- தமிழக பள்ளிக் கல்வியின் கீழ் 37 ஆயிரத்து 211 அரசு பள்ளிகளில், 2 லட்சத்து 30 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
- இந்தநிலையில் கல்வித்துறையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் உபரியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கலந்தாய்வு மூலம் கணிசமான உபரி ஆசிரியர்கள் கடந்த ஜூலை மாதம் பணி நிரவல் செய்யப்பட்டனர்.
- சில ஆசிரியர்களுக்கு மேல்நிலை வகுப்புகளுக்கு மாற்று பணி வழங்கப்பட்டது.
- தற்போது அரசு பள்ளிகளில் 12 ஆயிரத்து 109 பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக தெரிகிறது.
- இதையடுத்து 1996-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் உபரியானவர்களின் விவரப்பட்டியலை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடவாரியாக கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு மாற்றுப்பணி இடங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
School Education November 20, 2019 - Regarding Excess Teachers |
.