TNPSC Current Affairs November 2, 2019

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 2, 2019
சர்வதேச நிகழ்வுகள்
இந்தியா-ஜெர்மனி 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
    TNPSC Current Affairs November 2019
  • ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், அரசு முறை பயணமாக நவம்பர் 1அன்று இந்தியா வந்தார். அவருக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  • டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்கு சென்று ஏஞ்சலா மெர்கல் மரியாதை செலுத்தினார்.
  • இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் தலைமையில் இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கு இடையேயான 5-வது உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • கையெழுத்தான பரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் 
    • இஸ்ரோவுக்கும், ஜெர்மன் விண்வெளி மையத்திற்கும் இடையே பணியாளர்களை பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதல்.
    • சிவில் விமானப் போக்குவரத்துத்துறையில் ஒத்துழைப்புக்கான கூட்டுப்பிரகடனம்
    • சர்வதேச பொலிவுறு நகரங்கள் கட்டமைப்புக்குள் ஒத்துழைப்புக்கான கூட்டுப் பிரகடனம்
    • திறன்மேம்பாடு, தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் துறையில் ஒத்துழைப்புக்கான கூட்டுப் பிரகடனம்
    • ஸ்டார்ட்அப் துறையில் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பிரகடனம்
    • விவசாய சந்தை மேம்பாடு தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்புத் திட்டத்தை உருவாக்க கூட்டுப்பிரகடனம்
    • தொழில்சார்ந்த நோய்கள், மறுவாழ்வு, காப்பீட்டு செய்தவர்களுக்கான தொழில் பயிற்சி, உடல் ஊனமுற்ற தொழிலாளர்கள் பிரிவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
    • உள்நாடு, கடற்கரை மற்றும் கடல்சார் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியை மேம்படுத்தி, உருவாக்கி விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
    • ஆயுர்வேதா, யோகா, தியானம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு அகாடமி ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
    • உயர்கல்வியில் இந்தோ – ஜெர்மன் ஒத்துழைப்புக்கான காலத்தை விரிவாக்கி இந்தியா – ஜெர்மனி இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 
    • அறிவியல் தொழில்நுட்பம், தொழில்சார் பயிற்சி பிரிவில் விவசாய விரிவாக்க மேலாண்மைக் குறித்த தேசிய நிறுவனம் மற்றும் ஜெர்மன் விவசாய அகாடமிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
    • இந்தியாவின் சிம்மன்ஸ் நிறுவனம் மற்றும் எம்.எஸ்.டி.இ. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான மேம்பாட்டுத்திறன், ஜெர்மன் அமைச்சகம் இடையே கூட்டுப்பிரகடனம்.
    • உயர்கல்வியில் இந்தோ – ஜெர்மன் கூட்டாண்மையின் விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
    • தேசிய அருங்காட்சியகம், மாடர்ன் ஆர்ட் தேசிய கேலரி, கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகம், புருஷியன் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை, பெர்லினர் க்ளாஸில் உள்ள ஸ்டிப்டுங்க் ஹம்போல்ட் அமைப்பு இடையிலான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
    • அகில இந்திய கால்பந்து சம்மேளனம், டாய்ச்சர் ஃபுபால் பன்ட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
    • இந்தோ-ஜெர்மன் இடம் பெயர்வு மற்றும் போக்குவரத்து கூட்டாண்மை ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்த அறிக்கை
    • இராணுவ தளவாட உற்பத்தி வழித்தடதங்கள் 
    • உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் அமைக்கப்படுகிற ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடத்தில் முதலீடு செய்து பலன்களை அடையுமாறு ஜெர்மனிக்கு இந்தியா அழைப்பு விடுத்தது.
    • ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில், ராணுவ தளவாட உற்பத்திக்கான முதல் வழித்தடத்தை உத்தரபிரதேசத்திலும், 2-வது வழித்தடத்தை தமிழகத்திலும் மத்திய அரசு அமைக்கிறது.
    • தமிழகத்தில் அமைக்கப்படும் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடத்தை 2019 ஜனவரி மாதம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,தொடங்கி வைத்தார். 
கர்தார்பூர் சாகிப் குருத்வாரா - சில தகவல்கள் 
  • சீக்கிய மதத்தை நிறுவி, அதன் முதல் குருவாய் விளங்கியவர், குருநானக் ஆவார்.
  • பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், நரோவால் மாவட்டத்தில் அமைந்துள்ள கர்தார்பூர் நகரில் குருநானக் தன் வாழ்நாளில் இறுதி 18 ஆண்டுகளை கழித்தார். அங்கு வாழ்ந்த குருநானக் 1539-ம் ஆண்டு மறைந்தார். 
