இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 70 ஆண்டுகள் (26.11.2019)
இந்திய அரசியலமைப்பு சட்ட தினம்-நவம்பர் 26
- அரசியலமைப்பு சட்ட தினம் (Constitution Day) நவம்பர் 26 தேதி கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பு சட்ட தினம் (சாவித்வான் திவாஸ்), இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதற்காக நவம்பர் 26 அன்று இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
- 1949 ஆம் ஆண்டு, நவம்பர் 26 ஆம் நாளில் (29.11.1946) இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, அரசியலமைப்பு சட்டமன்றம் (Constituent Assembly), ஏற்றுக்கொள்வதற்காக அறிவித்தது.
- 1950 ஜனவரி 26 ஆம் நாள் அன்று இந்திய அரசியலமைப்பு சட்டம், நடைமுறைக்கு வந்தது.
- 2015 ஆம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி முதல் "அரசியலமைப்பு தினம்" இந்திய அரசால் கடைபிடிக்கப்படுகிறது.
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கான பணிகள், 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கப்பட்டன. அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிக்க உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையில் 296 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். அந்த குழுவில் இந்திய அரசியல் சாசனத்தின் பிதாமகன் என அழைக்கப்படும் டாக்டர். அம்பேத்கர் முதலில் இடம்பெறவில்லை.
- யோகேந்தரநாத் மண்டல்: கிழக்கு வங்கத்தைச் சேர்ந்த யோகேந்தரநாத் மண்டல் என்பவர் குழுவிலிருந்து வெளியேறியதை அடுத்து டாக்டர் அம்பேத்கர் சேர்க்கப்பட்டார். கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகளின் அரசியல் சாசன சட்டத்தில் உள்ள பிரிவுகளை கொண்டு இந்தியாவின் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது.
- இந்திய அரசியல் நிர்ணய மன்றம்: இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, அன்று முதல் இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது.
- சட்ட வரைவுக் குழு-பி.ஆர்.அம்பேத்கர்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்காக பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவில் கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், V.T.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் இடம்பெற்றனர். இந்தக் குழுவினர், 166 முறை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இக்குழுவினர் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கையால் எழுதப்பட்டு கையொப்பமிடப்பட்ட தனது அறிக்கையின் இரண்டு பிரதிகளைட 1948, பிப்ரவரி 21 ஆம் தேதி ஒப்படைத்தது.
- அரசியல் நிர்ணய சபையின் தலைவர் ராஜேந்திரப் பிரசாத்: நவம்பர் 4 ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையில் ஒப்படைக்கப்பட்ட இவ்வறிக்கை, முழு வடிவம் பெற்று 1949 நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையின் தலைவர் ராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- ஜனவரி 24-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறை: இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றே தீருவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நினைவாக 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து, இந்தியா பிரிட்டிஷ் அரசாட்சியில் இருந்து நீக்கப்பட்டது.
- இந்திய அரசியலமைப்பு என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும்.
- உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும்.
- இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
- இது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது.
- இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும்.
- இதில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 103 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள் (Articles) மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது.
- இந்திய அரசியலமைப்பு சட்ட தினம், 2015 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 70-வது ஆண்டு தின விழா கொண்டாட்டப்படுகிறது.