்து இந்திய மண் பாதுகாப்பு சங்கம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தது.
  • International Conference on Soil and Water Resources Management for Climate Smart Agriculture and Global Food & Livelihood Security-2019
பிம்ஸ்டெக் துறைமுகங்கள் மாநாடு-2019 (விசாகப்பட்டினம்)
  • ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் முதலாவது பிம்ஸ்டெக் அமைப்பின் துறைமுகங்கள் மாநாடு-2019, நவம்பர் 7-8 தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாடு இந்திய கப்பல் அமைச்சகத்தால், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதன் நலன்களுக்கான ஒரு வழியை உருவாக்கும் என்ற நோக்கில் நடத்தப்படுகிறது.
  • பன்முக தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC) அமைப்பு என்பது தென்கிழக்கு ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு சர்வதேச அமைப்பாகும்.
  • BIMSTEC: Bay of Bengal Initiative for Multisectoral Technical and Economic Cooperation. 
பொருளாதார நிகழ்வுகள்   
சீனா-அமெரிக்கா வா்த்தகப் போர்: இந்தியாவிற்கு கூடுதல் வருவாய் ரூ.5,285 கோடி 
  • சீனா-அமெரிக்கா இடையேயான வா்த்தகப் போர் எதிரொலியாக, அமெரிக்காவுக்கு கூடுதல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது மூலம் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் வரை இந்தியா கூடுதலாக ரூ.5,285 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என ஐ.நா.வின் வா்த்தகம் மற்றும் முதலீடு அமைப்பு தெரிவித்துள்ளது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
2019-இல் இந்தியாவின் CO2 உமிழ்வு வளர்ச்சி 2% குறையும் - ஆய்வுத்தகவல் 
  • கார்பன் ப்ரீஃப் (Carbon Brief) என்ற வலைத்தளத்தில், வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, இந்தியாவின் கார்பன் டை ஆக்சைடு (CO2) உமிழ்வு வளர்ச்சி 2019-இல் 2% குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியில் மெதுவான வளர்ச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் உயர்வு காரணமாக 2001 முதல் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு (CO2 emissions) குறைவாக உள்ளது.
  • எண்ணெய் தேவை வளர்ச்சி 2019-இன் முதல் எட்டு மாதங்களில் 2.6% ஆக குறைந்துள்ளது. கார்பன் ப்ரீஃப் என்பது உமிழ்வு மற்றும் CO2 போக்குகளைக் கண்காணிக்கும் ஒரு வலைத்தளம் ஆகும்.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
வேளாண் செயலி மூலம் பூச்சி தாக்குதலை கண்டறியும் வசதி - அறிமுகம் 
  • செயற்கை நுண்ணறிவு மூலம் விவசாய விளை பயிர்களின் பூச்சி பாதிப்புகளைக் கண்டறிந்து தீா்வுகளைப் பெறும் வசதியை முதல்வா் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 7-அன்று தொடக்கிவைத்தார். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ள உழவன் செயலி வாயிலாக பதிவேற்றப்பட்ட புகைப்படங்களை பகுப்பாய்வு செய்து பயிர்களுக்கான நோய்கள் மற்றும் பூச்சி தாக்குதலைக் கண்டறிந்து அதற்கான தீா்வுகளை வழங்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. கேமரா வசதி கொண்ட செல்லிடப்பேசி மூலம் படங்களை உழவன் செயலிக்கு அனுப்பி விவசாயிகளே தீா்வுகளை பெறலாம்.
எட்டாம் வகுப்புக்கு முப்பருவ பாடத் திட்டம் ரத்து 
  • தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் நிகழ் கல்வியாண்டு (2019-2020) முதல் பொதுத்தோ்வு நடத்தப்படவுள்ளதால், எட்டாம் வகுப்புக்கு முப்பருவ பாடத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • 2020-21-ஆம் கல்வியாண்டிலிருந்து முப்பருவ முறையில் வழங்கப்பட்டு வரும் பாடப்புத்தகத்தை ஒன்றிணைத்து ஒரே புத்தகமாக வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது
  • தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு அனைத்துப் பள்ளிகளிலும் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் குழந்தைகளுக்கான திருத்தப்பட்ட இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2019 -இன் படி, மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றி செயல்பட்டு வரும் பள்ளிகளில் 5, 8 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கு 2019- 20-ஆம் கல்வி ஆண்டு முதல் பொதுத்தோ்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
கிரிக்கெட் 

IPL கிரிக்கெட் 2020: No Ball-களை கண்காணிக்க சிறப்பு நடுவர் - அறிமுகம் 
  • IPL 2020 கிரிக்கெட் தொடரில், நோ பால்களை (No Ball) கண்காணிக்க சிறப்பு நடுவரை நியமிக்க அதன் உயரதிகார குழு முடிவு செய்துள்ளது. அதே நேரம் ஒரு அணியில் வழக்கமான 11 வீரா்களை தவிர ஆடாமல் உள்ள வேறு வீரரை களமிறக்கும் பவா் பிளேயா் முறை அறிமுகம் செய்வது ஒத்தி வைக்கப்படுகிறது.
  • மும்பையில் நவம்பர் 7-அன்று நடைபெற்ற, IPL தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தலைமையில் உயரதிகாரக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா இயக்குநர் - மெலனி ஜோன்ஸ்
  • கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இயக்குநராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீராங்கனை மெலனி ஜோன்ஸ் (வயது 47) நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post