TNPSC Current Affairs October 8-9, 2019

 நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 8-9, 2019
TNPSC Current Affairs Octobe 2019
TNPSC Current Affairs October 8-9, 2019
தேசிய நிகழ்வுகள்
பழங்குடிப் பெண்மணி “ஜோதையா பாய் பைகா” ஓவியங்கள்
  • மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஜோதையா பாய் பைகா (Jodhaiya Bai Baiga) அவர்களின் ஓவியங்கள் இத்தாலியில் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டன.
Jodhaiya Bai Baiga paintings
  • இத்தாலியில், ஃபேஷன் மற்றும் வடிவமைப்பின் உலகளாவிய தலைநகரான மிலனில் நடைபெற்று வரும் கண்காட்சியில் 80 வயதான பழங்குடிப் பெண் “ஜோதையா பாய் பைகா” உருவாக்கிய ஓவியங்கள் மற்றும் கலைப்படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
  • ஜோதையா மத்திய பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தின் லோர்ஹா கிராமத்தைச் சேர்ந்தவர். 
  • அவரது ஓவிய பாணியில் முக்கியமாக இயற்கையும் விலங்குகளும் இடம்பெறுகின்றன.
PMJAY திட்டம்: அதிக புற்றுநோயாளிகள் பயன்பெற்ற மாநிலம்- தமிழ்நாடு
    PMJAY pmjay scheme
  • பிரதான் மந்திரி ஜான் ஆரோக்ய யோஜனா (PMJAY) பற்றிய சமீபத்திய தரவுகளின்படி, தமிழ்நாடு மாநிலத்தின் அதிக அளவிலான புற்றுநோயாளிகள் இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுள்ளனர்.
  • ஆயுஷ்மான் பாரதத்தின் மூன்றாம் நிலை பராமரிப்புப் பிரிவான பிரதான் மந்திரி ஜான் ஆரோக்ய யோஜனா (PMJAY) பற்றிய தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. 
  • PMJAY-யின் கீழ் அதிக புற்றுநோய் நோயாளிகள் சிகிச்சை பெற்ற மாநிலத்தில் தமிழ்நாடு (40,056 வழக்குகள்) முதலிடத்திலும், கேரளா (22,000), மத்தியப் பிரதேசம் (19,455), சத்தீஸ்கர் (15,997), குஜராத் (14,380) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 
  • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 11.57 லட்சம் புதிய புற்றுநோயாளிகள் மற்றும் 7.84 லட்சம் புற்றுநோய் இறப்புகள் நடைபெறுவதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 
  • எல்லா நேரத்திலும், 22.5 லட்சம் இந்தியர்கள் புற்றுநோயுடன் வாழ்கின்றனர்.
  • PMJAY: Pradhan Mantri Jan Arogya Yojana.
Youth Co:Lab - தொழில்முனைவோர் ஆய்வக திட்டம் 
Youth Co:Lab undp aim
  • அடல் புதுமை மிஷன் (AIM), நிதி ஆயோக் அமைப்பு ஆகியவை ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) என்ற சர்வதேச அமைப்புடன் இணைந்து Youth Co:Lab என்ற ஆய்வகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 18-29 வயதுடைய இளைஞர்களை சமூக தொழில்முனைவோராக உருவாக்கவும், இந்தியாவில் புதுமைகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகவும் இந்த திட்டம் கொண்டுள்ளது.
 பாதுகாப்பு/விண்வெளி  
இரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
  • பிரான்சில் தயாரான அதிநவீன இரபேல் போர் விமானம் (Dassault Rafale) இந்தியாவிடம் அக்டோபர் 8-அன்று ஒப்படைக்கப்பட்டது. 
  • பிரான்சில் உள்ள பார்டியாக்ஸ் நகரில், இரபேல் போர் விமானத்தை (First Rafale Fighter Jet) ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முறைப்படி பெற்றுக்கொண்டார். 
  • டசால்ட் ஏவியேசன் நிறுவனம் (பிரான்ஸ்)
    • 36 இரபேல் போர் விமானங்களை தயாரிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.
    • 36 விமானங்களில் முதல் விமானம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
    • 36 ரபேல் விமானங்கள் 
    • 4 விமானங்கள் அடங்கிய ரபேல் போர் விமானங்களின் முதல் அணி, 2020-ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா வந்து சேரும். 
