நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 6-7, 2019
சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்த 'நிலவின் தென்துருவ படம்' வெளியீடு
TNPSC Current Affairs October 6-7, 2019 |
சர்வதேச நிகழ்வுகள்
அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகள்-சில தகவல்கள்
- அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அமைப்பு (American Community Survey) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, அமெரிக்காவில் வாழும் 5 வயதுக்கும் மேற்பட்டவர்கள், சட்டத்துக்கு புறம்பாக குடியேறியவர்களில் 21.8 சதவீதம் பேர் அவர்களது வீடுகளில்
- ஆங்கிலம் தவிர்த்து பிறமொழி பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
- அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் இந்தி முதல் இடத்தையும், தமிழ் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளது.
- அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 30.5 கோடியில், வெளிநாட்டு மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 6.7 கோடியாகும்.
- கடந்த எட்டு ஆண்டில் 80 ஆயிரம், இந்தியர்கள் அமெரிக்காவுக்கு சென்று குடியேறியுள்ளனர்.
- 8 ஆண்டுகளில்தமிழ் மொழி பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவீதமும் அதிகரித்துள்ளது.
- அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகள்
இந்தியா-வங்காளதேசம் - 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து
- வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா நான்கு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
- டெல்லியில் அக்டோபர் 5-அன்று நடைபெற்ற பிரதமர் மோடி-ஷேக் ஹசினா இடையேயான பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அவை:
- வங்காளதேசத்தின் சட்டோகிராம், மோங்லா துறைமுகங்களை பயன்படுத்துவதற்கான நிலையான இயக்க முறைமை ஒப்பந்தம்
- திரிபுராவில் குடிநீர் வினியோகத்துக்கு வங்காளதேசத்தின் பெனி நதியில் இருந்து தண்ணீர் திறந்து விடுதல் தொடர்பான ஒப்பந்தம்
- ஐதராபாத் மற்றும் டாக்கா பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஒத்துழைப்பு
- இளைஞர் நலன் ஒத்துழைப்பு ஒப்பந்தம்
- கடலோர கண்காணிப்பு ஒப்பந்தம்
- மூன்று திட்டங்கள் தொடக்கம்
- இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து 3 திட்டங்களை காணொளி கட்சி மூலம் தொடங்கி வைத்தனர். அவை:வங்கதேசத்திலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு சமையல் எரிவாயு (எல்பிஜி எரிவாயு) இறக்குமதி செய்யும் திட்டம்
- வங்கதேசத் தலைநகா் டாக்காவிலுள்ள ராமகிருஷ்ண மடத்தில் எழுப்பப்பட்டுள்ள விவேகானந்த பவன் திறக்கப்பட்டது.
- குல்னாவில் எழுப்பப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு மையம் திறக்கப்பட்டது.
- விவாதிக்கப்பட்ட இருநாட்டு விவகாரங்கள்
- அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) விவகாரம்
- மியான்மா் நாட்டிலிருந்து வெளியேறி வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கயா அகதிகள் விவகாரம்
- இரு நாடுகளுக்கிடையேயான தீஸ்தா நதிநீா்ப் பங்கீடு பிரச்னை
தேசிய நிகழ்வுகள்
சர்வதேச திரைப்பட விழா 2019
- 50-ஆவது சர்வதேச திரைப்பட விழா (IFFI 2019) கோவாவில் நம்பர் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
- 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
- இந்திய மொழிகளைச் சேர்ந்த 26 திரைப்படங்கள் திரையிடப்படும்.
- 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன.
- IFFI 2019, 50th Edition of International Film Festival of India, Goa 20-28, November 2019
7-வது பொருளாதார கணக்கெடுப்பு-2019
- மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறை அமைச்சகம் பொருளாதார கணக்கெடுப்பை நடத்துகிறது.
- 1977-ம் ஆண்டு முதல் பொருளாதார கணக்கெடுப்பு நடந்து வரும் நிலையில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு இந்த (2019) ஆண்டு நடைபெறுகிறது.