  • உலகிலேயே மிகப்பெரிய குருத்வாரா -கர்தார்பூர் சாகிப் குருத்வாரா
    • ராவி ஆற்றங்கரையில் அவரது நினைவிடத்தின் மீது எழுப்பப்பட்டதுதான் கர்தார்பூர் சாகிப் குருத்வாரா. உலகிலேயே மிகப்பெரிய குருத்வாரா இதுதான். இதன் பரப்பளவு, 1,500 ஏக்கர் ஆகும்.
    • இந்த குருத்வாரா இந்திய, பாகிஸ்தான் எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில்தான் அமைந்துள்ளது. 
    • கர்தார்பூருக்கு சீக்கிய மக்கள் நேரில் சென்று வழிபடுவதற்கு கொரிக்ககைகள் வைத்தனர். 
    • 2018-இல் பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமரான பின்னர் குருநானக்கின் 550-வது பிறந்த நாளையொட்டி எல்லையில் இருந்து கர்தார்பூருக்கு வழித்தடம் அமைக்க பாகிஸ்தான் முடிவு எடுத்தது. 
    • சீக்கியர்களுக்கு வசதியாக இங்குள்ள பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து எல்லைவரையில் வழித்தடம் அமைக்க இந்தியாவும் நடவடிக்கை எடுத்தது. அதாவது எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானும், எல்லை வரை இந்தியாவும் வழித்தடம் அமைக்க முடிவானது.
  • கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் 
    • 2019 அக்டோபர் மாதம் 24-ந்தேதி எல்லையில் கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் போடப்பட்டது.  
  • குருநானக்கின் 550-வது பிறந்த நாள், நவம்பர் 9, 2019
    • நவம்பர் 9-ந்தேதி, குருநானக்கின் 550-வது பிறந்த நாளில் கர்தார்பூர் வழித்தடம் திறந்து வைக்கப்படுகிறது. அங்கு செல்வதற்கு ஆன்லைன் பதிவு தொடங்கி உள்ளது.
    • பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறார். முதலில் கர்தார்பூர் புனித பயணத்துக்கு விசாதான் தேவையில்லை என்று கூறப்பட்ட நிலையில் இப்போது அவர் பாஸ்போர்ட்டும் தேவையில்லை. ஆதார் அடையாள அட்டை போன்ற 
    • செல்லுபடியாகத்தக்க அடையாள அட்டையே போதுமானது என்று அறிவித்துள்ளார்.
    • சீக்கியர்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் கர்தார்பூர் சாகிப் குருத்வாரா சென்று வழிபாடு நடத்த வேண்டும் என்பது அவர்களது கடமையாக இருக்கிறது. 
பிரதமா் நரேந்திர மோடி தாய்லாந்து - பயணம்
  • பிரதமா் நரேந்திர மோடி, நவம்பர் 2 முதல் 4-ஆம் தேதி வரை தாய்லாந்து நாட்டிற்கு பயணம் செல்கிறார்.
  • 16-ஆவது ஆசியான்-இந்தியா மாநாடு (ASEAN-India Summit), 14-ஆவது கிழக்கு ஆசிய மாநாடு (East Asia Summit), 3-ஆவது பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு (Meeting on RCEP negotiations) ஆகிய மாநாடுகளில் பிரதமா் பங்கேற்கவுள்ளார் .
  • பாங்காக்கில் நடைபெறும் ‘சவாஸ்டீ பிரதமர் மோடி’ (Sawasdee PM Modi) சமூக நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்.
தேசிய நிகழ்வுகள்
லடாக்கில் அமையும் "இமயமலை சுற்றுச்சூழல் & மேம்பாட்டு நிறுவனம்" 
  • லடாக்கின் யூனியன் பிரதேசத்தில், இமயமலை சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பிராந்திய மையம் (Institute of Himalayan Environment and Development) அமைக்கப்படுகிறது.
  • மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இதற்கான ஒப்புதலை அளித்துள்ளார்.
  • ஜிபி பந்த் தேசிய இமயமலை சுற்றுச்சூழல் மற்றும் நிலையான மேம்பாட்டு நிறுவனத்தின் (GB Pant Institute of Himalayan Environment and Development), தலைமையகம் உத்தரகண்ட் மாநிலத்தின் கோசி-கட்டர்மல் பகுதியில் 
  • அமைந்துள்ளது. நிறுவனத்தின் பிராந்திய மையங்கள் குலு, ஸ்ரீநகர், காங்டாக், இட்டாநகர் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன. தற்போது லடாக் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. 