    • மொத்த எண்ணிக்கையான 36 விமானங்களும் 2022-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் இந்தியா வந்து சேரும்.
rafale fighter jet rajnath india
  • இரபேல் விமானம் - சிறப்புகள் 
    • இரபேல் போர் விமானம், இரட்டை என்ஜின் கொண்ட ஜெட் போர் விமானம் ஆகும். விமானம்தாங்கி போர் கப்பலில் இருந்தும், கரையோர தளத்தில் இருந்தும் இயங்கும் ஆற்றல் வாய்ந்தது. 
    • இது முழுமையான பல்துறை விமானம் ஆகும்.
    • ரபேல் விமானத்தில் அதிநவீன ஆயுத தளவாடங்கள் உள்ளன. 
    • அவற்றில் ‘மீட்டேர்’, ‘ஸ்கால்ப்’ ஆகிய ஏவுகணைகள் முக்கியமானவை. மீட்டேர் ஏவுகணை, விமானத்தில் இருந்து பாய்ந்து சென்று வானத்தில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கவல்ல அடுத்த தலைமுறை ஏவுகணை ஆகும். 
    • பார்வை எல்லைக்கு அப்பால் உள்ள இலக்குகளையும் தாக்கக்கூடியது.
    • எல்லா வானிலையையும் சமாளித்து செயல்படும். அதிநவீன ரேடார் வழிகாட்டலுடன் இயங்கும். ஜெட் விமானங்கள் முதல் சிறிய ஆளில்லா விமானங்கள் மற்றும் குரூஸ் ரக ஏவுகணைகள் வரை தாக்கவல்லது.
இந்திய ராணுவத்தின் மலை போர் பயிற்சி ‘ஹிம் விஜய்’ 2019
  • இந்திய ராணுவத்தின் முதலாவது  மலைப்போர் பயிற்சி ‘ஹிம் விஜய்’ (Him Vijay 2019) அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கியது.
Him Vijay 2019 Mountain Combat Exercise
  • இந்திய இராணுவம் (Mountain Combat Exercise) கடினமான மலை நிலப்பரப்பில் துருப்புக்களின் இயக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் தகவல்தொடர்புகளை சோதிப்பதே இந்தப் பயிற்சியின் நோக்கம் ஆகும். இந்த பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.
  • முதல் கட்டம் அக்டோபர் 7 முதல் 10 வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்டம் அக்டோபர் 20 முதல் 24 வரை நடைபெறுகிறது.
அதிக நிலவுகளைக் கொண்ட கிரகம் - சனி 
saturn new moons
  • சூரியக் குடும்பத்தைச் சோ்ந்த சனி கிரகத்தைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். இத்துடன், அந்தக் கிரகத்தைச் சுற்றி வரும் நிலவுகளின் எண்ணிக்கை 82-ஆக உயா்ந்துள்ளது. இதையடுத்து, 
  • அதிக நிலவுகளைக் கொண்ட சூரியக் குடும்பத்துக் கிரகம் என்ற பெருமையை சனி பெறுகிறது. இதுவரை 79 நிலவுகளைக் கொண்ட ஜூபிடரே அதிக நிலவுகளைக் கொண்ட கிரகமாக இருந்து வந்தது.
சர்வதேச விண்வெளி மையத்தில் தனியாக நடக்கப்போகும் வீராங்கனைகள்
  • சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் கிரிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மெயிர் ஆகிய 2 வீராங்கனைகள் அக்டோபர் 21-ந்தேதி வீரர்கள் துணையின்றி விண்வெளியில் தனியாக நடந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (NASA) அறிவித்துள்ளது.
நியமனங்கள்
"ஒரு நாள் பிரிட்டன் தூதராக" ஆயிஷா கான்
Ayesha Khan from Gorakhpur becomes British High Commissioner for 1 day
  • டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் "ஒரு நாள் பிரிட்டன் தூதராக" ஆயிஷா கான் என்பவர்  அக்டோபர் 4-ஆம் தேதி பதவி வகித்தார்.
  • ஒரு நாள் தூதா் பதவிக்கான போட்டியை மூன்றாவது ஆண்டாக இந்த முறை பிரிட்டன் தூதரகம் நடத்தியது.
  • ஆயிஷா கான் (22 வயது) உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரைச் சோ்ந்தவர் ஆவார்.