- இந்த கணக்கெடுப்பில் நகர்ப்பகுதி, ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, வேலைவாய்ப்பு போன்ற தகவல்கள் டிஜிட்டல் முறையில் திரட்டப்படுகிறது.
- 7th Economic Census.
2020-முதல் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக்கல்லூரிகளில் சேர ‘நீட்’ தேர்வு
- தேசிய மருத்துவ கமிஷன் சட்டம் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
- இதையொட்டி நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு ஒரே பொதுத்தேர்வு ‘நீட்’ (NEET 2020) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- மத்திய சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரிகளில் மட்டும் தனித்தனியாக நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு மருத்துவப்படிப்பு சேர்க்கை நடந்து வந்தது. இந்த நிலையில் 2020-ஆம் ஆண்டு முதல் இந்த கல்லூரிகளில் சேரவும் ‘நீட்’ தேர்வு எழுத வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3000 கி.மீ. தூரத்துக்கு தனியார் நிறுவனங்கள் ரெயில்களை இயக்க அனுமதி
- இந்தியாவில் 2021-ம் ஆண்டு டிசம்பருக்கு பின்னர் டெல்லி-மும்பை, டெல்லி-ஹவுரா உள்பட 50 ரெயில் வழித்தடங்களில் சுமார் 3 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தனியார் நிறுவனங்கள் ரெயில்களை இயக்க அனுமதிப்பது என ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது.
- தனியார் ரெயில் போக்குவரத்துக்கு ஒரு முன்னோடி திட்டமாகத்தான் டெல்லி-லக்னோ மற்றும் மும்பை-ஆமதாபாத் இடையே தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் IRCTC மூலம் இயக்கப்படுகிறது.
- 25% பேர் பயணிக்கும் பாதை
- டெல்லி-மும்பை, டெல்லி-ஹவுரா ஆகிய வழித்தடங்களில் மட்டும் தற்போது மொத்த ரெயில் பயணிகளில் 25 சதவீதம் பேர் பயணிக்கிறார்கள்.
- ரூ.3,500 கோடி திட்டம்
- சமீபத்தில் மத்திய அமைச்சரவை இந்த இருப்புபாதைகளை மேம்படுத்துவதற்கான ரூ.3,500 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- ‘டெல்கோ’ ரெயில்கள்
- ஸ்பெயின் நாட்டின் ‘டெல்கோ’ ரெயில்கள் இந்திய இருப்பு பாதைகளில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
மின் திருட்டைத் தடுக்க உத்தரகண்ட்டில் 'உர்ஜகிரி பிரச்சாரம்'
- மின் திருட்டு மற்றும் சேமிப்பைத் தடுக்க உத்தரகண்ட் அரசு, உர்ஜகிரி பிரச்சாரம் (Urjagiri campaign) விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
ஒடிசா அரசின் புதிய நிர்வாக முயற்சி ‘மோ சர்க்கார்’
நிலக்கரி விநியோகத்தை கண்காணிககும் 'பிரகாஷ் போர்ட்டல்'
- நிலக்கரி விநியோகத்தை கண்காணிக்க மத்திய அரசு பிரகாஷ் போர்ட்டல் (Prakash portal) என்ற இணைய முகப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
- மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதற்காக மின்சாரம், நிலக்கரி மற்றும் இந்திய ரயில்வே ஆகிய அமைச்சகங்களிடையே சிறந்த ஒருங்கிணைப்புக்காக (Power Rail Koyla Availability through Supply Harmony) ஏற்படுத்துவதற்காக மத்திய அரஸ்டின் NTPC இந்த இணைய முகப்பை தொடங்கியுள்ளது.
ஒய்.எஸ்.ஆர் வாகனா மித்ரா திட்டம்
- ஆந்திராபிரதேச மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர் வாகனா மித்ரா திட்டத்தை (YSR Vahana Mitra scheme) தொடங்கியுள்ளார்.
- இது மாநிலத்தின் சுயதொழில் புரியும் ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் இதுவாகும்.
