நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 11-12, 2019
சர்வதேச நிகழ்வுகள்ஈரான் நாட்டின் ஃபோர்டோ எரிபொருள் செறிவூட்டல் ஆலை - FFEP
- அண்மையில் செய்திகளில் அடிபட்ட,ஃபோர்டோ எரிபொருள் செறிவூட்டல் ஆலை (FFEP-Fordow Fuel Enrichment Plant) ஈரான் நாட்டோடு தொடர்புடையது ஆகும். ஈரான் சமீபத்தில் தனது ஃபோர்டோ மமலையடி அணுசக்தி ஆலையில் யுரேனியத்தை 5% செறிவூட்டியள்ளது.
அனைத்து மின்சார சோதனைகளுக்கான முதல் விமானம் 'X-57 Maxwell'
- அமெரிக்காவின் NASA விண்வெளி நிறுவனம், முதல் அனைத்து மின்சார சோதனைகளுக்கான விமானத்தை "எக்ஸ்-57 மேக்ஸ்வெல்" (X-57 Maxwell) என்ற பெயரில் விண்வெளியில் செலுத்தியுள்ளது.
ஜுராசிக் காலத்தை சேர்ந்த கடல் விலங்கு “ப்ளியோசர்ஸ்”
- போலந்து நாட்டில், உள்ள க்ராஸானோவிஸ் கிராமத்தில் பிரமாண்டமான ஜுராசிக் காலத்தை (Jurassic) சேர்ந்த அறிய கடல் வேட்டையாடும் “ப்ளியோசர்ஸ்” (Pliosaurs) என்ற விலங்கின் எலும்புகளின் எச்சங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
'SWIFT சர்வதேச கட்டணம் செலுத்தும் வழிமுறைக்கு மாற்று
- அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் 'SWIF'T எனப்படும் சர்வதேச கட்டணம் செலுத்தும் வழிமுறைக்கு மாற்றாக புதிய முறையை பயன்படுத்த இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா நாடுகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
- ரஷ்யாவின் மத்திய வங்கியின் SPFS வங்கி கட்டண அமைப்புடன் இந்தியா இணைய திட்டமிட்டுள்ளது.
- SWIFT: Society for Worldwide Interbank Financial Telecommunication.
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு - 5 ஆண்டுகள் தடை
- நீதிபதி சங்கீதா பிந்த்ரா செகல் தீர்ப்பாயம்: விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை விதித்த மத்திய அரசின் உத்தரவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா பிந்த்ரா செகல் தலைமையிலான தீர்ப்பாயம் உறுதி செய்தது.
- 1991-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
தேசிய நிகழ்வுகள்
NH-766 நெடுஞ்சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி தீர்மானம்
- NH 766-இல் போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கேரள மாநில சட்டமன்றம் தீர்மானத்தை, நவம்பர் 8-அன்று நிறைவேற்றியுள்ளது.
- கர்நாடகாவுடன் பந்திப்பூர் காடு வழியாக மாநிலத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 766 வழியாக இரவு போக்குவரத்தை தடை செய்வதற்கான முடிவை ரத்து செய்ய இந்த தீர்மானம் கோரியுள்ளது.
- NH 766 கேரளாவில் உள்ள கோழிக்கோட்டை மைசூர் வழியாக கர்நாடகாவின் கொல்லேகலுடன் இணைக்கிறது.
நான்கு மாநிலங்களில் மருத்துவ உபகரணப் பூங்காக்கள்
- ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரள ஆகிய மாநிலங்களில் மருத்துவ உபகரணப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சிகிச்சைக்கு தேவையான உலகத்தரம் வாய்ந்த உபகரணங்களை குறைந்த விலையில் உருவாக்கித் தரும் வகையில் இந்தப் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா-வுக்கு ‘Z+’ பாதுகாப்பு
- காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு நவம்பர் 11-முதல் மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (CRPF), ‘இஸட் பிளஸ்’ (Z+) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
- அவா்களுக்கான ‘சிறப்புப் பாதுகாப்புப் படை’யின் (SPG) பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படுவதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது.
- சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) என்ற சிறப்பு கமாண்டோ படையை உருவாக்க 1988-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
- தற்போது இந்தியாவில் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் 2 ஆண்டுகளில் கல்வியறிவு பெற்ற 12,968 பழங்குயினர்
- கேரள மாநிலம் முழுவதும் பல்வேறு திட்டங்களின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 12,968 பழங்குடி ஆதிவாசிகள் கல்வியறிவு பெற்றுள்ளனா் என்று மாநில எழுத்தறிவு இயக்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் முதல் ‘தனியார்’ ரயில் தேஜஸ்: முதல் மாத லாபம் - ரூ.70 லட்சம்
- டெல்லி-லக்னௌ நகரங்கள் இடையே நாட்டிலேயே முதல் முறையாக ‘தனியார்’ மூலம் இயக்கப்பட்ட தேஜஸ் விரைவு ரயில், முதல் மாதத்தில் ரூ.70 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது.
- இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) இயக்கும் இந்த விரைவு ரயிலில் பயணம் செய்வோருக்கு இலவச உணவு, ரூ.25 லட்சம் வரை இலவச காப்பீடு, ரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உள்ளன.
பாதுகாப்பு/விண்வெளி
இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையுடன் இணையும் அசாம் ரைபிள்ஸ்
- அசாம் ரைபிள்ஸ் (Assam Riffles) மத்திய துணை ராணுவப் படையை இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (Indo-Tibetan Border Police) படையுடன் உடன் இணைக்க உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs ) முன்மொழிந்துள்ளது.
நியமனங்கள்
பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி - சஞ்சய் கரோல்
- பிகார் மாநிலம், பாட்னா உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய் கரோல் (வயது 58), பாட்னா ஆளுநா் மாளிகையில், நவம்பர் 11-அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்றார். பிகார் மாநில ஆளுநா் பாகு சௌகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நவம்பர் 11-அன்று பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன், தர்பார் மண்டபத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி என்ற ஏ.பி.சாஹியை, அக்டோபர் 30-ந்தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
நிதித்துறை நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர் - மன்மோகன் சிங்
- முன்னாள் பிரதமரும் தற்போது மாநிலங்களவை உறுப்பினருமாக உள்ள மன்மோகன் சிங் அவர்கள், நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- நகா்ப்புற மேம்பாட்டு நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக காங்கிரஸ் தலைவா் திக்விஜய் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுகள்
ABLF குளோபல் ஆசிய விருது 2019 - குமார் மங்கலம் பிர்லா
- ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கத்தின் அங்கீகாரமான ABLF குளோபல் ஆசிய விருது 2019 (ABLF Global Asian Award), துபாயில் நடந்த விழாவில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா (Kumar Mangalam Birla) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாநாடுகள்
‘பிரிக்ஸ்’ நாடுகள் உச்சி மாநாடு 2019
- ‘பிரிக்ஸ்’ நாடுகளின் 11-ஆவது உச்சி மாநாடு (11th BRICS Summit, Brasília, Brazil), பிரேசில் தலைநகா் பிரேசிலியாவில் நவம்பர் 12-13 தேதிகளில் ஆகிய ‘எதிர்காலத்துக்கான பொருளாதார வளா்ச்சி’ (Economic growth for an innovative future) என்ற கருப்பொருளில், நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் தொழில்துறையினா் கூட்டம், பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய அமா்வு, முழுமையான அமா்வு ஆகிய கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்கிறார். பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்பது, இது ஆறாவது முறையாகும்.
- பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த கூட்டமைப்பு 'பிரிக்ஸ்' ஆகும். 'பிரிக்ஸ்' அமைப்பு: இது 2006-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 2010-ஆம் ஆண்டு இந்த கூட்டமைப்பில் தென் ஆப்பிரிக்கா இணைத்துக்கொள்ளப்பட்டது.
- BRICS: Brazil, Russia, India, China and South Africa.
டிஃபென்ஸ் கனெக்ட் 2019
- பாதுகாப்புத் துறையின் புத்தாக்கப் பிரிவின் சாதனைகளை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில், ‘டிஃபென்ஸ் கனெக்ட் 2019’ நிகழ்ச்சி டெல்லியில் நவம்பர் 11-அன்று நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.
உலக பொருளாதார மன்ற 50-வது WEF ஆண்டு கூட்டம் 2020 (டாவோஸ்)
- சுவிட்சர்லாந்தில், உலக பொருளாதார மன்றத்தின் (WEF annual Meeting 2020 ) வருடாந்திர கூட்டத்தின் 50-வது ஆண்டு விழா ஜனவரி மாதம் சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறுகிறது.
- WEF: World Economic Forum.