மாநாடு/விழா 
உலக அறிவியல், மதம் மற்றும் தத்துவ நாடாளுமன்ற மாநாடு 2019 
  • 2019 உலக அறிவியல், மதம் மற்றும் தத்துவ நாடாளுமன்ற மாநாடு (2019 World Parliament of Science, Religion and Philosophy) புனே நகரத்தில் நடைபெற்றது.
  • ஐந்தாவது உலக அறிவியல், மதம் மற்றும் தத்துவ நாடாளுமன்ற மாநாடு, புனேவில் உள்ள எம்ஐடி உலக அமைதி பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 2 முதல் 6 தேதிகளில் நடைக்பெற்றது. 
2019 World Parliament of Science, Religion and Philosophy
  • ‘உலக அமைதி மற்றும் மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கான அறிவியல், மதம் மற்றும் தத்துவத்தின் பங்கு’ (Role of science, religion and philosophy for world peace and well-being of mankind) என்ற மையகருத்தில் இந்த பாராளுமன்ற மாநாடு நடைக்பெற்றது.
விருதுகள் 
மருத்துவ நோபல் பரிசு 2019 
  • 2019-ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு (2019 Nobel Prize in Physiology or Medicine) அக்டோபர் 7-அன்று, சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் விவரம்:
    1. வில்லியம் கலின் (William G. Kaelin Jr), அமெரிக்கா 
    2. கிரேக் செமன்சா (Sir Peter J. Ratcliffe), அமெரிக்கா 
    3. சர் பீட்டர் ரேட்கிளிப் (Gregg L. Semenza), இங்கிலாந்து 
The 2019 Medicine Laureates
  • மருத்துவ நோபல் பரிசு வழங்கப்பட்டதன் நோக்கம் 
    • உடலில் உள்ள செல்கள், ஆக்சிஜனை எப்படி உணர்கின்றன, எப்படி மாறுபடுகிற ஆக்சிஜன் அளவுக்கு ஏற்ப செல்கள் தங்களை பொருத்திக்கொள்கின்றன என்பது தொடர்பான கண்டுபிடிப்பை செய்ததற்காக இவர்களுக்கு இந்த ஆண்டின் மருத்துவ நோபல் பரிசு வழங்கப்படுவதாக ராயல் சுவீடிஷ் அறிவியல் அகாடமி அறிவித்துள்ளது. 
    • இவர்களது இந்த கண்டுபிடிப்பு, அனிமியா என்று அழைக்கப்படுகிற ரத்த சோகைக்கும், புற்றுநோய்க்கும் புதிய சிகிச்சைகளுக்கு வழி வகுக்கிறது.
    • For their discoveries of how cells sense and adapt to oxygen availability.” They identified molecular machinery that regulates the activity of genes in response to varying levels of oxygen.
  • பரிசு தொகை
    • இவர்கள் மூவருக்கும் பரிசு தொகையான 9 லட்சத்து 14 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.6 கோடியே 40 லட்சம்) சமமாக பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
  • நோபல் பரிசு (1901)
    • nobel prize
    • உலகளவில் மருத்துவம், வேதியியல், இயற்பியல், சமாதானம், இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
    • இந்த பரிசு 9 லட்சத்து 14 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.6 கோடியே 40 லட்சம்) ரொக்கம், ஒரு தங்க பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டதாகும்.
    • நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல், ஸ்வீடனைச் சோ்ந்தவா். 1833-ஆம் ஆண்டு பிறந்த அவா், வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தாா்.
    • டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்ததுடன், பெரிய வெடிபொருள் நிறுவனத்தையும் நடத்தி வந்தாா். 
    • தனது கடைசி உயில் மூலம், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினாா்.
    • அவரது நினைவு தினமான டிசம்பா் 10-ஆம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. 
    • அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நாா்வேயிலும், இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம் ஆகிய மற்ற பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடனிலும் வழங்கப்படுகின்றன.
இயற்பியல் நோபல் பரிசு 2019
  • 2019-ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு (The Nobel Prize in Physics 2019) அக்டோபர் 8-அன்று ஸ்டாக்ஹோம் நகரில்  அறிவிக்கப்பட்டது. இந்தப் பரிசு 3 பேருக்கு, அண்டவியல் துறையில் (Cosmology) கண்டுபிடித்ததற்காக கூட்டாக வழங்கப்படுகிறது. அவர்கள் விவரம்:
    1. ஜேம்ஸ் பீபிள்ஸ் (James Peebles), கனடா.
    2. மைக்கேல் மேயர் (Michel Mayor), சுவிற்சர்லாந்து.