பிளாஸ்டிக்கை பிற்றுமுக்கு (bitumen) பொருளாக மாற்றும் IOC இயக்கம்
- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) எண்ணெய் நிறுவனம் பிளாஸ்டிக்கை சிறப்பு பிற்றுமுக்கு (bitumen) பொருளாக மாற்றுவதற்கான இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் கழிவுகளை கொடு தயாரிக்கப்படும், பிற்றுமுக்கு (bitumen) என்று பொருளை கொண்டு சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்க பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- மகாத்மாகாந்தியின் 150-வது பிறந்த நாளைக் குறிக்கும் விதமாகவும், ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி தொடங்கப்பட்டது.
பாதுகாப்பு/விண்வெளிஇந்தியா-மங்கோலியா கூட்டுராணுவப்பயிற்சி 'Nomadic Elephant - XIV'
- இந்தியா-மங்கோலியா நாடுகள் இடையே 14-வது கூட்டுராணுவப்பயிற்சி 'Nomadic Elephant - XIV' என்ற பெயரில் அக்டோபர் 6 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.
- இந்த கூட்டுராணுவப்பயிற்சி அக்டோபர் 05 முதல் 18 வரை இமாச்சல பிரதேச மாநிலம் பக்லோ (Bakloh) நகரில் நடைபெறுகிறது.
- பக்லோ ஒரு கன்டோன்மென்ட் நகரம், இது இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்தில் சம்பா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 4584 அடி உயரத்தில் உள்ள ஒரு மலைவாசஸ்தலம் ஆகும்.
- மங்கோலிய இராணுவத்தின் 084 ஏர் போர்ன் ஸ்பெஷல் டாஸ்க் பட்டாலியன் (084 Air Borne Special Task Battalion) மற்றும் இந்திய ராணுவத்தின் ராஜபுதனா ரீபிள்ஸ் (Rajputana Rifles Regiment) துருப்புக்கள் பங்கேற்கின்றன.
சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்த 'நிலவின் தென்துருவ படம்' வெளியீடு
- 2019 ஜூலை மாதம் 22-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்திய, சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் என்ற சுற்றுகலன் (Chandrayaan-2 Orbiter) நிலவை சுற்றி வருகிறது.
- இந்த ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ள உயர்சக்தி வாய்ந்த கேமரா (Orbiter High Resolution Camera-OHRC), நிலவின் தென்துருவப்பகுதியை 100 கி.மீ. உயரத்தில் இருந்து எடுத்த படத்தை ISRO அக்டோபர் 6-அன்று வெளியிட்டுள்ளது.
- போகஸ்லாவ்ஸ்கி இ கிரேட்டர் (Boguslawsky E Crater)
- நிலவின் தென்துருவத்தில் உள்ள 'போகஸ்லாவ்ஸ்கி இ கிரேட்டர்' என்ற பள்ளத்தின் ஒரு பகுதி ஆகும்.
- இது சுமார் 14 கி.மீ. விட்டமும், 3 கி.மீ. ஆழமும் கொண்டதாகும்.
- கற்பாறைகளும், சிறிய பள்ளங்களும் இந்தப் படத்தில் தெரிகின்றன.
சீனாவின் 'கோஃபன்-10' செயற்கைக்கோள் ஏவப்பட்டது
- சீனாவின் தையுவான் செயற்கைக்கோள் (Taiyuan Satellite Launch Center) ஏவுமையத்திலிருந்து, லாங்மார்ச்-4சி ( Long March 4C) ஏவூர்தியின்மூலம், சீனாவின் கோஃபன்-10 (Gaofen-10) எனும் செயற்கைக்கோள் அக்டோபர் 5-ஆம் நாள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
மாநாடுகள்/விழா
பாதுகாப்பு கண்காட்சி-2020, லக்னோ
- உத்திரபிரதேச மாநிலம் லக்னோ நகரில், 2020 பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை 11-வது பாதுகாப்பு கண்காட்சி நடைபெறவுள்ளது.
- (DEFEXPO 2020, 5-8 February 2020, Lucknow, Uttar Pradesh).