பொருளாதார நிகழ்வுகள்
5 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதார நாடு
- 2024-ஆம் ஆண்டுக்குள் சுமார் ரூ. 357 லட்சம் கோடி (5 டிரில்லியன் அமெரிக்க டாலா்) பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.
முக்கிய நபர்கள்
டி.என்.சேஷன் - காலமானார்
- 2019 நவம்பர் 10 அன்று, பிரபல தேர்தல் சீர்திருத்தவாதி திருநெல்லை நாராயண ஐயர் (TN Seshan) என்ற கொண்ட டி.என்.சேஷன், சென்னையில் காலமானர்.
- டி.என்.சேஷன், 1932-ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி பாலக்காட்டில் பிறந்தவர்.
- இந்தியாவின் 10-வது தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியை, டிசம்பர் 12,1990 முதல் டிசம்பர் 11,1996 வரை மொத்தம் 6 ஆண்டுகள் டி.என்.சேஷன் வகித்துள்ளார்.
- இந்தியாவில் மிகப்பெரிய தேர்தல் சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்தவர் எனும் நோக்கில், 1996 ஆம் ஆண்டில் சேஷனுக்கு ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டது.
விளையாட்டு நிகழ்வுகள்
டென்னிஸ்
ATP இறுதி சுற்று 2019 (லண்டன்)
- ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டி நிறைவடைந்ததும், தரவரிசையில் முதல்-8 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ATP இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன்படி 50-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி (2019) லண்டன் நகரில் நவம்பர் 10-முதல் 17-வரை நடக்கிறது.
- 8 வீரர்களும், டென்னிஸ் ஜாம்பவான்கள் 'ஆந்த்ரே அகாசி, ஜோர்ன் போர்க்' என்ற பெயரில் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
- ‘அகாசி’ பிரிவு: ‘முதல் நிலை’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), டேனில் மெட்விடேவ் (ரஷியா), ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), நடப்பு சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோரும்,
- ‘போர்க்’ பிரிவு: 2-ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), டொமினிக் திம் (ஆஸ்திரியா), மேட்டோ பெரேட்டினி (இத்தாலி) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
துப்பாக்கி சுடுதல்
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்-2019
- 14-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில், நவம்பர் 10-அன்று, பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (மூன்று நிலை)
- போட்டியில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சவாந்த் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
- இந்திய வீரர்-வீராங்கனைகள், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியா பெற்ற 12-வது கோட்டா பெற்றுள்ளனர்.
கிரிக்கெட்
சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த இந்தியர் - ஷஃபாலி வெர்மா
- மேற்கிந்தியத் தீவுகளுடனான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஷஃபாலி வெர்மா அரைசதம் அடித்ததன்மூலம், சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
- ஷஃபாலி வெர்மா 49 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட 73 ரன்கள் எடுத்தார். 15 வயது 285 நாட்கள்: இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த சாதனையை இவர் 15 வயது 285 நாட்களில் புரிந்துள்ளார்.
முக்கிய தினங்கள்
நவம்பர் 8
கதிரியக்க சர்வதேச நாள்: நவம்பர் 8
- கதிரியக்கத்தின் சர்வதேச நாள் (International Day of Radiology ) என்பது நவீன சுகாதார சேவையில், மருத்துவ இமேஜிங்கின் பங்கை ஊக்குவிக்கும் வருடாந்திர நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
- 2019 கதிரியக்கத்தின் சர்வதேச நாள் மையக்கருத்து: விளையாட்டு இமேஜிங் (Sports Imaging) என்பதாகும்
நவம்பர் 12
தேசிய ஒலிபரப்பு தினம்: நவம்பர் 12
- இந்திய, பாகிஸ்தான் பிரிவினையான தருணத்தில் பாகிஸ்தானில் இருந்து குருசேத்திராவில் முகாமிட்டிருந்த அகதிகளுக்காக மகாத்மா காந்தி தனது செய்தியை சொல்ல 1947 நவம்பர் மாதம் 12-ந் தேதி டெல்லி அகில இந்திய வானொலி நிலையத்திற்கு வந்தார். அந்த நாளையே அகில இந்திய வானொலி தேசிய ஒலிபரப்பு நாளாக கொண்டாடி வருகிறது.
நவம்பர் 12
உலக நுரையீரல் அழற்சி தினம் - நவம்பர் 12
- உலக நுரையீரல் அழற்சி தினம் (World Pneumonia Day) நவம்பர் 12 அன்று கடைபிடிக்கப்படுகிறது.