    3. டிடியர் கியூலோஸ் (Didier Queloz), சுவிற்சர்லாந்து.
The Nobel Prize in Physics 2019
  • இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டதன் நோக்கம் 
    • இயற்பியல் துறைக்கான நிகழாண்டின் நோபல் பரிசு, அண்டவியல் நிபுணா் ஜேம்ஸ் பீபள்ஸுக்கும், மைக்கேல் மேயா், டிடையா் குவிலோஸ் ஆகிய இரு விண்வெளி ஆய்வாளா்களுக்கும் பகிா்ந்தளிக்கப்படுகிறது.
    • பெரு வெடிப்புக்குப் பிறகு நமது அண்டம் எவ்வாறு உருவானது என்பதற்கான கோட்பாடுகளை உருவாக்கியமைக்காக அவா்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் தோ்வுக் குழு தெரிவித்துள்ளது. 
    • இவா்களில் மைக்கேல் மேயரும், டிடையா் குவிலோஸும் ஸ்விட்சா்லாந்து நாட்டைச் சோ்ந்தவா்கள் ஆவா்; ஜேம்ஸ் பீபள்ஸ் கனடா வம்சாவளி அமெரிக்கா் ஆவாா்.
    • ஜேம்ஸ் பீபிள்சுக்கு நோபல் பரிசில் பாதியளவு வழங்கப்படுகிறது.
    • இவர், ‘பிக் பேங்’ என்று அழைக்கப்படுகிற பெரு வெடிப்புக்கு பிறகு இந்த பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதை பற்றிய நமது புரிதலுக்கு பங்களித்த தத்துவார்த்த கண்டுபிடிப்புகளை செய்ததற்காக இப்பரிசு தரப்படுகிறது.
    • ஜேம்ஸ் பீபிள்ஸ், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.
    • மைக்கேல் மேயர், டிடியர் கியூலோசைப் பொருத்தமட்டில், இவர்கள் நோபல் பரிசின் பாதியை பகிர்ந்து கொள்கின்றனர். இவர்கள், நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள ஒரு கோளினை 1995-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெறுகின்றனர்.
    • மைக்கேல் மேயரும், டிடியர் கியூலோசும் ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள்.
    • The 2019 Nobel Prize in Physics are awarded ”for contributions to our understanding of the evolution of the universe and Earth’s place in the cosmos”, with one half to James Peebles “for theoretical discoveries in physical cosmology” and the other half jointly to Michel Mayor and Didier Queloz “for the discovery of an exoplanet orbiting a solar-type star.”
  • பரிசு தொகை
    • மொத்த பரிசு பணமான 9 லட்சத்து 14 ஆயிரம் டாலரில் (சுமார் ரூ.6 கோடியே 40 லட்சம்) பாதியை ஜேம்ஸ் பீபிள்சும், மீதி பாதியை மைக்கேல் மேயரும், டிடியர் கியூலோசும் பகிர்ந்து கொள்கின்றனர்.
UNEP ஆசியா சுற்றுச்சூழல் அமலாக்க விருது - இரமேஷ் பாண்டே
    UNEP Asia Environmental Enforcement Award ramesh pandey
  • ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP), ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருதுக்கு, இந்திய வன சேவை (IFS) அதிகாரி, 'இரமேஷ் பாண்டே' (Ramesh Kumar Pandey) அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • எல்லைக்குட்பட்ட சுற்றுச்சூழல் குற்றங்களை எதிர்ப்பதில் அவர் செய்த சிறந்த பணிக்காக 1996-ஆம் ஆண்டு தொகுதி இந்திய வன சேவை அதிகாரியான ரமேஷ் பாண்டே மதிப்புமிக்க இந்த UNEP ஆசியா சுற்றுச்சூழல் அமலாக்க விருதுக்கு (UNEP’s Asia Environmental Enforcement Award) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இந்த விருதை நவம்பர் 13 ஆம் தேதி பாங்காக்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் மாநாட்டு மையத்தில்  (UNCC)  பெறுகிறார். 
  • பாண்டே, தலைமை வனப்பாதுகாவலர்கவும், உத்திரபிரதேச மாநில லக்னோ நகரில் உயிர் பன்முகத்தன்மை வாரியத்தின் செயலாளராகவும், உள்ளார்.