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
பசுமை பட்டாசுகள் - டெல்லியில் அறிமுகம்
- டெல்லியில் உள்ள தொழில்துறை ஆராய்ச்சிக்கான அறிவியல் கவுன்சில் அலுவலகத்தில் அக்டோபர் 5-அன்று பசுமை பட்டாசுகள் (Green Crackers) அறிமுகம் செய்யப்பட்டது.
- இதில் மத்திய சுகாதாரம், குடும்ப நலன், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பசுமை பட்டாசுகளை அறிமுகம் செய்து வைத்தார்.
- பேரியம் உப்பு, சல்பர் போன்ற அதிக சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இல்லாமல் இந்த பசுமை பட்டாசுகள் தயாரிக்ப்பட்டுள்ளன.
- இந்த பசுமை பட்டாசுகள் மூலம் 30% மாசு குறையும்.
- பசுமை பட்டாசுகள் தயாரிப்பதற்கான ஆய்வுகளை தொழில்துறை ஆராய்ச்சிக்கான அறிவியல் கவுன்சில் (CSIR) 8 ஆய்வகங்களில் மேற்கொண்டது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
தமிழ்நாடு பொருளாதார கணக்கெடுப்பு அக்டோபர் 9, 2019
- தமிழ்நாட்டில் பொருளாதார கணக்கெடுப்பை அக்டோபர் 9-ந் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைக்கிறார்.
அமேசான் E-புத்தகங்களின் பட்டியல் - பூமணியின் 'வெக்கை' நாவல் முதலிடம்
- இந்திய அளவில், அமேசான் இணைய தளத்தில், இந்திய அளவில் அதிகம் விற்பனையான கிண்டில் (Kindle) E-புத்தகங்களின் பட்டியலில், தமிழ் எழுத்தாளர் பூமணி அவர்களின் 'வெக்கை' நாவல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
- அண்மையில் வெளியான, வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'அசுரன்' (ASURAN) என்கிற திரைப்படம், எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். வெக்கை புதினம், 1982-ஆம் ஆண்டு எழுதப்பட்டது.
- எழுத்தாளர் பூமணி அவர்கள் எழுதிய அஞ்ஞாடி புதினம், 2014- ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றது.
கற்பித்தல் திறன், கற்றல் திறன் கண்காணிப்பு செயலி - அறிமுகம்
- தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றை கண்காணிப்பதற்கான செல்போன் செயலி முதற்கட்டமாக சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
FAME India திட்ட மின்சாரப் பேருந்துகளைத் தனியார் மூலம் இயக்க முடிவு
- மத்திய அரசின் ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் (FAME India Scheme) கீழ், இந்தியா முழுவதும் 64 நகரங்களுக்கு 5,595 மின்சாரப் பேருந்துகள் இயக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பில் கோயம்புத்தூா், திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூா், சேலம், வேலூா் மற்றும் தஞ்சாவூா் உள்ளிட்ட நகரங்களில் இயக்குவதற்காக 525 மின்சாரப் பேருந்துகள் வாங்க ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
- இதற்கான முன்னோட்டமாக, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கான புதிய மின்சார பேருந்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அண்மையில் தொடக்கி வைத்தாா். இந்நிலையில் இந்தப் பேருந்துகளை தனியாா் மூலம் இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
- NEMMP 2020 திட்டம்
- தேசிய மின்சார இயக்கம் மிஷன் திட்டம் (NEMMP) 2020 என்பது, நாட்டில் மின்சார வாகனங்கள் மற்றும் அவற்றின் உற்பத்தியை விரைவாக ஏற்றுக்கொள்வதற்கான பார்வை மற்றும் பாதை வரைபடத்தை வழங்குகிறது.
- FAME India திட்டம்
- NEMMP 2020 திட்டத்தின் ஒரு பகுதியாக, கனரக தொழில் துறை ஒரு FAME இந்தியா திட்டத்தை வகுத்தது.
- FAME இந்தியா திட்டம், இந்தியாவில் மின்சார மற்றும் கலப்பின வாகன தொழில்நுட்ப உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், அதன் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் 2015-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
- FAME India Scheme: Faster Adoption and Manufacturing of (Hybrid &) Electric Vehicles in India.