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் "மூங்கில் தொழில்நுட்ப பூங்காக்கள்"
  • ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் புதிய மூங்கில் தொழில்நுட்ப பூங்காக்களை (Bamboo Technology parks) வட கிழக்கு கவுன்சில் வளர்ச்சி அமைச்சகம் (North Eastern Council) அமைக்க உள்ளது. 
ஆந்திராவில் 'கோட்டிப்ரோலு அகழ்வாராய்ச்சி'
  • ஆந்திரபிரதேச மாநிலத்தின் நெல்லூரில் உள்ள நாயுடுபேட்டா அருகே உள்ள கோட்டிப்ரோலு பகுதியில், இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் நடத்திய முதல் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது மிகப்பெரிய குடியேற்றத்தின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளது.
  • தற்போதைய சகாப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளின் இந்து கடவுள், விஷ்ணு சிற்பங்கள் மற்றும் பல்வேறு வகையான மட்பாண்டங்களை வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்
  • கோட்டிப்ரோலு (Gottiprolu) ஒரு வர்த்தக மையமாக செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு/விண்வெளி  
இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டு இராணுவப்பயிற்சி 'டஸ்ட்லிக் 2019'
  • இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகள் இணைந்த கூட்டு இராணுவப்பயிற்சி 'டஸ்ட்லிக் 2019' (Dustlik 2019) என்ற பெயரில், நவம்பர் 4 முதல் நவம்பர் 13 வரை, மொத்தம் 10 நாட்கள், உஸ்பெகிஸ்தான் நாட்டின் சிர்ச்சிக் பயிற்சி (Chirchiq Training Area, Uzbekistan) பகுதியில் நடைபெறுகிறது.
மாநாடுகள்  
SCOJtEx-2019 - நகர்ப்புற பூகம்ப தேடல் மற்றும் மீட்பு கூட்டுப் பயிற்சி 2019 (புதுடெல்லி)
  • நகர்ப்புற பூகம்ப தேடல் மற்றும் மீட்புக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டுப் பயிற்சி 'SCOJtEx-2019' என்ற பெயரில் நவம்பர் 04 முதல் 7 வரை புது தில்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறுகிறது.
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்று இந்த நிகழ்வை தொடங்கிவைக்கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப் தலைவா்கள் கூட்டம் 2019
  • ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் கவுன்சில் கூட்டம் (18th Meeting of Council of SCO Heads of Government, Tashkent) நவம்பர் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில், உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கண்ட் நகரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா சாா்பாக பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்.
விருதுகள் 
2019 கோவா சர்வதேச திரைப்பட விழா - விருதுகள்
  • வாழ்நாள் சாதனையாளர் விருது - பிரெஞ்சு நடிகர் இசபெல் ஹப்பர்ட்
    • கோவா மாநிலத்தில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும், 2019 சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI 2019), பிரெஞ்சு நடிகர் இசபெல் ஹப்பர்ட் (Isabelle Huppert) வாழ்நாள் சாதனையாளர் விருது (IFFI Lifetime Achievement Award 2019) வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். 
  • 50-வது திரைப்படவிழா
    • 2019 கோவா சர்வதேச திரைப்பட விழா, 50-வது திரைப்படவிழா ஆகும், 
  • IFFI பொன்விழா ஐகான் விருது - நடிகர் ரஜினிகாந்த்
    • பிரபல நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) அவர்களுக்கு, 2019-ஆம் ஆண்டிற்கான 'IFFI பொன்விழா ஐகான் விருது’ (Icon of the Golden Jubilee of IFFI 2019) வழங்கப்படவுள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிகழ்வுகள்
மதுரை உலக தமிழ் சங்கத்தில் "கீழடி அகழாய்வு பொருட்கள் கண்காட்சி"
  • மதுரை உலக தமிழ் சங்கத்தில் கீழடி அகழாய்வு பொருட்கள் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 1-அன்று தொடங்கி வைத்தார்
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடியில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் ஏராளமாக கிடைத்துள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை 5 கட்ட அகழாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வில் கிடைத்த ஆயிரக்கணக்கான பொருட்கள் மதுரை தல்லாகுளத்தில் உள்ள உலகத்தமிழ் சங்கத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள் 
நவம்பர் 02 - பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முடிவுகட்டும் சர்வதேச தினம் (International Day to End Impunity for Crimes Against Journalists).
Post a Comment (0)
Previous Post Next Post