புத்தக வெளியீடு 
'150 Years of Celebrating the Mahatma the South African Legacy’ - Fakir Hassen
  •  ‘மகாத்மாவை தென்னாப்பிரிக்க மரபு கொண்டாடும் 150 ஆண்டுகள்’ என்ற (150 Years of Celebrating the Mahatma the South African Legacy) என்ற தலைப்பிலான புத்தகத்தை,  ஃபகிர் ஹாசன் (Fakir Hassen) என்பவர் எழுதியுள்ளார்.
  • இந்த புத்தகம், காந்தியின் செயல்பாடுகளின் நினைவுகள் (அவரது பிறப்பு மற்றும் இறப்பு ஆண்டுவிழாக்கள் உட்பட) உள்ளூர் இந்திய சமூகத்தில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டவை என்பதை பதிவு செய்கிறது.
விளையாட்டு நிகழ்வுகள் 
டென்னிஸ் 

ஜப்பான் ஓபன் டென்னிஸ் 2019 - சாம்பியன்கள் 
  • முதலாவது ஜப்பான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி (2019 Rakuten Japan Open Tennis) டோக்கியோவில் நடந்தது. இதில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் விவரம்:
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு - நோவக் ஜோகோவிச் (செர்பியா)
  • ஆண்கள் இரட்டையர் பிரிவு - நிக்கோலா மஹுத் /  ஏடார்டு ரோஜர்-வாஸ்ஸலின் இணை (பிரான்ஸ்)
சீன ஓபன் டென்னிஸ் 2019 - சாம்பியன்கள் 
  • 2019 சீன ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்தது. இதில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் விவரம்:
  • பெண்கள் ஒற்றையர் பிரிவு - நவோமி ஒசாகா (ஜப்பான்)
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு -  டொமினிக் திம் (ஆஸ்திரியா)
தடகளம்
உலக தடகள சாம்பியன்ஷிப் 2019 - அமெரிக்கா முதலிடம் 
  • 17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி (2019 World Athletics Championships) கத்தார் தலைநகர் தோகாவில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6-அன்றுடன்  முடிவடைந்தது. 
  • 5 ஆயிரம் மீட்டர் ஓட்டம் (பெண்கள்)
    • ஹெலென் ஓபிரி (கென்யா) - தங்கப்பதக்கம்  (14 நிமிடம் 26.72 வினாடி) 
  • 1500 மீட்டர் ஓட்டம் (பெண்கள்)
    • சிபன் ஹசன் (நெதர்லாந்து)  - தங்கப்பதக்கம் (3 நிமிடம் 51.95 வினாடி)
  • மாரத்தான் போட்டி  (42.19 கிலோ மீட்டர் தூரம்)
    • லெலிசா டேசிசா (எத்தியோப்பியா) - தங்கப்பதக்கம் 2 மணி 10 நிமிடம் 40 வினாடிகள்)
  • 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டம் (ஆண்கள்)
    • அமெரிக்க குழுவினர் - தங்கப்பதக்கம் (37.10 வினாடிகள்) 
    • கிறிஸ்டியன் கோல்மன், ஜஸ்டின் கேத்லின், மைக்கேல் ரோஜர்ஸ், நோவா லைலெஸ்
  • 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டம் (பெண்கள்)
    • iaaf 2019 medal
    • ஜமைக்கா அணியினர் - தங்கப்பதக்கம் (41.44 வினாடி) 
    • ஷெல்லி அன் பிராசெர் பிரைஸ், நதாலி ஒயிட்டி, ஜோனிலே சுமித், ஷெரிக்கா ஜாக்சன்
  • அமெரிக்கா முதலிடம் 
    • பதக்க பட்டியலில் அமெரிக்கா 14 தங்கப்பதக்கம் உள்ளிட்ட 29 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.
    • கென்யா 05 தங்கப்பதக்கம் உள்ளிட்ட 11 பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பிடித்தது.
    • ஜமைக்கா  03 தங்கப்பதக்கம் உள்ளிட்ட 12 பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பிடித்தது.
கிரிக்கெட்
இந்தியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 2019 (இந்தியா)
  • முதலாவது டெஸ்ட்-இந்திய அணி வெற்றி 
    • விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
    • ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
  • அதிக சிக்சர் அடிக்கப்பட்ட டெஸ்ட் போட்டி 
    • இந்த டெஸ்டில் இரண்டு அணிகளும் சேர்ந்து மொத்தம் 37 சிக்சர்கள் (இந்தியா 27 சிக்சர், தென்ஆப்பிரிக்கா 10 சிக்சர்) நொறுக்கியுள்ளன. 