விளையாட்டு நிகழ்வுகள்
கூடைப்பந்து
இந்தியாவின் முதல் மிதக்கும் கூடைப்பந்து மைதானம் - மும்பையில் திறப்பு
- இந்தியாவின் முதல் மிதக்கும் கூடைப்பந்து (India’s first-ever Floating Basketball Court) மைதானம் மும்பை நகருக்கே அருகே, பாந்த்ரா வொர்லி சீலிங் (Bandra Worli Sealink) என்ற இடத்தில் அரபிக்கடலில் திறக்கப்பட்டுள்ளது.
- இந்த மிதக்கும் மைதானத்தை தேசிய கூடைப்பந்து கழகம் (NBA) நிறுவியுள்ளது.
- NBA இந்தியா கேம்ஸ் 2019, அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
தடகளம்
உலக தடகள சாம்பியன்ஷிப்-2019
- 17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி (IAAF 2019 World Athletics Championships) கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இப்போட்டியில் பதக்கம் வென்ற வீரர்/வீராங்கனைகள் விவரம்:
- 400 மீட்டர் ஓட்டம் (ஆண்கள்)
- ஸ்டீவன் கார்டினர் (பகாமஸ்) - தங்கப்பதக்கம் (43.48 வினாடி)
- 3000 மீ. ஸ்டீபிள்சேஸ் ஓட்டம் (ஆண்கள்)
- கான்செஸ்லஸ் கிப்ருடோ (கென்யா) - தங்கப்பதக்கம் (8 நிமிடம் 01.35 வினாடி)
- அவினாஷ் சாப்ளே-ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
- 3000 மீ. ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்போட்டியில் (ஆண்கள்), இந்திய வீரரான மராட்டியத்தை சேர்ந்த அவினாஷ் சாப்ளே 8 நிமிடம் 21.37 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து 13-வது இடத்தை பிடித்தார்.
- புதிய தேசிய சாதனை படைத்த அவினாஷ் ஒலிம்பிக் தகுதி நேரத்துக்குள் இலக்கை கடந்ததால் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
- 20 கி.மீ. நடைப்பந்தயம் (ஆண்கள்)
- தோஷிகாஸ் யாமினிஷி (ஜப்பான்) - தங்கப்பதக்கம் (1 மணி 26 நிமிடம் 34 வினாடி).
- உயரம் தாண்டுதல் (ஆண்கள்)
- முதாஸ் எஸ்சா பார்ஷிம் (கத்தார்) - தங்கப்பதக்கம் (2.37 மீ.)
- 400 மீட்டர் தடை ஓட்டம் (பெண்கள்)
- டாலிலா முகமது (அமெரிக்கா) - தங்கப்பதக்கம் (52.16 வினாடி)
- வட்டு எறிதல் (பெண்கள்)
- யாய்மி பிரெஸ் (கியூபா) - தங்கப்பதக்கம் (69.17 மீ.)
கிரிக்கெட்
தொடக்க வீரராக அறிமுக டெஸ்ட் போட்டி - ரோகித் சர்மா சாதனைகள்
- ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 6 சிக்சரும், 2-வது இன்னிங்சில் 7 சிக்சரும் என மொத்தம் 13 சிக்சர்கள் விளாசினார். இதன் மூலம் ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.
- தொடக்க ஆட்டக்காரராக இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன்
- தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட முதல் டெஸ்ட் போட்டியிலேயே இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த (176, 127) முதல் பேட்ஸ்மேன் என்ற சிறப்பை ரோகித் சர்மா பெற்றார்.
- தொடக்க வீரராக அறிமுகமான போட்டியிலேயே அதிக ரன் குவித்த வீரர்
- இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தம் 303 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டெஸ்டில் தொடக்க வீரராக அறிமுகமான போட்டியிலேயே அதிக ரன் குவித்த என்ற வீரர் என்ற பெருமையையும் அவர் தனதாக்கினார்.
2019 சிறந்த கிரிக்கெட் வீரராக 'பென் ஸ்டோக்ஸ்' தேர்வு
- தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (PCA-Professional Cricketers’ Association) அமைப்பின் 2019-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக, இங்கிலாந்து அணியின் 'பென் ஸ்டோக்ஸ்' (Ben Stokes) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், 2019 ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காகவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்டில் வெற்றிபெற குறிப்பிடத்தக்க 135 ஓட்டங்களையும் எடுத்ததற்காகவும், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிவேகமாக 350 டெஸ்ட் விக்கெட்டுகள் - அஸ்வின் சாதனை
- டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சிறப்பை இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.
- அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் முத்தைய முரளிதரனின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார்.
- இருவரும் 66 டெஸ்ட் போட்டிகளளில் 350 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.
முக்கிய நபர்கள்
பங்களாதேஷ் புத்தமதத் தலைவர் சத்யபிரியா மொஹதேரோ
- பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 2-வது மிக உயர்ந்த புத்தமதத் தலைவர் சத்யபிரியா மொஹதேரோ (Satyapriya Mohathero) 5 அக்டோபர் 2019 அன்று டாக்காவில் காலமானார்.
- சத்யபிரியா மொஹதேரோ (வயது 89) சமூகப் பணிகளுக்காக 2015-ஆம் ஆண்டில் பங்களாதேஷ் நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த சிவில் விருதான ஏகுஷே பதக் அவருக்கு வழங்கப்பட்டது.
சிறுநீரகவியல் நிபுணர்-டாக்டர் எச்.எல். திரிவேதி
- சமீபத்தில் காலமான எந்த துறையில் புகழ்பெற்ற சிறுநீரகவியல் நிபுணர், டாக்டர் எச்.எல். திரிவேதி (Dr. HL Trivedi),, அக்டோபர் 2 அன்று குஜராத்தின் அகமதாபாத்தில் காலமானார்.
- டாக்டர் ஹர்கோவிந்த் லக்ஷ்மிஷங்கர் திரிவேதி (வயது 87) புகழ்பெற்ற சிறுநீரகவியல் நிபுணர் (Nephrology) , நோயெதிர்ப்பு நிபுணர் மற்றும் ஸ்டெம் செல் ஆராய்ச்சியாளர் ஆவார்.
- சமூகத்திற்கு செய்த பங்களிப்புக்காக 2015 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
முக்கிய தினங்கள்
வன உயிரின வாரம் - அக்டோபா் 2-8, 2019
- இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபா் 2 முதல் 8-ஆம் தேதி வரை ஆண்டுதோறும் வன உயிரின வாரம் (Wildlife Week October 2 to 8 annually in India) கடைப்பிடிக்கப்படுகிறது.
- தமிழ்நாடு வனத்துற சார்பில் வன உயிரின வார நிகழ்வாக அக்டோபர் 5-அன்று, வண்டலூா் உயிரியல் பூங்கா வன ஓட்டம்’ என்ற பெயரில் 5 கி.மீ.மாரத்தான் ஓட்டம் அக்டோபர் 5-அன்று நடைபெற்றது.
வள்ளலார் 197-வது அவதார தினம் - அக்டோபர் 5, 2019
- கடலூர் மாவட்டம், வள்ளல் பெருமான் மருதூர் கிராமத்தில், கடந்த 1823-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி ராமலிங்க அடிகளார் பிறந்தார்.
உலக வாழ்விட தினம் - அக்டோபர் 7, 2019 (அக்டோபர் முதல் திங்கட்கிழமை)
- World Habitat Day 2019 (First Monday of October of every year)
- ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் திங்கட்கிழமை உலக வாழ்விட தினமாக (அக்டோபர் 7, 2019) கடைபிடிக்கப்படுகிறது.
- நமது நகரங்கள் மற்றும் நகரங்களின் நிலையைப் பிரதிபலிக்கும் விதமாகவும், போதுமான தங்குமிடம் அனைவருக்கும் அடிப்படை உரிமை என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
- 2019 உலக வாழ்விட தின மையக்கருத்து (Theme):
- கழிவுகளை செல்வமாக மாற்றுவதற்கான ஒரு புதுமையான கருவி எல்லைப்புற தொழில்நுட்பங்கள் (Frontier Technologies as an innovative tool to transform waste to wealth) என்பதாகும்.