    • 142 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் இது புதிய உலக சாதனையாகும். 
    • ஒரு டெஸ்டில் அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட போட்டியாக இது அமைந்திருக்கிறது. 
    • இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான டெஸ்டில் மொத்தம் 35 சிக்சர் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-முதலிடம் 
    • இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு 40 புள்ளிகள் கிடைத்தது. இதையடுத்து சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா மொத்தம் 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து, இலங்கை தலா 60 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளன.
  • அதிவேக 350 விக்கெட்கள்: முரளிதரன் சாதனையை சமன் செய்த அஸ்வின்
    • இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், 66-வது டெஸ்டில், 350 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    • இதன் மூலம் இந்த இலக்கை அதிவேகமாக எட்டிய பவுலரான இலங்கையின் முரளிதரனின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார். இருவரும் தங்களது 66-வது டெஸ்டில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்கள்.
  • டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக இரட்டை சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்-ரோஹித் சர்மா 
    • தொடக்க ஆட்டக்காரராக தனது முதல் டெஸ்டில் இரட்டை சதங்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சிறப்பை இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
    • ரோஹித் சர்மா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார்.
    • ரோஹித் சர்மா, ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சிறப்பை பெற்றார். இந்த போட்டியால் மொத்தம் 13 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார்.

ஹாட்ரிக் எடுத்த இளம் வயது கிரிக்கெட் வீரர் 'முகமது ஹஸ்னைன்'

  • 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த இளம் வயது கிரிக்கெட் வீரர் என்ற என்ற சிறப்பை பாகிஸ்தான் நாட்டின் முகமது ஹஸ்னைன் பெற்றுள்ளார்.
  • ஹாட்ரிக் எடுத்தபொது அவரது வாத்து 19-வயது 183 நாட்கள் ஆகும்.
  • லாகூரில் நடந்த முதல் இருபதுக்கு T-20 சர்வதேச போட்டியில் இலங்கைக்கு எதிரான இந்த சாதனையை படைத்தார்.
முக்கிய தினங்கள் 
அக்டோபர் 7 - உலக பருத்தி தினம் 
  • உலக வர்த்தக அமைப்பு (World Trade Organisation) முதலாவது உலக பருத்தி தினத்தை (World Cotton Day), அக்டோபர் 7, 2019 அன்று ஜெனீவாவில் நடத்தியது. 
  • இந்த 5 நாள் நிகழ்வில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்தியா சார்பாக பங்கேற்றார்.
  • பருத்தியின் இயற்கை குணங்கள், அதன் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றை  மக்கள் பெறும் நன்மைககள் பற்றி இந்த நாள் விழிப்புணர்வை இந்த நாள் ஏற்படுத்துகிறது.
  • உலகளவில் வளர்ந்த, வளரும் மற்றும் வளர்ந்த பொருளாதாரங்களுக்கு பருத்தி முக்கியமான பொருளாக உள்ளது. 
World Post Day 2020
அக்டோபர் 9  - உலக தபால் தினம்  
  • உலக தபால் தினம் (World Post Day) அக்டோபர் 9-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • சுவிட்சர்லாந்தில் உலக தபால் அமைப்பு அக்டோபர் 9, 1874-இல் தொடங்கப்பட்டதன் நினைவாக அக்டோபர் 9-அன்று உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
அக்டோபர் 9 - 63-வது தம்மச்சக்ரா பிரவர்த்தன் தினம் 2019
  • 63-வது தம்மச்சக்ரா பிரவர்த்தன் தினம் 2019 (Dhammachakra Pravartan Din) சமீபத்தில் பி ஆர் அம்பேத்கர் அவர்களுக்கு கடைபிடிக்கப்பட்டது. 
  • மகாராஷ்டிராவில், 63 வது தம்மச்சக்ரா பிரவர்த்தன் தின் (Dhammachakra Pravartan Day 2019), அக்டோபர் 9, 2019 அன்று நாக்பூரில் உள்ள தீக்ஷபூமியில் கொண்டாடப்பட்டது.
  • டாக்டர் அம்பேத்கர் அவர்கள் புத்தமதத்தை தழுவிய நாள் இதுவாகும். 
  • இந்திய அரசியலமைப்பின் வரைவு கலைஞர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் கூடியிருந்தனர்.
Post a Comment (0)
Previous Post Next Post